இரவிக்குமார் retweeted
பணக்காரர்கள் பணத்தைத்தேடி ஓடிவிட்டபின் யாருமற்ற வீட்டின்முன் கையேந்தி நிற்கிறான் பிச்சைக்காரன்.
இரவிக்குமார் retweeted
வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம் ஒன்றே ஒன்றுதான்,
வலியைத் தாண்டினால்தான்
வளர்ச்சியும்,முதிர்ச்சியும் பிறக்கும்.
இரவிக்குமார் retweeted
வாய் இருக்கு னு பேசக்கூடாது CM சார்
ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆச்சி
இதுவரை என்னத்தை புளுத்துனீங்கனு தெர்ல
நாட்டுல கொலை கொள்ளை கற்பழிப்பு பெண்கள் மீதான வன்முறைகள் தான் அதிகமாயிருக்கு
இரவிக்குமார் retweeted
முதல் வெற்றிக்குப் பிறகு
ஓய்வெடுக்காதீர்கள்...
அதற்குப் பிறகு
நீங்கள் தோற்றால்
உங்கள் முதல் வெற்றி
அதிர்ஷ்டத்தால் வந்தது
என்று சொல்ல
நிறைய உதடுகள்
காத்திருக்கின்றன.
- அப்துல் கலாம்
இரவிக்குமார் retweeted
நன்கு வேலை தெரிந்தவன் சிறந்த தொழிலாளி...
அந்த சிறந்த தொழிலாளியை நன்கு வேலை செய்ய வைப்பவன் மிகச்சிறந்த நிர்வாகி...
ஆனால் தொழிலாளியின் வேலையை நிர்வாகி செய்தால் அவன் சிறந்த நடிகன்...
இரவிக்குமார் retweeted
இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்று துண்டு போட்டு வைத்தால் எதுவும் இல்லாமல் போய்விடும்.
இரவிக்குமார் retweeted
பட்டர்ஃபிளை என்றவுடன்
"லவ்வர்" ஞாபகம் வந்தால் நீ காதலன்!
"குக்கர்" ஞாபகம் வந்தால் நீ கணவன்!!
*இவ்வளவு தான்யா வாழ்க்கை*
இரவிக்குமார் retweeted
"கார்த்திகா கைது விவகாரத்தில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்.." செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாக பேசிய தமிழிசை சௌந்தரராஜன்
#TamilisaiSoundararajan | #BJP | #NTK | #Karthika | #CMVijay | #PuthiyathalaimuraiTV
நாம் தமிழர் கட்சியோடு எங்களுக்கு அரசியல் ரீதியாக ஏராளமான முரண்பாடுகள் உண்டு. ஆனால் பொதுவாழ்வில் இருக்கிற ஒரு பெண்ணாக நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் திருமிகு.கார்த்திகா கைது செய்யப்பட்டதை அவசியம் கண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பொதுவாழ்வில் இருக்கின்ற ஒரு பெண்ணை முறையான காரணத்தைக் கூட தெரிவிக்காமல் இரவு உடையில் கைது செய்து அழைத்துவர வேண்டிய அவசியம் என்ன? இதே அளவுகோல்தான் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகிறதா?
நேற்று தோழி ஒருவர் மேயர் திருமிகு. பிரியா ராஜன் குறித்து ஒருவர் எழுதியிருந்த பதிவை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவ்வளவு ஆபாசமான, அறுவறுக்கத்தக்க பதிவு. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு இளம்பெண் அவர். அவர் அந்தப் பொறுப்பிற்கும், தீவிர அரசியலுக்கும் புதியவர். அதையெல்லாம் தாண்டி அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் இருந்தால் நாகரிகமாக பொதுவெளியில் வையுங்கள். அவர் பதில் சொல்வார். அதை செய்யாமல் அவ்வளவு
பச்சையாக பொதுவெளியில் ஒரு பெண்ணைப் பேசியவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?இப்பொழுது அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.
நேற்று முதலமைச்சரைப் பற்றி ஒரு பெண் மேடையில் மோசமாகப் பேசுகிறார். திருமிகு. கனிமொழி மேடையிலேயே அதைக் கண்டித்தார். பெண் ஒரு ஆணைப்பற்றி ஆபாசமாகப் பேசினாலும் அது தவறுதான்.
அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லாத திருமிகு. திரிஷா போன்ற பலர் அரசியல் காரணங்களுக்காக தொடர்ச்சியான ஆபாசத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் . முதலமைச்சரின் தாயார் கூட விதிவிலக்கில்லை.
பொதுவாழ்வில் இருக்கிற பல பெண்கள் தொடர்ந்து இம்மாதிரியான ஆபாசத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறோம். அப்படிப்பட்ட பேச்சுகள், பேசுபவரின் தரத்தைக் குறிக்கிறது. அவர்கள் தான் வெட்கித்தலைகுனிய வேண்டும். நாங்கள் அல்ல என்ற தெளிவோடு நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம்.
ஆனால் தொடர்ச்சியாக அரசியலில் இதுபோன்ற ஆபாசப் பேச்சுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆபாசமான பேச்சுகள் அரசியல் விமர்சனம் அல்ல. அது பேசுகிறவர்களின் வக்கிர மனநிலையையே பிரதிபலிக்கிறது. இதை இப்படியே கடந்து போய்க்கொண்டே இருக்க முடியாது. பொதுவாழ்வில் இருக்கிற பெண்கள் பொது சொத்துக்கள் அல்ல. எங்கள் எல்லோருக்கும் கண்ணியமான தனிப்பட்ட வாழ்வு இருக்கிறது. அதை சிதைக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை.
பொதுவெளியில் ஒரு பெண்ணிடம் நேர் நின்று பேச முடியாத ஆபாசமான
பேச்சுக்களைப் பேச, பேசி விட்டு தப்பித்துக்கொள்ள
சமூக ஊடகங்கள் ஒரு வசதியான இடமாகிவிட்டன. ஆபாசமான, அருவருப்பான கருத்துகளை நாம் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொண்டிருக்கிறோம்.
(We are normalising the obscene vulgar comments)
இது நமது எதிர்காலத் தலைமுறைக்குச் செய்கிற
மிகப்பெரிய கெடுதல். இதை கண்டும் காணமல் போவதும், தேர்ந்தெடுத்த விஷயங்களுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதும் (Selective Opposition), அரசியல் கட்சிகளைச் சார்ந்த நபர்கள் இன்னொரு அரசியல் கட்சியைச் சார்ந்த, சாரத பெண்களைப் பற்றிப் பேசும்போது அரசியல் கட்சிகள், அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு இதில். எந்தப் பொறுப்புமே இல்லை என்பதுபோல் இருப்பதும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தொடர்ந்து நடக்கப் போகிறது?
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வேறு யாரையும் விட இந்த சமூகத்தில் அதிகப் பொறுப்பு இருக்கிறது. உங்கள் மௌனம் பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை இயல்பாக்கிக்கொண்டு வருகிறது. இன்றைய genz தலைமுறை இதை எளிதில் கடந்து போகாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர வேண்டிய நேரம் இது.
அவர்கள் நம்மிடம் நாகரிகமான, கண்ணியம் மிக்க அரசியலை எதிர்பார்க்கிறார்கள். ஆபாசமான, ஆபாசத்தை மௌனமாகக் கடந்துபோகும் அரசியலை அல்ல. அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் அந்தந்த கட்சியினரின் ஆபாசப் பேச்சுக்களுக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். அதில் கூட அக்கட்சியைச் சார்ந்த பெண்களைத்தான் நீங்கள் இதுகுறித்து ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேட்பார்கள். ஏன் ஆண் தலைவர்கள் கேட்க வேண்டியதுதானே ? எல்லாப் பொறுப்புகளையும் தலைமைப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் பெண்களே தான் ஏற்றாக வேண்டுமா? ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தாலும் ஆண்கள் எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டார்களா?
இதுகுறித்து ஒரு வெளிப்படையான விவாதம் வேண்டும் என்று நினைக்கிறேன். அப்பொழுதுதான் பெண்களை குறிவைத்து நிகழ்த்தப்படும் இந்த ஆபாச அரசியலுக்கு ஒரு முடிவுகட்ட முடியும். நிச்சயம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாரபட்சமான அணுகுமுறைகள், ஆபாசத்தாக்குதல் நிச்சயம் கைவிடப்பட வேண்டும்.
இரவிக்குமார் retweeted
என்னடா மேலிடம்...? 😡😡
ஏன்டா... இப்படி ஒரு பெண்ணை விடிய காலையில வீடு புகுந்து நைட்டியோட கைது பண்ணி அந்த பெண்ணின் கணவன் கண்ணு முன்னாடி கணவர்ரோடு சேர்த்து இழுத்துக்கிட்டு வா"னு மேலிடம் சொல்லுச்சாடா 🤦♂️🤦♂️
இந்த போலீஸ்ம் ஆட்சியும் பெண்களுக்கு குடுக்குற மரியாதை பாதுகாப்பு இதுதானாடா?
இரவிக்குமார் retweeted
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திருமதி கார்த்திகா உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் 6 பேர் கைது – எதிர்க்கட்சியினர் மீதான தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது!
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி கார்த்திகா, அவரது கணவர் உட்பட அக்கட்சியைச் சார்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் செல்லும் வழியில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதற்காகத் திருமதி கார்த்திகா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளைக் காவல்துறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த வேண்டிய காவல்துறையை, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையைத் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திடுவதோடு, திருமதி கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரின் மீதான கைது நடவடிக்கையையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
இரவிக்குமார் retweeted
பழிவாங்கும் நடவடிக்கை ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே !
நடந்து முடிந்த இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட திருமதி. கார்த்திகா உட்பட அக்கட்சியின் நிர்வாகிகளை உங்கள் ஏவல்துறை
இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்திருப்பது அப்பட்டமான அரசியல் அடக்குமுறையாகத் தான் தெரிகிறது. அரசியல் பேசும் பெண்களை அராஜகமாக அடக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
சூரியன் மறைந்த பிறகோ அல்லது சூரிய உதயத்திற்கு முன்போ பெண்களை கைது செய்யக் கூடாது என்ற பொதுவான சட்ட விதியை மீறி, அதிகாலை 5 மணிக்கு வீடு புகுந்து கைது செய்யுமளவிற்கு திருமதி. கார்த்திகா என்ன பயங்கரவாதியா? சம்மன் அனுப்பி சரண்டர் ஆக சொல்லாமல், இரு பெண் பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்மணியின் மீது இப்படியொரு அடக்குமுறை அவசியம் தானா?
பொது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்ணிற்கு உங்கள் அரசு தரும் மரியாதை இதுதானா முதல்வரே?
இப்படி மற்ற கட்சிக்காரர்களின் குறைகளை பூதக் கண்ணாடி வைத்து தேடிக் கொண்டிருப்பதால் தான், உங்கள் கட்சியில் பாலியல் குற்றவாளிகளும், போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது சட்டத்தை உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக பயன்படுத்தாமல், மக்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்துங்கள்!
இரவிக்குமார் retweeted
ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்ய வேண்டுமென்றால் முறையான வாரண்ட் கொடுக்கப்பட வேண்டும்.
அரசியல் தொடர்பான வழக்குகளுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகாலை 5.30 மணிக்கு இரவு நேர உடையிலேயே கைது செய்து, எவ்வித ஆணையும் இல்லாமல் காவல் நிலையத்திற்கு ஒரு பெண்ணை அழைத்துச்செல்ல எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது?
இது முற்றிலுமாக முறையற்ற செயல், இத்தகைய செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம்.
கொலைகாரர்கள், கொள்ளையடிப்பவன், போதை பொருள் கடத்துகிறவன் அதற்கு துணை போகிறவர்களை கூட, இந்த அரசு இப்படி கைது செய்யவில்லையே.
இது போன்ற தொடர் நடவடிக்கைகள் இது மற்றுமொரு பாயச அரசாகவே காட்சியளிக்கிறது.
இரவிக்குமார் retweeted
உடை கூட மாற்ற விடாமல் அராஜகத்தின் உச்சியில் ஆடுகிறார் கேரியரின் உச்சம் 😡
கேடுகெட்ட நடுநிலை கும்பல் எவனும் வாயை திறக்கல பாரேன்.
இரவிக்குமார் retweeted
" சுகர் மாத்திரை" வாங்கினாலும்
இந்த மெடிக்கல் கடைக்காரங்க,
மீதி சில்லறைக்கு " சாக்லெட் " தான் தரானுங்க...🙁























