Pinned Tweet
திமுக, அதிமுகவின் சிந்தனைக்கு -
2024 தேர்தல் வரை திமுகவும் அதிமுகவும் தங்களுக்கிடையே 80-85% வாக்குகளை வைத்திருந்தார்கள். "மாற்றம்", "அதிருப்தி" என அவர்களைத் தாண்டி வெளியே போகக் கூடிய வாக்குகள் 15-20% மட்டுமே இருந்தன. 2026 பொதுத்தேர்தலில் அவர்கள் கிட்டத்தட்ட 20% வாக்குகளை இழந்து 65% என்று இறங்கி நிற்கிறார்கள்.
ஏன்?
விஜய் மீதான திரைக் கவர்ச்சி,
விஜய் தரப்பின் சோஷியல் மீடியா ஆதிக்கம் + அங்கே செய்த பிரச்சாரம்,
"Career உச்சத்தை விட்டுட்டு வரேன்" என்ற விஜய்க்கு மீடியாவும் சேர்ந்து வளர்த்துவிட்ட "தேவதூதர்" பிம்பம்,
ஒரு பக்கம் பெரியார், இன்னொரு பக்கம் பிராமணர் அரவணைப்பு என எல்லா பக்கமும் கோல் போட்ட விஜய்யின் அணுகுமுறை,
தன் மீதே தவறு இருந்தாலும் மற்றவர் மீது பழி போட்டு அனுதாபம் தேடிய விஜய்யின் காய்நகர்த்தல்கள்,
விஜய்யை எந்த விதத்திலும் expose செய்யாத பிரச்சாரத்தை செய்த திமுக, அதிமுகவின் தண்டமான வியூகங்கள்
- இப்படி விஜய்யை மையமாக வைத்து பல காரணங்கள் சொல்லலாம். அவற்றில் பெரும்பாலும் உண்மையும் உண்டு.
ஆனால், இதெல்லாம் அதிகபட்சம் 20% ஓட்டுகளைத்தான் தவெகவுக்கு பெற்றுத் தந்திருக்கும். அதற்கு மேலும் 15% ஓட்டுகள் கை நழுவியது எப்படி என்பதை திமுகவோ, அதிமுகவோ இன்னமும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
"மயக்கத்தில் ஓட்டு போட்டு விட்டார்கள்", "ரீல்ஸ் தாக்கம்", "வீட்டு குழந்தைகளின் அடம்", "SIR குளறுபடி", "EVM சித்துவேலை", "Flukeல ஜெயிச்சுட்டாங்க" - இப்படித்தான் திமுக, அதிமுக தரப்பில் பேசி வருகிறார்களே தவிர, தங்கள் பக்கம் இருக்கும் அடிப்படையான ஆழமான தவறுகளை ஒப்புக்கொள்ளவோ திருத்திக் கொள்ளவோ இல்லை என்பதுதான் நிதர்சனம்.
திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் கண்டறியும் குழுக்களை ஸ்டாலின் அமைத்தார். அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டார். அதன் விளைவாக திமுகவின் உட்கட்சி மாவட்டங்களை அதிகரித்தது மட்டுமே தேர்தல் தோல்விக்கு பிறகு அவர் செய்த ஒரே மாற்றம். அந்த நடவடிக்கை மக்களுக்கு தரும் செய்திதான் என்ன?? அல்லது, அதனால் மக்களுக்கு பலன்தான் என்ன?!
அதிமுகவை எடுத்துக்கொண்டால் - நிர்வாகிகள் சாரைசாரையாக தவெகவுக்கு தாவுகிறார்கள். அது குறித்த பரபரப்பு செய்திகள் தாண்டி, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த ஐந்து மாதங்களில் அதிமுக தலைமை எடுத்த நடவடிக்கைகள் ஏதேனும் உண்டா?!
மொத்தத்தில் - இரண்டு பெரிய கட்சிகளும் தங்கள் பக்கம் செய்யவேண்டிய திருத்தங்களை செய்து "இதோ நாங்கள் இன்னின்ன விஷயங்களில் திருந்தியிருக்கிறோம்" என மக்கள் முன் செல்லாவிட்டால், விஜய் படுமோசமான ஆட்சியைத் தந்தாலும் விசில் சின்னத்தின் மீதான வாக்காளர் பாசம் குறையாது. அதுவரை விஜய் காட்டில் மழைதான்!!!
விஜய்யின் செயல்பாட்டுக்கு நான் உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை. என்றாலும், அந்த கேள்வி தவிர்க்க முடியாததாக இருக்கக் காரணங்கள் இரண்டு -
(1) "உறவினர் வேறு, கட்சிக்காரர் வேறு" என்ற கோணத்தில் பார்த்தாலும் கூட - விஜய்க்கும் VS பாபுவுக்கும் நெருங்கிய பிணைப்பு இருந்ததாக கருதக்கூடிய அளவுக்கு VS பாபு விஜய் மக்கள் இயக்கத்திலோ தவெகவிலோ நீண்ட காலம் இருந்தவர் அல்ல.
(2) தன்னுடைய நீண்ட கால விசுவாசியான (90களிலிருந்தே ரசிகர் மன்றத்தில் இருந்த) நெல்லை மாவட்ட செயலாளர் சஜியின் திடீர் மறைவுக்கு (2025) விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என அப்போது பல விஜய் ரசிகர்களே வருத்தப்பட்டார்கள்.
Replying to @tn2point0
See, family is different. His aunty means SAC Sir's brother's wife. Dont know how attached he was with uncle family. But his MLA is his own party member. He is the leader. Dont insult a person's emotion.
Emotional bonding is different for each person.. I may not really connect with my extended family people and meantime i may really fonded with my colleagues and friends. Try to understand human emotion and humanity. Dont connect and confuse everything with political.
மறைந்த MLA V.S. பாபுவின் உடலை விஜய் சுமந்து சென்றார். காரணம் என்னவாக இருந்தாலும், இது ஒரு அசாதாரணமான செயல் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் அபிமானிகள் நிச்சயம் இதை சிறந்த gesture ஆக பார்ப்பார்கள்.
அதே நேரம், சமீபத்தில் தனது பெரியம்மா இறந்தபோது இது போல விஜய் ஏதும் செய்தாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஒரு வெற்றியை அதீதமாக கொண்டாடும்போது அந்த வெற்றியின் முழுப் பலனை அனுபவிக்க இயலாத சூழல் உருவாகலாம்.
அளவான கொண்டாட்டம் அழிவு தரும் திண்டாட்டத்தை தவிர்க்க வாய்ப்பு உள்ளது.
இதை உணராவிட்டால் ஏதோ ஒருவகையில் பிரபஞ்சம் உணர வைக்கும்.
திருச்செந்தூரில் வேலைத் தூக்கி காட்டு
திருப்பரங்குன்றத்தில் தீபத்தை தூக்கிப் போடு
- இப்படின் leftல indicator போட்டு rightல கையை காட்டி straightஆ போயிட்டே இருந்தாதான் இந்த முட்டாளுங்க "இதுதான்டா Secularism"ன்னு சாமியாடிட்டு இருப்பாங்க. இதை வச்சே ரெண்டு எலெக்ஷன் ஜெயிச்சிடலாம்.
26 வருடங்களுக்கு முன் இதே நாள்.. காலை சுமார் 6:30 மணி இருக்கும். என் அப்பா திருச்சியிலிருந்து ரயிலில் சென்னை செல்வதற்கு கிளம்புகிறார். அதற்கு முதல் நாள்தான் செமஸ்டர் லீவு விட்டு வீட்டுக்கு வந்திருந்த நான், தூக்கக் கலக்கத்துடன் லுங்கி, டி-சர்ட் அணிந்தபடியே கைனெடிக் ஹோண்டாவில் அப்பாவை ஸ்டேஷனில் இறக்கிவிட கூட்டிச் செல்கிறேன்.
போகும் வழியில் பேசிக்கொண்டே போனோம், என்ன பேசினோம் என்பது சரியாக நினைவில்லை. திருச்சி ஸ்டேஷன் வாசலில் அப்பாவை இறக்கிவிடுகிறேன். லுங்கியில் இல்லாமல் பேன்ட் அணிந்திருந்தால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அப்பாவை வழியனுப்ப உள்ளே சென்றிருப்பேன். ஆனால், அப்போது அங்கே இறக்கிவிட்டபடியே கிளம்பப் போனேன்.
வழக்கமாக நான் லீவு முடிந்து கல்லூரிக்கு செல்லும்போது பஸ்ஸில் ஏற்றிவிட அப்பா வண்டியில் என்னைக் கூட்டி வருவார். பஸ் ஏறும்வரை பேசிக்கொண்டிருப்போம். பஸ் ஏறும் முன் என் கைச்செலவுக்கு என்கிற வகையில் அப்பா தன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து தருவார்.
அன்று ஸ்டேஷனில் இறக்கிவிட்ட போதும் அதே மாதிரி பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து தந்ததாக நினைவு. பிறகு இருவரும் விடைகொடுத்துக் கொண்டோம். நான் வண்டியை அப்படியே திருப்பி ஓட்டிக் கொண்டு வந்துவிட்டேன்.
அப்போது எங்களுக்கு தெரியாது - நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசிக்கொள்ளும் கடைசி தருணம் அதுதான் என்று. ஆம், அடுத்த 5-6 மணி நேரங்களில் அப்பா மாரடைப்பில் காலமாகிவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.
நான் வாழ்க்கையை நேரடியாக முட்டிமோதி சந்திக்கும் காலகட்டங்களில் அப்பா இருந்திருந்தால் அவரது ஆலோசனைகள் என்னை செம்மைப்படுத்தியிருக்கும் என்ற சிந்தனை இன்றும் எழாமல் இல்லை. அப்பாவுக்கு என் நினைவஞ்சலி...
என் சிறுவயது முதல் பல வருடங்களுக்கு கிரிக்கெட்டை தீவிரமாக ரசித்த ரசிகன் என்ற முறையில் சொல்கிறேன் - IPL கிரிக்கெட்டுக்கு கொடுத்ததை விட கிரிக்கெட்டை கெடுத்தது அதிகம்.
தெருவில் நம் இஷ்டத்துக்கு ரூல்ஸ் வைத்துக்கொண்டு விளையாடும் சின்ன பசங்க கிரிக்கெட்டுக்கு "ஷங்கர் பட" பிரம்மாண்டம் கொடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் IPL என்பது என் பார்வை.
IPL இல்லாமல் இருந்திருந்தால் தோனி, கோலி, ரோஹித் - இவர்களெல்லாம் தங்கள் தரமான விளையாட்டை இத்தனை ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கொடுத்திருக்க முடியும். தங்கள் Careerல் பாதி அளவுக்கு அவர்கள் IPLல் செலவிட நேர்ந்தது இந்திய கிரிக்கெட்டின் துரதிருஷ்டம்.
பார்க்கப்போனால், 2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியுடன் தோனி retire ஆகிவிட்டார். இப்போது இறுதியாக IPLல் ஓய்வு அறிவித்திருப்பது தவிர்க்கமுடியாத சம்பிரதாய முடிவு என்றே பார்க்க முடிகிறது.
2004 முதல் 2019 வரை தரமான சர்வதேச கிரிக்கெட்டை வழங்கிய சாம்பியன் கிரிக்கெட்டர் தோனியின் பங்களிப்புகளுக்கு நன்றியும், அவர் ஓய்வு காலத்திற்கு வாழ்த்துகளும்!!! 🏏
தவெக அரசு/கட்சி மீது விமர்சனம் வைத்தால் "திமுக, அதிமுக இப்படி செய்யவில்லையா? அப்போது என்ன செய்தீர்கள்?" என கேள்வி கேட்பவர்களுக்கு -
அப்போது என்ன செய்தோம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் நீங்கள் ட்விட்டரில் Negative Hashtags ஓட்டி பெருமை அடைந்துகொண்டிருந்தீர்கள்.
திமுக, அதிமுகவை நாங்கள் தூயசக்தி என சொன்னதில்லை. தங்களை தூயசக்தி என சொல்லிக்கொண்டது தவெகதான். அப்படி தூயசக்தி என சொல்லிக்கொண்டவர்களின் லட்சணம் படுமோசமாக இருக்கும்போது விமர்சனங்கள் தவிர்க்கமுடியாது, "தூயசக்தி" என்ற முகமூடி அணிந்திருக்கும் --சக்திகளே...
போன வருடம் வரை திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை உள்ள Flex Boardகளில் அன்பில் மகேஸ் சிரித்துக் கொண்டிருப்பார்.
இந்த வருடம் அதே மாதிரியான Flexகளில் நவல்பட்டு விஜி (தவெக) சிரித்துக் கொண்டிருக்கிறார்.
கூடுதல் ஸ்பெஷலாக, பஸ் ஸ்டாண்டை மறைக்கும் விதத்தில் ஒரு சிறப்பு Flex அமைத்து விஜியை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
திருவெறும்பூர் தேர்தலில் மட்டுமல்ல, Flex Boardகளிலும் திமுகவை வீழ்த்தி தவெக கெத்து காட்டுகிறார்கள்.
ஓட்டு போட்ட மக்கள் விரும்பிய மாற்றம் இதுதான் போல!!!
ஒருவேளை 2021-26 அதிமுக ஆட்சியில் இருந்திருந்து விஜய் அரசியலுக்கு வந்திருந்தால், "அதிமுக ஒரு தீயசக்தி, திமுக மற்றும் பலரில் ஒரு கட்சி" என சொல்லியிருப்பாரா?!
அப்படிச் சொல்லி ஓட்டு கேட்டிருந்தால், இந்த வெற்றி கிடைத்திருக்குமா?
இல்லாத சூழ்நிலை குறித்த கேள்வி என்றாலும், கிடைக்கும் பதில்கள் சிந்தனையைக் கிளறலாம்.
"ஆறு மாதங்களில் முந்தைய திமுக, அதிமுக அரசுகளை விட தவெக அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது" - ரங்கராஜ் பாண்டே @RangarajPandeyR
பாண்டே சார் - எந்த முந்தைய அரசு முதல் 6 மாதங்களில்
1. அரசாங்க உத்தரவுகளை பிறப்பித்தபின் இத்தனை U-Turn அடித்திருக்கிறது?
2. உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது?
3. சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் ஏற்கனவே இருந்த நிலையை இன்னும் மோசமாக வளரவிட்டது?
4. சர்ச்சைக்குரிய காவல்துறை நடவடிக்கைகளுக்கு காரணம் என விமர்சித்த அதிகாரியையே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமித்தது?
5. மக்களுக்கு விரைவில் பயன் தரும் உட்கட்டமைப்பு திட்டங்களை விட சட்டமன்ற வளாகத்தை புதிய இடத்திற்கு - அதுவும் சுற்றுசூழலை பாதிக்கக்கூடிய இடத்திற்கு - மாற்றுவதற்கும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்கும், MLAக்களுக்கு சொகுசு கார்கள் கொடுப்பதற்கும் முன்னுரிமை தந்தது?
6. வருவாய் பெருக்கும் நடவடிக்கைகள் எடுக்காமலேயே வருவாய் இழப்பு செயல்களை செய்தது?
7. மின்சார கொள்முதலை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக விலையில் தனியாரிடம் வாங்கியது?
8. அமைச்சர்கள் அவரவர் இஷ்டம்போல் செயல்படும் அளவில் குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லாமல் கூட்டணி ஆட்சியை நடத்தியது?
9. சட்டமன்றத்தில் துறை ரீதியான கேள்விகளுக்கு துறைக்கு சம்பந்தம் இல்லாத அமைச்சர்களைக் கொண்டு பதில் சொல்ல வைத்தது?
10. "சிங்கப்பெண் அதிரடிப்படை" என ஒரு திட்டத்தை ஆரவாரமாக தொடங்கிவிட்டு அதன் செயல்பாட்டையே கண்டுகொள்ளாமல் விட்டது?
11. முதலமைச்சரின் ஆய்வுகளையே நிர்வாக சீர்திருத்தம் போல விளம்பரப்படுத்தியது?
12. அரசு நிர்வாகத்தை நடத்துவதை விட எதிர்க்கட்சியை உடைப்பதில் கவனம் செலுத்தியது?
13. "லஞ்ச, ஊழல் ஒழிப்பு" என ஒரு மாயையை காட்டிக்கொண்டே குதிரைபேர அரசியலில் புதிய மைல்கற்களை நிறுவியது?
14. முப்பது ஆண்டுகள் காணாத வரலாறாக 17 கைதிகளை சிறையிலிருந்து தப்பிக்கவிட்டது?
15. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சொல்லிக்கொண்டு "முஸ்லீம் பெண்களுக்கு மட்டும் இளநிலை கல்வி செலவை அரசே ஏற்கும்", "9, 10 வகுப்பு படிக்கும் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை" என அறிவித்தது?
16. மூடிய டாஸ்மாக் கடைகள் பற்றி பெருமை பேசிக்கொண்டு சத்தமின்றி புதிய டாஸ்மாக் கடைகளையும் உயர்தர பார் வசதி கொண்ட மதுக்கடைகளையும் திறந்துகொண்டிருந்தது?!
தவெககாரங்க சோஷியல் மீடியாவில் வதந்தி பரப்புனா அதை உண்மைன்னு ஏத்துக்கணுமாம். அது ஆபத்து இல்லையாம்.
அதுவே மத்தவங்க தவெக பத்தி ஏதாச்சும் விமர்சனம் வச்சாலே அது வதந்தியாம். மக்கள் நம்புறது ஆபத்தாம். சட்ட நடவடிக்கை எடுக்கணுமாம்.
இவிங்களுக்கு வந்தா ரத்தம், இவிங்களால மத்தவங்களுக்கு வர்றது தக்காளி சட்னி..
காலம் வச்சு செய்யுது. இன்னும் நிறைய இருக்கு.
விஜய் இடைத்தேர்தல் நடக்கப்போற தொகுதிகளா தேர்ந்தெடுத்து, திட்டங்கள் தொடங்கி வைக்க நேரில் போகிறார் என்கிற ஒரு பார்வை இருக்கிறது.
அப்போ குழந்தைகள் தின நிகழ்ச்சிக்கு ஏன் கொளத்தூர் போனார்?!
Something fishy...
சும்மாவே பிள்ளைகள் Junk Food அதிகமாக சாப்பிடுகிறார்கள். இந்நிலையில், அரசாங்க முன்னெடுப்பில் இப்படிப்பட்ட கேக் தருவது ஆரோக்கியமானதா?!
வேறு சத்தான இனிப்பு தின்பண்டம் இல்லவே இல்லை என்ற முடிவுக்கு வரும் அளவுக்குதான் இவர்கள் சிந்தனை இருக்குமா?!
சிறுபிள்ளைகளின் ஆரோக்கியம் பற்றி யோசிக்காமல் "ஒவ்வொருவரும் ஒரு வருங்கால ஓட்டு" என யோசித்தால் இப்படிப்பட்ட கேக் கொடுக்கத்தான் தோன்றும்.
நேற்றுவரை "கள்ளக்குறிச்சி MLA எந்த தவறும் செய்யவில்லை, கலெக்டர் குறுஞ்செய்தி விஷயமே வதந்தி, MLAதான் Victim, அவர் SC என்பதால் டார்கெட் செய்யப்படுகிறார்" என வாதாடிய ஒரு பிரபலம், இன்று "கள்ளக்குறிச்சி MLA - கலெக்டர் விவகாரம் 10 வாரங்களுக்கு முன்பே புஸ்ஸி ஆனந்த் கவனத்துக்கு சென்று MLA எச்சரிக்கப்பட்டார்" என சொல்கிறார்.
அதாவது, நேற்று விஜய் MLAவை கண்டித்த செய்தி வெளியானதும் "திரைக்கதை"க்கு ட்விஸ்ட் அவசியமாகிவிட்டது.
"கண்டிப்பு உண்மையில்லை" என்று சொன்னால் விஜய் இமேஜ் பாதிக்கப்படும். கண்டிப்பு உண்மை என்றால் MLA தவறு செய்தார் என்பது உறுதியாகிறது.
விஜய் ஹீரோவாக நிலைக்க வேண்டும் என்ற நிலை வந்தவுடன், அந்த so-called "Victim" வில்லன் ஆகிவிட்டார் 😊
கள்ளக்குறிச்சி MLA குறுஞ்செய்தி விவகாரம், துணை சபாநாயகர் அடித்த விவகாரம் - இரண்டிலும் "எதிர்க்கட்சிகள் சதி, பட்டியலின MLAக்கள் என்பதால் குறிவைக்கப்படுகிறார்கள், வதந்தி பரப்புகிறார்கள்" என தவெக Virtual Warriors வீராவேசமாக களமாடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அந்த இரண்டு MLAக்களையும் விஜய் தனியாக சந்தித்து கண்டித்ததாக செய்தி.
அதாவது, Virtual Warriorsஐப் பார்த்து "கொஞ்சம் அனத்தாம இருங்கப்பா, நடந்ததெல்லாம் நெசந்தான்" என சொல்லாமல் சொல்லி left handல் டீல் செய்திருக்கிறார் விஜய்.
அதே நேரம், இந்த பிரச்சினைகளுக்கு கண்டித்தால் மட்டுமே போதுமானது என்ற நிலையை எடுப்பது பலவீனமான தலைமைத்துவத்தை காட்டுகிறது. இன்னும் போகப் போக, மக்களுக்கான நேரடி பிரச்சினைகளிலும் இந்த பலவீனம் வெளிப்படும்.
இன்னொன்னு கவனிச்சீங்களா? - தப்பு செஞ்சவங்களுக்கு கூட பட்டு வேட்டி, சட்டை கிடைச்சிடுச்சு. ஆனால் மாய்ஞ்சு மாய்ஞ்சு முட்டு கொடுத்த இந்த Virtual Warriors பாவம், பல்பு கிடைச்சதுதான் மிச்சம் 😃
கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் ஒரு SC என்பதால் அவரை target செய்வதாக தவெகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
அடிப்படையில் கள்ளக்குறிச்சி தனித்தொகுதி. எனவே, அங்கே யார் வென்றாலும், எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர் SCயாகத்தான் இருப்பார். பின்னர் ஏன் ஏதோ பொது தொகுதியில் அசாதாரணமாக வென்ற SC MLAவை target செய்வது போல் narrative செட் செய்கிறார்கள்?
தவறுகளிலிருந்து தப்பிக்க அரசியல் கட்சிகள் எடுக்கும் முக்கியமான ஆயுதம் - சாதி. தவெகவும் அதே Victim Cardஐ இறக்குகிறது.
ரஜினி ஸ்டாலினை சந்தித்ததை வைத்தே "அவர் திமுக - அதிமுக கூட்டணி ஆட்சியை உருவாக்கி விஜய் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கிறார்" என எந்த அடிப்படையும் இல்லாமல் வதந்தி பரப்பிய கோஷ்டி, இன்று "ஐயோ எங்கள் MLA பற்றி வதந்தி பரப்புகிறார்களே" என ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டே புலம்புவதும் கதறுவதும் வேடிக்கை.
திட்டமிட்டு பரப்புகின்ற வதந்தி என்றபோதும் ரஜினி தன்னிலை விளக்க பேட்டி தந்தார். இப்போது தவெக MLA குறித்த செய்தி - அதிலும் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட விவகாரம் - வதந்தி என்றால் ஆளுங்கட்சி இதுவரை அதை மறுக்கவில்லையே, ஏன்?!
கர்மா இஸ் எ பூமராங் ஐ ஸே...
முதலில் ஃபேக் அக்கவுண்டுகள் மூலம் பேஸ்புக்கில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு எதிராக ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அந்த செய்தியை அப்படியே ட்விட்டரில் திமுக இணைய ஹைனாக்கள் தீவிரமாக பரப்புகின்றனர். அது உண்மையா? பொய்யா என்பதைக் கூட அறியாமல் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், ராஜாத்தியின் மகளும் ஆன கனிமொழி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் அறிக்கை வெளியிடுகின்றனர். இவை அனைத்தும் செய்திகளில் வந்தது சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் என்றுதான் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் சில முக்கியமான கேள்விகள்.
சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அந்த மாவட்ட ஆட்சியர் யாரிடம் புகார் கொடுத்தார்?
அந்த புகார் எப்போது கொடுக்கப்பட்டது?
எதற்காக புகார் கொடுத்தார்? இந்த சம்பவங்கள் எல்லாம் உண்மையாகவே நடைபெற்றதா? என்று கேட்டால் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. யாரோ ஒரு கும்பல் இணையத்தில் அருள் விக்னேஷுக்கு எதிராக ஒரு செய்தியை பரப்ப எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி அதை இன்று தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினையாக மாற்றி இருக்கிறது அந்த இணைய மாபியாக்கள். இவை அனைத்தும் கோவை பெரியார் அறிவுலக நூலக ஊழலை மழுங்கடிக்க வேண்டுமென்று திட்டமிட்டே செய்யப்பட்ட செயல்பாடுகள் தான் என்பது நன்றாக தெரிகிறது.



















