மசூதி உள்ளே மனைவியின் நெற்றியில் முத்தமிட்ட காரணத்தால் கணவனுக்கும் மனைவிக்கும் சவுதியில் தலை துண்டிப்பு.
மனுஷனாடா நீங்களாம். இதையும் நியாயப்படுத்தி நாலு கமெண்ட் போட இங்கே ஆள் இருக்கு!!
இதற்கு முன்பு முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கமலஹாசன் ஸ்கூல் ட்ராப் அவுட் 😀
2011 துவங்கிய IAC அமைப்பின் போராட்டங்களின் போது கூட இருந்த பலர் 2014ல் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் தங்கள் வேலையை பார்க்க கிளம்பி விட்டார்கள். 12 வருடங்களாக ஒரு சமூக பிரச்சினைக்கு கூட அவர்கள் கருத்து சொல்லவில்லை.
அதே போல 2021 வரை அறப்போர் மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தில் இருந்து ஊழலுக்கு எதிராக கம்பு சுற்றிய பலர் கடந்த 5 வருடங்களாக தங்கள் வேலையை பார்க்க கிளம்பி விட்டார்கள். 2026 திமுகவின் தேர்தல் தோல்விக்கு பிறகு தற்பொழுது உக்கிரமாக அரசியல் பேச துவங்கி இருக்கிறார்கள்.
இந்த இரண்டு கும்பல் கூடவும் நான் பழகி இருக்கிறேன். வேலை செய்திருக்கிறேன். இவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை!!
இதை save செய்து வச்சுக்கோங்க பிரண்ட்ஸ். இந்த மாத கடைசியில், அடுத்த மாதத்தில் மழை பெய்யும் சமயத்தில் இதே திராவிட மாடல் சாதனையை பேசுவோம்.
“ஓரிரவில் பெய்த கனமழையால் தேங்கிய நீர், அந்த இரவு விடிவதற்குள் வடிந்துவிட்டது! திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் நிகழ்த்திய சரித்திரம் இது!”
திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கைத் திட்டப் பணிகளைத் தொடர்ந்து, திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றிட வேண்டும்!
– மாண்புமிகு முதலமைச்சருக்கு முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு வலியுறுத்தல்!
நேற்று முன்தினம் சென்னை மாநகரில் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீர், திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் நடவடிக்கைகளின் காரணமாக உடனடியாக வெளியேறி, சென்னைவாழ் மக்களின் பாதிப்பைப் பெருமளவில் குறைத்துள்ளது. இதை நடுநிலையாளர்கள் உணர்கிறார்கள். சென்னைவாழ் பெருமக்கள் புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசிற்குக் கிடைத்துள்ள பாராட்டுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத த.வெ.க.வினர், சமூக வலைதளங்களில் “4,000 கோடி ரூபாய் செலவு செய்தது இதற்குத்தானா?” என்ற அளவில் முகாந்திரமில்லாத வெட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
திராவிட மாடல் அரசில் எண்ணற்ற திட்டங்கள் சென்னை மாநகரத்திற்காக நிறைவேற்றப்பட்டன. ஆட்சிக்கு வந்தவுடன் திருப்புகழ் கமிட்டியை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பெற்று, அவற்றுள் இடைக்காலப் பரிந்துரைகளை உடனே நிறைவேற்றிய அரசு, எங்கள் அன்றைய முதலமைச்சரும் இன்றைய கழகத் தலைவருமான திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசு என்பதை இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். திராவிட மாடல் அரசு சென்னை மாநகருக்கு மட்டும் நிறைவேற்றிய திட்டங்களில் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கடந்த ஐந்தாண்டுகளில் 1,000 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முடித்தோம். மீதமுள்ள பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன! கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மட்டும் 600 கிலோமீட்டருக்கு மேல் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. 37 நீர்வழிக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்களின் உயரத்தை அதிகரித்து, வெள்ள அபாயத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீர் தேங்குவதைத் தவிர்க்கவும் 770 இடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் கொசஸ்தலையாறு, கோவளம் வடிநிலப் பகுதிகளும் அடக்கம்! சென்னை மாநகராட்சியில் உள்ள 60 நீர்நிலைகளைப் புனரமைக்கவும், தூர்வாரவும், கரைகளைப் பலப்படுத்தவும், நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வந்ததும் திராவிட மாடல் அரசுதான்!
விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகள், நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் பணிகள், கோவளம் வடிநிலப் பணிகள், கொசஸ்தலையாறு வடிநிலப் பணிகள், டிரஸ்ட்புரம் கால்வாய்ப் பணிகள், கடப்பாக்கம் ஏரி மேம்பாடு, அடையாறு ஆற்றுப் புனரமைப்பு, ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்கள் புனரமைப்பு, தூர்வாரும் பணிகள் எனவும், வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பேரிடர் மீட்பு, நிவாரண மையம் அமைக்கும் பணிகள் எனவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, சென்னை மாநகருக்குக் கனமழைகளால் ஏற்படும் பாதிப்புகளை அடியோடு நீக்கத் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை நிறைவேற்றியதும், களப்பணியாற்றியதும் எங்கள் ஆட்சிதான்! இந்தச் சாதனைத் திட்டங்களால் ஓரிரவில் பெய்த கனமழையால் தேங்கிய நீர், அந்த இரவு விடிவதற்குள் வடிந்திருக்கிறது! கழக அரசு கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் நிகழ்த்திக் காட்டியுள்ள சரித்திரம் இது!
சென்னை மாநகராட்சிக்குத் திராவிட மாடல் அரசு என்ன செய்தது என்று திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து, “ரீல்ஸ்” விடுவோருக்கு, ஆட்சியிலிருந்து நாங்கள் நிகழ்த்திய “ரியல்” சாதனைகள் புரியவில்லை என்றே தெரிகிறது. கனமழை என்றாலும், வெள்ளம் என்றாலும் முதலில் ரிப்பன் மாளிகைக்கு வந்து ஆய்வு செய்பவராக எங்கள் முதலமைச்சர் இருந்தார். வெளியூர்ச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரவில் திரும்பினால்கூட நேராக ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறைக்கு வந்து ஆய்வு செய்யும் நிர்வாகத் திறமைக்குப் பெயர் பெற்றவர் எங்கள் அன்றைய முதலமைச்சர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். இப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரிப்பன் மாளிகைக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அதன்பிறகு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஐ.ஏ.எஸ். அவர்கள், “கடந்த காலங்களில் இருந்ததைவிட இப்போது மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள் குறைந்துள்ளன” என்று கூறியிருக்கிறார். இதுதான் எங்கள் ஆட்சியின் சாதனைக்கு எடுத்துக்காட்டு!
மேலும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த திரு. ககன்தீப் சிங் பேடி அவர்கள்தான் இப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கிறார். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த திரு. குமரகுருபரன் தற்போதும் தலைமைச் செயலகத்தில் அரசுச் செயலாளராகத்தான் இருக்கிறார். ரிப்பன் மாளிகைக்குப் போன மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் கேட்டாலே, கடந்த ஐந்தாண்டு காலத்தில் சென்னை மாநகராட்சியில் திராவிட மாடல் அரசால் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் அனைத்தையும் மிக எளிதாகப் பட்டியலிட்டுச் சொல்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னொன்று, திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் மீது ஏதோ எங்கள் அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தவறான பிம்பத்தைத் திட்டமிட்டுத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்கள். அது தவறு! திருப்புகழ் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளில் இடைக்காலப் பரிந்துரைகள், நீண்டகாலத் திட்டங்களுக்கான பரிந்துரைகள் என்ற அடிப்படையில் இருவிதமான பரிந்துரைகள் இருந்தன. அவற்றில் இடைக்காலப் பரிந்துரைகளை முதலில் நிறைவேற்றிய அரசுதான் திராவிட மாடல் அரசு. சட்டமன்றத்திலேயே நான் இதுகுறித்துப் பேசும்போது, “திருப்புகழ் கமிட்டியின் இடைக்காலப் பரிந்துரைகளை நிறைவேற்றியுள்ளோம். நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குள் தேர்தல் வந்துவிட்டது” எனக் கூறி, “இப்போதும் அறிக்கை அரசிடம்தான் இருக்கிறது. தாராளமாக அந்த நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றலாம்” எனக் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.
திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டியதும், ஏற்கெனவே திராவிட மாடல் அரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டியதும் த.வெ.க. அரசின் பொறுப்பு என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
40 mm பழைய சாலையை அகற்றி விட்டு அதே 40mm புதிய சாலை அமைத்தால் யாருக்கும் எந்த தொல்லையும் வராது. ஆனால் கணக்கு காட்டுவதற்காக வெறும் 10mm மட்டுமே அகற்றி விட்டு அதன் மீது 40 mm புதிய சாலையை அமைக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு முறையும் 30mm சாலை உயரம் கூடிக்கொண்டே வருகிறது. சில இடங்களில் இந்த உயரம் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் இதை கண்காணிக்க வேண்டிய அரசு ஊழியர்கள் கமிஷனுக்கு பலியாகி விடுகிறார்கள். அல்லது ஒப்பந்ததாரர்களின் அரசியல் பின்னணிக்கு அடங்கி போய் விடுகிறார்கள்.
இதற்கு முடிவு கட்டும் வரை மழைநீர் வீட்டு உள்ளே வருவதை தடுக்க முடியாது. @CMOTamilnadu @chennaicorp @sameerangs
தமிழ்நாட்டில் எந்த தவறு நடந்தாலும் அதை திமுக இதற்கு முன்பே பெரிதாக செய்து சாதனை படைத்திருக்கும். அவர்கள் செய்யாத ஒரு தவறை தமிழ்நாட்டில் புதிதாக செய்வது மிக மிக கடினம். தவறு செய்வதில் அவர்களுக்கு அத்தனை திறமை!!
Jaffer Sadiq had exported 237 consignments of pseudoephedrine and Ketamine to Australia, NZ and Malaysia from 2014-24, ED alleged in its chargesheet.
His alleged laundered drug money was pumped into Pitch n Play, a gaming place in Chennai. There is extensive literature on who inaugurated this firm's business in Chennai.
There is no doubt that TVK functionary Boopalan's involvement in one of the biggest drug seizures in recent TN history is shocking. But using this to somehow dilute the Sadiq case is not right, in my view.
மீண்டும் மீண்டும் மழைநீர் வடிகால் கட்டுவதில் முழு கவனம் செலுத்துவதை விட, இனி போடப்படும் சாலைகள் பழைய சாலைகளை விட 1 மிமீ கூட உயராமல் போடப்படுவதை உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு காலத்தில் மழை நீர் கால்வாய்களின் தேவையே இல்லாமல் இருந்த சென்னையின் பல பகுதிகள் இன்று வெள்ளம் வடிய கால்வாய்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவல நிலைக்கு காரணமே முட்டாள்தனமாக உயர்த்தப்பட்ட சாலைகள் தான்.
சில பகுதிகளில் சாலை உயரங்களை பழைய நிலைக்கு கொண்டு வருவதால் தீர்வு ஏற்படும் என்றால் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் அந்த சாலைகளை உடைத்து புதிய சாலைகளை பழைய உயரத்துக்கு அமைக்கலாம்.
இதை செய்யாமல் ஒப்பந்ததாரர்களை இஷ்டத்துக்கு ஆட விட்டால் 4000 கோடி என்ன 40000 கோடி செலவு செய்தாலும் கடைசியில் டிராக்டரும் பம்ப்பும் வைத்து தான் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும்.
@CMOTamilnadu @chennaicorp @TVKVijayHQ @sameerangs
நேற்று ஒரு அந்த கட்சி முகநூல் பிரபலம் தன்னுடைய பதிவில் இந்த தடுப்பூசி 2027ம் ஆண்டு தான் பயன்பாட்டுக்கு வருவதாகவும், அமைச்சர் அருண்ராஜ் ஏமாற்றுகிறார் என்றும், இவரெல்லாம் ஒரு மருத்துவரா என்றும் கரித்து கொட்டி இருந்தார்.
ஆனால் செய்தியில் இது ஒரு பைலட் பிராஜெக்ட் என்று அமைச்சர் தெளிவாக சொல்லி இருக்கிறார். டெங்கு பரவல் அதிகம் உள்ள கடையநல்லூர் பகுதியில் இந்த தடுப்பூசியை சோதனை முயற்சியாக பயன்படுத்தி அதன் பயனை சோதிக்க இருக்கிறார்கள். இது உலக சுகாதார மையத்தாலும், இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பாலும் அங்கீகரிக்கப்பட்டது என்று சொல்லி இருக்கிறார். இந்த தடுப்பூசியை பிரேசில் நாடு ஏற்கனவே தங்கள் பொது சுகாதார தடுப்பூசியாக அறிவித்து விட்டதாகவும் கூறி இருக்கிறார்.
இத்தனை விவரங்கள் தெளிவாக சொல்லி இருந்த போதும் அதை பற்றி எதுவும் சொல்லாமல் தமிழ்நாடு அரசின் மீது வன்மத்தை கொட்ட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மக்களிடையே புரளியை பரப்பி விட்டு அவர் கட்சியை ஆதரிக்காதவர்களை தினமும் நாலு முறை தற்குறி மடையன் முட்டாள் என்று கரித்து கொட்டிக் கொண்டே இருக்கிறார். அந்த பதிவின் கமெண்ட் பகுதியில் ஒருத்தராவது அந்த பதிவை மறுத்து எழுதி இருப்பார்கள் என்று பார்த்தால் அத்தனை பேரும் கூட சேர்ந்து ஒப்பாரி தான் வைத்திருக்கிறார்கள்.
தடுப்பூசி குறித்து பலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் சில உயிர்கொல்லி நோய்களுக்கு அதுவும் வருடா வருடம் பல உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கும், மிகவும் எளிதாக பரவக்கூடிய டெங்கு போன்ற நோய்களுக்கு தடுப்பூசி மிக மிக அவசியம். நம்மில் சிலருக்கு கொசுக்கள் உள்ளே நுழைய முடியாத வகையில் வீடு கட்டி உள்ளே பாதுகாப்பாக வாழ வசதி இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு அந்த பாதுகாப்பு கிடையாது. கொசுக்களோடு தான் அவர்கள் வாழ்க்கை பயணிக்க வேண்டும். அவர்கள் உயிர் இந்த தடுப்பூசி மூலம் பாதுகாக்கப்படும் என்றால் அது நல்லது தானே!
He came in the wrong direction. Blocked my car and started talking in mobile. What to do with these guys?
#ECR #Kottivakkam #TN07CY7194
@ChennaiTraffic
சுள்ளான்னு ஒரு இளைஞர் படுகொலை செய்யப்பட்டார் என்று திமுகவின் சன் டிவி ரொம்ப கவலையில் இருக்கிறார்கள். ஆனால் அந்த சுள்ளான் கடந்த திமுக ஆட்சியில் செய்த கொடூரங்களை இங்கே பட்டியல் போட்டிருக்கிறார்கள். இதை பார்த்த பிறகு நல்லவேளை இவனை கொன்று விட்டார்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
அதற்கு நிரந்தர பம்பிங் ஸ்டேஷன் வைத்து மழை பெய்யும் போதே தண்ணீர் தேங்காமல் இறைக்க வேண்டும். வீட்டு உள்ளே தண்ணீர் வந்து வீடே சகதி காடாகிய பிறகு பம்ப் கொண்டு வந்து இறைத்து ஊற்றுவது முட்டாள்தனமான திட்டமிடல். இதெல்லாம் வீட்டு உள்ளே தண்ணீர் வந்து அவதிப்படுபவர்களுக்கு தான் புரியும்.
மழைக்குப்பின் நல்ல நிலையில் இருப்பதற்கு காரணம் மழை நீர் வடிகால் அல்ல, மோட்டார் வைத்ததே என்கிற விஞ்ஞான விளக்கம் கண்ணில்பட்டது
மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டார்களா?
மழை நீர் வடிகால் மூலமே வெளியேற்ற முடியும்
பள்ளத்தில் இருந்து மேடான வடிகால் பகுதிக்கு அல்லது வடிகாலில் நேரடியாக தான் அனுப்ப முடியும்.
நைட் எல்லாம் 4000 கோடி என்னாச்சுனு உருண்டுட்டு , இப்போ மோட்டார் மோட்டார்னு 😄
ஒன்று இது மழையின் தொடக்கம், பல்வேறு பணிகளை சரியாக செய்தால் மட்டுமே மீட்க , காப்பாற்ற முடியும்
அதைவிடுத்து சோசியல்மீடியா நரேசன் தான் முக்கியம் என்றால் பாவம் மக்கள்
யாரு அந்த ரெட் அலெர்ட் கொடுத்தது? அது வாபஸ் பெறப்பட்ட அறிவிப்பும் கொடுப்பது தானே நியாயம்?
மழை என்றாலே பயந்து கிடக்கும் சென்னை மக்களை இப்படியா பூச்சாண்டி காட்டுவீர்கள்? இனி நீங்கள் அனுப்பும் அலெர்ட்களுக்கு என்ன மதிப்பு இருக்கும்?
@CMOTamilnadu @chennaicorp @TVKVijayHQ @KASengottaiyan @tnsdma
Chennai radar looks clear, with no significant rainfall expected in the immediate hours. No major rains on the cards for now. 🌦️
#ChennaiRains #ChennaiWeather #TamilNaduRains
பாஜக அரசின் விசாரணை மீது @mohanclazarus குழுவிற்கு திடீர் நம்பிக்கை வர என்ன காரணம்?
இவ்வளவு பெரிய Drug Consignment கடத்தலுக்கு பின்னால் இருக்கும்
Financier-ஐ கண்டறிய வேண்டியது அவசியம்
ஆகையால்,அமலாக்கத்துறையின் விசாரணைக்கும் @FinMinIndia @nsitharaman உத்தரவிட வேண்டும்
கடும் வெயிலுக்கு பிறகு பெய்த முதல் மழை. நீர்நிலைகளும் நிரம்பவில்லை. நிலத்தடி நீர் மட்டமும் உயரவில்லை. இந்த நிலையில் வெள்ள நீர் வடிவத்தில் எந்த சிக்கலும் இருக்காது. இதே போல 15 நாட்கள் மழை பெய்யட்டும். அப்புறம் பார்க்கலாம்.
"நேற்று சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆனால், காலையில் மக்கள் பெரிய இடையூறுகளின்றி தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். த.வெ.க ஆட்சியமைந்த நான்கு மாதங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு இதை சாதித்தார்களா? திமுக ஆட்சியில் செய்த பணிகளுக்கான பலன் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது." - மேயர் பிரியா
#MayorPriya | #DMK | #TVK | #Vikatan
Sam Ponraj retweeted
Next key date for Chennai to be watched is around 21-22 October (+ or - one day).
UAC
---------
Rains are expected tonight in Chennai but Red Alert rains (>200 mm) varuma ? Chennai has historically not experienced back-to-back 200 mm rainfall days from an Upper Air Circulation (UAC) without a break. The current UAC is close to Chennai which mean convergence would be slightly north of Chennai.
Today forecast for Chennai
-----------------
Today’s rainfall outlook: Rains are likely to be manageable compared with yesterday’s spell. The main convergence zone is expected to remain north of the UAC, favouring South Andhra Pradesh and the Tiruvallur district, which could receive good rainfall.
Hence, the chances of another widespread, very heavy rainfall spell across Chennai, similar to yesterday, appear slim today (just an personal opinion).
If anything forms or any massive cloud is converging like yesterday, will update the same even though it has less than 10% probability.
இது ஒரு பயங்கர சத்தத்துடன் அனைவர் போனிலும் வந்திருக்கிறது. இப்போ நாங்க என்ன செய்யணும்? வானிலை அறிக்கை என்ன சொல்லுது? நேற்று போல இன்றைக்கும் மழை வருமா? இல்ல இது சும்மா டெஸ்டிங் மெசேஜ் அனுப்பி பாக்குறாங்களா?
@praddy06 @ChennaiRains @chennaicorp @CMOTamilnadu
பொய் செய்தி போட்டு 3 மணி நேரம் ஆகுது. இன்னும் டெலீட் பண்ணல. அது தான் திமுக.

























