சென்னையில் ஜார்க்கண்ட் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் ...
திண்டிவனம் தொகுதி விசிக மாவட்ட செயலாளர் நாகராஜ் மகன் அரவிந்த் கைது ..
#sexualAbuse
#TindivanamNews
#vck #marakkanam
1
47
தகாத நோக்கத்துடன் அணுகியதாக மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
#AnbumaniRamadoss #ArulVignesh #Kallakurichi
69
பூபால் பழனி ஊடகப் பேரவை retweeted
140% Hike in Rent of Aavin Parlours? Immediate Withdrawal of Rent Hike
That Will Hit Poor Small Traders!
The monthly rent of 213 Aavin parlours operating on land owned by Aavin and local bodies in Chennai and its suburban areas has been increased by 140%. This move, which will adversely affect poor small traders running these parlours with limited investment and relying on them for their livelihood, is condemnable.
The monthly rent of Aavin parlours, including GST, was Rs 4,130. It has now been increased by Rs 5,782 to Rs 9,912. This is the second rent hike announced this year.
Under an order issued on March 3 during the previous DMK regime, the rent of Aavin parlours was increased by up to 230%. Before that, the monthly rent ranged between Rs 2,000 and Rs 2,500. It was subsequently increased to Rs 4,130, Rs 5,900 and Rs 8,260. Even as the parlour operators were struggling to bear the burden of that rent hike, another increase has now been imposed.
The rent of an Aavin parlour, which was Rs 2,000 in March this year, has now been increased to Rs 9,912 in two successive phases. This amounts to an increase of nearly 400%.
Aavin parlours do not generate thousands of rupees in income. Since public service is the primary objective of Aavin, the commission paid to parlour operators is very modest. Apart from Aavin milk, other products do not sell in significant quantities, leaving parlour operators with very little income. It is unjust for Aavin itself to take away even this meagre income in the name of increased rent.
Those who run Aavin parlours are mostly people who cannot afford to invest even a few tens of thousands of rupees. These parlours serve as an important source of livelihood, particularly for women, widows and persons with disabilities.
Since this decision will severely affect their livelihoods, Aavin must immediately withdraw the rent hike imposed on its parlours.
@CMOTamilnadu
@aavintamilnadu
கும்மிடிப்பூண்டியில் காற்றுத் தரக்குறியீடு 362 ஆக உயர்ந்து, டெல்லியைவிட அதிக மாசு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகரிக்கும் காற்று மாசுக்கு தொழிற்சாலைகளின் வெளியேற்றம் முக்கியக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.!
#AnbumaniRamadoss #PMK #Gummidipoondi #AirPollution #Chennai #Environment
பூபால் பழனி ஊடகப் பேரவை retweeted
108 அவசர ஊர்தி பணியாளர்களை உடனே அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!
விவரம்: tinyurl.com/rd95rzbf
#ANBUMANI | #Emergencyambulance | #GovernmentEmployees | #PMK | #TamilNadu | #TNGovernment
பூபால் பழனி ஊடகப் பேரவை retweeted
தொழில் முதலீட்டு தகவல் கசிவு: அன்புமணி கேள்வி!
#AnbumaniRamadoss #PMK #TamilNadu #IndustrialInvestment #Investment #TamilNaduGovernment #Maalaimalar
பூபால் பழனி ஊடகப் பேரவை retweeted
“பள்ளிக்கரணை தீர்ப்பு: உயர்நீதிமன்றத்தின் மீது கட்டுமான மாஃபியாக்கள் பழிபோடுவது நியாயமா?”
-----------
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காப்பாற்றுவதற்கான ஒரு IMP திட்டத்தை அறிவித்தாலே, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு தடையை எளிதாக விலக்கி விடலாம். ஆனால், தேவையில்லாமல் இதனை உயர்நீதிமன்றத்துக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இழத்தடிக்கும் சதியை கட்டுமான மாஃபியாக்கள் செய்கின்றனர். தமிழ்நாடு அரசின் ‘உச்ச’ அதிகாரியும் இந்த சதிக்கு உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது!
-----------
‘பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சுற்றிலும் தற்காலிக கட்டுமான தடை விதிக்கப்பட்டது தொடர்பாக, கட்டுமான நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம்’ என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தற்கு எதிராக கட்டுமான மாஃபியாக்கள் கொந்தளித்துள்ளனர்.
‘உச்சநீதிமன்றம் விசாரிக்கும் வழக்கில் அதற்கு கீழுள்ள நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை கட்டுமான நிறுவனங்கள் விமர்சனம் செய்துள்ளன. ‘உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தை விசாரிப்பது, ஒன்பது மாதங்களுக்கு முன்பு 2026 பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்த போதே, உயர்நீதிமன்றத்துக்கு தெரிந்தது தானே? அப்போதே உச்சநீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்று சொல்லாதது ஏன்?’ என்று கட்டுமான நிறுவனங்கள், உயர்நீதிமன்றத்தை நோக்கி, தி இந்து நாளிதழ் செய்தியில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனாலும், இந்த விவகாரத்தின் பின்னணி அறிந்தவர்கள், இதற்கு பின்னால் மாபெரும் சதிவலை பின்னப்பட்டதையும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அந்த சதியை அம்பலமாக்கியதால், பள்ளிக்கரணை சதுப்புநிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதையும் ஒப்புக்கொள்கிறார்கள்.
தமிழக அரசை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், கட்டுமான நிறுவனங்களும், தமிழ்நாடு அரசும் ஒரே வாதத்தை முன்வைத்தன. அதாவது, வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பும், அதே வழக்கை எதிர்கொண்ட அரசு தரப்பும் ‘பசுமைத் தீர்ப்பாயத்தின் தடையை தளர்த்தலாம்’ என கருத்தில் வாதிட்ட விநோதம் இந்த வழக்கில் நடந்தது!
ஒரு உச்ச அதிகாரி இந்த விவகாரத்தில் தலையிட்டு, கட்டுமான நிறுவனங்கள் வாங்கி வைத்துள்ள அனைத்து இடங்களையும் சதுப்புநில தாக்கப்பகுதியில் இடம்பெறாதவாறு வரைபடத்தை தயாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சதுப்புநிலங்கள் ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்தார் என தகவலறிந்தவர்கள் கூறினர். தமிழ்நாடு சதுப்புநிலங்கள் ஆணையம் அளித்த 240-க்கும் மேற்பட்ட உத்தேச வரைபடங்களை அந்த அதிகாரி நிராகரித்தார் என்று கூறப்படுகிறது.
கடைசியில், சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதிக்குள் தனியார் கட்டுமான நிறுவனங்களின் ஒரு சதுர அடி இடம் கூட வராத வகையில் உருவாக்கப்பட்ட ‘செட்அப்’ வரைபடத்தை தான், அந்த ‘உச்ச’ அதிகாரி ஏற்றுள்ளார். இந்த அநீதியை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அம்பலமாக்கிய பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
-----------
“குறுக்கு வழியில் செல்லும் தமிழ்நாடு அரசு + கட்டுமான மாஃபியா!”
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சுற்றிலும் ஒரு லட்சம் பட்டா உரிமையாளர்களுக்கு கட்டுமானத் தடை விதித்துள்ளதாக தொடர்ந்து கட்டுமான மாஃபியா கும்பல் வதந்தி பரப்புகிறது. இந்த விவகாரத்தில் உண்மையை சொல்லாமல் தமிழ்நாடு அரசு மௌனம் காக்கிறது!
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (Integrated Management Plan - IMP) எனும் சட்டப்படியான ஒரே ஒரு ஆவணத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கும் வரை தான், கட்டுமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது (‘Until the preparation of the IMP is completed, the authorities shall not grant any approvals, sanctions, or permissions that may alter the character of the marshland’). நிரந்தர தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கடந்த 2025 செப்டம்பர் மாதம் வெளியானது. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் 2025 அக்டோபர் மாதமே IMP ஆவணத்தை வெளியிட்டு தடையை நீக்கியிருக்க முடியும். இத்தனைக்கும் அந்த ஆவணம் ஏற்கெனவே தயாரிப்பில் இருப்பதாகவும், இறுதிக்கட்டத்தில் பணிகள் நடப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
எனவே, தமிழ்நாடு அரசு உண்மையாகவே நினைத்தால், பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிட்டு உடனடியாக கட்டுமானத் தடையை நீக்க முடியும்.
இப்படி ஒரு எளிய வழி இருக்கும் போது – இந்த உண்மையை மூடி மறைத்து, கட்டுமான நிறுனங்களும், தமிழ்நாடு அரசும் நாடகம் ஆடுகின்றனர். இப்போதும் கூட உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று சொல்கிறார்களே தவிர, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான திட்டத்தை அறிவித்து தடையை விலக்கும் நடவடிக்கைகளை இவர்கள் கோரவில்லை!
-----------
குறிப்பு: பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான பணிகளை முடித்துவிட்டுதான் கட்டுமான தடையை நீக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கூறவில்லை. மாறாக, அதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (IMP) உருவாக்கும் வரை, சதுப்புநிலத்தை பாதிக்கும் வாய்ப்புள்ள கட்டுமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றுதான் தென் மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை, இந்திய அரசின் 2017 விதிகளின் கீழ் தமிழ்நாடு அரசு எவ்வாறு பாதுகாக்கப் போகிறது என்பதை விளக்கும் வகையிலான ஒரு IMP செயல்திட்டத்தை வெறும் காகிதத்தில் ஒரு அறிக்கையாக அளித்தாலே போதுமானது.
#SavePallikaranaiWetland #Pallikaranai #MadrasHighCourt
பூபால் பழனி ஊடகப் பேரவை retweeted
திருப்பரங்குன்றம் தீபம் 2026 உச்சநீதிமன்ற தீர்ப்பு 📈🔥 #pmk #sowmiyaanbumani #thiruparangundram #deepam #tamilnews
பூபால் பழனி ஊடகப் பேரவை retweeted
மயானத்திற்குள் கொண்டுசெல்லப்பட்ட வி.எஸ்.பாபுவின் உடல்..
Chennai | RIP VSBabu | Kolathur MLA | TVK mla | Funeral
#NewsTamil24x7 #Ministers #CMvijay
பூபால் பழனி ஊடகப் பேரவை retweeted
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN
முகமையில் நடப்பது என்ன? 15 பனியாளர்கள் நீக்கம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்!
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் பணியாற்றி வந்த 15 பேர் முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை பிற மாநிலங்களுக்கு கசிய விட்டதாகவும், அதனால் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தின் முதலீடு ஈர்ப்பு கட்டமைப்பையே நிலைகுலையச் செய்யும் இந்த விவகாரம் குறித்து யூக செய்திகள் மட்டுமே வெளிவரும் நிலையில், அரசு எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதி காப்பது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை Guidance TN அமைப்பில் பணியாற்றியவர்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்க்கியதாகவும், அது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் ஆந்திர அரசின் தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்துத் தரும் பணியில் சேர்ந்ததாக வெளியான செய்திகள் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்தன.
ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் பணியாளர்களோ, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் பணி செய்யும் சூழல் இல்லை என்றும், அதனால் புதிய அரசு பதவியேற்ற ஒரு மாதத்தில் பதவி விலகி விட்டதாக கூறியுள்ளனர். Guidance TN அமைப்பின் பணிச் சூழல் மோசமடைந்திருப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் எது உண்மை என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு.
அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 3 தென் கொரிய நிறுவனங்களின் ரூ.1614 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றன. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் என்ஃபீல்டு, Haier Electronics போன்ற நிறுவனங்களும் தமிழகத்தின் போட்டி மாநிலமான ஆந்திராவில் தொழில் முதலீடுகளை செய்ய தீர்மானித்துள்ளன. இத்தகைய சூழலில் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசிய தகவல்கள் Guidance TN அமைப்பிலிருந்து கசியவிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் முக்கியத்தும் பெறுகின்றன.
தமிழகத்தில் செய்யப்படவிருந்த தொழில் முதலீடுகள் குறித்த தகவல்கள் கசியவிடப்பட்டிருந்தால் அது துரோகமாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது சட்டப்படி கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதையும், அவர்களில் மூவர் ஆந்திர அரசு பணியில் சேருவதையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்தது ஏன்?
மோசமான பணிச்சூழல் காரணமாக அவர்கள் பதவி விலகியிருந்தால் அதுவும் தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியது தான். தமிழகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதில் தொழில் முதலீடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதில் துரோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சர்ச்சை செய்திகள் குறித்து அரசு அமைதி காக்கக் கூடாது. இந்த சர்ச்சை தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
@CMOTamilnadu





















