Chennai, India
Joined November 2009
“கோரங்கி: ஆந்திர புயலால் அழிந்த வன்னியர் வணிக சாம்ராஜ்யம்!” ------------ வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தை தாக்கிய ஒரு பெரும் புயலில் – ‘கோரங்கி’ எனும் ஊரின் வன்னியர்களின் வணிக சாம்ராஜ்யம் தகர்ந்து போனது. அந்த வரலாற்றை சுருக்கமாக காண்போம்! ஆந்திராவின் கோதாவரி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள கோரங்கி எனும் ஊர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரிய வர்த்தக துறைமுகமாகவும், கப்பல் கட்டும் தளமாகவும் இருந்தது. ஆங்கிலேயர்களின் பல வணிக கப்பல்கள் இங்கு கட்டப்பட்டன. பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வணிகப் போக்குவரத்தின் மையமாக கோரங்கி இருந்தது. கோரங்கி துறமுகத்தின் முதன்மையான வணிகர்களாக வன்னியர்கள் இருந்தனர். அவர்களில் இருந்து மிகப்பெரிய செல்வந்தர்கள் உருவாகினர். “பினபோத்து கஜேந்துருடு” பினபோத்து கஜேந்துருடு (Pinapotu Gajendrudu) எனும் கப்பல் தொழிலதிபர் 1759 ஆம் ஆண்டு வாக்கில் ‘கோனசீமா திருப்பதி’ எனப்படும் வாடபள்ளி வெங்கடேஸ்வர சாமி கோவிலை கட்டினார். 275 ஏக்கர் நிலமும் ஏராளமான நகைகளையும் இக்கோவிலுக்கு வழங்கினார். அரிதான சந்தனமரத்தில் வெங்கடேஸ்வர சாமி சிலையை அமைத்தார். “கோபநாதி கிருஷ்ணம வர்மா” கோபநாதி கிருஷ்ணம வர்மா (1775 – 1835), கோதாவரி ஆற்றில் கப்பல் தொழில் செய்தார். பெரும் செல்வந்தரான இவர் தனது நிலங்களையும் நகைகளையும் அளித்து 1823ஆம் ஆண்டில் அந்தர்வேதி லட்சுமி நரசிம்மசாமி கோவிலை எழுப்பினார். “மல்லாடி சத்தியலிங்க நாயகர்” கோரங்கியில் பிறந்த மல்லாடி சத்தியலிங்க நாயகர் (1840 – 1915), அங்கிருந்து பர்மா சென்று, ரங்கூன் நகரின் ஒரு மிகப்பெரிய கப்பல் அதிபராக இருந்தார். அங்கு அவர் சேர்த்த சொத்துக்களை கொண்டு காக்கிநாடாவில் 1600 ஏக்கர் நிலத்தில் கல்வி நிறுவனங்களை தொடங்கினார். அக்காலத்திலேயே 8 லட்சம் ரூபாயை கல்விக்கு அளித்தார். இப்போது அது பலநூறு கோடிகளுக்கு சமம். தமிழ்நாட்டின் செங்கல்வ நாயகர் போன்று ஆந்திராவின் கல்வி வள்ளல் சத்தியலிங்க நாயகர் என புகழப்படுகிறார். ஆந்திர மாநில பள்ளி பாடநூலில் இவரது வரலாறு இடம்பெற்றுள்ளது. “பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா” பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா, ஆந்திர மாநில வன்னியர்களின் தந்தை என போற்றப்படுகிறார். இவர் கோரங்கி துறமுக நகரில் 1869 பிறந்தார். கிழக்குக் கோதாவரி மாவட்ட அக்னிகுல சத்திரிய மகா சங்கத்தின் தலைவராக இருந்த இவர் போராடி, ‘பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அனைத்து வன்னியர்களும் - தமிழகத்தில் 'வன்னியகுல சத்திரியர்கள்' என்றும் ஆந்திராவில் 'அக்னிகுல சத்திரியர்கள்' என்றும் அழைக்கப்படுவார்கள் என்றும் 1929ஆம் ஆண்டில் சென்னை மாகாண சபை தீர்மானம் நிறைவேற்ற செய்தார். இன்று வன்னியர்களின் சாதி சான்றிதழில் ‘வன்னியகுல சத்திரியா’ என்று குறிப்பிடப்படுவதற்கான அரசாணையை வெளியிட செய்தவர் இவர்தான். இவரது பிறந்தநாள் ஆந்திர மாநில அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு, ஆந்திர மாநிலத்தின் வன்னியர் தலைவர்களாக போற்றப்படும் பினபோத்து கஜேந்துருடு, மல்லாடி சத்தியலிங்க நாயகர், கோபநாதி கிருஷ்ணம வர்மா, பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா ஆகிய நால்வருமே பழம்பெரும் துறைமுக நகரமான கோரங்கியுடனோ அல்லது கப்பல் வணிகத்துடனோ தொடர்புடையவர்கள் ஆகும். ------------ கோரங்கி துறைமுக நகரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பர்மா, மலேசிய இந்திய சமூகத்தில் வன்னியர்கள் முதன்மையாக இருந்தனர். இப்போது அந்த துறைமுகம் அழிந்து, கோரங்கி சதுப்புநிலக் காடுகளாக உள்ளது. பழங்கால கடல் வணிகத்தின் அடையாளமாக அங்கு இப்போது ஒரு பழைய கலங்கரை விளக்கத்தின் இடிபாடு மட்டுமே எஞ்சியுள்ளது. “பின்னணி” சோழர்களும் பல்லவர்களும் படையெடுத்து சென்ற பகுதிகள், ஆட்சி செய்த பகுதிகளில் இப்போதும் வன்னியர்கள் பரவலாக வாழ்கின்றனர். ஆந்திராவில் குலோத்துங்க சொழனின் தந்தை ராஜராஜ நரேந்திரனும், பின்னர் குலோத்துங்க சோழனும், அதன் பின் அவனது மகன் வீர சோழனும் ஆட்சி செய்த கோதாவரி படுகை பகுதியில் இப்போதும் வன்னியர்கள் பரவலாக வசிக்கின்றனர். இந்திய சாதி அமைப்பில் ஒரு சாதிக்கு ஒரு தொழில் என்கிற மரபில் இல்லாமல், பல்வேறு தொழில்களில் ஈடுபடும் ஒரு சமூகமாக வன்னியர்கள் இருக்கின்றனர். மன்னராட்சி காலத்தில் போர்த்தொழிலை கொண்டிருந்தவர்கள், அதன்பின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆந்திராவில் கடல்வணிகத்திலும் கப்பலோட்டும் தொழிலிலும் முன்னணியில் இருந்த வன்னியர்களின் கணிசமானோர் இப்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு சமுதாயமும் அவரவர் சமுதாய அடையாளங்களை ஆவணப்படுத்துவதும், கொண்டாடுவதும் இக்காலத்தின் தேவை ஆகும். அந்தவகையில் – ஆந்திர மாநில வன்னியர் வரலாற்று தலைவர்களான பினபோத்து கஜேந்துருடு, மல்லாடி சத்தியலிங்க நாயகர், கோபநாதி கிருஷ்ணம வர்மா, பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா உள்ளிட்ட வரலாற்று நாயகர்களை போற்றுவோம், #Vanniyars # AgnikulaKshatriya
1
38
96
5,284
“சென்னை ரேடார் செயல்படவில்லை: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுமா தவெக அரசு?” ------------ ஒவ்வொரு மழைக்காலத்திலும் தமிழ்நாட்டில் ரேடார் செயல்படவில்லை என்பது வழக்கமான கதையாக உள்ளது. ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஒரே தவறையே செய்துகொண்டிருக்கிறார்கள்! சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடார் 2002 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, 24 ஆண்டு பழைய ரேடார் ஆகும் (S-band Doppler Weather Radar). அது முறையாக செயல்படவில்லை. இதனை புதிதாக மாற்றுவதற்கான கருவிகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதாக மத்திய அரசின் IMD கூறியது. ஆனால், இந்த ஆண்டு 2026 ஜூலைக்கு பதிலாக, அடுத்த ஆண்டு 2027 ஜூலை மாதம் தான் ரேடார் கருவிகள் வந்து சேரும் என கைவிரித்துவிட்டார்கள். அதாவது, மழை, வெள்ளம் குறித்த முறையான முன்னறிவிப்புகளுக்கு வழி இல்லை என்பது தமிழ்நாடு அரசுக்கு ஏற்கெனவே தெரிந்த செய்திதான். காலநிலை குறித்த துல்லியமான முன்னறிவிப்பு அனைவருக்கும் (early warning for all) கிடைக்க வேண்டும் என ஐநா அவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மழை, புயல், வெள்ளம், வெப்பம் குறித்து துல்லியமான முன்னறிவிப்பு (Early Warning) கட்டமைப்புகள் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். இந்திய அளவில் வானிலை துறை இருப்பது போன்றே தமிழ்நாட்டுக்கான வானிலை துறையை உருவாக்கவும், மாநிலத்துக்கான ரேடார் கருவிகள் உள்ளிட்ட முன்னறிவிப்பு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும் வேண்டும். 2021 சென்னை பெருநகர வெள்ள பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான ஆலோசனைக் குழு (திருப்புகழ் குழு) அறிக்கை 2023 மார்ச் மாதம் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு ஒளித்து வைத்த இந்த அறிக்கையை தவெக அரசு இனியாவது வெளியிட வேண்டும். சென்னைப் பெருநகருக்கான தகவமைப்பு மற்றும் பேரிடர் சமாளிப்பு திட்டங்களை (Adaptation and Resilience Action Plan) வெளிப்படையாகவும் முழுமையான மக்கள் பங்கேற்புடனும் செயலாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். #ChennaiRains #ChennaiRadar #ChennaiFloods #ThiruppugazhPanel
9
13
481
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், அதன் பாதுகாப்பின் அவசியம் மற்றும் அதனைப் பாதுகாப்பதில் நமக்குள்ள சமூகப் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றியபோது.! #SavePallikaranaiWetland #Pallikaranai #ChennaiRains #AnbumaniRamadoss #sowmiyaanbumani #PMK
2
31
1
111
2,411
"சேலம் குப்பை எரிஉலை (Incinerator) திட்டத்தை முனைவர் சௌமியா அன்புமணி MLA எதிர்ப்பது ஏன்? ----------- விரிவான விளக்கம் ----------- வட சென்னை, தென் சென்னை, கீரப்பாக்கம் (கேளாம்பாக்கம்), சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாக (waste-to-energy) கூறி, ஆண்டுக்கு பல லட்சம் டன்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை எரிக்கும் incinerator நாசகார திட்டங்களை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில், சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் குப்பை எரிஉலை திட்டமிடப்பட்டுள்ள பகுதியை இன்று பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்கள் பார்வையிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். குப்பைகளை எரிக்கும் incinerator நாசகார திட்டங்கள் அனைத்தும் மிக மிக ஆபத்தானவை ஆகும். காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்பமடைய காரணமான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் இத்திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும். "தமிழ்நாட்டில் குப்பை Incinerator வரும் இடங்கள்" தமிழ்நாட்டில் (1) சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், தருமபுரி குப்பைகளை, சேலம் - ஜாகிர் அம்மாபாளையத்திலும், (2) வடசென்னை குப்பைகளை கொடுங்கையூரிலும், (3) தென் சென்னை குப்பைகளை பெருங்குடியிலும், (4) தாம்பரம், ஆவடி மற்றும் 6 நகராட்சி குப்பைகளை - வண்டலூர் கேளாம்பாகம் நெடுஞ்சாலை அருகில் உள்ள கீரப்பாக்கத்திலும், (5) கோவை, திருப்பூர் குப்பைகளை கோவை - வெள்ளலூரிலும் (6) மதுரை மாநகர குப்பைகளை வெள்ளக்கல் பகுதியிலும், (7) மற்றும் திருநெல்வேலியிலும் குப்பை எரிஉலை (Incinerator) திட்டங்களை அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. ----------- "குப்பை எரிஉலை = மாபெரும் மாசுபாடு" குப்பை எரிஉலையால் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் விஷக் காற்று வெளியாகும். டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், காட்மியம், காரீயம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் ஃபியூரன் உள்ளிட்ட நச்சுக்கள் வெளியாகும். "குடிநீர் & உணவில் நச்சு சாம்பல்" குப்பை எரிஉலையிலிருந்து வெளியாகும் சாம்பல் நுண்துகள்கள் காற்றில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு பரவும். குளம், ஏரி நீரில் நச்சு சாம்பல் கலக்கும். நிலம் விஷமாகும். உணவுப்பொருட்களில் கூட விஷச் சாம்பல் படியும். குப்பை எரிஉலையில் உருவாகும் நச்சு சாம்பல் கொட்டிவைக்கப்படும் பகுதிகளில் நிலத்தடி நீர் நஞ்சாக மாறும். "உயிரைக் கொல்லும்" குப்பை எரிஉலையிலிருந்து வெளியாகும் நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட ஏராளமான பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பலக்கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ----------- "சமூகநீதிக்கு எதிரான சுற்றுச்சூழல் இனவாதம்" குப்பை எரி உலைகள் அமைக்கப்படும் பகுதிகளில் பகுதிகளில் ஏழைகள், நடுத்தர பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரே அதிகம் வசிக்கின்றனர். இவை உயர் வகுப்பினர் வசிக்கும் பகுதிகளில் அமைக்கப்படுவது இல்லை. மக்களின் உடல் நலனை கடுமையாக பாதிக்கும் திட்டங்களை இதுபோன்ற பின்தள்ளப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதிகளில் அமைப்பது சுற்றுச்சூழல் இனவாதம் (Environmental racism) ஆகும். இது சமூகநீதிக்கு எதிரானது. "காலநிலை மாற்றத்தை அதிகமாக்கும்" மின்சார உற்பத்தி தொழில்நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகிறது. "பொருளாதார ரீதியில் பேரிழப்பு" குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, மறுசுழற்சி கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது, கழித்துக்கட்டும் கழிவுகளை நிலநிரப்புவது போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளை விட, குப்பை எரிஉலை மிக அதிக செலவு பிடிக்கக் கூடியது ஆகும். இதனால் மாநகராட்சிகள் பெரும் பொருளாதார இழப்பினை சந்திக்கும். "தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லாதது" இந்தியாவில் உருவாகும் குப்பை எரிஉலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்ட எரிஉலைத் திட்டங்கள் படுதோல்வியடைந்தன. அவை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டின் குப்பையில் மிக அதிக அளவு காய்கறிக் கழிவுகளும் உணவுக் கழிவுகளும் உள்ளன. இவை ஈரமாகவும் (higher moisture content) எரிப்பதற்கான கலோரி மதிப்பு குறைவாகவும் (low calorific value), மண், புழுதி கலந்ததாகவும் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு குப்பை எரிஉலையை (incinerator) இயக்குவது நடைமுறையில் சாத்தியமில்லை. "மேலை நாடுகளில் மூடப்படும் திட்டம்" மேலை நாடுகளின் மக்கள் குப்பை எரிஉலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். அமெரிக்க நாட்டில் 1991 ஆம் ஆண்டில் 187 எரிஉலைகள் இருந்தன. ஆனால், இது 2024 ஆம் ஆண்டில் வெறும் 63 எரிஉலைகளாக குறைந்தது. 124 எரிஉலைகள் மூடப்பட்டன. மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க நாட்டில் ஒரு குப்பை எரிஉலைக் கூட புதிதாக திறக்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் அதன் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'ஐரோப்பிய நாடுகள் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு மானியம் வழங்கக் கூடாது' என அறிவுறுத்தியுள்ளது. "இந்தியாவில் படுதோல்வியடைந்த திட்டம்" இந்தியாவில் முதன்முறையாக 1987ஆம் ஆண்டில் பெரும் பொருட்செலவில் புதுதில்லியில் ஓக்லா குப்பை எரிஉலை தொடங்கப்பட்டது. அந்த திட்டம் படுதோல்வியில் முடிந்து, இழுத்து மூடப்பட்டது. அதன்பின்னர் தொடங்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் இழுத்து மூடப்பட்டன. எஞ்சியிருக்கும் ஒருசில திட்டங்களும் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் கடுமையான உடல்நலக்கேடுகள் காரணமாக மக்களால் எதிர்க்கப்படுகின்றன. "தமிழ்நாடு அரசு எரிஉலை திட்டங்களை கைவிட வேண்டும்' காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்படையும் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் குப்பை எரிஉலை திட்டங்களை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும். இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பூஜ்ய குப்பை எனப்படும் (Zero Waste) கோட்பாட்டை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். #ZeroWaste #incineration #sowmiyaanbumani #PasumaiThaayagam
2
12
31
601
"பருத்தி முட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்" - திமுக அரசின் அநீதியை தொடரும் தவெக அரசு! ————- சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக உலக வங்கியிடம் 21 கோடி ரூபாய் கடன் வாங்கி, அந்த நிதியில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்கும் தடுப்புச் சுவரை கட்டியது தமிழ்நாடு அரசு! இப்போது பெய்த மழையால் அங்கே தேங்கிய தண்ணீரை - மோட்டார் வைத்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையாக ஓடும் தண்ணீரை தடுத்து சுவர் கட்டிவிட்டு, அந்த தண்ணீரை இப்போது மோட்டார் வைத்து வெளியேற்றும் வெட்டிவேலையை தவெக அரசு எதற்காக செய்ய வேண்டும்? மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களது அறிவுரையை ஏற்று, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் உள்ளே கட்டப்படும் சுவரை உடனடியாக இடிக்க வேண்டும். #SavePallikaranaiWetland #Pallikaranai #ChennaiRains #AnbumaniRamadoss
29
2
50
1,476
"இன்றும் வாழும் இராஜராஜ சோழனின் உறவினர்கள்!" ----------- தென் இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அதே நேரத்தில், பெரும்பாலும் சத்திரிய வம்சம் என்கிற அடிப்படையில் திருமண உறவிலும் இருந்தனர். மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில், சோழர்கள் வழி வந்தவர்கள், சோழர்களுடன் திருமண பந்தந்ததில் இருந்த மரபினர் இப்போதும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் நாம் கொண்டாட வேண்டும். அவற்றில் ஒரு எடுத்துக்காட்டாக, சோழர்களுக்கும் கீழை சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமண உறவின் வழிவந்த சமூகத்தினர் வரலாற்றை காண்போம். கீழே படத்தில் இருப்பது – தஞ்சையில் உள்ள முதலாம் இராஜராஜ சோழன் சிலையும், ஆந்திராவின் இராஜமுந்திரி எனப்படும் இராஜமகேந்திரவரம் இரயில் நிலையத்தில் உள்ள இராஜராஜ நரேந்திரன் சிற்பமும் ஆகும். இவர்களில் இராஜராஜன் தாத்தா; இராஜராஜ நரேந்திரன் பேரன் ஆகும். கூடவே, இவர் முதலாம் இராஜேந்திர சோழனின் மருமகனும், முதலாம் குலோத்துங்க சோழனின் தந்தையும் ஆவார். ----------- “முதலாம் குலோத்துங்க சோழன் வரலாறு” புகழ்பெற்ற சோழ அரசன் முதலாம் குலோத்துங்கன் தந்தை வழியில் சோழ அரசனாக முடிசூடவில்லை. மாறாக, தாய் வழியில்தான் சோழ அரசனாக முடிசூடினார். அவர் சோழ அரசனாக பதவி ஏற்கும் முன்பாக, கிருஷ்ணா – கோதாவரி ஆறுகளுக்கு இடையே உள்ள கீழை சாளுக்கிய வேங்கி நாட்டின் அரசராக இருந்தார். அங்கு அவருடைய பட்டப்பெயர் ஏழாம் விஷ்ணுவர்தனன். (1044ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் பிறந்த அவரது இயற்பெயர் இராஜேந்திரன்). “பின்னணி வரலாறு” சோழர்களில் மிகவும் புகழ்பெற்ற முதலாம் இராஜராஜ சோழன் வேங்கி நாட்டின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு அந்நாட்டு இளவரசன் விமலாதித்தியனை கைது செய்தார். பின்னர் அவனுக்கே தனது மகள் குந்தவையை மணமுடித்து வேங்கி நாட்டின் அரசனாக்கினார். விமலாதித்தனுக்கும் குந்தவைக்கும் பிறந்த இராராஜ நரேந்திரன் (கி.பி. 1022 – 1063) அடுத்த வேங்கிநாட்டு அரசனார். அவரே இராஜமகேந்திரவரம் (இராஜமுந்திரி) நகரை புதிய தலைநகராக நிர்மாணித்தார். இராஜராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை - இராஜராஜ நரேந்தரனுக்கு மணம் செய்துவைத்தார். (அதாவது, முதலாம் இராஜேந்திரன் தனது தங்கை மகனுக்கு தனது மகளை மணம் செய்து கொடுத்தார்) இராஜராஜ நரேந்திரனுக்கும், இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவிக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிறந்தவர் முதலாம் குலோத்துங்கன். இவர் கி.பி. 1063ஆம் ஆண்டில், இராஜராஜ நரேந்திரனின் மறைவுக்கு பிறகு வேங்கி நாட்டின் அரசராக ‘ஏழாம் விஷ்ணுவர்தன்’ என்கிற பெயருடன் முடிசூடினார். பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்த சோழர்கள் கி.பி. 849 முதல் விஜயாலய சோழன் முதல் பிற்கால சோழப்பேரரசாக உருவெடுத்தார்கள். இவர்களின் தந்தைவழி சோழ மரபு 1070-இல் அதிராஜேந்திரன் காலத்துடன் முடிவுற்றது. அதிராஜேந்திரன் காலத்திற்கு பிறகு கி.பி.1070 ஆம் ஆண்டில் சோழப்பேரரசில் வாரிசு இல்லாத நிலை ஏற்பட்ட போது – தாய்வழி வழியில் முதலாம் குலோத்துங்கன் சோழ அரசனாக முடிசூடினார். இவர் புகழ்பெற்ற சோழப்பேரரசனாக விளங்கினார். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சோழநாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார். குலோத்துங்க சோழன் சோழநாட்டின் அரசனாக முடிசூடிய பின்னர், தனது மகன் வீரசோழனை வேங்கி நாட்டின் அரசனாக்கினார். ----------- “சோழர்களின் திருமண பந்தம்” பல்லவர் ஆட்சியில் சோழர்கள் சிற்றரசர்களாக இருந்தது போன்றே, சோழர்களின் கீழ் பல்லவ மரபில் வந்தவர்கள் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்கள் காடவராயர்கள், கச்சிராயர்கள், சம்புவராயர்கள் என்று அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனுடைய பட்டத்து அரசியாக இருந்தவர் தியாகவல்லி. இவர் கடலூர் அருகே உள்ள திருச்சோழபுரம் பகுதியை சேர்ந்த காடவர்/கச்சிராயர் வம்சத்தை சேர்ந்தவர். 'பொன்னின்மாலை மலர்மாலை பணிமாறியுடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்புடைவரச்- சென்னி யாணையுடனாணையை நடத்துமுரிமை தியாகவல்லி நிறைசெல்வியுடன் சேர்ந்துவரவே’ என கலிங்கத்துப்பரணிப் பாடலில் இவர் புகழப்படுகிறார். இப்போது அந்த ஊர் தியாகவல்லி பெயரிலேயே உள்ளது. காஞ்சிபுரம், திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்களில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் 'குலோத்துங்க சோழ கச்சிராயர்' என்ற பெயர்களில் இவரது குடும்பம் குறிப்பிடப்படுகிறது. தியாகவல்லி நடுத்திட்டு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்களபுரீஸ்வரர் கோயிலுக்கு நிலதானங்களும் பல்வேறு திருப்பணிகளும் தியாவல்லியால் செய்யப்பட்டுள்ளன. ----------- “குலோத்துங்க சோழனுக்கு பின் வந்தவர்கள்” இராஜராஜ நரேந்திரனின் மகன் முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பின் அவன் மகன் விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் இராஜராஜன், அதன் பின் விக்கிரமசோழனின் மகள் வயிற்றுப் பேரன் இரண்டாம் இராஜாதிராஜன், அவனை அடுத்து மூன்றாம் குலோத்துங்கன், அவன் மகன் மூன்றாம் இராஜராஜன், அவன் மகன் மூன்றாம் இராஜேந்திரன் என எட்டு சோழ மன்னர்கள் ஆட்சி செய்தனர். “இரண்டாம் இராஜாதிராஜன் எனும் சம்புவராயர்” இவர்களில் விக்கிரமசோழனின் மகள் வயிற்றுப் பேரன் இரண்டாம் இராஜாதிராஜன், சம்புவரையர் மரபை சேர்ந்தவர் ஆகும். இவரது இயற்பெயர் எதிரிலிப் பெருமாள். (இவருக்கு முன்னர் இரண்டாம் இராஜராஜன் – பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் உள்ளிட்ட அனைவரும் தந்தைவழியில் சோழர்கள்). “கோப்பெருஞ்சிங்க காடவராயர்” காடவராய மன்னர்களில் புகழ்பெற்றவர் கோப்பெருஞ்சிங்கன் ஆகும். கோப்பெருஞ்சிங்கன் சோழ இளவரசியை தில்லையில் வைத்து மணம் புரிந்தார். அதே கோப்பெருஞ்சிங்க காடவராயன், கி.பி. 1216 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தனது மைத்துனனான சோழ அரசன் மூன்றாம் இராசராச சோழனை கைது செய்து சேந்தமங்கலத்தில் சிறை வைத்தார். “கருணாகர தொண்டைமான்” குலோத்துங்க சோழன் வெற்றிகொண்ட மிக முக்கியமான போர், வட கலிங்கப் போர் ஆகும். கி.பி. 1112-ஆம் ஆண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த போர் கலிங்கத்துப் பரணியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமையேற்றவர் கருணாகர தொண்டைமான் ஆகும். கலிங்கத்துப் போரில் வெற்றி கொண்ட கருணாகரத் தொண்டைமானின் குலப் பெருமையை பற்றி கம்பர் பாடிய சிலை எழுபது கொண்டாடுகிறது. ----------- “இன்றும் வாழும் இராஜராஜ சோழனின் உறவினர்கள்!’ குலோத்துங்க சோழனின் பட்டத்து இளவரசியான தியாகவல்லியின் கச்சிராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் இப்போதும் தியாகவல்லி, முகாசாபரூர் (விருதாசலம்), விளந்தை (ஆண்டிமடம்), திருக்கனங்கூர், ஓலையாம்புதூர் உள்ளிட்ட ஊர்களில் வாழ்கின்றனர். இராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன் என சோழ மன்னர்கள் அனைவரும் சிதம்பரம் நடராஜரை தமது குலதெய்வமாகக் கொண்டு அங்கு முடிசூடிக்கொண்டனர். அதே வழக்கத்தை இன்றும் பின்பற்றும் பிச்சாவரம் சோழகர்கள் இப்போது கச்சிராயர்களுக்கு உறவினர்களாக உள்ளனர். #RajarajaChola #CholaDynasty
1
41
3
102
14,186
125 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக 25 நாள் வேலை வழங்க ரூ.9,192 கோடி தேவை: அரசு ஒதுக்கிய ரூ.100 கோடியால் பயனில்லை! @CMOTamilnadu
1
35
89
3,618
"பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய வேண்டும்: சென்னையை ராம்சார் சதுப்புநில மாநகரங்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!" - முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம் --------------- சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக அதன் எல்லைகளை அறிவிக்கை செய்ய வேண்டும்; ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிட வேண்டும் என்றும், சென்னை மாநகரை ராம்சார் சதுப்புநில மாநகரங்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு அவர் எழுதிய கடிதம்: --------------- மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, வணக்கம்! பொருள்: சென்னை மாநகரத்தின் ஒற்றை இயற்கை சதுப்பு நிலமும், நகர்ப்புற பல்லுயிர் வாழிடமுமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக அதன் எல்லைகளை அறிவிக்கை செய்ய வேண்டும்; ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிட வேண்டும் என்று கோருதல் - தொடர்பாக சென்னை மாநகரத்தில் அமைந்துள்ள இராம்சார் தலமும், சென்னை மாநகரத்தை மழை - வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் கட்டமைப்புமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் இயற்கை அழகாகவும், அடையாளமாகவும் ஒரு காலத்தில் திகழ்ந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அதன் பொலிவையும், பரப்பையும் ஆண்டுக்கு ஆண்டு இழந்து வருகிறது. ஒரு காலத்தில் அடையாற்றில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1725 ஏக்கருக்கும் கீழாக சுருங்கிவிட்டது. அரிய வகை பறவைகளான யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான், தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, கரண்டி வாயன், நீலத்தாழைக் கோழி, நைட் ஹெரான், நீர்க்காகம், நாமக்கோழி, மஞ்சள் குருகு, நெடுங்கால் உள்ளான் (Eurasian Eagle Owl, Pied Avocet, Northern Shoveler, Eurasian Wigeon, Northern Pintail, Eurasian Spoonbill, Purple moorhen, Night heron, Little Cormorant, Common Coot, Yellow bittern, Black-winged Stilt) உள்ளிட்ட 115 வகை பறவைகள் லட்சக்கணக்கில் இந்த சதுப்பு நிலங்களுக்கு வலசை வந்து செல்கின்றன. அதுமட்டுமின்றி, தனித்துவமான இறால் வகைகள், குள்ள கவுராமி (Dwarf Gourami), பாப்பான் (Chromide)) உள்ளிட்ட 46 வகையான மீன்கள், 5 வகை ஒட்டு மீன்கள், 21 ஊர்வன வகைகள் ஆகியவையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வாழ்கின்றன. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர் வாழிடமாக திகழும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரழிக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முயற்சிகளில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. தமிழ்நாடு அரசு நினைத்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மிகவும் எளிதாக மேற்கொள்ள முடியும். ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாகவே தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசுகள் அந்தக் கடமையை செய்யவே இல்லை. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இதற்கான வாய்ப்புகள் 3 முறை அரசால் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. முதலில், இந்திய அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் (The Wetlands (Conservation and Management) Rules, 2017) 2017-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. அதன்பின், 2018-ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஈர நிலங்கள் ஆணையம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின்படி, ஓராண்டுக்குள் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் குறித்து முதலில் சுருக்க அறிக்கையையும், அடுத்து வரைவு அறிவிக்கையையும் வெளியிட்டிருக்க வேண்டும். அடுத்த 240 நாள்களில் வரைவு அறிவிக்கை மீது மக்களின் கருத்துகளைக் கேட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்திருக்க வேண்டும். 2018-ஆம் ஆண்டில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டிருந்தால் கூட 2020-ஆம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பை அப்போதிருந்த அதிமுக அரசு தவற விட்டு விட்டது. அதன்பின், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உலக முக்கியத்துவம் வாய்ந்த இராம்சார் தலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அந்த தேதியைக் கணக்கில் கொண்டால் கூட, 2024-ஆம் ஆண்டுக்குள் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சட்டப்படி அறிவிக்கை செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக, 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழகத்தின் 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என 11.12.2024-ஆம் நாள் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த இரு வாய்ப்புகளையும் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஆட்சியில் இருந்த திமுக அரசு தவற விட்டு விட்டது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசாவது இந்தக் கடமையை தவற விடாமல், உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்தல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிடுதல் ஆகிய இரு முதன்மைக் கடமைகளை தமிழக அரசு செய்யாததால், ஒருபுறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி, அங்குள்ள மக்களும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அறிவிக்கை செய்யப்படாதது மட்டுமின்றி, அப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (Integrated Management Plan - IMP) தமிழக அரசு அறிவிக்கும் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த வகையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள தடை விதித்துள்ளது. இதனால், ஒரு லட்சம் பட்டாதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடை நிரந்தரமாகிவிடுமோ? என அவர்கள் அஞ்சுகின்றனர். தமிழக அரசு நினைத்திருந்தால், ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிடுவது மட்டுமின்றி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும் அறிவிக்கை செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தடையை நீக்கியிருக்க முடியும். அது மிகவும் எளிதானது தான். ஏனென்றால், மத்திய அரசு வழிகாட்டுதலில் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் 2025-ஆம் ஆண்டிலேயே கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதேபோல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை அளவிடும் பணிகள் 99% முடிவடைந்து விட்டதாக கடந்த ஆண்டு திசம்பர் 3-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஈர நிலங்கள் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், அதன்பின் 10 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இப்போது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தங்களின் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகும் கூட, நிலைமை மாறவில்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்வதற்கு நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு ஈர நிலங்கள் ஆணையம், தாக்கப்பகுதியின் பரப்பை பசுமைத் தீர்ப்பாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட 8,397 ஏக்கரிலிருந்து, 316 ஏக்கராக குறைப்பட்டு விட்டதாகவும் அதை ஏற்றுக்கொண்டு தடையை நீக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாக அமையுமே தவிர பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க எந்த வகையிலும் உதவாது. ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிடுவதுடன், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும் அறிவிக்கை செய்து தமிழக அரசு ஆணையிட்டால் கீழ்க்கண்ட பயன்கள் ஏற்படும். 1. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு அகற்றப்படும் என்பதால், அங்கு குப்பைகள் கொட்டப்படாது; துர்நாற்றம் குறையும். 2. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்; அதனால், சதுப்பு நிலத்தில் வாழும் பறவைகள், மீன்கள் ஆகியவற்றுக்கு ஏற்படும் தீமைகள் விலகும். 3. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் உள்ள 65 நீர்நிலைகள் தாக்கப்பகுதிக்குள் கொண்டு வரப்படும் என்பதால் அவை அனைத்தும் பாதுகாக்கப்படும். இதனால், தென் சென்னையின் வெள்ள சேதம் பெருமளவு குறைக்கப்படும். தென் சென்னையின் நிலத்தடி நீர்வளம் மேம்படும். கோடைக் காலத்தில் வெப்ப அலைகளின் தாக்கம் குறையும். 4. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள நீர்நிலைகள் தூய்மையானதாக மாறும் போது, வலசை பறவைகள் வருகை அதிகமாவதால் பள்ளிக்கரணை இயற்கை எழில்மிக்கதாக மாறும். 5. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுமானத் தடைகள் நீக்கப்படும். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நிம்மதி அடைவார்கள். மேற்கண்ட நன்மைகளைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு இந்திய அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017-இன்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை அளவீடு செய்து அறிவிக்கை செய்தல், ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தை வெளியிடுதல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கி.மீ தொலைவுக்கு 6 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும், 2 கி.மீ நீளத்திற்கு நடை பாதை அமைக்கும் பணிகளையும் உடனடியாக நிறுத்தி, அவற்றை அகற்றுதல், சென்னை பெருநகரை ராம்சார் சதுப்புநில மாநகரங்கள் (Ramsar Wetland City) பட்டியலில் சேர்த்தல் ஆகிய நடவடிக்கைகளை தங்கள் தலைமையிலான தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளையும் வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி! #SavePallikaranaiWetland #Pallikaranai #AnbumaniRamadoss #Ramsar
10
23
300
ARUL Rathinam retweeted
The Tamil Nadu govt has to release both Thiruppugazh flood committee report and Smart City Corruption Report, both involving critical details of Chennai’s infrastructure including flood mitigation. 100 days of TVK govt has crossed and yet both these reports aren’t out. Who are they saving?
Cloudbursts May Become Frequent in Chennai: Thirupugazh Committee Report Must Be Released and Flood-Prevention Measures Strengthened! In the 24-hour period ending at 8.30 a.m. today, Chennai recorded extremely heavy rainfall, with Parrys receiving the highest rainfall of 36.34 cm. Kathivakkam recorded 34.44 cm, Chennai Central 27.45 cm, Tiruvottiyur 22.41 cm and Ennore 21.58 cm. It is noteworthy that several parts of Chennai received rainfall of an intensity comparable to a cloudburst. Apart from the extremely heavy rainfall recorded across Chennai, Kathivakkam received nearly 15 cm of rain in a single hour, while Meenambakkam and Sathangadu received more than 10 cm in an hour. Parrys, Tiruvottiyur, Ennore and Kargil Nagar also recorded rainfall just short of 10 cm in an hour. Therefore, the torrential rainfall in Chennai, resembling a cloudburst, is by no means surprising. For more than five years, the Pattali Makkal Katchi (PMK) has been warning that climate change could lead to cloudburst-like situations in Chennai and that the city's flood-prevention and stormwater drainage infrastructure must be strengthened to deal with them. Yesterday's rainfall has only reinforced this warning. There is also a risk of the situation worsening this year due to the impact of El Niño. Taking these factors into consideration, the government must intensify flood-prevention measures. The rain that lashed Chennai last night has caused flooding in several parts of the city. There is a possibility that Chennai could receive even heavier rainfall in the coming days than what it experienced yesterday. Climate change, which is threatening the world, could cause impacts beyond anyone's imagination. Keeping this in mind, it is the government's responsibility to undertake comprehensive flood-prevention measures. Among the recommendations submitted to the Tamil Nadu Government for flood prevention in Chennai, the recommendations made by the committee headed by disaster-management expert Thirupugazh are particularly important. The Thirupugazh Committee, constituted in November 2021, conducted various field studies and analysed the data collected from them for a total of 17 months, up to March 2023, before submitting its final report in March 2023. However, even after 43 months, the report has still not been made public. The previous DMK government had stated that the Thirupugazh Committee's report contained a total of 161 recommendations and that 101 of them were being implemented. However, no one knows what those 161 recommendations were or which 101 recommendations had actually been implemented. Even after the DMK government was replaced by the TVK government, the same situation continues. Chennai must not be allowed to be submerged by floods once again. Considering both the increasing possibility of cloudburst-like rainfall in Chennai and the need to prepare for heavier rainfall in the future, the government must take all necessary precautionary measures. The government must release the Thirupugazh Committee's report and, based on its recommendations, strengthen Chennai's flood-prevention and stormwater drainage infrastructure. @CMOTamilnadu
6
38
4
254
9,389
சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும்! சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக பாரிமுனையில் 36.34 செ.மீ மழை பெய்திருக்கிறது. கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ, சென்னை சென்ட்ரலில் 27.45 செ.மீ, திருவொற்றியூரில் 22.41 செ.மீ, எண்ணூரில் 21.58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பல இடங்களில் மேக வெடிப்புக்கு இணையான அளவில் மழை பெய்திருப்பது குறிப்பிடத்த்தக்கது. சென்னையில் அதிக அளவில் மழை பெய்தது ஒரு புறமிருக்க, கத்திவாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ அளவுக்கும், மீனம்பாக்கம்ம், சாத்தங்காடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கும் கூடுதலாகவும், பாரிமுனை, திருவொற்றியூர், எண்ணூர், கார்கில் நகர் ஆகிய இடங்களில் 10 செ.மீக்கு சற்று குறைவான அளவிலும் மழை பெய்திருக்கிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதைப் போல சென்னையில் மழை கொட்டித் தீர்த்திருப்பது எந்த வகையிலும் ஆச்சரியமளிக்கவில்லை. காலநிலை மாற்றம் காரணமாக சென்னையில் மேக வெடிப்பு போன்ற சூழல்கள் ஏற்படலாம் என்றும், அதை சமாளிக்கும் வகையில் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் நேற்றை ய மழைப்பொழிவு அமைந்துள்ளது. நடப்பாண்டில் எல் -நினோ தாக்கமும் இருப்பதால் நிலைமை மோசமடையும் ஆபத்தும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும். சென்னையில் நேற்றிரவு பெய்த மழைக்கு நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் நேற்று பெய்ததை விட இன்னும் கூடுதலான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்ப்புகளை ஏற்படுத்தக் கூடும். அதை மனதில் கொண்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது பேரிடர் மேலாண்மை வல்லுனர் திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகும்.2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அதன்பின் 43 மாதங்களாகியும் அந்த அறிக்கை இப்போது வரை வெளியிடப்படவில்லை. திருப்புகழ் குழு அறிக்கையில் மொத்தம் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்ததாகவும், அவற்றில் 101 செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முந்தைய திமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிக்கையில் இடம்பெற்றிருந்த 161 பரிந்துரைகள் என்னென்ன? செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகள் என்னவென்ன? என்பது யாருக்கும் தெரியவில்லை. திமுக ஆட்சி முடிந்து தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் அதே நிலை தான் தொடர்கிறது. சென்னை மாநகரம் இன்னொரு முறை வெள்ளத்தில் மிதக்கக் கூடாது. இதையும், சென்னையில் மேக வெடிப்பு போன்ற நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதையும் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிட்டு அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னையின் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும். @CMOTamilnadu
6
62
172
22,195
Cloudbursts May Become Frequent in Chennai: Thirupugazh Committee Report Must Be Released and Flood-Prevention Measures Strengthened! In the 24-hour period ending at 8.30 a.m. today, Chennai recorded extremely heavy rainfall, with Parrys receiving the highest rainfall of 36.34 cm. Kathivakkam recorded 34.44 cm, Chennai Central 27.45 cm, Tiruvottiyur 22.41 cm and Ennore 21.58 cm. It is noteworthy that several parts of Chennai received rainfall of an intensity comparable to a cloudburst. Apart from the extremely heavy rainfall recorded across Chennai, Kathivakkam received nearly 15 cm of rain in a single hour, while Meenambakkam and Sathangadu received more than 10 cm in an hour. Parrys, Tiruvottiyur, Ennore and Kargil Nagar also recorded rainfall just short of 10 cm in an hour. Therefore, the torrential rainfall in Chennai, resembling a cloudburst, is by no means surprising. For more than five years, the Pattali Makkal Katchi (PMK) has been warning that climate change could lead to cloudburst-like situations in Chennai and that the city's flood-prevention and stormwater drainage infrastructure must be strengthened to deal with them. Yesterday's rainfall has only reinforced this warning. There is also a risk of the situation worsening this year due to the impact of El Niño. Taking these factors into consideration, the government must intensify flood-prevention measures. The rain that lashed Chennai last night has caused flooding in several parts of the city. There is a possibility that Chennai could receive even heavier rainfall in the coming days than what it experienced yesterday. Climate change, which is threatening the world, could cause impacts beyond anyone's imagination. Keeping this in mind, it is the government's responsibility to undertake comprehensive flood-prevention measures. Among the recommendations submitted to the Tamil Nadu Government for flood prevention in Chennai, the recommendations made by the committee headed by disaster-management expert Thirupugazh are particularly important. The Thirupugazh Committee, constituted in November 2021, conducted various field studies and analysed the data collected from them for a total of 17 months, up to March 2023, before submitting its final report in March 2023. However, even after 43 months, the report has still not been made public. The previous DMK government had stated that the Thirupugazh Committee's report contained a total of 161 recommendations and that 101 of them were being implemented. However, no one knows what those 161 recommendations were or which 101 recommendations had actually been implemented. Even after the DMK government was replaced by the TVK government, the same situation continues. Chennai must not be allowed to be submerged by floods once again. Considering both the increasing possibility of cloudburst-like rainfall in Chennai and the need to prepare for heavier rainfall in the future, the government must take all necessary precautionary measures. The government must release the Thirupugazh Committee's report and, based on its recommendations, strengthen Chennai's flood-prevention and stormwater drainage infrastructure. @CMOTamilnadu
6
44
3
115
20,418
“6 மணி நேரத்த்தில் 31 சென்டி மீட்டர் பெருமழை! திருப்புகழ் குழு அறிக்கையை இனியாவது வெளியிடுமா தவெக அரசு?” ------- சென்னை வெள்ளத்தை தடுப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கை ரகசிய ஆவணமா? தமிழ்நாடு அரசு 42 மாதங்களாக ஒளித்து வைத்திருப்பது ஏன்? கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாத வெள்ளத்தை தொடர்ந்து முன்னாள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையில் சென்னை பெருநகர வெள்ள பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான 14 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் 600 பக்க இறுதி அறிக்கை 2023 மார்ச் மாதம் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது. 2023 டிசம்பர் மாத வெள்ளத்தை தொடர்ந்து இந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் ஊடகச் செய்திகள் கூறின. ஆனால், இதுவரை திருப்புகழ் குழு அறிக்கை வெளியிடப்படவில்லை. மீண்டும் வட கிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 42 மாதங்களாக திருப்புகழ் குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக தவெக அரசு வெளியிட வேண்டும். திருப்புகழ் குழுவில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தப்பட்ட பரிந்துரைகள் எத்தனை? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நடவடிக்கை அறிக்கையையும் தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும். #ChennaiRains #SaveChennai #ThirupugazhReport
11
1
23
517
இன்று வட சென்னையில் 4 மணி நேரத்தில் 26 சென்டி மீட்டர் பெருமழை பொழிந்துள்ளது... மேலும், மழை தொடர்கிறது... சென்னை பெருமழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்க மறுத்தது - தமிழக அரசு சென்னை மக்களுக்கு செய்த மாபெரும் துரோகம்... -------- மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 22.08.2026 அன்று வெளியிட்ட அறிக்கை கீழே -------- “திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்? மக்கள் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்!” சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய திருப்புகழ் குழு அறிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தவெக அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பேரிடரிலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான மிகவும் முக்கியமான ஓர் ஆவணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அரசு பதிலளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 41 மாதங்களாகியும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரினார். அதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ‘‘திருப்புகழ் குழுவின் அறிக்கையை திமுக அரசு வெளியிட்டிருக்க வேண்டும்; ஆனால், ஏன் அவர்கள் வெளியிடவில்லை என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பத்திரிகை செய்திகள் வந்ததை மட்டும் தான் பார்த்தோம். இப்போது வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வருவாய் நிர்வாக ஆணையர் முருகானந்தம் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். மழை - வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை திமுக அரசு வெளியிடாதது தவறு; அதை நாங்கள் உடனடியாக வெளியிடுவோம் என்பதாகத் தான் அமைச்சரின் பதில் இருந்திருக்க வேண்டும். அத்தகைய பதில் அரசிடமிருந்து வராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 2021-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழையும், அதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமும் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து சென்னையில் எத்தகைய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை திமுக அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022-ம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023- மார்ச் 14-ம் தேதியும் அரசிடம் தாக்கல் செய்தது. நான் அறிந்தவரை திருப்புகழ் குழுவின் அறிக்கையில் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன; அவற்றை செயல்படுத்தியிருந்தாலே சென்னையில் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். இத்தகைய அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போது, அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திருப்புகழ் குழுவை அமைத்த திமுக அரசே, ஏதோ காரணங்களுக்காக திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது. அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி பல தருணங்களில் வினா எழுப்பிய போது, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருப்புகழ் குழு அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன; மொத்தமுள்ள 161 பரிந்துரைகளில் 101 செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆனால், செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகளும் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. என்னாலும், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வல்க்லுனர்களாலும் புரிந்து கொள்ள முடியாத உண்மை என்னவென்றால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு, விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருப்புகழ் குழுவை வெளியிட முடியாத அளவுக்கு அதில் என்ன இரகசியம் இருக்கிறது என்பது தான்? மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையை யாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு கிடப்பில் போட்டது என்பது தான்? திருப்புகழ் குழுவின் அறிக்கை என்பது கடையில் வாங்கப்பட்ட புத்தகம் அல்ல. 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதற்காக கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை எந்த வகையிலும் வீணடிக்கப்படக் கூடாது. சென்னையில் இனி வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு திருப்புகழ் குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது தான். அந்த அறிக்கையை திமுக வெளியிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தவெக அரசுக்கு அத்தகைய காரணங்கள் எதுவும் இல்லை. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய முதலமைச்சர் விஜய் அவர்கள், எனது அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று அறிவித்தார். அதை வெளிப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பு திருப்புகழ் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவது தான். திருப்புகழ் குழு அறிக்கையை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகராட்சி நிர்வாகத்துறையை முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் நிர்வகித்து வருகிறார். அதனால், திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சர் அவர்களே மேற்கொள்ள வேண்டும். திமுக அரசின் தவறுகளை தமது அரசு திருத்தி வருவதாகக் கூறி வரும் முதலமைச்சர் அவர்கள், திமுகவின் இந்தத் தவறையும் திருத்த வேண்டும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாள்களே உள்ளன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என வலியுறுத்துகிறேன். #ChennaiRains #SaveChennai #ThirupugazhReport
11
17
337
Tender for 1,000 Electric Buses Cancelled One Day, Revived the Next: Why Is the Govt Struggling to Make Administrative Decisions? The Tamil Nadu government cancelled the tender invited for the procurement of 1,000 electric buses for the Metropolitan Transport Corporation (MTC) in Chennai last Wednesday, only to revoke the cancellation the very next day and announce that the tendering process would continue. These contradictory decisions reflect the serious indecision prevailing within the Tamil Nadu government on matters of administration. Tenders for the procurement of 1,000 electric buses for the Metropolitan Transport Corporation were invited in March this year. Subsequently, the Tamil Nadu Assembly elections were announced, followed by a change of government, and the deadline for submitting bids was postponed several times. Against this backdrop, the Tamil Nadu government announced on Wednesday, the 14th, that the tender notification was being cancelled for administrative reasons. This triggered considerable confusion. However, the Metropolitan Transport Corporation subsequently stated that the cancellation notice had been issued inadvertently, that it was being withdrawn, and that the tendering process would continue. It is difficult to understand how a tender notification issued by the Tamil Nadu government could be cancelled without the government itself being aware of it. Any government decision must pass through several levels of officials, from section officers to directors and secretaries. An individual official may make a mistake, but how could all the officials involved make the same mistake? Therefore, the confusion surrounding the cancellation of the tender cannot be attributed to the officials. Those responsible for making policy decisions are the ones who must be held accountable. Electric buses are being procured for the Metropolitan Transport Corporation under the Gross Cost Contract (GCC) model adopted by the DMK government in its agreement with the World Bank. The Pattali Makkal Katchi (PMK) strongly opposes this arrangement because it would pave the way for the privatisation of the Metropolitan Transport Corporation. If the government cancelled the tendering process for this very reason, it should have stood firm on its decision instead of reversing it. For a state's development, its government must carefully examine issues, make clear and well-considered decisions, and remain committed to them. Making hasty decisions without adequate deliberation and then reversing them immediately does not strengthen governance. I urge the government to ensure that, from now on, all decisions are taken only after thorough examination and that it remains firm in implementing them. @CMOTamilnadu
8
40
2
107
15,028
1000 மின்பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் முதல் நாள் ரத்து - அடுத்த நாள் மீண்டும் நடைமுறை: நிர்வாக முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்? சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவற்காக கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியை கடந்த புதன்கிழமை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, அதற்கு அடுத்த நாளே ரத்து அறிவிப்பை ரத்து செய்து ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ளது. அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டன. அதன்பின் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சி மாற்றமும் ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பல முறை ஒத்திவைக்கப்பட்டது இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக கடந்த 14-ஆம் தேதி புதன் கிழமை தமிழக அரசு அறிவித்தது. அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்யும் அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டதாகவும், அதை திரும்பப்பெற்று ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடருவதாகவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அரசுக்கே தெரியாமல் எவ்வாறு ரத்து செய்யப்படும் என்பது தெரியவில்லை. அரசின் எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது பிரிவு அலுவலர் முதல் இயக்குனர்கள்/ செயலாளர்கள் வரையிலான பல்வேறு அதிகாரிகளை கடந்து வர வேண்டும். எவரேனும் ஒருவர் தவறு செய்யலாம்; எல்லா அதிகாரிகளும் எவ்வாறு தவறு செய்ய முடியும்? எனவே, ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்படுவதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அதிகாரிகள் காரணம் அல்ல... கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் தான் காரணம் ஆகும். உலக வங்கியுடன் திமுக அரசு செய்து கொண்ட மொத்த செலவு ஒப்பந்தத்தின் (Gross Cost Contract) அடிப்படையில் தான் மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படுகின்றன. இது மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கவே வழிவகுக்கும் என்பதால் இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதே காரணத்திற்காகத் தான் அரசு இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை ரத்து செய்தது என்றால், அதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். முடிவை மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அந்த மாநில அரசு நன்கு ஆராய்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பதும், அதில் உறுதியாக இருப்பதும் அவசியம் ஆகும். அவசரக் கோலம் அள்ளித் தெளித்தது போல முடிவுகளை எடுப்பதும், அதை உடனடியாக மாற்றுவதும் நிர்வாகத்திற்கு வலிமை சேர்க்காது. இனி வரும் காலங்களிலாவது அனைத்து முடிவுகளையும் அரசு ஆராய்ந்து எடுக்க வேண்டும்; அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
6
66
2
183
33,194
சென்னை - தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்ற "REALTY CONCLAVE & AWARDS" நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன் பங்கேற்று "வீடுகளின் கட்டுமானங்கள் சூழல்நீதியும் சமூக நீதியும்" குறித்து சிறப்புரையாற்றிய போது.!
7
31
1
416
11,642