என் கணவரை கொன்ற விடுதலை புலிகள் ஆதரவாளர் தான் திமுக மற்றும் கருணாநிதி. திமுக சில தொண்டர்கள் ராஜீவுக்கு கொலை மிரட்டல் கூட விடுத்தார்கள். ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜெயின் குழுவின் இடைக்கால அறிக்கையில் ராஜிவ் படுகொலைக்கு திமுக விடுதலை புலிகளை ஆதரித்தும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தது. இத்தகைய மனவலிகளையும் கடந்து திமுக உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தற்கு காரணம் பாரதிய ஜனதாவை அதிகாரத்திற்க்கு வராமல் தடுப்பதுதான் முக்கிய கடமையாக இருந்தது .
---திருமதி சோனியா காந்தி தனது சுயசரிதையில் (Belonging: A Journey of Love)
பதிவு - @Elansezhian3
1
81
Fascism grows from the effort to stop the working class from organising. Without organisation, no struggle against domination, oppression or exploitation can win. ✊
Thol. Thirumavalavan Series | 006
#Thirumavalavan #VCK #AntiFascism #SocialJustice #तिरुमावलवन #सामाजिकन्याय #लोकतंत्र
Why did only the Broken People's become untouchables, when Brahmin hostility targeted all Buddhists? Ambedkar: they were Buddhists who also kept eating beef, a new weapon for Brahmins who had newly made the cow sacred.
The Untouchables (1948), Ch. X
#AmbedkarArchive #Ambedkar #अंबेडकर
Desanthri retweeted
புணர்ச்சி பழகுதல் வேண்டா
உணர்ச்சி தான் நட்பாங் கிழமை தரும்
இந்த திருக்குறளின் உரைக்கு மிக பொருத்தமாக செயல்பட்டுக்கொண்டு இருப்பவர் நண்பர் இரா.சரவணன்.
திருவள்ளுவர் சொன்னதைப்போல
தினமும் பேசி பழகாவிட்டாலும்
எப்போதும் பேரன்பையும் உணர்வையும் எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் கூடுதலாகவே இருக்கும்.
இருபதாண்டு கால நட்பு.
ஜூனியர் விகடன் இதழில் ஊடகவியலாளராக இருந்த நாள் முதல் இயக்குனராக இப்போது வரை அதே நட்பும் உறவும் தொடருகிறது.
நண்பர் சரவணன் அவர்களிடம் யாராவது ஒருவர் அறிமுகமானால் போதும், அந்த நட்பு தொட்டு தொடருமே தவிர அறுந்து போகாது.
அத்தகைய பாசத்துக்கு சொந்தக்காரர்.
எனக்கு தெரிந்து சமூக அக்கறையோடும் சாதியத்துக்கு எதிராகவும் அறச்சீற்றம் கொண்டு எழுதியவர் சரவணன் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். அப்படித்தான் திரைப்படங்களில் அவரது படைப்புகளும் அறச்சீற்றத்துடன் இருக்கும். இப்போதும் அப்படித்தான்.
அப்படிப்பட்ட நண்பரை கண்டதும் கண்டும் காணாமல் போயிட முடியுமா?
பொதுவாக,நான் தீபாவளி கொண்டாடுவதில்லை. காரணம் புராணங்களால் கட்டமைக்கப்பட்ட கதையை தீபாவளியாக கொண்டாடுவது தான். ஆனால், நேற்று சரவணன் அலுவலகத்தில் தீபாவளி மகிழ்ச்சியாக கொண்டாடினோம். அதுவும் குடும்பத்தோடு.
அக்கா கலா டீச்சர் மற்றும் குழந்தைகள் வந்து விட்டார்கள்.
சரவணன் இணையர் கலா டீச்சரை பார்த்ததும் என்னுடைய உடன்பிறப்பை போலவே இருந்தார்.
விருந்தோம்பலும் அப்படித்தான்.
இலையை பரிமாறி முதலில் வைக்கப்பட்ட பலகாரம் பனியாராம் தான்.
வைத்ததுமே சொன்னேன், “எங்க அம்மா வீட்டுக்கு போனதும் முதலில் பனியாரம் தான் சுட்டுக்கொடுப்பார்.( அதை தவிர வேறு பலகாரம் செய்யத்தெரியாது என்பது வேறு)
என்றேன்.
அடுத்து சுவரொட்டி பரிமாறப்பட்டது.
இன்னும் வேண்டுமென கேட்டு வாங்கிக்கொண்டேன். அப்படி ஒரு சுவை. பொதுவாக அசைவத்தில் சுவரொட்டியை சரியாக செய்தால் தான் சாப்பிடவே முடியும். அப்படி ஒரு விருந்தோம்பல் சுவை.
முதன்முறையாக தீபாவளி நண்பருடைய அலுவலகத்தில் சிறப்பாகவும் உணர்வாகவும் அமைந்தது.
எழுத்தாளரும் தயாரிப்பாளருமான தோழர் யுவராஜ் அவர்களை வரவழைத்து அறிமுகப்படுத்தினார்.
சரவணனுடைய நல்ல பழக்கங்களில் ஒன்று புத்தகங்களையும் நண்பர்களையும் அறிமுகப்படுத்துவது. அந்த வகையில் இந்த தீபாவளிக்கு நண்பர் யுவராஜ் அறிமுகம் மகிழ்ச்சியை தந்தது. நண்பர்களை சந்திக்கும் போது மகிழ்ச்சி ஏற்படும்.
நல்ல நண்பர்களை சந்திக்கும் போது பெருமகிழ்ச்சி ஏற்படும். அந்த வகையில் நல்ல நண்பருடன் உறவு
நிறைவை தந்தது.
நட்புக்கு எப்போதுமே கோனார் உரை எழுதினால் இரா.சரவணனே பொருத்தமாக இருப்பார்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
சமூகநீதித்துறை அமைச்சர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
9.11.2026
ஒரு மாதத்திற்கு முன்னரே அம்மாவிடம் உத்திரவாதம் கொடுத்திருந்தும் இந்தத் தீபாவளிக்கு ஊருக்குப் போக முடியவில்லை. அக்காக்கள், நண்பர்கள் என அத்தனை பேரின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றியதில் தாங்க முடியாத வருத்தம். காலையில் பெய்த மழை மட்டுமே ஆறுதல். பெருமழை தூறலாகக் குறைந்த பொழுதில் அலுவலகம் போக சாலையோரமாக நடந்தேன். வாகனங்கள் சாலையில் சீறிப்பாய, அவை தண்ணீரை மேலே அடித்துவிடக் கூடாது என்பதற்காகக் கவனமாக ஒதுங்கி நடந்தேன். அப்போது தமிழ்நாடு அரசு முத்திரை பதித்த கார் ஒன்று எதிரே வர, இன்னும் ஒதுங்கி நடந்தேன். சட்டென அந்த கார் நின்றது. ‘யாராக இருக்கும்?’ எனத் தயங்கி நின்றவன், ‘யாராக இருந்தால்தான் என்ன?’ என மேற்கொண்டு நடக்கத் தொடங்கினேன். நின்ற காரிலிருந்து இறங்கிய ஒருவர் “சரவணன்…” என அழைத்தார். திரும்பிப் பார்த்தால், மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு… கையில் வைத்திருந்த பலகாரக் கூடையை அப்படியே ரோட்டில் போட்டுவிட்டு அருகே ஓடினேன். “என்ன இப்படி நடந்து போறீங்க?” என்றார் வன்னி அண்ணன். “அலுவலகம் அருகில்தான்…” என்றேன். சட்டென தோள் மீது கைப்போட்டு “வாங்க போகலாம்” என்றபடி வன்னி அண்ணன் அலுவலகம் நோக்கி நடக்க, அவரை அடையாளம் கண்டு சாலையில் கூட்டம் கூடிவிட்டது.
அலுவலகம் வந்தார் அண்ணன். வீட்டிற்குத் தகவல் சொல்ல, என் மனைவி கலாவும் குழந்தைகளும் வந்தார்கள். கலா பலகாரங்கள் பரிமாற, அண்ணன் ரசித்துச் சாப்பிட்டார். “அப்படியே கொஞ்சம் இட்லியும் கறிக்குழம்பும்…” என நாங்கள் வற்புறுத்த, வேறு வழியின்றிச் சம்மதித்தார். தன் சொந்த அக்காவை அப்படியே பிரதி எடுத்ததுபோல் கலா இருப்பதாகச் சொன்னார்.
தன் ஆரம்ப கால வாழ்வு தொடங்கி எல்லா விஷயங்களையும் மகிழ்வும் நெகிழ்வுமாகப் பகிர்ந்து கொண்டார். தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு போன் போட்டு எனக்குக் கொடுத்தார். “ரோட்டில் நடந்து போகிற ஒருவருக்காக வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வருகிற அமைச்சரை இத்தனை காலத்தில் நான் பார்த்ததில்லை. என்னதான் பழக்கம் என்றாலும் வன்னி அண்ணன் என்னைக் கண்டுகொள்ளாமல் கடந்து போயிருக்கலாம். ஆனால், என்றைக்கும் எளிமை மாறாத அதே வன்னி அண்ணனாகவே அவர் இருக்கிறார். காரணம் கேட்டேன்… தலைவர்தான் காரணம் என உங்களைச் சொன்னார்… தலைவராக மட்டுமில்லை… ஒரு தந்தையாகவே வன்னி அண்ணனை நீங்கள் வழி நடத்துகிறீர்கள்…” என்றேன். தலைவர் திருமா அண்ணன் நெகிழ்ந்து போனார். வன்னி அண்ணன் அமைச்சரான பின்னணியைத் தலைவர் சொல்லச் சொல்ல, ‘ஒரு தலைவன் என்பவன் இப்படியல்லவா இருக்க வேண்டும்!’ எனச் சிலிர்த்துப் போனேன்.
“கிராமத்திற்குப் போய் தீபாவளி கொண்டாட முடியவில்லையே என நினைத்தேன். உங்கள் வருகையும் அன்பும் தீபாவளி பரிசாக என்னை நெகிழ வைத்துவிட்டது. நான் எழுதிய ‘சங்காரம்’ புத்தகத்தைப் பலமுறை நீங்கள் கேட்டும் உங்களுக்குக் கொடுக்காத நான் தம்பி யுவராஜ் கணேசன் எழுதிய ‘ஒத்திகை’ புத்தகத்தை உங்களுக்கான பரிசாகக் கொடுக்கிறேன். உங்களின் மாசற்ற அன்புக்கு இதுதான் ஈடானதாக இருக்கும்…” எனச் சொல்லி ‘ஒத்திகை’ புத்தகத்தை வன்னி அண்ணனுக்குக் கொடுத்தேன். மிகச் சரியாக அந்த நேரத்தில் தம்பிகள் யுவராஜும் ஜெயசூர்யாவும் வந்தார்கள். தீபாவளி நாளில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் வன்னி அண்ணன் அலுவலகம் வந்து அளவளாவிப் போனதில் மட்டற்ற மகிழ்ச்சி.
சைரன் சத்தம், அணிவகுக்கும் கார்கள், பாதுகாப்புக்கான போலீஸ், ஆரவாரத்துக்கான ஆட்கள் என ஓர் அமைச்சருக்குரிய எந்த அடையாளங்களும் இல்லாமல் கார் ஏறினார் வன்னி அண்ணன். சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் ஒரு தேநீர்க் கடை வாசலில் நான் எப்படிப் பார்த்தேனோ… அமைச்சரான பிறகும் அப்படியே இருக்கிறார் வன்னி அண்ணன்!

நான் அடையாறில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தபோது அங்கிருக்கும் நூலகத்தில் ஒரு அரைமணிநேரம் புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு வரிசை முழுக்க சமையல் குறிப்பு முதற்கொண்டு மற்ற தேவையில்லாத சில தலைப்புகளில் புத்தகங்களை பார்த்தேன். அப்பொழுதே யோசித்தேன் இதற்கு இதுமாதிரியான புத்தகங்கள்லாம் வாங்கி நூலகத்தில் வைத்திருக்கிறார்கள் என்று. அதையெல்லாம் பார்த்ததில் இது மாதிரியான புத்தகங்களையும் அந்த நூலக குழு பரிந்துரை செய்ததற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கருத வேண்டியுள்ளது.
ஏன்யா சமையல் குறிப்ப படிக்க யாராவது அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள நூலகத்திற்கு வருவார்களா?
விவஸ்த கெட்டவனுங்க.
நவம்பர் 7, 2012 – தமிழ்நாட்டின் கருப்பு நாள்!
2012, நவம்பர் 7, தமிழ்நாடு அதுவரை கண்டிராத கொடூரமான சாதிவெறித் தாக்குதலை பாமகவும் வன்னியர் சங்கமும் இணைந்து தருமபுரியின் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி பகுதிகளில் அரங்கேற்றின.
சுமார் 268-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. எண்ணற்ற உடைமைகள் சூறையாடப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. எங்கும் அழுகுரல்கள். தலைமுறை தலைமுறையாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த சொத்துகள் அனைத்தும், இரு இதயங்களுக்குள் மலர்ந்த காதலுக்காகச் சாம்பலாக்கப்பட்டன.
வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் என்றும் அழியாத நாள் அது!
மக்களுக்கான அரசியல் என்று வேடமிட்டு, சாதியை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்தும் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் அன்று வாய்மூடி மௌனம் காத்தன. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களோடு களத்தில் நின்று அவர்களுக்கான குரலாக ஒலித்தது.
அன்று மட்டுமல்ல; விசிக உருவான காலத்திலிருந்து இன்றுவரை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் நிற்கும் இயக்கமாக அது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
விசிகவுக்கு முன்பும், பின்பும் எத்தனையோ அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தோன்றியிருக்கின்றன; மறைந்திருக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே அணுகிய அரசியல் சக்திகளுக்கு மத்தியில், அவர்களை ரத்தமும் சதையுமாக, உணர்வும் உரிமையும் கொண்ட மனிதர்களாக அணுகிய இயக்கம் விசிக.
அதனால்தான், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இன்றளவும் அதிகார மையங்களையும் ஆதிக்கச் சக்திகளையும் எதிர்த்து நிற்கிறது.
எங்கெங்கோ அமர்ந்துகொண்டு விசிகவுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம். ஆனால், களத்தில் மக்களுக்காக நிற்கும் அரசியலில் இருந்தும், மக்கள் விடுதலைக்கான போராட்டத்தில் இருந்தும் விசிக ஒருபோதும் பின்வாங்காது.
தருமபுரியில் பாமக நிகழ்த்திய அந்தச் சாதிவெறித் தாக்குதல் இன்றும் கண்முன்னே நிழலாடுகிறது. இதை எழுதும்போதே கண்கள் குளமாகின்றன.
ஆம்! சாதிய அடையாளத்தை அரசியல் ஆயுதமாகக் கொண்டு இயங்கும் பாமக, சாதிவெறி அரசியலின் ஆபத்தான முகங்களில் ஒன்று. அது அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டிய இயக்கம் என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்போம்.
ஆதிக்கத்தையும் வெறுப்பையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் எவ்வாறு கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளப்பட வேண்டுமோ, அதேபோலச் சாதிவெறி அரசியலை முன்னெடுக்கும் பாமகவையும் ஜனநாயக அரசியல் களத்தில் தனிமைப்படுத்தி, தோற்கடிக்க வேண்டியது அவசியம்.
தருமபுரி நமக்கு வெறும் கடந்தகால நினைவல்ல; சாதிவெறி அரசியலுக்கு எதிரான நிரந்தர எச்சரிக்கை!
இந்த வரலாற்றை மறக்காமல் இருப்பதும், அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும், சாதி ஒழிப்புக்கான அரசியலைத் தொடர்ந்து முன்னெடுப்பதும் ஒவ்வொரு சிறுத்தையின் கடமை!
சாதி ஒழியட்டும்! சமத்துவம் வெல்லட்டும்!
- தேசாந்திரி
#BoycotPMK
#BoycotRSS
நவம்பர்- 7
சாதிவெறி அரசியல் எதிர்ப்பு நாள்:
கடந்த 2012 ஆம் ஆண்டு தருமபுரி நத்தம், காலணி, அண்ணாநகர் சேரிகளில் தலித் மக்களுக்குச் சொந்தமான 268-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பொருள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பாமக-வன்னியர் சங்கம் சார்ந்த
சாதிவெறிக் கும்பல் தீயிட்டு சூறையாடிய நாளை நினைவுகூர்வோம்.
ஆளுங்கட்சி, ஆண்டக் கட்சி இப்படி மாற்றி மாற்றி குற்றம் சொல்வதை விடுத்து யார் இந்த போலிப் பதிப்பகத்தில் கொள்முதல் செய்தது, யார் இதற்கு பின்னால் இருப்பது என்பதை கண்டுபிடித்து அவர்களை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்துவதே தீர்வு.
சமீபகாலமாக இளந்தலைமுறையினரின் அறிவை மழுங்கடிக்கும் வேலை தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருக்கின்றன. அறிவுசார்ந்து ஒரு தலைமுறை இடைவெளியை உருவாக்கினால் போதும். அதன்பிறகு வரும் தலைமுறைக்கான அறிவு மங்கிவிடும் என்பதே இதன் உண்மையான உள்ளடக்கம்.
இதுவொரு திட்டமிட்ட கொள்ளை என்பதை விட, எதிர்கால சந்ததியினருக்கான வரலாற்று புரிதலை மடைமாற்றும் செய்யும் ஆர்எஸ்எஸ் செயல். ஆகவே குற்றவாளிகள் கண்டுணரப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுதான் அடுத்து இதுபோல் ஒன்று நடவாமல் இருப்பதை உறுதி செய்யும்.
பெரியாரை எப்பொழுதும் ஏற்காத இயக்கம் ஆர்எஸ்எஸ். கடந்த சில பத்தாண்டுகளில் நிறைய ஆர்எஸ்எஸ், அரசு பதவிகளில் தமிழ்நாட்டில் ஊடுருவியுள்ளனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பெரியார் அறிவுலகத்திலும் அவர்களின் கை நீண்டிருக்காதா என்ன?
-தேசாந்திரி
Desanthri retweeted
நூலகத்தில் வரலாற்றுப் பிழைகள் மலிந்த __________________________________
நூல்கள் :
_______
விசாரணை ஆணையம் அமைத்து உண்மை கண்டறிய வேண்டும் !
___________________________________
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
___________________________________
கோவையில் அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற 'பெரியார் அறிவுலகம்' என்னும் நூலகத்தில் இடம் பெற்று பல நூல்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் அந்த நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டதில் அவர் இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி மனம் நொந்து தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சான்றுக்கு சில நூல்களைக் குறிப்பிட்டு நூல்களைக் கொள்முதல் செய்ததில் எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது மிகுந்த பேரதிர்ச்சியை அளிக்கிறது.
போலி நிறுவனங்களின் பெயரால் தரமில்லாத நூல்களைக் கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்ததால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என ஊகிக்கும் அதே வேளையில்; வரலாற்றுப் பிழைகள் மலிந்த மிகவும் கீழான நூல்களை நூலகங்களில் வைத்திருப்பது புதிய -இளைய தலைமுறையினரைப் பாழாக்கும் மிகமோசமான மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் ஆகும். இது தீராத ஆத்திரத்தையும் பெருங்கவலையையும் அளிக்கிறது.
இதன்பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து தொடர்புடையோர் யாவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளித்திட அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட அரசுக்கான பொதுநூலகங்களில் இடம்பெற்றுள்ள நூல்களின் உள்ளீட்டுக்கான தரம் எத்தகையது என்பதைக் கண்டறியவும்; போலி நிறுவனங்களின் மூலம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளைக் கண்டறிந்து தொடர்புடையோரைத் தண்டிக்கவும் ஏதுவாக தமிழ்நாடு அரசு உடனடியாக 'விசாரணை ஆணையம்' ஒன்றை அமைத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
நானா நாடா என்றால் என் நாட்டின் பக்கம்தான் நிற்பேன்.நாடா ஒடுக்கப்பட்ட மக்களா என்றால்
நான் ஒடுக்கப்பட்ட மக்களோடு தான் நிற்பேன் என்ற அண்ணல் அம்பேத்கரின் வழியில் என்றுமே விசிக நிற்கும். நீட் தேர்வினால் பாதிக்கப்படுவது எளிய வீட்டு பிள்ளைகள் தான். அந்த வகையில் கட்சி அரசியல்,கூட்டணி அரசியல் கடந்து விசிக எப்பொழுதும் மக்களோடுதான் நின்று கொண்டிருக்கிறது.
-தேசாந்திரி
No equality without democracy spread wide. Working-class democracy must cut across caste.
#Thirumavalavan #AnnihilationOfCaste #VCK #TheRationalist
திருட்டு கம்னாட்டிகளா நீங்க செஞ்சுட்டு இருக்கதுக்கு பேரு என்னடா..
ஜெய் பீம்/ #JAIBHIM திரைப்படம் வெளியானபோது, ' சங்கிகளும் பாமகவினரும் ' கம்யூனிஸ்டுகள் மீது பரப்பிய EDIT செய்யப்பட்ட அதே புகைப்படத்தையே இப்போது இந்த விசிகவினர் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.
உண்மையான புகைப்படம் அதுவல்ல
2011ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியில் CPI(M) போட்டியிட்டபோது இடம்பெற்ற சுவர் விளம்பரம் குறித்து, VCK-வைச் சேர்ந்த @WriterRavikumar தனது நிறப்பிரிகை வலைப்பதிவில் பதிவு செய்திருந்தார்
அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 👇🏻
“கத்தரிமேடு பழனிவேலு வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்து மக்களை ஸ்ரீதர் வாண்டையாருக்கு எதிராகத் திருப்பிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு அங்கமாகவே தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கும் ‘சாதி முத்திரை’ குத்தப்பட்டிருக்கிறது.”
மேலும்,
“ஒரு சுவர் விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்துபோனேன். ‘பாலகிருஷ்ணன் படையாட்சி’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தோழர் கே.பி.யும் அந்த விளம்பரத்தைப் பார்த்திருந்தால் அதிர்ந்துதான் போயிருப்பார். அவருடைய இயல்பு எனக்குத் தெரியும். நிச்சயம் அவர் அந்த விளம்பரத்தைப் பார்த்திருக்க மாட்டார். அனுமதிபெற்று செய்யப்பட்டிருந்த அந்த விளம்பரத்தை அவரது கூட்டணிக் கட்சிக்காரர்கள் எவரேனும் செய்திருக்கக்கூடும்” என்று எழுதியிருந்தார்.
அதாவது, தோழர் கே.பாலகிருஷ்ணன் மீது சாதி முத்திரை குத்தப்பட்டிருப்பதையே ரவிக்குமார் தனது பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்த விளம்பரத்தை CPI(M) செய்ததாகவோ, தோழர் கே.பி.யின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதாகவோ அவர் கூறவில்லை.
அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்த ‘படையாட்சி’ என்ற வார்த்தையே EDIT செய்யப்பட்டதுபோல இருப்பதாக அன்றே Blogspot வாசகர்களும், முகநூலில் இயங்கிய இடதுசாரிகளும் விமர்சித்திருந்தனர்.
ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, ஜெய் பீம் திரைப்படம் வெளியானபோது சங்கிகளும் பாமகவினரும் கம்யூனிஸ்டுகள் மீது பரப்பிய அதே அவதூறைப் பயன்படுத்தி, எந்தக் கூச்சமும் இல்லாமல் இப்போது விசிக-வினர் பிரச்சாரம் செய்கிறார்கள்
வரலாற்றுப் பதிவுகளைக்கூடச் சரிபார்க்காமல், பழைய அவதூறுகளையே மீண்டும் தூக்கிக்கொண்டு வருவது என்ன அரசியல்?
உண்மையில், இன்று VCK செய்வது மிகவும் தரம் தாழ்ந்த அரசியல்!
ஆட்சி அதிகாரம் போனதில் இருந்து இவனுங்க உண்மையாவே மென்டலான்கள் ஆயிட்டானுங்க போல.. இந்த ட்ரோல் மெட்டீரியல தான் இவ்ளோ நாள் ஆர் எஸ் எஸ் எதிரின்னு நினைச்சிருக்கோம்...
ச்சைக் 🤧🤧🤧
பாட்டாளி வர்க்க விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தெருக்களில் இடதுசாரி கொள்கை பாடல்களை பாடிய பாவலர் சகோதரர் இளையராசா மீது மதுரை காம்ரேட் நிகழ்த்திய தீண்டாமை .....அவ்வளவுதான்
கம்யூனிசம் . "லால் சலாம்"
பதிவு: @Elansezhian3
Desanthri retweeted
பாட்டாளி வர்க்க விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தெருக்களில் இடதுசாரி கொள்கை பாடல்களை பாடிய பாவலர் சகோதரர் இளையராசா மீது மதுரை காம்ரேட் நிகழ்ததிய தீண்டாமை .....அவ்வளவுதான்
கம்யூனிசம் . "லால் சலாம்" (@Tndalitpanthers