Pinned Tweet
இது எனது அரசல்ல நமது அரசு. ஒரு கட்சியின் அரசல்ல ஒரு இனத்தின் அரசு என்பார் கழகத் தலைவர்; இவை இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வரும் வார்த்தைகள். அதற்கான சிறு சான்றே, தம்பி என அழைத்து இந்த எளிய உடன்பிறப்பின் கோரிக்கையை நிறைவேற்றியதுதான்.
தமிழ்நாட்டின் காவல் அரணாகத் திகழும் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்! ❤️🙏
தம்பி @srinileaks அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்.
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்!
இப்படி பல ஆராய்ச்சிகளை நடத்திய @madan3 இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்?
இந்த செய்திகளை இன்னும் பார்க்கவில்லையா?! அல்லது வேறு காரணங்களா?
நிதன் சிற்றரசு retweeted
நாகையில் பறிமுதல் செய்யப்பட்ட 137 கிலோ Crystal Meth தொடர்பாக @FinMinIndia -சார்பில்
அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட கும்பல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாகை துறைமுகத்தில் இருந்து Boat மூலமாக நடுக்கடலில் இலங்கைக்கு போதைமருந்தை கடத்த திட்டமிட்டுள்ளனர்
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள
நாகை துறைமுகம் @AadhavArjuna கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது
கடந்த காலத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு International Drug Mafia-வாக முழுமையாக உருவெடுத்துள்ளனர்
கடந்த 5 மாதத்தில் எத்தனை முறை கடத்தல் நடந்தது ?
பூபாலனோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் ?
எங்கிருந்து “Meth” கடத்தி வரப்பட்டது?
பூபாலனுக்கு நிதி உதவி செய்தது யார்?
என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது
மிகப்பெரிய வலையமைப்பை கண்டறிந்து முறியடித்ததற்கு வாழ்த்துக்கள் @FinMinIndia @nsitharaman 💐
இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை
கண்டறிய @dir_ed விசாரணைக்கும்
மத்திய அரசு @nsitharamanoffc அவசியம் உத்தரவிட வேண்டும்
🔹Directorate of Revenue Intelligence (DRI) seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu
🔹Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route
For further details, read here: pib.gov.in/PressReleaseDetai…
முதல்வர்'ன்னு மாளிகை பெயர் இருப்பது முதலமைச்சருக்கு தெரிந்தால் பெயர் மாற்றி விடுவாரே 🫣
"மழை வந்தா முதல்வர் மாளிகை வந்துருங்க.. இங்க இருக்காதீங்க".. ராயபுரம் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ தாமு!
#Royapuram | #Heavyrain
#ChennaiRains | #StagnantWater
#MLAdhamu
நிதன் சிற்றரசு retweeted
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.
பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.
எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.
குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.
நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.
எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.
ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.
தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வள்ளுவர் கோட்டம்ல இருந்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், மெட்ரோ வரை திறந்து வச்ச அதிமுக பேரு தான் இருக்கும்..
இந்த library எல்லாம் ஒரு matter ஆ? 😆
But வரலாறு சொல்லும் யாரு என்ன செஞ்சாங்கன்னு 💪
காலத்துக்கும் போர்டுல C. Joseph Vijay-ன்னுதான் இருக்கும் ஸ்வீட் uncle😭 @mkstalin
வெளிப்படையான ஆட்சி கொடுப்பேன் என்று பதவியேற்கும் போது சொன்ன முதல்வர் விஜய் அவர்களே
RTI மூலம் கேட்ட கேள்விகளுக்கு Information Integrity Desk (IID) பற்றி வெளிப்படை தன்மையுடன் பதிலளிக்க மறுப்பது ஏன்?
2023 திமுக ஆட்சியில் Fact Check Unit (FCU) ஆரம்பிக்கப்பட்டது. இதற்கென ஆண்டுக்கு ₹3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 80 பணியிடங்கள் உருவாக்கப்பட்டது
2026 தவெக அரசு பொறுப்பேற்ற பின் மோடியின் Name change Sarkar போல FCU என்பதை IID என பெயர் மாற்றம் செய்தது. இதற்கு பொறுப்பாளர்களாக விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை நியமித்ததாக செய்திகள் வந்தது
இப்போது IID பெயர் மாற்றம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அரசாணையை RTI மூலம் கேட்டதற்கு, கொடுக்க மறுத்துள்ளது அரசு
வெளிப்படைத் தன்மையுடன், ஒரே பவர் சென்டராக விஜய் மட்டுமே இருப்பான் என்று அறிவித்த முதல்வர் அவர்களே, அரசாணை கொடுப்பதில் என்ன தயக்கம்.
தவெக அரசில் அரசியல் ஆலோசகர் நியமனம் உட்பட பல அரசாணைகள் வெளிவராத மர்மமாக இருப்பது ஏன்?
பதில் சொல்லுங்க CM சார்
Source:
2023 GO Copy
shorturl.at/s917f
State government has declined to provide details under the Right to Information (RTI) Act on the restructuring of its Fact Check Unit (FCU) as the Information Integrity Desk (IID) @tn_factcheck
நிதன் சிற்றரசு retweeted
Full story- Online
newindianexpress.com/states/…
வள்ளுவர் கோட்டமாகட்டும், பெரியார் அறிவுலகமாகட்டும் திறப்பது யாராய் இருந்தால் என்ன?
காலமும், வரலாறும் நம் பெயரைத் தான் செல்லும்!
@mkstalin ❤️🙏
நிதன் சிற்றரசு retweeted
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai #Coimbatore #PeriyarArivulagam
நிதன் சிற்றரசு retweeted
சென்னை - அண்ணா நூற்றாண்டு நூலகம்
மதுரை - கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கோவை - தந்தை பெரியார் பெயரில் நூலகம்
இந்த வரிசையில், திருச்சியில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்குப் பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டுகிறோம்!
600 லட்சம் பாக்கெட்டுகள் பாமாயில் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதா என்பதை @Arappor @JayaramArappor மற்றும் ரிட்டயர்டு @ArchitectSam76 வெளிக்கொண்டு வர வேண்டும்
டெண்டரில் 8 நிறுவன பங்கேற்கிறது. இதில் MGM Edible Oil நிறுவனம் L1 ஆக தேர்வாகிறது
வழக்கமான டெண்டர் நடைமுறை படி, மற்ற நிறுவனங்கள் L1 விலைக்கு கொடுக்க முன் வந்தால் அவர்களுக்கும் சப்ளை ஆர்டர் பிரித்து கொடுக்கப்படும்
இதில் 3 நிறுவனங்கள்
L2 Kumar Agro
L3 KTV Health Food
L4 Integrated Service point
L1 விலைக்கே பாமாயில் சப்ளை செய்ய ஒப்புக் கொள்கிறது
4 நிறுவனங்கள் ஒரே விலையில் கொடுக்க முன் வரும் போது மொத்த கொள்முதல் விகிதாச்சார அடிப்படையில் பிரித்து கொடுக்கப்படும்
முதற்கட்டமாக 200 லட்சம் பாக்கெட் பாமாயில் கொள்முதலில் விகிதாச்சார முறையில் கொடுக்கவில்லை என்று நீதிமன்றம் சென்றுள்ளது KTV நிறுவனம்
காரணம்
L1 MGM 80 லட்சம்
L2 Kumar Agro 52 லட்சம்
L3 KTV 34 லட்சம்
L4 ISP 34 லட்சம்
பாமாயில் பாக்கெட்டுகள் சப்ளை செய்ய வேண்டும் என பிரித்து கொடுத்துள்ளார்கள்
இந்த வேறுபாட்டால் நீதிமன்றம் பாமாயில் கொள்முதல் செய்ய தடை விதித்துள்ளது
என்னுடைய கேள்வி எல்லாம் இதே போன்ற நடைமுறை பின்பற்றி திமுக ஆட்சியில் அன்றைய அமைச்சர் @V_Senthilbalaji செய்த TNEB டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் என்றால், இப்போது தவெக ஆட்சியில் அமைச்சர் @AdvocateVenkatP தலைமையில் பாமாயில் கொள்முதலில் நடந்துள்ளதன் பெயர் என்ன?
அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டத்திற்கான டெண்டரில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் L1 ஆக தேர்வானது. அவர்களை போன்றே 1 பைசாவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கொடுக்க முன் வந்ததால் 70:30 என ஆர்டர் பிரித்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TVK Polmolein Oil
Finance Summary
shorturl.at/XbPdK
Award of Contract (AOC)
shorturl.at/D9djG
DMK Transformer
shorturl.at/7xkOZ
Arappor
Tender Ref M-11/2021-22
xitter.cf/Arappor/status/1704417…
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
xitter.cf/TVKFactChecks/status/2…
எளிமையான முதலமைச்சர் நாளை கோயம்புத்தூர் வர உள்ள நிலையில், ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
sulur air force station, coimbatore Airport எல்லாம் இருக்கும்போது இது ஏன் தயார் செய்கிறார்கள் என யாரும் கேட்கக்கூடாது; ஏனெனில் இவர் எளிமையான முதலமைச்சர்!
RT @mkstalin: இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்…
நிதன் சிற்றரசு retweeted
மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அறிவித்தபடி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் - விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் - கோவை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய
3 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 இலட்சம் வீதம் மொத்தம் 30 இலட்சம் ரூபாயினை இன்று (15.10.2026) குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார்.
இதுவரை 33 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 3 கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது
மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்." என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில், விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த திருமதி சரிதா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரண்ராஜ் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.மேகலிங்கம் - சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.முருகன் - விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மு.இராமதாஸ் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரவணகுமார், ஈரோடு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம். லிங்கேஸ்வரன் - மதுரை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். திருப்பதி - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.முத்துராஜா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நா.மாரிமுத்து - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பார்வதி (எ) உஷா - திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இ.பரத்குமார் - தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.சண்முகம் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.முத்துசுரேஷ்ராஜா - விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ்ராஜ் - ஈரோடு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுபாளையம் பி.சரவணன் மற்றும் சூரம்பட்டி த.விஜயகுமார் - கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.ராமமூர்த்தி - ஈரோடு வடக்கு மாவட்டம், பவானி நகரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் - சேலம் மத்திய மாவட்டம், சேலம், சின்னகொல்லப்பட்டி சேர்ந்த எம்.செந்தில்குமார் - விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம், மாரிச்செட்டிகுளத்தைச் சேர்ந்த வி.ராஜ்கிரண் ஆகிய 30 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து;
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த செல்வம் அவர்கள் 28.05.2026 அன்று புதுக்கோட்டை, ஆலங்குடி - புதுக்கோட்டை சாலையில் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் சிக்கியும் - விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த கார்த்திகேயன் அவர்கள் கடந்த 20.03.2026 அன்று திண்டிவனம் - வெள்ளிமேடு, பெரப்பேரி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் சிக்கியும் - கோவை தெற்கு மாவட்டம், ஆனைமலை வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த மனோஜ்குமார் அவர்கள், கடந்த 06.02.2026 அன்று பொள்ளாச்சி - திருச்சூர் மீன்கரை ரோடு ஜமீன்ஊத்துக்குளி - ரூபி டிரேடர்ஸ் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பொலிரோ ஜீப் மோதி விபத்தில் சிக்கியும் உயிரிழந்த இந்த 3 குடும்பங்களுக்கும் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையினை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த செல்வம் அவர்கள் மனைவி திருமதி செ. ஜெயந்தி அவர்களிடமும் - விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த கார்த்திகேயன் அவர்களின் மனைவி திருமதி கே. சியாமளாகௌரி அவர்களிடமும் - கோவை தெற்கு மாவட்டம், ஆனைமலை வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த மனோஜ்குமார் அவர்களின் மனைவி திருமதி பிருந்தா அவர்களிடமும் இன்று (15-10-2026) காலை வழங்கினார்.
நிதன் சிற்றரசு retweeted
ஏம்மா கல்பனா, அந்த வீடே உன்னோடது இல்லையாமே என்பதைப் போல, வதந்தி வாரியர்ஸ்கள் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கூட விட்டுவைக்கவில்லை. இல்லாத ஒன்றை இப்படித்தான் பொய் பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது இந்த டம்மி தவெக.
#TVKFailsTN
நிதன் சிற்றரசு retweeted
தவெகவின் இன்றைய ஸ்டிக்கர், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிறுவனத்தின் மீது!
நாளைய ஸ்டிக்கர் திமுக ஆட்சியில் கோவையில் பிரம்மாண்டமாக கட்டிய பெரியார் அறிவுலகத்தின் மீது!
திமுக ஆட்சியில் கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைப்பதையும், நிறுவனங்களைத் திறந்து வைப்பதையும், திமுக அரசின் திட்டங்களின் பெயரை மாற்றுவதையும், அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதையும் தவிர்த்து, உருப்படியாக ஒரே ஒரு வேலையாவது செய்து காட்டுங்கள் மூடர் கூட்டத்தின் டம்மி முதல்வர் அவர்களே!








































