SELVASINGH retweeted
ஆமா.. ஆமா.. பெரிய்ய இன்வெஸ்டர்தான்👌👌👌
`ஊழல் இல்லவே இல்லை..' - அடித்து பேசிய INVESTORS
Kovalam | Vetri Investors Meet | Tamil Nadu CM | Investment Summit
#NewsTamil24x7 #CMVijay
SELVASINGH retweeted
கழக இளைஞர் அணிச் செயலாளர் பிறந்தநாள் விழா!
கழக இளைஞர் அணிச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்கள், தனது பிறந்தநாளான 27.11.2026 வெள்ளிக்கிழமை அன்று, காலை 9.00 மணி முதல், இராஜாஅண்ணாமலைபுரம், க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள குறிஞ்சி இல்லத்தில், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்கிறார்.
#DMKYW #HBDUdhay
SELVASINGH retweeted
தவெக அரசு -
எல்லாவகையிலும் உண்மையே பேச வராத - உறுதிப்பாடு இல்லாத- நேர்மையற்ற அரசு.
இன்று மாலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், சர்ச்சைக்குரிய இடத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றுவோம் என பொய் சொல்லியிருக்கிறது. பொய் சொன்னவர் மதுரை கலெக்டர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர். நாளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர்தான் ஆஜராக நேரிடும்.
வரலாற்றில் பதிந்திருக்கிற We will face the Consequences - என்பது ஒரு அரசின் உறுதிப்பாடுமிக்க வரிகள். ஆனால் தவெக அரசு சொன்னது பொய். செய்தது கோழைத்தனமான செயல்.
'சர்ச்சைக்குரிய தூண் தீபத்தூண் இல்லை. நில அளவைக்கல்தான். உச்சநீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசின் முடிவை தெரிவிப்போம்' என்பதே ஒரு அரசின் உறுதிப்பாடாக இருக்க முடியும். அந்த உறுதிப்பாடு தவெக அரசின் எந்த எல்லையிலும் இல்லை.
கள்ளக்குறிச்சி கலெக்டர் செய்தி திசைதிருப்பலுக்காக
மதுரை கலெக்டரை கூண்டில் ஏற்றியிருக்கிறது தவெக.
நீதிமன்றத்தில் பொய் சொல்லிக்கொள்ளலாம் என்கிற தவெக அரசின் இதே உத்திதான், ஆபாச செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது கள்ளக்குறிச்சி கலெக்டர் புகாரே கொடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக சொன்னது.
மூன்று மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி கலெக்டர் கொடுத்த புகாரை முதலமைச்சர், தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் அத்தனை பேரும் கூட்டாக சேர்த்து மக்கள் மன்றத்தில் சொன்ன பொய் 'அப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை'என்று.
முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கான அரசாணையை மறைத்து வைத்து இப்போதுவரை வெளியிட மறுப்பதும் நேர்மையற்ற செயல். அந்த செயலையும் அதிகாரிகளை வைத்தே செய்யவைக்கிறார்கள்.
அதிமுக வழக்கு தொடராவிட்டால் விஎஸ் பாபு உடல் இன்னும் எப்படி ஊதிப் போயிருக்கும் என்பது இங்குள்ள மருத்துவர்களுக்கு தெரியாதா? பிற்பகல் 02:24க்கு இறந்தவரின் உடலா அது? கேக் கொடுக்கும் நிகழ்வு முடியும்வரை கொளத்தூர் வாக்காளர்களுக்கு சொன்ன பொய் அது.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஒட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என பொய் சொல்லி, அதற்கு ஆதாரமாக எடிட் செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். இப்போது மதுரை டிஎஸ்பி இறந்தவரின் மனைவியிடம் 3 லட்ச ரூபாய் தருவதாக பேரம் பேசியிருக்கிறார். இது காவல்துறை சொன்ன பொய்.
யூனிட் 47 ரூபாய் மின்சாரக் கொள்முதல், பாட்டிலுக்கு 20 ரூபாய் தொடங்கி, அண்டை மாநில முதல்வர்கள் சந்திப்பு, முதலீட்டாளர்கள் மாநாடு வரை தங்களது ஆட்சி நீட்டிப்பிற்காக, அரசியல் லாபத்துக்காக நீதிமன்றங்கள், மக்கள் மன்றங்கள், ஊடகம் என எல்லா தரப்பிலும் நேர்மையற்ற அணுகுமுறை, உறுதிப்பாடு இல்லாத, கொள்கை தேவையில்லாத இந்த அரசின் எல்லா செயல்பாடும் கேள்விக்குள்ளாக்க வேண்டியது. சந்தேகிக்கப்பட வேண்டியது.
அதிகாரிகளை பகடைக்காயாக்கி நேர்மையற்ற வழியில் எல்லாவற்றையும் அணுகும் இந்த அரசின் எந்த ஒரு முடிவுக்கு பின்னாலும் ஒருபோதும் கொள்கையும் லட்சியமும் இல்லை. இல்லவே இல்லை.
தொட்டதெல்லாம் பொய்.
தொட்டதற்கெல்லாம் பொய்.
தொட்டதே பொய்.
தொடாததும் பொய்.
இந்த அரசு யாரிடம் சொல்வது பொய்? யாரிடம் சொல்வது உண்மை ? என்று தெரியும் வரை ஒரு துளி Transparency இல்லாத, ஒரு அடி Accountability இல்லாத, தவெக அரசின் எந்தவொரு நிகழ்விற்கும் பாராட்டுபத்திரம் எழுத தயாராய் இல்லை.
SELVASINGH retweeted
Even a District Collector is not safe from the arrogance of a TVK MLA.. yet the Vijay regime chooses cover-up over accountability.
When a senior woman IAS officer is forced to lodge a formal complaint over inappropriate and unwarranted messages, shielding your own legislator instead of registering swift action exposes the hollowness of every "women's safety" punch dialogue.
If a sitting Collector has to fight for basic dignity and legal action against a ruling party MLA, what safety can ordinary women across Tamil Nadu expect under this #SofaModel government?
Stop protecting perpetrators in party colours. Arrest Arul Vignesh and let the law take its course.
SELVASINGH retweeted
திமுகவின் திட்டங்கள் ஆட்டோ பைலட் mode போல. அடுத்து வருபவர்கள் அதை தொடர வேண்டிய கட்டாயம் இருக்கும்.
பலர் திரும்பத் திரும்ப கூறும் ஒரு கருத்து...
59 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சியில் அதிக காலம் ஆட்சி புரிந்தது அண்ணா திமுக தானே...
அப்ப மாநிலத்தின் வளர்ச்சியில் அதன் பங்கு தானே மிக அதிகம் என்பது...
மேலோட்டமாக பார்த்தால் இந்த கருத்து சரி என்பது போல தெரியும்...
உண்மையில்,
திமுக கொண்டு வந்த நல்ல பல சமூக நீதித் திட்டங்களை அண்ணா திமுக தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது..
அந்தத் திட்டங்களை தொடராவிட்டால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையை திமுக ஏற்படுத்தி வைத்திருந்தது...
1980ல் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளுக்கு பொருளாதார அளவுகோலை கொண்டு வந்தார் எம்ஜிஆர்...
அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் எம்ஜிஆருக்கு சரியான பாடம் புகட்டினார்கள் மக்கள்...
அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்..
பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளவை அதிகரித்தார்...
எந்த காலத்திலும்
திமுக அமல் படுத்திய திட்டங்களை கை வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்..
எனவே அந்தத் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் அண்ணா திமுகவினர் அக்கறை காட்டினர்...
அதனால் தான் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சி அமோகமாக மாறியது...
ஆகவே இதற்கெல்லாம் மூல காரணம் திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள்...
சமூக நீதிப் பார்வை என்று சொன்னால் மிகையில்லை..
SELVASINGH retweeted
இணையற்ற இயக்கத்தின்
இனமானக் காவலர்
திராவிட பேரரசரின் வாழ்த்துகளுடன்..
நாளைய விடியலின் நம்பிக்கைச் சூரியன் இளைஞர் படையின் எழுச்சி நாயகன் இளம் தலைவரின் பிறந்தநாள்!
பொன்மன தலைவருக்கு
இளைஞரணி இதயங்கள்
புகழ் மாலை சூட்டிடும் வகையில்…
"உதயா அண்ணன் வாராரு'..
பாடல் வெளியீட்டு விழா!
26-11-2026
கலைஞர் அரங்கம்
காலை 9 மணிக்கு,
முன்னாள் நிதியமைச்சர் @TThenarasu MLA., அவர்கள் வெளியிடுகிறார்கள்!
எழுச்சியோடு வருக! வருக! Stay tuned.. 🔥
@mkstalin @Udhaystalin @dmk_youthwing
#இளம்தலைவர்
#உதயா_அண்ணன்_வாராரு
#HBDUdhayAnna
#UdhayaAnnanVaaraaru
SELVASINGH retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
SELVASINGH retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு நேர்ந்த கொடுமையை முதலில் flag பண்ணது கனிமொழி எம்.பி.அவர்கள்.
அதற்காக, நியாயம் கேட்ட அவர் மீதே குற்றச்சாட்டை திசைதிருப்பி அவரை மவுனமாக்க முயன்றவர் இவர்.
விஷத்திலேயே ஆலகால விஷம் இந்த சங்கி குமார். இது ஒரு நாள் விஜயையும் சுடும்.
SELVASINGH retweeted
A profound collective failure by the government to protect even its own District Collector.
More Power to you, ma'am.
SELVASINGH retweeted
இவர் தான் உண்மையான #சிங்கப்பெண் 🔥
போலியாக உருவாக்கப்பட்ட த.வெ.க அரசின் சிங்கப் பெண் படை, யாருக்கும் எந்த விதப் பாதுகாப்பையும் தர முடியாத நிலையில், ஒரு மாவட்டத்தின் பெண் ஆட்சியர் உண்மையான சிங்கப் பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அந்தத் தொகுதியின் கேடுகெட்ட த.வெ.க. எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொந்தரவுகள் செய்த விவகாரத்தில் ஒட்டுமொத்த tvk அரசு நிர்வாகமும் உண்மையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கே முயன்றது!
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று பதவி வெறியில் அமைச்சர்கள் வாய்கூசாமல் பொய் சொன்னார்கள். ஆட்சி நிர்வாகத்திற்குத் தலைமை ஏற்றிருக்கும் முதலமைச்சர் விஜய் வழக்கம்போல வாயை திறக்கவில்லை.
மந்திரிப் பதவிக்காக மானம்-ஈனம் இல்லாத கூட்டணித் தலைவரோ “கொடுத்த காசுக்கு மேலே கூவுறான்டா” என்கிற ரேஞ்சில், “எம்.எல்.ஏ பாவம்’‘ என்றனர்.எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்திலேயே அரசின் வழக்கறிஞர், “பெண் கலெக்டரிடமிருந்து அப்படி எந்தப் புகாரும் வரவில்லை” என்று விவகாரத்தை மூடி மறைக்கத் துணிந்தார்.
ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் கூட்டுச் சதி செய்வது போல செயல்பட்ட நிலையில், பெண் ஆட்சியரின் மன நிலை என்ன பாடுபட்டிருக்கும்? இன்னொரு மாவட்டத்தில் ஆட்சியராக உள்ள அவரது கணவரின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்!
உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். தம்பதியினருக்கே இந்த #தவெக அரசில் நியாயம் இல்லை. நீதி இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும், துணிந்து முடிவெடுத்து மாவட்ட எஸ்.பி.யிடம், பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ள செய்தியை இன்று @the_hindu நாளிதழ் துணிச்சலாக வெளியிட்டுள்ளது.
உயர்பொறுப்பில் உள்ளவர்கள் தொடங்கி, எந்த ஒரு பெண்ணுக்கும் பாதுகாப்பில்லாத த.வெ.க ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டர் புகார் அளித்திருப்பது அவரது பெரும் தைரியமிக்க போராட்ட உணர்வைக் காட்டுகிறது.
தொடக்கத்திலிருந்தே #திமுக மட்டுமே இந்த விவகாரத்திற்காகப் பொதுவெளியில் போராட்டம் நடத்தி குரல் கொடுத்தது. நியாயத்திற்குத் துணை நின்றது.
அண்ணன், தாய்மாமன் என்று சொன்னவர்கள் எல்லாம் குற்றவாளியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்த நிலையில், ‘அப்பா’ @mkstalin தான் தமிழ்நாட்டில் வாழும் பெண்களின் கண்ணியத்திற்கும் பாதுகாப்புக்கும் அரணாக நிற்கிறார்🙏🏾
இனி இந்த அரசிடமிருந்து அந்த மாவட்ட ஆட்சியர் அவர்களை பாதுகாப்பது தமிழ்நாடு மக்களின் பொறுப்பு. இவ்வளவு பெரும் அரசியல் அழுத்தத்திற்கு பிறகும் தனி ஒரு ஆளாக தைரியமாக உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ள, பாரதியின் உண்மையானப் புதுமைப் பெண்ணான இவரைத் தமிழ்நாடு என்றென்றும் கொண்டாடும் !
#TVKFailsTN #WomensSafety
SELVASINGH retweeted
இந்த அல்ற சில்ற நாயி தானே அந்த பொம்பள பொறுக்கி தவெக எம்.எல்.ஏ-வை பாவம் என்று சொன்ன அயோக்கிய நாய்??
அடேய்ய் பலபட்ற மாணிக்கம்!
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். ணோவ் @manickamtagore 😂😂😂
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
42
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சி #MurasoliMaran
உலக வர்த்தக அமைப்பின் (WTO) மாநாடுகளில் இந்தியாவின் தன்மானத்தையும், வளரும் நாடுகளின் உரிமையையும் அழுத்தமாக நிலைநாட்டி, திராவிட இயக்கத்தின் மனசாட்சியாக உலக அரங்கில் ஒலித்தவர் முரசொலி மாறன் அவர்கள்.
தந்தை பெரியாரின் கேள்வித் தெளிவு, பேரறிஞர் அண்ணாவின் நடைமுறைத் திறன், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நிதானம் ஆகிய மூன்றையும் ஒரே புள்ளியில் இணைத்து, நவீன இந்திய பொருளாதார சீர்திருத்தத்திற்கு வழிகாட்டிய அந்த மாபெரும் ஆளுமையின் நினைவு நாள் இன்று.
அவரின் பன்முக ஆளுமையையும் பொருளாதாரத் தொலைநோக்குப் பார்வையையும் நினைவுகூரும் வகையில், கடந்த ஆண்டு முரசொலி நாளிதழில் என்னுடைய இணையர் @jeyankaruna எழுதிய “வான் கொண்ட ஆளுமை முரசொலி மாறன்!” என்ற கட்டுரையை அவரின் நினைவு நாளான இன்று மீண்டும் பகிர்கிறேன்.
அந்த மாபெரும் ஆளுமைக்கு நினைவு நாள் வணக்கங்கள்.
32
SELVASINGH retweeted
உலக வர்த்தக அமைப்பின் (WTO) மாநாடுகளில் இந்தியாவின் தன்மானத்தையும், வளரும் நாடுகளின் உரிமையையும் அழுத்தமாக நிலைநாட்டி, திராவிட இயக்கத்தின் மனசாட்சியாக உலக அரங்கில் ஒலித்தவர் முரசொலி மாறன் அவர்கள்.
தந்தை பெரியாரின் கேள்வித் தெளிவு, பேரறிஞர் அண்ணாவின் நடைமுறைத் திறன், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நிதானம் ஆகிய மூன்றையும் ஒரே புள்ளியில் இணைத்து, நவீன இந்திய பொருளாதார சீர்திருத்தத்திற்கு வழிகாட்டிய அந்த மாபெரும் ஆளுமையின் நினைவு நாள் இன்று.
அவரின் பன்முக ஆளுமையையும் பொருளாதாரத் தொலைநோக்குப் பார்வையையும் நினைவுகூரும் வகையில், கடந்த ஆண்டு முரசொலி நாளிதழில் என்னுடைய இணையர் @jeyankaruna எழுதிய “வான் கொண்ட ஆளுமை முரசொலி மாறன்!” என்ற கட்டுரையை அவரின் நினைவு நாளான இன்று மீண்டும் பகிர்கிறேன்.
அந்த மாபெரும் ஆளுமைக்கு நினைவு நாள் வணக்கங்கள்.
SELVASINGH retweeted
நாள் - 3
#NoTransparency
#NoAccountability
தான் வகிக்கும் 'முதலமைச்சரின் ஆலோசகர்' என்ற பொறுப்பிற்குண்டான அரசாணையை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிற,
எவர் கேட்டாலும் வெளியிட மறுக்கிற ஒருவர், அப்படி என்ன ஆலோசனைகளை முதலமைச்சருக்கு சொல்லிவிட முடியும்?
அரசாணை என்பது தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தரவேண்டிய- பகிர வேண்டிய சட்டபூர்வ ஆவணம் என்பதே தெரியாத ஒருவர், எப்படி முதலமைச்சருக்கு ஆலோசகராக இருக்க முடியும்?
ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி இருவரின் கல்வி, அரசியல், வழக்குப் பிண்ணனி ஏதோ ஒன்றின் காரணமாகவே நியமன ஆணைகளை வெளியிட தயங்குகிறார்கள் என்று தோன்றுகிறது.
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும்.
அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா?
சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்?
அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது?
துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
SELVASINGH retweeted
திராவிடத்தின் குரலாய் டெல்லியில் கம்பீரமாய் கர்ஜித்தவர்!
தலைவர் கலைஞரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக, திராவிட இயக்கத்தின் கொள்கை முரசாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர் மேனாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த் திரு. #முரசொலி_மாறன் அவர்கள்!
மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக 2001 தோஹா உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில், வளர்ந்த நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், வளரும் நாடுகளின் உரிமைகளுக்காகவும் விவசாயிகளின் நலன்களுக்காகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்!
கொள்கையில் உறுதி! கருத்தில் தெளிவு! செயல்பாட்டில் பேராற்றல்!
#முத்தமிழறிஞர் கலைஞரின் மனசாட்சியாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம்! 🖤♥️
#MurasoliMaran #DMK
SELVASINGH retweeted
திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள்:
தலைவர் கலைஞரால் ஆளாக்கப்பட்டு, அவரது அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்றவர் முரசொலி மாறன் அவர்கள்.
கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் தலைநகர் டெல்லியில் கழகத்தின் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டு அவரது மனசாட்சி என்று பெயரெடுத்தவர். ஒன்றிய அமைச்சராக இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த அறிவுக்கூர்மைக்குச் சொந்தக்காரர்.
அத்தானாக என் மேல் அன்பு காட்டி, என் மிசா சிறைவாசத்தின்போதும் உடனிருந்து, அரசியல் பயணத்திலும் ஆலோசனைகளைக் கூறி நெறிப்படுத்தியவர் மாறன் அவர்கள்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்க நாம் அமைத்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், மாறன் அவர்கள் பேருழைப்பைச் செலுத்தி எழுதிய மாநில சுயாட்சி எனும் நூலை நாம் அனைவரும் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.
தாம் ஆற்றிய உரைகளாலும், இயற்றிய நூல்களாலும், தீட்டிய வரலாறுகளாலும், இறுதி வரை இறுகப் பற்றிக் கொண்ட கொள்கைகளாலும் நம் இயக்கத்தின் அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் பங்களிப்புகளை நன்றியோடு இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
SELVASINGH retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020 @kuratpdk
SELVASINGH retweeted
தீர்ப்பை மீறி ஏற்ற அனுமதிக்கவில்ல திமுக அரசு..
பார்ப்போம் முதுகெலும்பு இருக்காணு?
இல்ல , நமக்குத்தான் நயினாரை பார்த்தாவே தொடை நடுங்கிடுமே ..
ரொம்பப் பாவம்..

































