ஆயில்யன் retweeted
2000 வாக்கில் சென்னை மேன்சனில் இருந்தபோது, என்னுடன் ஒரு வயதான தனியார் நிறுவன மேலாளரும் தங்கி இருந்தார்.
அவர் சொல்வார். முதலில் நானும் என்னுடன் பணி புரிந்தவர்களும் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ராயப்பேட்டை ஆகிய இடங்களில் தான் குடும்பத்தினருடன் குடியிருந்து வந்தோம். பொருளாதார சூழல் மாற மாற
Inflation அதிகரிக்க அதிகரிக்க
சுற்றி இருக்கும் இடங்கள் எல்லாம் வணிகமயமாக
வாடகை எல்லாம் உயர்ந்து கொண்டே போக வேறு வழி இல்லாமல் வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு குடி பெயர்ந்தோம்.
அதன் பின்னர் அங்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் நங்கநல்லூர் தாண்டி சென்றோம். அதன் பின் தாம்பரம் எல்லாம் கடந்து தற்போது எங்கள் குடும்பத்தார் எல்லாம் கூடுவாஞ்சேரி பகுதியில் இருக்கிறார்கள்.
மின்சார ரயிலில் வரும் தெம்பு இருந்த காலம் வரை அங்கு இருந்தே இங்கு வந்து பணிகளை பார்த்தாயிற்று. (அவர் பாரிஸ் கார்னர் பகுதியில் இருந்த ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார்).
ஆனால் அதற்கும் நீண்ட நேர பணி காரணமாக உடல்நிலை தாக்குப்பிடிக்காத போது இதுபோல மேன்ஷனில் வந்து நாங்கள் மட்டும் தங்கிக் கொண்டோம் என்று சொல்வார். அவரைப் போலவே பாரிஸ் கார்னரில் பணிபுரிந்து ஓய்வு வயதை நெருங்கும் சிலர் பக்கத்து மேன்ஷனில் இருந்தார்கள்.
அவர்கள் வார இறுதிக்கு மட்டும் கூடுவாஞ்சேரி சென்று வருவார்கள். அப்படி போகாத சில வார இறுதிகளில், சனி இரவுகளில் மெரினா பீச்சில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். அதை கேட்பது தனி சுவாரசியம். வாழ்க்கைக் கல்வியும் நிறைய கிடைக்கும்.
அப்படிப்பட்ட ஒரு சனி இரவில் ஒருவர் சொன்னார். பறவைகள் எல்லாம் பெருமழை பெய்யும் பொழுது மரத்தின் பொந்துகளில் சென்று தஞ்சமடையும்.
கழுகுகள் மேகத்தின் மேலே பறந்து மழையையே தவிர்த்து விடும். நம் மிடில் கிளாஸ் காரர்கள் எல்லாம் இன்ஃப்ளேஷன் எதிர்பாரா செலவுகள் என்று வரும் பொழுது மரத்தின் பந்துகளில் பறவை தஞ்சம் அடைவதைப் போல நம்மை நாமே சுருக்கிக் கொள்கிறோம். நம்முடைய வாழ்க்கை தரத்தை வேறு வழியின்றி குறைத்துக் கொள்கிறோம். குறைவான வாடகை உடைய இடங்களுக்கு இடம்பெயர்கிறோம். வாங்கும் பொருள்களின் தரத்தை குறைத்துக் கொள்கிறோம். சில நேரங்களில் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலின் அளவை கூட குறைத்துக் கொள்வது உண்டு.
ஆனால் பொருளாதாரத்தில் வலிமையுடையவர்கள் கழுகு போல. அவர்களை எந்த இன்பிளேசனும் பாதிப்பதில்லை.
அது போன்று பொருளாதாரத்தில் வலிமையுடைய கழுகு போன்ற நிலையை நாம் எட்ட உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பார்.
காலம் முழுவதும் கழுகாக வேண்டும் என்று ஆசைப்படும் சிறு பறவைகள், அது கூடாத பட்சத்தில் தங்கள் பிள்ளைகளாவது கழுகுகளாக மாற வேண்டும் என்று பதட்டம் தான் பட முடிகிறது.
ஆயில்யன் retweeted
அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளின் படி ஒருவர் கல்லூரியில் சேர்ந்து ஏழு ஆண்டுகளுக்குள் எல்லா பேப்பர்களையும் பாஸ் செய்தால்தான் பட்டம் வழங்கப்படும். பாலிடெக்னிக் முடித்து சேருபவர்களுக்கு ஆறு ஆண்டுகள்.
இதன்படி ஏழு ஆண்டுகளில் பேப்பர்களை முடிக்காமல் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்கள் பட்டம் பெறாமல் இருந்தார்கள்.
கொரோனா காலத்தில் இப்படி முடிக்காமல் இருந்தவர்களுக்காக சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் நிறைய மாணவர்கள் பயனடைந்தார்கள்.
அதுபோல தற்போது இன்னொரு ஸ்பெஷல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2008 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் படித்து அரியர்ஸ் இருப்பதால் பட்டம் பெற வாய்ப்பு இல்லாதவர்கள் அனைவரும் இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
இதை அதிகம் பகிருங்கள். நிறைய நிறுவனங்களில் இப்படி ஏழு ஆண்டுகளுக்குள் பொறியியல் கல்வியை முடிக்காமல், பட்டம் பெறாமல் எந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்காமல் நிறைய பேர் பணிபுரிகிறார்கள் அவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.
// எம் எல் ஏன்றதால எஃப் ஐ ஆர் போடாமல் கூட தவிர்த்திருக்கலாம் //
Fantastic... Just Fantastic
எஃப்ஐஆர் போடாமல் கூட தவிர்த்திருக்கலாம்...
மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்த உடனே எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால், எஃப்ஐஆர் போடாமல் கூட தவிர்த்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு எவ்வித பாகுபாடும் இல்லாமல், முழுமையாக யார் தவறு செய்தாலும், அந்தத் தவறை ஏற்றுக்கொள்ளாமல், அது தவறு என்று சொல்லக்கூடிய அரசுதான், முதல்வர் தான், நம்முடைய முதல்வர்.- அமைச்சர் வன்னி அரசு
#TVKMLA #MinisterVanniArasu #CMVijay
ஆயில்யன் retweeted
பெருசு இச் அ Phenomenon 🤩🤩🤩🤩
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @rajinikanth
ஆயில்யன் retweeted
Everytime I say "Come to GH" people assume that GH doesn't have the facilities
We have all facilities
Only Luxury won't be there
This is taken in a Government Hospital in Chennai
ஆயில்யன் retweeted
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்
ஆனா கை விடமாட்டான்
கெட்டவங்களுக்கு ஆண்டவன்
நிறைய குடுப்பான்
ஆனா கைவிட்ருவான்
~ மாணிக் பாட்ஷா
ஆயில்யன் retweeted
வாழ்க்கையின் முக்கியமான ஒரு திருப்பத்தில் தயங்கி நிற்கும் இளைஞர் ஒருவர் சமீபத்தில் என்னைத் தொடர்பு கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் UPSC சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகத் திட்டமிட்டிருந்தார். ஆனால், சந்தைச் சூழல் காரணமாக ஒரு தனியார் நிறுவனப் பணிக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அங்கே நிலையான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும், சம்பள உயர்வுக்கும் பதவி உயர்வுக்கும் பின்னால் ஓடும் ஒரு சுழற்சியில் சிக்கிக் கொண்டதாக அவர் உணர்ந்தார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஒரு முறையாவது முழுமையாக முயற்சி செய்யவில்லையே என்ற குற்ற உணர்வும், சுற்றிலும் கேட்கும் எதிர்மறையான கருத்துக்களும் அவரை ஒவ்வொரு நாளும் அழுத்திக் கொண்டிருந்தன.
இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒரு இளைஞரிடம் பெரும்பாலானோர் உடனடியாக உத்வேகம் தரும் வார்த்தைகளைப் பேசுவார்கள். "உங்கள் கனவைப் பின்தொடருங்கள், வேலையை விட்டுவிட்டுத் துணிந்து இறங்குங்கள், எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று சொல்வார்கள். அது ஒரு நிமிடம் ஆறுதலாக இருக்கலாம். ஆனால், ஒரு நிஜமான வாழ்க்கைப் பிரச்சனைக்கு அது தீர்வாகாது. என் அணுகுமுறை வேறு. நான் பொய்யான வாக்குறுதிகளையோ, வெற்று ஊக்கத்தையோ தருவதில்லை. இளைஞர்கள் தங்கள் சூழலை நேர்மையாக ஆராய்ந்து, தங்கள் வாய்ப்புகளை விரிவுபடுத்த உதவுகிறேன்.
அந்தத் திருப்பத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்ன மூன்று விஷயங்கள் இவை:
1. விலகிச் செல்லும் எண்ணத்தையும், நுழைவதற்கான காரணத்தையும் பிரித்துப் பாருங்கள்.
தற்போதைய வேலையில் இருக்கும் அதிருப்தி உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், சிவில் சர்வீஸ் பணிக்குத்தான் ஏன் வர வேண்டும் என்பதில் அதே அளவு தெளிவு இருக்க வேண்டும். UPSC தேர்வு மிகக் கடுமையான போட்டியைக் கொண்டது. குறைந்தது சில ஆண்டுகள் முழுமையான அர்ப்பணிப்பு தேவைப்படும். எனவே, உள்ளே நுழையும் முன்பு உங்கள் அடிப்படை நோக்கத்தைச் சோதித்துப் பாருங்கள்.
2. வெற்றி வாய்ப்பை அதிகரிக்க உங்கள் பார்வையை விரிவுபடுத்துங்கள்.
பொதுச் சேவைதான் உங்கள் விருப்பம் என்றால், உங்கள் எதிர்காலத்தை ஒரே ஒரு தேர்வுக்குள் சுருக்கிக் கொள்ளாதீர்கள். மாநில மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிப் பணிகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, உங்கள் இலக்கில் தெளிவு பிறக்கும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
3. ஒரு பணியை இரண்டு அளவுகோல்களால் அல்ல, ஏழு அளவுகோல்களால் மதிப்பிடுங்கள்.
பெரும்பாலானோர் ஒரு வேலையைச் சம்பளம், பதவி என்ற இரண்டை வைத்து மட்டுமே எடைபோடுகிறார்கள். ஆனால், நீண்ட கால நோக்கில் முக்கியமான மேலும் ஐந்து விஷயங்கள் ஒவ்வொரு பணியிலும் உள்ளன:
* தொடர்புகள் (Contacts): அந்தப் பணியின் மூலம் நீங்கள் உருவாக்கும் பயனுள்ள தொழில்முறை உறவுகள்.
* அணுகல் (Access): நீங்கள் இருக்கும் இடத்தின் காரணமாக மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் முக்கிய நபர்களுடனான சந்திப்புகள்.
* அறிவு (Knowledge): அந்தக் குறிப்பிட்ட பணியில் இல்லாவிட்டால் உங்களுக்குக் கிடைக்காத துறை சார்ந்த புரிதல்.
* அனுபவம் (Experience): உங்கள் முடிவெடுக்கும் திறனைக் கூர்மையாக்கும் நிஜ வாழ்க்கைச் சூழல்களும் பொறுப்புகளும்.
* திறன்கள் (Skills): அந்த வேலையை விட்டுச் சென்ற பிறகும் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் தங்கும் நிரந்தரத் திறன்கள்.
உங்கள் தற்போதைய பணியையும், எதிர்கால வாய்ப்புகளையும் இந்த ஏழு அளவுகோல்களின் அடிப்படையில் ஆராய்ந்தால் தெளிவு கிடைக்கும்.
இன்று நீங்களும் இப்படிப்பட்ட ஒரு திருப்பத்தில் நின்று கொண்டிருந்தால், அவசரத்திலோ குற்ற உணர்வாலோ எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உங்கள் எண்ணங்களைச் சோதித்துப் பாருங்கள், வாய்ப்புகளை விரிவுபடுத்துங்கள், தெளிவோடு அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.
Motivation is not enough. Get Thinking Tools.
#CareerCrossroads #Mentorship #UPSC #CivilServices #ThinkingTools #CareerClarity
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள்
#வாழ்வெனும்பயணம்
ஆயில்யன் retweeted
அன்பின் அண்ணன்
அறிவியல் ஆசான்
இயல்பான இயற்பியலான்
@bharath_kiddo அவர்களுக்கு மகிழ் திகழ் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🍰🎂
ஆயில்யன் retweeted
Replying to @Chaintweter
Unlikely. Regulations strictly prohibit supplying recycled or treated wastewater to hand wash basins.
ஆயில்யன் retweeted
ஒரு நண்பர் AI நல்ல AI முதல் இரண்டு வகுப்புகளுக்குப் பிறகு ஆளைக் காணவில்லை. என்னடா, நம்ம எதுவும் ஒழுங்கா சொல்லித் தராம விட்டமா என்ற கவலையில் அவரைத் தொடர்பு கொண்டேன்.
அவர் சொன்னது:
“ரவி, ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்த AI கருவிகளை நோண்டிப் பார்த்துவிட்டு ஒன்றும் சரியில்லை என்று விட்டுவிட்டேன். இப்போது உங்கள் வகுப்புகளில் கலந்து கொண்ட பிறகுதான் அதன் இன்றைய வீச்சு புரிந்தது. கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தில் ஒரு புதுத் திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு மன்றாடிப் பார்த்தோம். இப்போது AI-ன் முழு ஆற்றலையும் பயன்படுத்தி அதை மீண்டும் முன்வைத்தோம். அதற்கு நிறுவனத் தலைமை ஒப்புதல் அளித்ததைக் கண்டு, இத்தனை ஆண்டுகளாக முயன்றவர்கள் எல்லாம் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார்கள்” என்றார்.
அவரைப் பொருத்த வரை இந்த AI வகுப்புகளில் கலந்து கொண்டதன் பயன் முதல் இரு வகுப்புகளிலேயே கிடைத்து விட்டது. அவரைப் போன்றவர்களுக்குத் தேவை ஒரு திறப்பு. ஒரு தகவல். அதைப் பிடித்துக் கொண்டு போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு அவர்களே போய் விடுவார்கள்.
கடந்த ஜூலை மாதம் தொடங்கிய AI நல்ல AI வகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நவம்பர் மாத சனிக்கிழமை வகுப்புகள் நாளை, அதாவது நவம்பர் 7 இந்திய நேரம் இரவு எட்டு மணிக்குத் தொடங்குகிறது. ஞாயிறு வகுப்புகள் நவம்பர் 22 இந்திய நேரம் காலை 11 மணிக்குத் தொடங்கும்.
நிறைய பேர் AI கற்றுக் கொள்ள தங்களுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டுமா, அதிகம் படித்திருக்க வேண்டுமா, Laptop வேண்டுமா, தங்களுக்கு எல்லாம் அது புரியுமா, பயன்படுமா என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
AI கொண்டு நம் அன்றாட வாழ்க்கையின் பணிகளைச் செய்வதற்கு பணமோ, மொழியோ, படிப்போ, அறிவோ ஒரு தடையாக இருக்கவே இருக்காது.
ஒரே ஒரு தடை தான் நான் காண்கிறேன். மனத்தடை.
AI நல்ல AI வகுப்புகளில் ஒரு தாய் கலந்து கொண்ட போது, அவருடைய ஏழு வயது மகனும் அருகில் இருந்து கவனித்திருக்கிறார். தன் அம்மா வலைத்தளச் செயலிகள் செய்வதைக் கண்ட அந்தச் சிறுவனும் AI துணையுடன் online game உருவாக்கி, விளையாடி மகிழ்ந்துள்ளார்.
குழந்தைகள் யாருமே இது முடியுமா, பயனளிக்குமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. அவர்களுக்கு ஆர்வமூட்டினால் தொடர்வார்கள். தவறு செய்தாலும் இடறி விழுந்தாலும் மீண்டும் எழுந்து கூச்சப்படாமல் கற்றுக் கொள்வார்கள். இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் AI மட்டுமல்ல எதையும் கற்றுக் கொள்வார்கள்.
எப்படி இன்று எல்லோரும் கணினி, செல்பேசியை இயல்பாகப் பயன்படுத்துகிறோமோ அது போலவே AI நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும். அதற்கான நம்பிக்கையையும் மனமாற்றத்தையும் தூண்டுவதே AI நல்ல AI வகுப்புகளின் நோக்கம்.
எப்படி ஒரு திரையரங்கில் எல்லா வகுப்பினரும் அமர்ந்து ரசிக்கிறோமோ அதைப் போலவே AI கற்றலும் அமைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
AI நல்ல AI வகுப்புகளில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் தொடங்கி பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள், மாணவர்கள், தொழில் முனைவர்கள், ஓய்வு பெற்றவர்கள் எனப் பல்வேறு பின்னணியினர் ஒன்றாகக் கூடிக் கற்கின்றனர். இந்த வகுப்புகளில் எனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய மனநிறைவும் இது தான்.
விக்கிப்பீடியா, கிண்டில், Streamyard வழி live webcast என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வரும் நுட்பங்களை நண்பர்களிடம் கொண்டு சேர்க்கும் ஆர்வத்தின் தொடர்ச்சியாகவே இந்த முன்னெடுப்பையும் பார்க்கிறேன். அந்த உற்சாகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வகுப்புகள் Google Meet மூலம் இணைய வழி வகுப்பாக நடக்கும் என்பதால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் கலந்து கொள்ளலாம். வகுப்புகள் முழுக்க தமிழிலேயே நடக்கும். ஆங்கிலம் தேவையில்லை. Laptop இருந்தால் உதவும். ஆனால், செல்பேசி இருந்தால் போதும். Coding அனுபவம் வேண்டாம்.
வாரம் ஒரு மணி நேர வகுப்பு. மொத்தம் 12 வாரங்கள். நவம்பர் மாத வகுப்புகளில் சேரும் முதல் 200 பேருக்கான கட்டணம் ரூ. 2,999 மட்டுமே. இந்த வகுப்புகளுக்குச் செலுத்தும் கட்டணம் என்பது ஒரு முறை கட்டணம் மட்டுமே.
சனி, ஞாயிறு எந்த வகுப்பில் சேர்ந்தாலும் தவற விடும் வகுப்புகளை உங்களுக்கு வசதியான நாட்களில் மாற்றி மாற்றிக் கலந்து கொள்ளலாம். வகுப்புகளில் கற்பிக்கப்படும் முக்கியக் குறிப்புகள் Learning Hub என்கிற தனி வலைத்தளம் மூலம் பகிரப்படும். WhatsApp மூலமும் என்னிடம் ஐயங்களைக் கேட்டுத் தெளியலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கும் வகுப்புகளிலும் கூடுதல் கட்டணமின்றி கலந்து கொள்ளலாம்.
அடுத்து இந்த வகுப்புகள் 2027 ஆண்டின் நடுப்பகுதியில் தான் நடத்த எண்ணியுள்ளேன். அப்போது கட்டணமும் கண்டிப்பாக உயரும்
ஆகவே, இன்றே இணைவீர்.
Joinaitribe dot com தளத்தில் கூடுதல் விவரங்கள் உள்ளன. இணைப்பு மறுமொழியில்.

























