வடகிழக்குப் பருவமழை பெய்வதற்கு முன்பு நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கழிவு நீர் ஓடைகளில் அடைக்கப்பட்டுள்ள மண்ணை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டுமென்று மாநகராட்சி ஆணையருக்கு ஆஸ்டின் MLA கோரிக்கை
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் வரும் 15ம் தியதி பெய்ய இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே கடந்த 1 வாரத்திற்கு முன்பு பெய்த பருவமழையில் ஒழுகினசேரி, கோட்டார், சவேரியார் கோவில் சந்திப்பு, வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம், செட்டிகுளம், குளத்தூர் பகுதி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த பருவமழையால் மேற்படி சாலைகளில் இரண்டு பக்கமும் உள்ள கழிவு நீர் ஓடைகளில் மண் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாலை ஓரங்களிலும், தெருக்களிலும், வீடுகளுக்குள்ளும், வணிக நிறுவனங்களிலும் தண்ணீர் புகுந்து தேங்கிய காரணத்தினால் பல தொற்று நோய்களால் பொது மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எனவே வடகிழக்குப் பருவமழை வருவதற்கு முன்பு பொது மக்கள் பாதிக்காதவாறு நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளிலும், தெருக்களிலும் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் செல்லாதவாறு அனைத்து கழிவு நீர் ஓடைகளிலும் அடைக்கப்பட்டுள்ள மண்ணை போர்க்கால அடிப்படையில் அகற்றி ரோட்டின் ஓரங்களில் வைக்காமல் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மண்ணை அகற்றிட வேண்டும் என நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@NAGERCOIL_CORP
#Saustin
#nagercoilconstituency
#nagercoilmunicipalcorporation
#dmknagercoil
#NagercoilCorporation
S Austin MLA retweeted
தவெக வேட்பாளர் சத்யபாமா மீது வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் புகார் அளித்தார்.
தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேட்டில் தொகுதி அமைச்சருக்கும் முதலமைச்சர் அலுவலகத்திற்கும் தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
டெண்டர் முறைகேடு என்ற செய்தி வெளிவந்தவுடன் நேற்று அவசர அவசரமாக தாம்பரம் ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு அனுப்பப்பட்டும், மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டும், இரண்டு அதிகாரிகள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினமே (15/9/26)நகராட்சி நிர்வாக ஆணையருக்கு இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினமே அரசு அவசர அவசரமாக செய்தி குறிப்பு ஒன்றை (எண் 673) வெளியிட்டுள்ளது.
அதில் ஏற்கனவே மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 14/7/2026 அன்று இப்பணி தொடர்பாக பொருள் வைக்கப்பட்டு 23/7/2026 அதற்கான டெண்டர் விடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும், மறுநாள் 24/7/2026 அன்று ஒரு தனியார் நிறுவனம் CSR நிதியில் மேற்படி இரண்டு பணிகளையும் செய்வதற்கு ஒப்புதல் கடிதம் வழங்கியதாகவும், அதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த அனுமதி வழங்காத நிலையில் நான்கு நாட்கள் கழித்து 29/7/2026 அப்பணிகள் முடிக்கப்பட்டு அமைச்சரால் திறக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி குறிப்பு மக்களை முட்டாளாக்க கூடிய வகையில் கேலிக்கூத்தாகவே உள்ளது
ஏற்கனவே 15/9/2026 அன்று இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை வழங்க நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்ட நிலையில், அதே தினத்திலேயே விசாரணை அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவருக்கு வழிகாட்டும் விதமாக அரசின் செய்தி குறிப்பு அமைந்துள்ளது.
யாரை காப்பாற்றுவதற்கு இதுபோன்ற செய்தி குறிப்பை விசாரணை தொடங்காத நிலையில் அரசு வெளியிட்டுள்ளது?
CSR நிதியிலேயே இப்பணி செய்வதாக இருந்தாலும் முழு பணத்தையும் ஒரு நிறுவனம் செலவு செய்து ஒரு திட்டத்தை முடித்த பின்பு, மீண்டும் அதற்கான டெண்டரை வெளியிட்டு அதன் மூலம் விடுவிக்ககூடிய ரூபாய் 45 லட்சம் யாருக்கு செல்கிறது??
இதில் தான் இந்த ஒப்பந்த முறைகேட்டில் ஊழல் நடைபெற்றதாக தெரிகிறது.
இந்த லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்ட தொகுதி அமைச்சருக்கும் முதலமைச்சர் அலுவலகத்திற்கும் தொடர்பு இருக்குமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அமைச்சரையும் முதலமைச்சரையும் காப்பாற்றுவதற்காக அவசர அவசரமாக அரசு இந்த செய்தியை வெளியிட்டும் இரண்டு அதிகாரிகளை பலிகாடாக்கியும் இந்த ஊழல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முயற்சிக்கிறது.
முதலமைச்சர் அவர்களே “*தொட்டால் விடமாட்டேன்-தொடவும் விடமாட்டேன்*,”என்ற உங்கள் டயலாக் மக்களை ஏமாற்ற சொல்லப்பட்ட டயலாக் தானா??
#tamabaramcorporation
#corrupttvk
#tndipr
#tambaramcorporationcommissioner
#tenderirregularities
#tenderscam
’தொட்டால் விடமாட்டேன் - தொடவும் விட மாட்டேன் - டேபிள் மேல ஃபைல்ஸ் வச்சு இருக்கேன்’ என்று வண்டி வண்டியாக Reels Dialog பேசி Scene ஓட்டிய டம்மி முதலமைச்சரின் ஆட்சியில், அவரது துறையிலேயே, பணி முடிந்த பிறகு டெண்டர் விடுவது எனும் அரியவகை ஊழல் அம்பலமாகி இருக்கிறது.
தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பிலான பணிகளில் டெண்டர் முறைகேடு நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Powder அமைச்சர் சரத்குமார் தாம்பரத்தில் கடந்த ஜுலை மாதமே திறந்து வைத்த Ashoka Stupa சிலைக்கு ஆகஸ்ட் மாதத்தில் டென்டர் விட்டு சாதனை படைத்திருக்கிறது தூய ஆட்சி.
அதுமட்டுமின்றி, சித்தலபாக்கம் ஏரியில் Save Water சிலையை ஆகஸ்ட் 10-ஆம் தேதி Powder அமைச்சர் திறந்து வைத்துள்ளார். ஆனால், அந்தப் பணிக்கான டென்டர் விண்ணப்பம் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை காலக்கெடு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாமல் திணறுகிறது - இன்னொரு பக்கம் முதலமைச்சரின் கீழ் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஊழலில் திளைக்கிறது. இது தான் இவர்கள் சொன்ன மாற்றமா?
தன்னுடைய துறைகளையே சரியாக நிர்வகிக்க வக்கற்ற முதலமைச்சர், தமிழ்நாட்டை எப்படி வளர்த்தெடுப்பார்?
முதலமைச்சரின் துறையில் நடந்துள்ள இந்த ஊழல் முறைகேடு தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை உடனே தொடங்க வேண்டும்.
இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில், ஆளுங்கட்சியின் இந்த ஊழலுக்கு எதிராக தி.மு.கழகம் களத்தில் இறங்கி போராடும்.
#dmk
#tambaram
#tambaramcorporation
சட்டமன்ற கூட்ட நாட்களில் தினமும் காலை முதல் ஒரு மணி நேரம் வினா விடைகளுக்கான நேரம் ஒதுக்கப்படும். இந்நேரத்தில் உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை வினாக்கள் மூலம் அமைச்சர்களிடம் பதிலை பெறுவார்கள். ஆனால் இதுவரை சட்டமன்ற கூட்டத்தொடரில் வினா விடைக்கான நேரம் ஒதுக்கப்படவில்லை.
S Austin MLA retweeted
என்னடா இது ஆட்சிக்கு வந்து 55 நாளுக்கு உள்ள பெரிய ,பெரிய மெகா ஊழல் எல்லாம் வெளிய வருது .,
அடேய் #தூயசக்தி 😜😜🫵
17 ஆவது சட்டமன்ற கூடுகையின் இரண்டாம் நாளான இன்று சட்டசபையில் நான் பேசிய உரையின் சில குறிப்புகள்
@sunnews
#whysilentcm
#WhySilentCM
#TNAssembly
#tnassembly
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டாமல்,அமைதி காத்து வரும் ஆளும் அரசை கண்டித்து இன்று கருப்பு பேட்ச் அணிந்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க உள்ளோம்.
#WhySilentCM?
#TNAssembly
S Austin MLA retweeted
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
கழகத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியோடு, கடந்த ஐந்து ஆண்டு காலமாக திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்த நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 22-5-2026 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ஆஸ்டின் MLA அவர்கள், வாக்காளப் பெருமக்களுக்கு, நன்றி அறிவிப்பு பயண விவரம் (21-05-2026)
#dmk
#nagercoilstandswithaustin
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ஆஸ்டின் MLA அவர்கள், வாக்காளப் பெருமக்களுக்கு, நன்றி அறிவிப்பு பயண விவரம் (20-05-2026)
#dmk
#nagercoilstandswithaustin
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ஆஸ்டின் MLA அவர்கள், வாக்காளப் பெருமக்களுக்கு, நன்றி அறிவிப்பு பயண விவரம் (19-05-2026)
#dmk
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ஆஸ்டின் MLA அவர்கள், வாக்காளப் பெருமக்களுக்கு, நன்றி அறிவிப்பு பயண விவரம் (18-05-2026)
#dmk
#nagercoilstandswithaustin
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா R ராதா கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நன்றி அறிவித்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினேன்
#dmk
#nagercoilstandswithaustin
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ஆஸ்டின் MLA அவர்கள், வாக்காளப் பெருமக்களுக்கு, நன்றி அறிவிப்பு பயண விவரம் (17-05-2026) ஞாயிற்றுக்கிழமை
#dmk
#nagercoilstandswithaustin
இன்று கழக அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள் தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம்.
நாகர்கோயில் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்ட காணொளி மூலமாக கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் திரு. @nrelango_dmk அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட போது..

























