Athiroopan (@AthiOfficial) profile picture

Democrat

Joined June 2020
Photo by Athiroopan (@AthiOfficial)Photo by Athiroopan (@AthiOfficial)Photo by Athiroopan (@AthiOfficial)Photo by Athiroopan (@AthiOfficial)Photo by Athiroopan (@AthiOfficial)Photo by Athiroopan (@AthiOfficial)Photo by Athiroopan (@AthiOfficial)Photo by Athiroopan (@AthiOfficial)Photo by Athiroopan (@AthiOfficial)
17.11.2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் (Disciplinary Committee) இணை உறுப்பினராக (co-opted member) நியமிக்கப்பட்டதை முன்னிட்டு, அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் அன்பு தம்பி வழக்கறிஞர் பி.எஸ். அமல்ராஜ் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்,உடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வழக்கறிஞர் திரு. பாலமுருகன் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரசன்னா அவர்களும். #BarCouncil #DisciplinaryCommittee #justice
3
28
339
இன்று புதுதில்லியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்!
66
2
346
8,947
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவின் மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று அம்பேத்கர் திடலில் எனது தலைமையில் நடைபெற்றது.
11
34
212
6,283
Athiroopan retweeted
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 07 அன்று அவரை நேரில் சந்தித்து தலைவர் எழுச்சித் தமிழர் அண்ணன் @thirumaofficial அவர்கள் வாழ்த்துக் கூறினார். அவருடன் நானும் சமூகநீதித் துறை அமைச்சர் தோழர் வன்னிஅரசு@VanniTamizhVCK அவர்களும் சென்றிருந்தோம். அன்று காலையில் நான் தலைவருடன் வேளச்சேரியில் இருந்த போது, சுமார் 10.30 மணியளவில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் தோழர். அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்களைத் தொடர்பு கொண்டு, 'எங்கேவர வேண்டும் ? தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை அலுவலகத்திற்கு வரவேண்டுமா' என்று கேட்டார். அப்போது, பூந்தமல்லியில் உள்ள சுந்தர் ஸ்டுடியோவில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் இருவரும் அங்கே வரவிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதனை எங்களிடம் எமது தலைவர் தெரிவித்தார். அத்துடன், அங்கேயே அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருப்பதாக அருணாசலம் அவர்கள் கூறியதாகவும் சொன்னார். நாங்கள் சுந்தர் ஸ்டுடியோவுக்கு நண்பகல் ஒரு மணியளவில் போய் சேர்ந்தோம். தோழர். அருணாச்சலம் அவர்கள் எம்மை வரவேற்றார். அங்கே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 'டென்ட்' கூடாரத்தில் எங்களை அமரவைத்தார். 'தலைவர் (கமல்) அவர்கள் பக்கத்தில் படப்பிடிப்பில் உள்ளார்; சற்று நேரத்தில் வருவார்' என்று அருணாசலம் அவர்கள் எங்களிடம் சொன்னார். 'கமல் சாரின் படப்பிடிப்பு இங்கே நடைப்பெற்று வருவதால்தான் இங்கேயே இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது' என்றும் தெரிவித்தார். சிறிது நேரம் உரையாடல் நிகழ்ந்தது. அப்போது தான், 'சண்டியர்' என்கிற படத்திற்கான படப்படிப்பு இன்று அவரது பிறந்தநாளில் தொடங்கியுள்ளது என கூறினார். சற்று நேரத்தில் படப்பிடிப்பிலிருந்த உடையுடன் கமல் அவர்கள் நாங்கள் இருந்த கூடாரத்திற்கு வந்தார். எங்களோடு சில நிமிடங்கள் நடப்பு அரசியல் குறித்து உரையாடிக் கொண்டிருந்தார். பின்னர், 'கேக் வெட்டலாம் சார்' என்று ஒருவர் வந்து அழைத்தார். உடனே எல்லோரும் எழுந்தோம். அங்கிருந்து சற்று தள்ளி இருந்த அவரது பல்வேறு உருவங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த இன்னொரு கூடாரத்திற்குச் சென்றோம். அப்போது 'இடதுசாரிகட்சிகளின் தலைவர்கள் தோழர் சண்முகம் @Shanmugamcpim தோழர் வீரபாண்டியன் ஆகியோர் வந்து கொண்டிருக்கின்றனர்' என்று தகவல் வரவே, சில நிமிடங்கள் அவர்களின் வருகைக்காக கமல் அவர்கள் காத்திருந்தார். ஆனால், அவர்கள் வந்து சேர இன்னும் தாமதமான நிலையில் 'கேக்'கினை வெட்டலாமென ஏற்பாட்டாளர்கள் கூறினர். அதன்பின் கேக் வெட்டி அருகிலிருந்த அனைவருக்கும் வழங்கினார். அங்கிருந்து மீண்டும் முதலில் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தோம். அப்போது தான் இடதுசாரி கட்சிகளின்தலைவர்கள் இருவரும் வந்து சேர்ந்தனர். ஆடை போர்த்தி கமல் அவர்களை வாழ்த்தினர். அதன் பின்னர் அங்கிருந்து உணவருந்தும் இன்னொரு கூடாரத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரோடு நாங்களும், ஏராளமான படப்பிடிப்புக் குழுவினரும் அமர்ந்து சாப்பிட்டோம். பின்னர் விடைபெற்றோம். படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றோம். ஆனால், அதற்கும் பிறந்தநாள் சந்திப்பு நிகழ்வுக்கும் எந்தவொரு சம்மந்தமுமில்லை. படப்பிடிப்பு அன்று தான் தொடங்கியதா ஏற்கனவே தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா என்று எதுவும் அவரை வாழ்த்திட சென்ற எங்களுக்குத் தெரியாது. அவரும் அதைப்பற்றி எதுவும் பெரிதாகப் பேசவில்லை. 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் நடந்த நூல் கொள்முதல் மோசடி குறித்துதான் உரையாடல் நீண்டது. அங்கு படப்பிடிப்பு நடைபெறுவதே அங்கு போனபின் தான் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களுக்கும் எங்களுக்கும் தெரியும். ஆனால், வழக்கம்போல் அரசியல் மற்றும் சமூக காழ்ப்பு கொண்டவர்கள், அந்தப் படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சையோடு, பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற எமது தலைவரைத் தொடர்புப்படுத்திப் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. அத்துடன், மனம்போன போக்கில் கண்டபடி பல்வேறு புனைவுகளை, கற்பிதங்களை உருவாக்கிப் திட்டமிட்டுப் பரப்புவது சரியல்ல. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இவண் எஸ்.எஸ்.பாலாஜி பொருளாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
10
33
6
146
9,570
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு இளவல் @SeemanOfficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நலம் தழைக்க எமது நல்வாழ்த்துகள். #HBDSeeman
1
99
5
882
21,608
16
42
1
160
8,479
Athiroopan retweeted
No equality without democracy spread wide. Working-class democracy must cut across caste. #Thirumavalavan #AnnihilationOfCaste #VCK #TheRationalist
1
12
1
16
357
Athiroopan retweeted
ஒருத்தர் Occupational Hazardன்றாரு இன்னொருத்தர் Deputationன்னு விமர்சிக்கிறார் இதிலிருந்து அரசியல்ல இவங்கெல்லாம் இருக்கிறது பொதுவாழ்க்கை என்ற அடிப்படையில் இல்லை பொதுவா வாழ்க்கையை ஓட்ட கூலி பெற்று பிழைக்கும் வாய்ப்பாக கருதுகிறார்கள் என்பது மட்டும் நல்லா தெரியுது.
தவெக அரசின் அமைச்சராகப் பணியாற்ற அயல்பணியில் (Deputation) சென்று, தற்போது @TVKVijayHQ - ன் செய்தித் தொடர்பாளராகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் @VanniTamizhVCK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! @AIADMKOfficial
19
30
2
139
12,882
13
57
145
14,091
Athiroopan retweeted
ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம். சாதி, மதம், இனம் எனச் சிதறிக் கிடக்கும் குழுக்களைத் தாண்டி, உழைக்கும் வர்க்கம் என்னும் பேரமைப்பு பொருளாதார உறவுகளின் அடிப்படையில் போராட வேண்டிய தேவை இருக்கிறது. மக்கள் திரட்சியும்! பரிணாம வளர்ச்சியும்!! Thol. Thirumavalavan Series – 004 – The Rationalist #Thirumavalavan #VCK #ClassStruggle #SocialJustice #TheRationalist
1
8
16
284
Athiroopan retweeted
When the majority shares power, it's called justice. When the minority asks for a share, it's called "communalism." Ambedkar named this double standard, and that's why he demanded the rights of the Scheduled Castes be written into the Constitution. The Ambedkar Archive | No. 006 Beyond the Icon. Into the Ideas. #Ambedkar #BRAmbedkar #AmbedkarArchive #Constitution #SocialJustice #Annihilationofcaste
7
8
303
(2/2) விசிக உயர்நிலைக் குழு தீர்மானங்கள் தொடர்ச்சி.... நவம்பர் 01 டெல்லி பேரணியை வெற்றிபெறச் செய்வோம்! _____________________ சட்டவிரோதமாக நடைமுறைப்படுத்தப்பட்ட எஸ் ஐ ஆர் மூலம் இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் எதிர்வரும் நவம்பர் 1 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்னாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் பெருமளவில் பங்கேற்றுப் பேரணியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
40
96
4,915
Athiroopan retweeted
அடுத்த ராமதாஸாகிறாரா மு.க. ஸ்டாலின்? 2011–12 இளவரசன் படுகொலைக்குப் பிறகு, விசிகவைத் தொடர்ந்து எதிர்ப்பதையும், தலித் அரசியலுக்கு எதிரான அணிதிரட்டலையும் முன்னெடுத்த ராமதாஸின் அரசியல் பயணம் நமக்குச் சொல்லும் பாடம் முக்கியமானது. குறிப்பாக, தலித் அல்லாதோர் கூட்டமைப்பை முன்னெடுத்த அரசியல், அவரது செல்வாக்கு சுருங்கியதற்கான காரணிகளில் ஒன்றாக அமைந்தது. இன்று 2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அணுகுமுறையைப் பார்க்கும்போது அதே பாதையில் ஸ்டாலின் பயணிக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சுயவிமர்சனம் செய்ய வேண்டிய நேரத்தில், U2 Brutus உள்ளிட்ட சில வலையொளித் தளங்கள் விசிகவைத் தொடர்ந்து குறிவைக்கின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தரம் தாழ்ந்த விமர்சனங்களும் அரசியல் விவாதமாகிவிடாது. ஆட்சியில் இருக்கும் தவெகவை எதிர்கொள்வதைவிட, முன்னாள் கூட்டணிக் கட்சியான விசிகவை ஏன் தொடர்ந்து தாக்க வேண்டும்? விசிகவை ஒரு தலித் கட்சி என்ற குறுகிய அடையாளத்துக்குள் சுருக்கி, அதன் பரந்த அரசியலைத் தனிமைப்படுத்தும் முயற்சியா இது? சாதி ஒழிப்பு, மகளிர் விடுதலை, தமிழ்த்தேசியம், பாட்டாளி வர்க்க விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என விசிகவின் அரசியல் ஒரு சமூகத்தோடு முடிந்துவிடுவதில்லை. கூட்டணியில் இருந்தது என்பதற்காக ஒரு கட்சி தனது தனித்துவத்தையும் அரசியல் சுயமரியாதையையும் இழந்துவிட வேண்டியதில்லை. விசிகவுக்கு அமைச்சரவையில் கிடைத்துள்ள வாய்ப்பையும், அதன் மூலம் மக்களுக்கு ஆற்றப்படும் பணிகளையும் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். ஒரு கட்சி வளர்வதை மற்றொரு கட்சி அச்சுறுத்தலாகப் பார்ப்பது ஆரோக்கியமான ஜனநாயக அரசியலல்ல. விசிகவை விமர்சிப்பதால் திமுகவின் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மறைந்துவிடாது. விசிகவைத் தனிமைப்படுத்துவதால் திமுகவின் செல்வாக்கும் அதிகரித்துவிடாது. ராமதாஸின் அரசியல் பயணம் ஒரே காரணத்தால் முடிவுக்கு வந்துவிடவில்லை. இருப்பினும், தலித் அரசியலை எதிரியாகக் கட்டமைக்கும் அணுகுமுறையின் விளைவுகளை ஸ்டாலினும் திமுகவும் அலட்சியப்படுத்தக் கூடாது. எதிராளியை வீழ்த்துவதற்காக அரசியல் செய்வதைவிட, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அரசியல் செய்வதே நிலையான வளர்ச்சியைத் தரும். ராமதாஸ் செய்த தவறிலிருந்து ஸ்டாலின் பாடம் கற்கப்போகிறாரா? அல்லது சில அவதூறு பரப்பும் U2 Brutus போன்ற @U2Brutus_off நாய்களை ஏவிவிட்டு விசிகவை எதிர்ப்பதையே அரசியலாக்கி, அடுத்த ராமதாஸாகத் தன்னையும் மாற்றிக்கொள்ளப் போகிறாரா? — தேசாந்திரி @arivalayam @DMKITwing
54
50
12
120
13,875
Athiroopan retweeted
“நீ சொன்ன வாக்கியத்தை தஞ்சாவூர கோயில் கல்வெட்டுல வெட்டி வெச்சுட்டு பக்கத்துலேயே நீ உட்கார்ந்துக்கோ….”
19
70
2
222
5,929
Athiroopan retweeted
2
2
68
Athiroopan retweeted
25.10.2026 #புத்தகரம் முத்துக் கொளக்கியம்மன் கோவில் தேரோட்டம்: தலித்துகளின் வழிப்பாட்டுரிமையை வென்றெடுத்த விடுதலைச்சிறுத்தைகள் ! ——————————————— காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாத இந்த கோவிலின் தேரோட்டம், இந்து சமய அறநிலையத்துறையின் ரூ.28.40 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மிகச்சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு, புதிய தேர் ஒன்றும் தயாரிக்கப்பட்டது. முத்து கொளக்கியம்மன் கோவில் தேரோட்டம் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கும் வர வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், தலித் குடியிருப்புக்குள் தேர் வருவதற்கு சாதி இந்துக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து #தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், கட்சியின் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த கட்சியின் தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் தோழர் பாசறை செல்வராஜ் அவர்கள் பெயரில் வழிபாட்டு உரிமையும்- தேரோட்டம் உரிமையும் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தேரோட்டம் நடைபெறுவதில் சாதிய பாகுபாடு கூடாது. ஆதிதிராவிடர்கள் வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறவேண்டும். மேலும் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு தேர் கொண்டு வருவது சாத்தியம்தான். அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று விரிவான வரைபடங்களுடன் (Route Map) மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. புதிய தேர் வெள்ளோட்டம் மற்றும் தேரோட்டத்தை ஆதிதிராவிடர் பகுதியையும் சேர்த்து நடத்தவும், அதற்காக ஆட்சியர் அளித்த வரைபடத்தையும் தீர்ப்பின் ஒரு பகுதியாக இணைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பின்னரும் சாதி இந்துக்களில் சிலர் தேரோட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய் கோட்டாட்சியர், இந்து சத்ய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் தலைமையில் பல கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இன்று 25/10/2026 தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முத்துக் கொளக்கியம்மன் தேர் ஆதிதிராவிடர் வீதிகளில் உலா வந்தது. ஊர்க்கூடி தேர் இழுப்போம்” என்கிற முழக்கத்தோடு புத்தகரம் கிராம மக்களுடன் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து முத்துக் கொளக்கியம்மன் தேரினை வடம்பிடித்து இழுத்தோம்.. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அரசமைப்புச் சட்டத்தின்படி தலித் மக்களின் வழிபாட்டு உரிமை நிலைநாட்டப்பட்டது. சிபிஎம், சிபிஐ, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மக்கள்மன்றம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியினர் திரளாக பங்கேற்றனர். #எஸ்எஸ்பாலாஜி பொருளாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
3
26
1
94
1,286
தெலுங்கானா மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஹைதராபாத்தில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகளாக விளங்கும் 10 சான்றோரை தேர்வு செய்து 10 விருதுகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே வழங்கப்பட்டது அம்பேத்கர் சுடர் விருது பேராசிரியர் கோதண்டராம் எம்எல்சி அவர்களுக்கும், பெரியார் ஒளி விருது ரமேஷ் அவர்களுக்கும், மார்க்ஸ் மாமணி தோழர் சாம்பசிவராவ் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், மகாத்மா ஜோதிபா ஃபுலே விருது பொல்லூரி சத்தையா அவர்களுக்கும், போதிதர்மாகிறது பிரகாஷ் அவர்களுக்கும், சாவித்திரிபாய் பூலே விருது பேராசிரியர் சுஜாதா அவர்களுக்கும், கத்தார் கானா ஜோதி விருது மறைந்த கவி அருணோதயா நாகண்ணா அவர்களுக்கும், மத்தூம் மயூதீன் விருது ஸ்கை பாபா அவர்களுக்கும் ஜெய்சங்கர் விருது கரன் குமார் அவர்களுக்கும், கொமரம் பீம் விருது மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குமடி நரசய்யா அவர்களுக்கும் தெலுங்கானா மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று வழங்கப்பட்டது. தெலுங்கானா மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இது முதன்முறையாக விருதுகள் வழங்கப்பட்டது.
46
2
214
9,941
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இதே வளர்ச்சியில் தொடர்ந்தால், எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் தலைமையில் 2031 உறுதியாக மக்களாட்சி மலர்ந்துவிடும் என்று திமுகாவிற்கு கள ஆய்வு பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கும். நெருக்கடிகள், விசிகவின் ஆட்சியதிகாரம் நோக்கிய பயணத்தின் வேகத்தை கூட்டிக்கொண்டிருக்கிறது. @Tndalitpanthers @WriterRavikumar @sinthanaivck @VckBalaji @VanniArasu_VCK
6
9
124