ஆனந்த் பிரேம் retweeted
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு!
சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?
பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது.
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது.
இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது?
முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?
த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே!
#TVKfails
ஆனந்த் பிரேம் retweeted
"Bhakti in religion may be a road to the salvation of the soul. But in politics, Bhakti or hero-worship is a sure road to degradation and to eventual dictatorship." - Dr. B. R. Ambedkar, in his last speech to the Constituent Assembly of India.
நன்றி: @vijaytelevision
#TVK #TVKVijay
ஆனந்த் பிரேம் retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
ஆனந்த் பிரேம் retweeted
திமுக ஆட்சியில் நீண்ட நாள் ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை என எப்போதும் போல பொய்யான தகவலை சொல்ல வேண்டாம் மின்துறை அமைச்சர் Collectionகுமார், Sorry, CTR நிர்மல் குமார் அவர்களே, ஒரு நாளாவது உண்மை பேசுங்கள்..
நடைமுறையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்சார கொள்முதலில் நீண்ட கால கொள்முதல் / நடுத்தர கால கொள்முதல் மொத்தம் 6240 MW.. அதில் 2021-2026ல் தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட நீண்ட கால கொள்முதல் / நடுத்தர கால கொள்முதல் 2825 MW..
தெரியாவிட்டால், மின்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்..
ஆனந்த் பிரேம் retweeted
இது பட்ஜெட் அல்ல - இவனுக ரீல்ஸ் போட நிறைய கண்டட் வேண்டும் எனவே எல்லா மக்களையும் கவர் செய்து ஒன்று விடாம படிச்சுட்டு இருக்கானுக.. 1 , 2 லட்சம் செலவுக்கு கூட பட்ஜெடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.
காளான் உற்பத்திக் கூடங்கள் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு. அதாவது ஒரு உற்பத்தி கூடத்திற்கு 1 லட்சம்.
இதுக்கு எதுக்கு நீ படிச்சுட்டு இருக்க மேன்.
மிளகாய், கொத்தமல்லி சாகுபடிக்கு 50 லட்சம் ஒதுக்கீடு. மிளகாய் மட்டும் தமிழகத்தில் 30,600 மெட்ரிக் டன்.. சுமார் 60,000 ஏக்கருக்கு சாகுபடியாகும் மிளகாய் உற்பத்தியில் சுமார் 52,000 விவசாயிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இதுக்கு 50 லட்சம் ஒதுக்கீட்டு அலம்பல பாரு... விளம்பரம்...
சிறு பால்பண்ணை அமைக்க 4 கோடி ஒதுக்கீடு -
இந்த காச வச்சு 10 பண்ணை கூட போட முடியாது. TVK ரீல்ஸ் போடுவதற்கு கண்டண்ட் கொடுக்கிறார் போல.
வேளாண்மைப் பொறியியல் விரிவாக்கம் மற்றும் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் 4 கோடி ஒதுக்கீடு. இந்த 4 கோடி வச்சு ஒரு கிளாஸ் ரூம் 8 மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கட்ட முடியுமா? நான் கேட்கிறேன் இது என்ன நிதினு இப்போ படிச்சுட்டு இருக்கார் இவர்!
எல்லாருக்கும் அறிவிப்பு கொடுத்தாச்சுப்பா... இப்போ பாருங்க நெக்ஸ்ட் ரீல்ஸ் பறக்கும்...
ஆனந்த் பிரேம் retweeted
இந்த போட்டோல தவெக மாவட்டச் செயலாளருக்கு சால்வை அணிவிப்பவர் நேற்றுவரை திமுகவில் நாகர்கோவில் 45வது வட்டச் செயலாளர்.. நேற்று தவெகவில் இணைந்துவிட்டார்.. சென்ற மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் தேர்தலில் சீட் பெற்று தோல்வி. இந்த தேர்தலில் நாகர்கோவில் தொகுதி வேட்பாளரை வெல்ல வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கழக கொள்கைகள் பற்றிய எந்தவிதமான புரிதலும் இல்லாத இவர்களை போன்றவர்களுக்குதான் பதவிகள் கொடுக்கப்படுகின்றன.. கைக்காசை போட்டு செலவளிக்கும் பலரை கழகம் அங்கீகரிப்பதேயில்லை.. குறிப்பாக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தம்பி @ErAnandPrem எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் கழகத்துக்காக வேலை செய்பவர்..அவர் போன்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதேயில்லை என்பதுதான் சோகம் @arivalayam @mkstalin @Udhaystalin @SAustinDMK @MaheshRDMK
ஆனந்த் பிரேம் retweeted
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
ஆனந்த் பிரேம் retweeted
A man who emotionally torments the wife who stood by him for 27 years and gave him two children, then runs behind his side chick, is not a hero; he is a shameless women abuser.
A woman disrespecting, wife abusing Vijay walking into a Women’s Day event to unleash verbal diarrhoea about
“respecting women” is the cruelest joke!
#AbuserVijay @actorvijay @TVKVijayHQ
ஆனந்த் பிரேம் retweeted
எப்பா... எப்பா...
அடினா அடி அப்படி ஒரு அடி..🥭க்கு🤣
இந்த காணொளி பாத்துட்டு 10 RT ஆவது பண்ண முடியலன்னு வருத்தப்பட்டால் நிர்வாகம் பொறுப்பில்லை!👇💯🔥
ஆனந்த் பிரேம் retweeted
முதலமைச்சராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்.
இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்.
ஆனந்த் பிரேம் retweeted
Replying to @Tech_SuperStar






















