SP jith retweeted
"ஆடி மாதம்: தேங்காய் சுடும் பண்டிகையும், தொடரும் வீர வரலாறும்"
தமிழர் இலக்கியத்தில் இராமாயணத்திற்கு முதன்மையான இடமிருந்தாலும், தமிழ் மக்களின் பண்பாட்டில் முதலிடத்தில் இருப்பது மகாபாரதம் தான்.
தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் மகாபாரதத்தின் தாக்கம் வலுவாக உள்ளது. துரியோதனன் படுகளம், அர்ஜுனன் தபசு, கூத்தாண்டவர் திருவிழா, திரௌபதி கரகம் என்று பல வடிவங்களில் மகாபாரதம் கொண்டாடப்படுகிறது.
வட தமிழக மக்கள், ஆடிமாதம் 1 முதல் 18 வரை மகாபாரதப் போர் நடந்ததாக நம்புகிறார்கள். போரின் தொடக்க நாளான ஆடி 1 ஆம் நாளில், சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 'தேங்காய் சுடும் பண்டிகை' கொண்டாடுகிறார்கள்.
போரின் இறுதி நாளான ஆடி 18 ஆம் நாளில், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 'பதினெட்டாம் போர்' என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய நாளில் தாலியை புதிதாக மாற்றி அணிகிறார்கள்.
---------------
1. 'தேங்காய் சுடும் பண்டிகை'
மகாபாரத போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று, யுத்தம் தொடங்கும் நாளான ஆடி முதல்நாளில், மக்கள் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
முற்றிய தேங்காயின் மீது மஞ்சள் பூசி, அதன் கண்ணைத் துளைத்து, எள், பாசிப்பயறு, நாட்டுவெல்லம், பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை போன்றவற்றை உள்ளே செலுத்துகிறார்கள். பின்னர் நீளமான அழிஞ்சில் குச்சியின் முனையைச் சீவி, தேங்காய்க்குள் பொருத்திவிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுகிறார்கள். தேங்காய் நன்றாக வெந்த பின்னர், இரண்டாக உடைத்து சாமிக்கு படைத்து வணங்கி பிரசாதமாக சாப்பிடுகிறார்கள்.
2. 'பதினெட்டாம் போர்'
ஆடி 18-ல் ஆடிப்பெருக்கு திருவிழாவை தமிழர்கள் வெகு நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, காவிரிப் பாசன பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் இதனை 'பதினெட்டாம் போர்' என்று குறிப்பிடுவார்கள். ஆடி மாதம் ஒன்றாம் நாளில் தொடங்கிய மகாபாரதப் போர், ஆடி 18 ஆம் நாளில் முடிந்ததாகவும் - அன்று திரௌபதியின் சபதம் ஈடேரும் வகையில் துரியோதன் கொலை செய்யப்பட்டதை கொண்டாடுவதாகவும் கூறுவார்கள்.
துரியோதனனுக்கு வாய்க்கரிசியாக, பச்சரிசியில் சர்க்கரை கலந்து படைப்பதும், மணமான பெண்கள், தங்களது தாலியை கழற்றிவிட்டு, புதிதாக தாலிக்கட்டிக் கொள்வதும் மரபாகும்.
புதிதாக திருமணம் ஆனவர்கள் கூட, ஆடி 18 வரை காத்திருந்து, அன்றைய தினத்தில் தாலியை மாற்றிக் கொள்வார்கள்.
இந்த ஆடி மாத சடங்குகள் ஒரு நீண்ட வரலாற்றின் தொடர்ச்சியாகும்.
---------------
"திரௌபதி: பல்லவர் - சாளுக்கியர் போர்"
தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும்.
கி.பி. 615 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் மீது சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி போர் தொடுத்தான். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து, காவிரி பகுதிக்கு துரத்தப்பட்டான் என்பதாகவும், கோட்டைக்குள் முடக்கப்பட்டான் என்பதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன.
இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம பல்லவன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தமிழ்நாட்டில் மகாபாரதம் வளர்ந்த கதை இதுதான்.
இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான். பல்லவர்கள் மாபெரும் வெற்றிபெற்றார்கள். பல்லவர்களின் வெற்றிக் கல்வெட்டு, இப்போதும் பாதாமி கோவிலில் இருக்கிறது. (பாதாமி - கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி).
கல்கியின் சிவகாமி சபதம் வரலாற்றுக் கதையும் எம்ஜிஆர் நடித்த காஞ்சித்தலைவன் திரைப்படமும் இந்த வரலாற்றைத்தான் குறிப்பிடுகின்றன.
வன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் சமூகத்தினரிடையேதான்.
இதுவே திரௌபதி வழிபாடாகவும் மலர்ந்து - வட தமிழ்நாடெங்கும் திரௌபதி கோவில், தர்மராஜா, போத்துராஜா, கூத்தாண்டவர் ஆலயங்களாகவும் வீற்றிருக்கின்றன (தருமபுரி மாவட்டத்தின் பெயரே, தருமராஜாவை குறிக்கும் சொல்தான்).
1400 ஆண்டுகள் கடந்தும் வடதமிழ்நாட்டு மக்கள் - பாரதம் படிப்பதையும், பாரதக்கதை திருவிழாக்களையும் இப்போதும் நடத்தி வருகிறார்கள்.
---------------
"வன்னிய புராணம் எனும் போர் ஆவணம்"
தமிழ் மன்னர்கள் நிகழ்த்திய போர்களின் வரலாறும் - வன்னிய புராணமும் ஒரே நிகழ்வின் இருவேறு வடிவங்கள் ஆகும். வன்னிய புராணத்தில் காணப்படும் போர் நிகழ்வுகளும் தமிழ் மன்னர்களின் மாநிலம் கடந்த, நாடுகள் கடந்த, கடல் கடந்த பல போர்களும் ஒரே சம்பவங்கள்தான்.
நரசிம்மவர்மன் படையெடுத்துச் சென்று வாதாபி அரசன் புலிகேசியை அழித்த நிகழ்வு தான் வன்னிய புராணத்தில் 'வாதாபி சூரனை அழிக்க வேண்டும்' எனும் நோக்கமாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த வன்னிய புராணம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது.
"தாலியை அறுத்துக்கட்டும் பழக்கம்"
வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன்.
வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப்புறப்படும் போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை.
போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக் கூத்து ஆகும்.
இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர்.
---------------
"திரௌபதி - வன்னியராசன் - ஆடிப்பெருக்கு"
வன்னியர்கள் வாழும் பகுதிகளில் வன்னியபுராணத்தின் மிச்சங்களும், திரௌபதி வழிபாடும் இப்போதும் நீடிக்கிறது. துரியோதனன் படுகளம், அர்ஜுனன் தபசு, கூத்தாண்டவர் திருவிழா, திரௌபதி கரகம் இவையெல்லாம் இதன் அங்கங்களே.
ஒன்றுடன் ஒன்றாக கலந்துவிட்ட இந்த நீண்ட வரலாற்றின் ஒரு அடையாளமாகவே, இப்போதும் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் - 'தேங்காய் சுடும் பண்டிகை' என்றும் - பதினெட்டாம் போர் என்றும் - தாலியை புதிதாக அணிவது என்றும் - பழைய மரபுகள் இன்னமும் தொடர்கின்றன.
இத்தகைய மரபு விழாக்கள்தான் தமிழ் சமூகத்திற்கான ஒரு பொது மனநிலையையும் ஒற்றுமையையும் உருவாக்குகின்றன.
---------------
குறிப்பு: ஒரே பண்டிகைக்கு பல்வேறு கதைகள் பேசப்படுவது வழக்கம். எனவே, மேலே சொல்லப்பட்ட பண்டிகைகளுக்கு வேறு கதைகளும் இருக்கலாம்.
படம்: தேங்காய் சுடுதல், துரியோதனன் படுகளம், அர்ஜுனன் தபசு, அரவாண்.
#TamilCulture #vanniyar #Aadi
SP jith retweeted
Mo salah face when he realized he had just received his own share of FIFA rigging of World Cup for Messi and Argentina
Hand that trophy to Argentina. FIFA is acting in favor of Argentina.
#FIFA_is_unjust
#FIFA_2026
#ARGVSEGY
Mo Salah was tripped INSIDE the box.
Emam Ashour was slapped in the FACE.
No foul.
This media is unavailable
1
445
SP jith retweeted
Mo Salah was tripped INSIDE the box.
Emam Ashour was slapped in the FACE.
No foul.
This media is unavailable
SP jith retweeted
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
SP jith retweeted
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சரஸ்வதி தம்பதியின் 61ஆவது திருமண நாள் இன்று கொண்டாட்டம்.. மனைவி மற்றும் மகள்களுடன் சென்று தாய் தந்தையிடம் ஆசி பெற்றார் பாமக தலைவர் அன்புமணி..!!
Ramadoss | AnbumaniMeetsRamadoss | WeddingAnniversary
#Newstamil24x7 #Anbumani #PMK
SP jith retweeted
"கண்ணீர் மல்க கட்டியணைத்து, வாழ்த்தினார் மருத்துவர் அய்யா!"
தந்தை மருத்துவர் அய்யா அவர்கள், தாயார் திருமதி சரஸ்வதி அம்மாள் அவர்கள் - திருமண நாளில், பெற்றோரிடம் தன் குடும்பத்துடன் இன்று ஆசிப்பெற்றார் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்!
#AnbumaniRamadoss #PMK
SP jith retweeted
We asked ourselves a question last year- can we go back to back?
Here we are again 🏆🏆❤️❤️
@RCBTweets
SP jith retweeted
இரத்தம் படிந்த மண்ணில், தமிழீழக் கனவு அழியாது நின்றது,
முள்ளிவாய்க்கால் சுடரொளியில், இன அழிப்பின் காயங்கள் இன்றும் எரிகின்றன.
ஆயிரமாயிரம் உயிர்கள், ஒரு இனத்தின் அடையாளத்தைத் தேடி அழைக்கின்றன,
நினைவு தீபங்கள் ஏற்றி, தமிழீழ விடுதலையின் நெருப்பை மீண்டும் பற்ற வைக்கின்றோம்.
SP jith retweeted
வலிகளைச் சுமந்து, வலிமைகொண்டு எழும் நாள் இன்று! முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட நம் இரத்தத்திற்கும், கண்ணீருக்கும் நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். மாண்ட உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி! 🕯️
#மே18 #Mullivaikkal #TamilGenocide #EelamTamils
SP jith retweeted
Fiercely. Competitively. Unapologetically. That's how Virat Kohli played Test cricket. ❤️🔥
Somewhere along the way, he made the world fall in love with the purest format of the game. 🫡
One year ago, #OnThisDay, Virat Kohli announced his retirement from Test Cricket and all we can say is: 𝗪𝗲 𝘀𝘁𝗶𝗹𝗹 𝗺𝗶𝘀𝘀 𝘆𝗼𝘂 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝘄𝗵𝗶𝘁𝗲𝘀 𝗳𝗼𝗿 𝗜𝗻𝗱𝗶𝗮, 𝗞𝗶𝗻𝗴. 🇮🇳🥹
#PlayBold #ನಮ್ಮRCB


































