25 வருசம் முன்ன நடிக்கறதை நிப்பாட்டின நடிகை 46 கோடி ரூபாய் ஏமாற அளவு சொத்து வைச்சுருக்கு
ஏலக்காய் வியாபாரி பொண்டாட்டி யூடியூப்ல பந்தா காட்டி 1 கோடி ரூபாய் நகையை களவு குடுக்குது..
வேலை போனா, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத நான் இவங்களை ட்ரோல் பண்ணி மீம் போட்டு இருக்கேன் 🥲
ஆயுதபூஜை விஜயதசமிக்கு பெரியார் அறிவுலகத்துக்கு லீவு விட்ட மாதிரி, நம்ம ஏன் மழை சீசன் முடியற வரை 3 மாசத்துக்கு தீபாவளி கிருஸ்துமஸ் லீவுன்னு சொல்லி வானிலை ஆய்வு மையத்தை மூடி வைக்க கூடாது..?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
செய்தி : ஈக்வடார் நாட்டில் உள்ள தேவாலயத்தில் வழிபாட்டு நிகழ்வின்போது சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் உயிரிழப்பு
ஆன்மீக வியாபாரி ~
கடவுள் நம்மளை எல்லாம் காப்பாத்துவாரு...
சராசரி மனிதன் ~ போட்டு தள்ளுனதே அந்த கடவுள் தான்.. போவியா..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
போனஸ்லாம் வேண்டாங்க.. சம்பளத்த ஒழுங்கா கொடுத்தாலே போதும்ங்க..
சினிமாவை விட்டு போனாலும் தாழ்வு மனப்பான்மை மட்டும் இன்னும் விட்டு போகல..
என்ன ஒரு ஈனப்பிறவி !
எத்தன எதிர்ப்பு வேல டா யப்பா 😤
1. Fake Red allert :
அப்பதான் யாரும் #Jailer2 யாரும் Book பண்ண மாட்டாங்க.
2. No Posters/Banners :
#Jailer2 கு மட்டும் Chennai Theatres ல போஸ்டர்ஸ்/பேனர்கள் வைக்க அனுமதி இல்லை, படம் ஓடரது தெரிய கூடாதாம்..
3. தீடிர் Mafia Interviews :
விஜயோட சம்பளம் ரஜினிய விட அதிகம் தெரியுமா?? யார் குடுத்தா னு கேட்டா விஜயே தான் Co producer னு தெரிஞ்சுரும், ஆனா கேக்க மாட்டாங்க.
Most Insecured Human, the world ever witnessed...
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
புரட்டாசி முடிஞ்சப்ப கறி எடுக்கலையா'னு கேட்டதுக்கு ஆயுதபூஜை முடியட்டும்'ன
ஆயுதபூஜை முடிஞ்சபிறகு கேட்டா
விலை உயர்வால் மீண்டும் விரதம்'ங்கிற என்ன பழக்கம்னா இது...
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
என்னைய எங்கேயோ பார்த்திருக்கேன்..
எங்கேயோ பார்த்திருக்கேன்னு சொன்னியே இன்னுமா என்னை தெரியல..??!!
#ஜெயிலர்2 #Jailer2
#SuperDeluxe
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
நேத்து நைட்டு இரண்டு வாழைமரம் நகர்ந்து வந்துச்சி!! மிரண்டு போய் விலக்கி பாத்தா உள்ள TVS_50!
படு_பயங்கர_பூஜைடா_சாமி#😂😂😂
கே டிவி:
அப்புறம் என்னப்பா.. இந்த வீக்எண்டு நமோ நாராயணாவோட 'நாடோடிகள்' படத்தை போட்டு வியூஸ் அள்ளிற வேண்டியதானே..?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
சாம்பார் சாதத்துக்கு தொட்டுக்க பொரி யை வச்சு கொடுத்து இருக்காங்க சார், வீட்ல
தான் ஒரு பெண் அரசியல்வாதின்னு காட்டிக்கறாங்களாம்..
#அரசியல்POST | நாம் தமிழர் கார்த்திகா கைதுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம்
#SunNews | #KarthikaNTK | #TNPolice | #Jothimani
ஏன்டா ஆயுதபூஜை விஜயதசமிக்காக பெரியார் அறிவுலகத்தை மூடுனீங்க..?
புத்தகத்துக்கு எல்லாம் மஞ்சள் குங்குமம் வைச்சு பூஜை பண்ணா, படிக்கறவங்களுக்கு நல்லா பகுத்தறிவு வளரும்னு பக்கத்து ஊரு கவுண்டரு ஒருத்தரு சொன்னாருங்னா..
கொடநாடு வாசல்ல முட்டி போட்டதை பெருமையா நினைச்சுட்டு இருக்கானோன்னு சந்தேகப்பட்டேன்.. வீடியோவை டெலிட் பண்ணது மூலமா அது அசிங்கம்னாவது அந்த அணில் சைஸ் மூளைக்கு கூட புரிஞ்சுருக்குன்னு காட்டிட்டான் பாரேன்..
கிரடிட் கார்டை வாங்கி ஒரு minimum அமௌன்ட் swipe பண்ணி செக் பண்ணி கையில பத்திரமா வைச்சுட்டு அப்புறமா தான் பெட்ரோல் போடவே செய்யனும்..
வந்தான்.. டீசல் போட்டான்.. போயிட்டான்.. நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரில் வந்து 35 லிட்டர் டீசல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற மர்ம நபர்.. சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை..
#Nellai | #PetrolPumps | #Diesel | #CCTV | #PolimerNews
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
இவர்கள் ரசிகர்கள் அல்லர்.. ரிச்சி கேர்ள்ஸ், ரிச்சி பாய்ஸ்!
நீண்ட அனுபவமிக்க பத்திர்கையாளர்/ ஒளிப்படக் கலைஞர் ஒருவரின் தெளிவான பார்வை:
..............................
கொட்டும் மழையில் நனைந்தபடி விஜய்க்காகப் பாட்டுப் பாடும் பெண்களின் வீடியோவை வைத்து, "தமிழ்நாடு கெட்டுப் போச்சு, இளைஞர்கள் பாழாயிட்டாங்க" என்று பலரும் புலம்புகிறார்கள்.
உண்மை அதுவல்ல..
இது அப்பாவி இளைஞர்களின் தன்னெழுச்சியான அன்போ அல்லது தீவிர ரசிகர் கூட்டமோ கிடையாது.
'சதுரங்க வேட்டை' பாணியில் மக்களின் உளவியலை வைத்து ஆடப்படும் ஒரு மாபெரும் நவீன பிம்ப அரசியல் மோசடி!
சினிமாவில் ஒரு சீனில் கூட்டம் தேவைப்பட்டால் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை (துணை நடிகர்களை) கூலிக்கு வைத்து 'செட்டிங்' செய்வார்கள்.
அதே சினிமா ஃபார்முலாவைத்தான் இப்போது நிஜ அரசியலிலும் அப்பட்டமாகக் களமிறக்கியுள்ளனர்.
விஜய் ஒரு சினிமா பிரபலம் என்பதால், சில சினிமா இயக்குநர்கள், பி.ஆர். ஏஜென்சிகள் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் குழுக்கள் இதில் தீவிரமாக இயங்குகின்றன.
முறையான கேமரா ஆங்கிள், சினிமா லைட்டிங், கூலிக்கு ஆட்கள், முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நடிப்பு... எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை!
கொட்டும் மழையில் நின்று உருகி உருகிப் பாடுவது வரை எல்லாமே கூலிக்கு விற்கப்பட்ட நடிப்பு மட்டுமே.
கொஞ்சம் நெஞ்சில் கைவைத்து யோசித்துப் பாருங்கள்... எந்தவொரு சுயமரியாதையுள்ள தாய், தகப்பனாவது தன் மகளை இப்படி நடுரோட்டில் மழையில் நனையவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா?
இப்படி போலியாக 'செட்டப்' செய்து எடுக்கப்படும் காட்சிகளை, தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி ரீல்ஸ்களாகவும் ஷார்ட்ஸ்களாகவும் சமூக வலைதளங்களில் கொட்டுகிறார்கள்.
இதை உண்மை என்று நம்பும் நம் வீட்டு அப்பாவிப் பெண்களும், பள்ளி-கல்லூரிச் சிறுவர்களும் எளிதாக உளவியல் வலையில் சிக்குகிறார்கள்.
"நாமும் இப்படிச் செய்தால் ரீல்ஸில் வைரலாகலாம், இப்படித்தான் தலைவரைக் கொண்டாட வேண்டும்" என்கிற மாயையில் அவர்கள் உந்தப்படுகிறார்கள்.
இது ஒரு ஆபத்தான நச்சுச் சுழற்சி (Toxic Cycle); நிஜமான இளைய தலைமுறையையும் அதே தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது.
அரசியல் என்பது பொதுநலக் கொள்கை, தியாகம் மற்றும் மக்கள் சேவை சார்ந்தது.
ஆனால், வெறும் சினிமா கவர்ச்சியையும் துணை நடிகைகளையும் வைத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள்.
நம் பிள்ளைகளின் வெள்ளந்தியான உணர்ச்சியையும், எதிர்காலத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்த 'ஸ்கேம்' உடனே அம்பலப்படுத்தப்பட வேண்டும்!
பெற்றோர்களே, இளைஞர்களே, விழித்துக் கொள்ளுங்கள்! உங்கள் கைபேசித் திரைகளில் மின்னுவதெல்லாம் உண்மை அன்பல்ல; காசுக்கு விற்கப்பட்ட காட்சிப் பிழை!
கண் முன்னே காட்டப்படும் போலி ரீல்ஸ்களைப் புறக்கணியுங்கள்; பிம்ப அரசியலின் பின்னால் இருக்கும் ஆபத்தான நிஜத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!
- சோமு































