
வாழ்வே வரலாறு | எந்த கருத்துக்கும் எதிர் கருத்து இருக்கும் | Ex. Deputy Editor @news7tamil, @polimernews, @dinamalarweb
Porunai
Joined November 2013
- Tweets12.7K
- Following1.3K
- Followers4.1K
- Likes5.5K
போலி பிம்பங்களை உருவாக்கும் எதிர்க்கட்சிகள்…!
தவெக ஆட்சியில் குற்ற நிகழ்வுகள் அதிகம் போல தெரிவது ஏன்…?
முதலமைச்சர் விஜய்க்கு எதிராக பல குரல்கள்… ஒரே நோக்கம்…!
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியா…?
ரகுபதி பேச்சின் பின்னணி என்ன…?
தலைமை மீதான கடும் அதிருப்தியில் திமுக உறுப்பினர்கள்…!
திமுகவின் அதிருப்தி: திருப்தியாக்க ரகுபதி பேட்டி…!
———————
youtu.be/fDN7W9Hh0Ho?si=VqN9…
2
234
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியா…?
ரகுபதி பேச்சின் பின்னணி என்ன…?
தலைமை மீதான கடும் அதிருப்தியில் திமுக உறுப்பினர்கள்…!
திமுகவின் அதிருப்தி: திருப்தியாக்க ரகுபதி பேட்டி…!
———————
youtu.be/fDN7W9Hh0Ho?si=VqN9…
திமுக கம்பெனியின் புத்தி…!
————-
பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி!
சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி.
அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது.
நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
முகூர்த்த நேரத்துடன் முரசொலி…!
முதலமைச்சர் விஜயால் (தடு)மாறும் அறிவாலயம்…!
இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது: திருந்துமா திமுக…?
——————————
அடுத்தவர்களின் நம்பிக்கைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாதவர்கள் திமுகவினர்.
கிறிஸ்துமஸ், ரமலான் நோன்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் கோபாலபுர வம்சத்தினர் இந்து சமய சகோதரர்களின் நிகழ்வுகளில் வெளிப்படையாக பங்கேற்பதில்லை.
போலிக் கொள்கைகளை பேசி, பிறரை ஏளனம் செய்த மு. கருணாநிதி பின்பற்றிய உண்மைக் கொள்கைகளை நன்றாக அறிந்தவர் பலர்.
“கோயில் வாசலிலேயே குடியிருக்க வேண்டும்” “இறைவனின் புகழ் பாக்கள் நாள்தோறும் கேட்க வேண்டும்” என்றே கோபாலபுரத்தில் கோவில் வாசலிலேயே இல்லத்தைத் தேடி வாங்கினார் மு.கருணாநிதி.
இந்தியாவிலேயே யாத்திரைகளுக்கு முன்னோடியாக வேல் யாத்திரையை 1980களிலேயே திருச்செந்தூர் நோக்கி நடத்தியவர் மு.கருணாநிதி. ஜோதிடர்களின் ஆலோசனையின்பேரிலேயே முத்துவேலரின் மகன் வேலவன் கோவில் நோக்கி பாத யாத்திரையாக சென்றார் என்று அன்றே பலரால் கூறப்பட்டது.
ஜோதிடர்களின் அறிவுறுத்தலாலேயே மஞ்சள் துண்டு, குறிப்பிட்ட நிறத்திலான பட்டை கொண்ட கைக்கடிகாரம் அணிந்தவர் மு.கருணாநிதி என்ற கருத்துகள் உண்டு.
அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்காமல் தவிர்க்கப்பட்டதும், அசைவ உணவிற்கு அனுமதி இல்லை என்பதற்குமான காரணங்களும் அதுவே.
மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவிற்கு சாந்தா என்ற பெயரை வைப்பதாகக் கூறி தமிழர்களை ஏமாற்றினார் மு.க. ஆனால் அந்த பெயரை அவர் பயன்படுத்தவேயில்லை.
செய்த பாவங்களுக்கு பரிகாரமாக கோவில் குளங்களை தூர்வார வேண்டும் என ஜோதிடர்கள் ஆலோசனையின் பேரில், 2021 தேர்தலுக்கு முன்பு கோவில் குளங்களை தூர்வாரியவர்கள் திமுகவினர்.
தந்தை வழியை பின்பற்றி வேலவன் அருள் பெற வேண்டும் என்பதற்காகவே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பெயரை கூறி முகூர்த்த நேரத்தில் பதவியேற்றுக்கொண்டவர் மு.க.ஸ்.
திமுகவில் முக்கிய நிகழ்வுகள் வளர்பிறையில், முகூர்த்த நேரத்தில், முகூர்த்த நாளிலேயே நடைபெறும்.
ஜோதிடர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அறிவாலயத்தில் மு.கருணாநிதி பயன்படுத்திய வாசல் நிரந்தரமாக மூடப்பட்டது.
இப்படி தனிப்பட்ட முறையில் ஜோதிடர்களின் ஆலோசனை, சமய நம்பிக்கைகளில் இருந்துவிட்டு பிறரை ஏளனம் செய்து வந்தனர் கோபாலபுரம் வாரிசுகள்.
கோபாலபுரத்தின் போலி மிசா வரலாறுகளை துணிந்து வெளிப்படுத்தினார் முதலமைச்சர் விஜய். அதிர்ந்து போன அறிவாலயத்தினர் தடுமாற்றத்தில் தவித்தனர். அரசியலின் அஸ்தமனத்தில் திமுக இருப்பதை உணர்ந்த துரைமுருகன், கோடிகளை கொட்டி நடத்திய பேத்தியின் திருமணத்தில் சம்பிரதாயங்களைப் பின்பற்றினார்.
முதலமைச்சர் விஜய் மீதான அச்சம், திமுகவின் போலி வரலாறுகளை மக்கள் அறிந்து வருவது, வழக்குகளின் மீதான பயம், டில்லியின் காலடிகளில் சரணடையும் பயணம் ஆகியவற்றால், பாஜக செய்திகளை வெளியிட்ட முரசொலி, தற்போது முகூர்த்த நேரங்களையும் வெளிப்படையாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
@TVKVijayHQ @AadhavArjuna @imrajmohan @CTR_Nirmalkumar @TVKHQITWingOffl
அனைத்துக் கட்சிக் கூட்டம்: காலம் காலமாக ஏமாற்றும் திமுக…!
புத்தகக் கொள்முதல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த கேட்கும் தைரியம் திமுகவிடம் உள்ளதா…?
முதலமைச்சர் விஜயிடம் திமுகவின் விஞ்ஞான வித்தைகள் எடுபடாது…!
——————-
தமிழனுக்கும், தமிழ்நாட்டிற்கும் தாங்கள் செய்த துரோகங்களை மறைப்பதற்காக திமுக கையிலெடுக்கும் ஆயுதமே அனைத்துக் கட்சிக் கூட்டம்.
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டபோது தமிழ்நாட்டில் அந்தத்துறையின் அமைச்சராக இருந்தவர் தமிழினத் துரோகி மு.கருணாநிதி. அணைகள் கட்டுவதை கண்டுகொள்ளாமல் பொருளாதார சிந்தனைகளில் ஊறிப்போய் இருந்தார்.
அதற்குக் காரணம் தனது ஊழல் அமைச்சரவை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது என டில்லியின் காலடிகளில் சரணடைந்து, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கி, தமிழ்நாட்டிற்கு சிக்கலை மேலும் அதிகப்படுத்திய விஞ்ஞான வித்தகன் கருணாநிதி.
கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் மத்திய அரசு கடிதப் போக்குவரத்து நடத்தியபோதெல்லாம் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு மெளனியாக இருந்த ஊழல் அரசின் பிதாமகன் கருணாநிதி, கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட அடுத்த நாள் தொலைநோக்கு சிந்தையுடன் எதிர்கால சந்ததியினரை ஏமாற்ற நடத்திய கூட்டம் அனைத்துக் கட்சிக் கூட்டம்.
முதலமைச்சர்களாக இருந்த எம் ஜி ஆர் அனைத்துகட்சிக் கூட்டம் கூட்டியபோதும், ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோதும் ஏளனம் செய்த சதிகாரர்தான் மு.கருணாநிதி.
ஈழத்தமிழர் கொன்று குவிக்கப்பட்டபோது பதவி பிச்சைக்காக டில்லியில் கையேந்திய கருணாநிதி, “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை ரசித்த கொடூர குணத்தில் ஹிட்லரையும் தோற்கடித்ததோடு, உலகின் அதிவேக உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்திக்காட்டினார்.
நீட் தேர்வை கொண்டு வர மூல காரணமாக இருந்த திமுகவே, அதனை அகற்ற இரகசியம் உள்ளது மக்களை ஏமாற்றியதோடு அதற்காக மு.க.வின் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்ட பாசாங்குகள் நாடறியும்.
இப்படி ஏமாற்றியே பழக்கப்பட்ட, அதுவே தொழிலாகக் கொண்ட கோபாலபுர வம்சத்தினர், முதலமைச்சர் விஜய் எடுக்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கான பெயரை தட்டிச் செல்ல அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில், அறிவாலய விஞ்ஞான வரலாறுகளை பாட திட்டமிடுகின்றனர்.
எதில் அரசியல் செய்யலாம்? ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? என நாள்தோறும் சிந்திக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களே… எதிர்கால சந்ததியினரை சீரழிக்க அறிவுப் புரட்சியை முடக்க ஏஐ ஊழல் செய்த வித்தைகள் வெளியானபோது உல்லாசப் பயணங்களுக்கான திட்டமிடலில் தீவிரமாக இருந்த உங்களிடமிருந்து நூல் கொள்முதல் தொடர்பாக அறிக்கையே வரவில்லையே ஏன்? புத்தகக் கொள்முதல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தக் கோரிக்கை விடுக்கலாமே?
கோரிக்கை விடுத்தால் உங்கள் விஞ்ஞான வித்தைகளை மக்கள் தெரிந்துகொண்டு தமிழ்நாட்டை விட்டே விரட்டியடிப்பார்கள் என்ற பயமா?
@TVKVijayHQ @imrajmohan @CTR_Nirmalkumar @AadhavArjuna
மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார் கர்நாடக முதலமைச்சர்.
தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்:
#Cauvery #Mekedatu #DeltaFarmers
மத்திய அமைச்சரவையில் பங்கு: இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் கோல்மால்புரம்…!
அரசை கவிழ்த்தே தீர வேண்டும்: டில்லியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…!
——————
பணம் & அதிகார வெறியுடனும், வழக்குகளினால் நெஞ்சினில் பீதியுடனும் (அதுதான் நெஞ்சுக்கு நீதி) உள்ள கோல்மால்புர மன்னர் குடும்பமும், குறுநில மன்னர்களும் டில்லியின் காலடிகளில் போட்டிப் போட்டு விழுந்து வருகின்றனர்.
தலைநகருக்கு வந்த டில்லிக்கு வரவேற்பு, டில்லியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் என முரசு கொட்டும் ஒலி, டில்லியின் பெயரையே தலைமை மன்னர் தவிர்ப்பது, போலியாக மாநில சுயாட்சி என ஊளையிடும் நரிகளின் சத்தம் கடந்த வாரம் கேட்காமல் இருந்தது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் டில்லிக்கு கண்டனம் என்ற வாசகத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு தவிர்த்தது உள்ளிட்ட பல பாசாங்கு வேலைகளை காட்டி டில்லியிடம் நற்சான்றிதழ் பெற கைகட்டி, வாய் பொத்தி காத்திருக்கின்றது கோல்மால்புர தலைமையகம்.
எடுப்பார் கைப்பிள்ளையாக எளிதாக ஏமாறும் மன்னரை குறுநில மன்னர்களும், உதவி திருடனும், ஆலோசனை கூறும் மங்குனி மணிகளும் மூளைச்சலவை செய்துள்ளனர். பள்ளிப்பாடத்திற்காக கம்பி எண்ணுபவரைப் போல நீங்களும் பாடம்படிக்கச் சென்றால், தலைப்பாகை உண்மைகள் அசிங்கமாகிவிடும் என கூறியதைக் கேட்டு அச்சப்பட்டு நடுங்கிப்போயுள்ளார் மன்னர்.
இதனையடுத்து அயலக பயணத்தில் உடன் வந்த டில்லியின் சூப்பர் நண்பர், தற்போது உறவினரானவர் மூலமாக அமைச்சரவை இடங்கள் குறித்தெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. 2 கேபினட், 2 இணை அமைச்சர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் என கோரிக்கைகள் அடுக்கப்பட்டுள்ளது.
போலியாக மக்கள் முன் தமிழ்நாட்டு நலன் என கூறி, உண்மையாக கோல்மால்புர வம்ச நலனை முன்னிறுத்தும் தங்களின் குடும்ப பாரம்பரியத்தின்படி…குறைந்தபட்ச செயல்திட்டமாக
1. குறுநில மன்னர்கள் மீதான வழக்குகளை கிடப்பில் போட வேண்டும்
2.சில ஃபைல்களை குளோஸ் செய்ய வேண்டும்
3. மக்களாட்சியின் அமைச்சர்கள் மீது தொடர் ரெய்டுகள் நடத்தி ஊழல் பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும்
4. ஆட்சி கவிழும் நிலையை உருவாக்க வேண்டும்
5. மக்கள் அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்க வேண்டும்
6. தாங்கள் சொல்லித் தான் மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது என கூற வேண்டும்
7. ஊடகங்களை மிரட்டும் துறை வேண்டும்
8. 2029இல் டில்லி தேர்தலோடு மாநில தேர்தலையும் நடத்த வேண்டும்
என்பது உள்ளிட்ட 13 கோல்மால்புர அம்ச கோரிக்கைகளை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
டில்லியின் ஷூக்களுக்கு பாலிஷ் போடத் தயார் என கோல்மால்புரம் கூறினாலும், டில்லி மெளனமாகவே இருப்பதாக தகவல். கோல்மால்புர வம்சத்தின் ஒற்றை நலனுக்காக மக்கள் செல்வாக்கு, புரிதல் உள்ள அரசை எதிர்ப்பது சரியாக இருக்காது என கருதுவதாகவும் தகவல்.
ஊழலில் திளைத்த முன்னாள் அமைச்சர் மூலம் திட்டம்…?
————————
கடந்த ஆட்சியில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை வைத்துள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் பொறுப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தும் முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகின்றது. தனி இயக்கம் ஒன்றின் பேரில் திடீரென வேறு அவதாரம் காட்டும் அவர், மத அமைப்புகளை பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறாரோ…? என சந்தேகம் எழுந்துள்ளது.
20க்கும் மேற்பட்டோரை கொண்ட டீமை வைத்து செயல்படும் அவரின் ஊழல் பொருளாதார பலம், தொடர்புகள், நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட வேண்டும், மக்கள் பணத்தை மீட்க வேண்டும்.
@TVKVijayHQ @CTR_Nirmalkumar @imrajmohan
தமிழ்நாட்டை தலைகுனிய விட்ட கோபாலபுர வாரிசுகள்…!
கிரீஸ்: டில்லி - தேனாம்பேட்டை சமாதான ஒப்பந்தம்…?
—————-
பெரும் பெருமைக்குரிய நிலத்தின், மொழியின், பண்பாட்டின் விழுமியங்களை கொண்ட தமிழர்களை விஞ்ஞான ஊழல், ஈழத் தமிழர் விவகாரம், 2 ஜி என உலக அளவில் தமிழனுக்கு துரோக வரலாற்றையே அடையாளமாக காட்டினர் கலைஞரும் அவர்தம் வாரிசுகளும்.
அதன் தொடர்ச்சியாக உலக அளவில் ஏஐ பயன்பாடு பற்றி கோடிக்கணக்கானோர் அறியாத நிலையிலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஓரளவிற்கு கூட முழுமையாக பயன்படுத்தாத நிலையிலும் அதிலே ஊழலுக்கான வாய்ப்பு இருப்பதை முதன்முதலாக கண்டறிந்த கோபாலபுர விஞ்ஞானிகள், 2-3 ஆண்டுகளுக்கு முன்பே ஊழல் செய்து தமிழ்நாட்டிற்கும், தமிழனுக்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளனர்.
கலைஞர் திமுகவினரின் கொள்கைகளை எளிதாக கண்டறியலாம். விடியலை தேடி என்றால் இருட்டை தருவார்கள். தலைகுனிய விட மாட்டேன் என்றால் தலைகுனிய விடுவார்கள், திராவிட மாடல் 2.0 என்றால் 2 இலட்சம் கோடி ஊழல் இலக்கு… இதுதான் அறிவாலய கொள்கை தத்துவங்களின் அடிப்படை.
அதிமுக மேலான நம்பிக்கையில் எல்லையில்லாமல் ஊழலில் உழன்ற அறிவாலயத்தினர், தப்பிக்க வழிதேடி கமலாலயத்திடம் கண்ணீர் சிந்தி காலடிகளில் விழுந்து கிடக்கும் நிலை தவெக-வால் ஏற்பட்டுள்ளது.
கிரீஸ் பயணத்திலும் டில்லிக்கும் - தேனாம்பேட்டைக்கும் சமாதான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல் உண்மையா?
New Indian mega library rocked by scandal over 'AI-generated books' bbc.in/48i9sYb
கமலாலயத்தின் நாளிதழான முரசொலி…!
பாஜக கூட்டணி: உறுதி செய்யும் திமுக…!
———————
குற்றங்கள் புரிந்ததனால் ஏற்பட்ட வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக டில்லியின் காலடிகளில் சரணாகதி அடைந்துள்ள திமுக, அதற்காக தொகுதி மறுவரையறை & ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்கத் தயாராகி வருகின்றது.
தவெக அரசை கவிழ்ப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதற்கான டில்லியின் உதவியையும் நாடி வருகின்றது.
அதற்காகத்தான், இதுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சரை சந்திக்காத தலைநகரின் மேயர் பிரியா - வெண்குடை வேந்தர் மு.க.ஸ்டாலினின் தூதராக சென்னை வந்த பிரதமரை ஓடோடிச் சென்று வரவேற்றார். அதன் பிறகாக, பொன்முடி மீது பாஜக தரப்பால் தொடரப்பட்ட வழக்கு திரும்பப்பெறப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறையில் தான் பெற்ற பங்குகளை தனது பெரியப்பா மு.க.ஸ்டாலின் தரப்பினருக்கு பிரித்துக்கொடுத்த வரலாறுகளை அன்பில் மகேஸ் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமல்லாமல், முன்னாள் செயல் முதலமைச்சர் தினேஷ், ஆலோசகர் ஜால்ரா மணி உள்ளிட்ட நெருக்கமானவர்கள் மீதான பிடிகள் இறுகத் தொடங்கியுள்ளதால் அச்சத்தில் உள்ளது செனடாப் சாலை.
“ஊழல் ஒரு கலை அதனை சாமர்த்தியமாக செய்ய வேண்டும்” என்ற கொள்கைப் பிடிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிய கலைஞர் வழியில் முழுமையாக செயல்பட தெரியாவிட்டாலும் ஓரளவிற்கு முயற்சிக்கிறது அறிவாலயம்.
அந்த வகையில், கமலாலயத்தின் ஊதுகுழலாக அறிவாலயத்தின் முரசொலியை ஒலிக்கச்செய்து டில்லியின் நன்மதிப்பை பெறுவதற்கான பெர்ஃபார்மென்ஸை தீவிரமாக்கியிருக்கிறது கலைஞரின் முதற் குழந்தை. பாஜகவின் அறிவிப்புகளை முழுமையாக தெரிந்துகொள்வதற்கு முரசொலியை படிக்கலாம்…
5-6 கோடிதான் ஊழல்: ஒப்புதல் வாக்குமூலம்…!
கோபாலபுரம்: நாங்கள் சின்ன திருடர்கள்தானுங்கோ…!
———————
தெருக்கோடிகளிலிருந்து அரசியலுக்கு வந்து கோடிகளில் புரள்பவர்களுக்கு 5-6 கோடி எல்லாம் சில்லறை காசுகளாகவே தெரியும்.
ஒரு ரூபாய் என்றாலும் திருடினால் திருட்டுதானே…?
விசாரணையை தீவிரப்படுத்துவதுடன், செனடாப் சாலைக்கு “தின”மும் வந்து, “மணி” கணக்கில் அமர்வோரின் தொடர்புகள், பிட்காயின் முதலீடுகளையும் ஆராய்ந்தால் பள்ளி, நூலகம், சிஎம்டிஏ உள்ளிட்ட 13 துறைகளின் கோடிக்கணகான ஊழல் தொடர்புகள் வெளியாகும்.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு ஜாமீன் மறுப்பு... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? - திமுக வழக்கறிஞர் சரவணன் பேட்டி
#AnbilMahesh | #CaseUpdate | #TNGovt | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
எழுச்சி நாயகன்: சேலம் சிவராஜ் வழியிலா…?
—————-
எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் என்ற புத்தகத்தை எழுத வேண்டும் என்ற நினைப்பே எவ்வளவு கேவலகரமானது…?
கோபாலபுர வம்சம் என்ற ஒற்றை காரணத்தினால் கலைஞர் கம்பெனியின் சின்ன முதலாளியாகிவிட்ட உதயநிதி, அப்படி என்ன எழுச்சியை ஏற்படுத்திவிட்டார்…?
பெரியார் போன்று மாற்றுச் சிந்தனைகளை சிந்தையில் உதிக்கும் அளவிற்கு புரட்சிகர சிந்தனையாளரா?
அண்ணாவைப் போல இளமையிலேயே தனி இயக்கம் காணும் அளவிற்கு தலைமைப் பண்பாளரா?
எம்.ஜி.ஆர். போல மக்கள் மனங்களை கவர்ந்த நட்சத்திரமா, திராவிட ஆட்சிக்கு வித்திட்டவரா?
விஜய் அவர்கள் போல ஊழல் ஆட்சிக்கு எதிராக மெளனபுரட்சியை உருவாக்கி, கோடிக்கணக்கான மக்கள் மனங்களை தனி ஒரு மனிதனாக வென்ற புரட்சியாளரா?
வான்கோழி, வாழ முடியாதவர்கள் போன்ற பாலியல் புதினங்களை எழுதிய ஊழல் கலை வித்தகர் கலைஞரின் வம்சம் என்பதைத் தவிர வேறு என்ன உள்ளது அவரிடம்?
பெண்களின் காலடிகள் குறித்தே பேசி, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததோடு, காலடிகளை தேடி நள்ளிரவில் சமூக ஊடக பக்கங்களில் லைக்குகளை குவித்தவர்தானே…
Mood வருவது குறித்தும், இரட்டை அர்த்த ஆபாச பேச்சுகளாலும், தமிழ்நாட்டின் ஜானி சின்ஸாக முயற்சிக்கிறாரோ…? என விமர்சிக்கப்பட்டவருக்கும், சேலம் சிவராஜிடமிருந்து அதுபோல எழுச்சியை கற்றவர் என்பதால் எழுச்சி நாயகன் என புத்தகமா?
அந்த புத்தகத்திற்கு நிதி ஒதுக்கீடு, அதற்காகத்தான் கோடிக்கணக்கில் நூலகங்களுக்கு நிதி ஒதுக்கீடா? தமிழ் தமிழ் என்று பேசி தமிழனை 60 ஆண்டுகளாக சீரழித்த வரலாறு கொஞ்ச நஞ்சமல்லவே.
எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் என்ற புத்தகங்களை நூலகங்களிலிருந்து கைப்பற்றி தீ வைத்து எரிக்கப்பட வேண்டும். அந்தத் தீயே தமிழனுக்கான ஒளி விளக்கு.
@imrajmohan @CTR_Nirmalkumar @OGPrasanna
236
இன்றைய கோட்டா: ஸ்டாலினின் அறிக்கை ஏன் வரவில்லை…?
அகல் - விளக்குப் பிடித்த அறிவாலய விளக்கு யார்…?
—————
ஊழல் கலையின் பேரரசர் கலைஞர் கருணாநிதியின் வழித்தோன்றல், அறிவாலய அரசர் மு.க.ஸ்டாலின் அவர்களே…! இன்றைய உங்கள் புலம்பல் என்ன ஆனது…?
ஒரு நாள் முடியப்போகின்றதே…ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த வசன பக்கங்களைப் பதிவிடவில்லையா?
“தவளை தன் வாயால் கெடும், கலைஞர் திமுக காரன் அதிகாரத்திற்கு வந்தால் மேலும் கெடுவான்” என்ற பொன்மொழிக்கேற்ப, “எல்லாம் நாங்கதானுங்கோ” என கோவையில் ஒலித்த முரசொலி, உங்களுக்குப் பிடித்த ஓங்கோலில் கரையைக் கடந்த முரசு புயல் போல கடந்துவிட்டதா?
தோல்வி நாயகன் மு.க. முத்து வரிசையில் குறிஞ்சி நாயகன் உங்களின் இன்றைய வசனங்களை கேட்க ஆவலாக உள்ளோம்…
அகல் விளக்கைத் தூக்கிப் பிடித்த அறிவாலய விளக்கு யாரோ…?
@mkstalin
1
239
மு.க.ஸ்டாலின்: அப்பாவிற்கு தப்பாத பிள்ளை…!
——————
வான்கோழி, வாழ முடியாதவர்கள் போன்ற பாலியல் புதினங்களை எழுதி எழுத்துலகில் அடியெடுத்து வைத்த மு.கருணாநிதியின் வழியில் வந்தவர்களின் புத்தக ரசனை எப்படியிருக்கும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
அறிவாலயத்தினரின் அறிவைப் போன்றே கோவை பெரியார் அறிவுலகம் வருவோரும் இருக்க வேண்டும் என நினைத்துள்ளனர் கோபாலபுரத்து வம்சத்தினர். பெரியாரை வைத்து கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வரும் கலைஞர் திமுக கம்பெனியினர், அறிவாலயத்தில் ஏன் பெரியார் சிலையை வைக்கவில்லை? என்பதில் இருக்கிறது சூட்சமம்.
விஞ்ஞான ஊழலில் சாதனை புரிந்து முன்னோடியாக இருக்கும் கலைஞர் திமுகவினர், ஏஐ ஊழலிலும் நாங்களே முன்னோடி என மார்தட்டி, கொடிநாட்டியுள்ளனர். கலைஞர் திமுக - எடப்பாடி திமுக என அண்டர் டீலிங் காலமாகவே 2026-ம் இருக்கும் நினைத்து ஏமாந்து போயுள்ளனர். இது எந்த ஊழலிலும் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாத காலம்…தவெக காலம்…!
“தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று” என்ற முதலமைச்சர் விஜய் அவர்களின் கருத்து மிக முக்கியமானது. ஏற்கனவே மிசா காலம் போன்ற கலைஞர் திமுகவின் போலி வரலாற்றுப் புனைவுகளை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இன்னமும் கோபாலபுர குடும்பத்தினரின் போலிப் புனைவுகள் புலனுக்கு வரும்…
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
பெரியார் பெயரை காட்டி பெரும் ஊழல்…!
ஊழல்: தொடர்ந்து முத்திரை பதிக்கும் உடன்பிறப்புகள்…!
விஞ்ஞான ஊழலுக்கு பாராட்டு விழாவா…?
——————
“திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை!” என்று அன்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கான காரணம் இதுதானோ…?
எந்தத் திட்டம் தீட்டினாலும் இலாபம் இல்லாமல் தொழில் செய்யமாட்டான் திமுக காரன். அந்த கொள்கை தத்துவத்தை அடிபிறழாமல் பின்பற்றி கோடிகளில் கொள்ளையடித்த கோபலபுரத்து கோமானே…
பெரியார், அண்ணா என பெயர்களை காட்டி ஊரை ஏமாற்றி உலையில் போடும் கலைஞர் திமுகவின் பாணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காகத் தான் கோவையில் பாராட்டு விழாவா? மு.க.ஸ். அவர்களே…
அரசகுமாரை கைகாட்டும் அன்பில் போல, நீங்கள் யாரை கை காட்டப்போகிறீர்கள்…?அறிவாலய உடன்பிறப்புகளின் உள்ளடி ஆட்டங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
@mkstalin
பெரியார் அறிவுலகம் அமைத்ததற்குத் தாய்க் கழகம் வழங்கிய பாராட்டை ஊக்கமாகத் தலைவணங்கி ஏற்கிறேன்!
தந்தை பெரியாரும் - பெரியாரின் பெருந்தொண்டர்களும் பாடுபட்டு உருவாக்கிய அறிவுலகமான தமிழ்நாட்டில், அவதூறுகள் - பொய்கள் - போலி வீடியோக்கள் என ஆளும்கட்சி செய்து கொண்டிருப்பது Healthy Politics அல்ல; Filthy Politics!
நமது Phone-களுக்குப் பரப்படும் Message-களும் Influencer Video-க்களும் தகவல்கள் மட்டும்தான். தகவலைத் தெரிந்து கொள்வதற்கும், உண்மையைப் புரிந்துகொள்வதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது!
அதற்கான அறிவியல் பார்வை தழைத்து, பெரியார் கண்ட அறிவுலகம் நிலைக்கட்டும்!
#PeriyarArivulagam #Kovai #Library @Asiriyar_KV
பெரியார் பெயரை காட்டி பெரும் ஊழல்…!
ஊழல்: தொடர்ந்து முத்திரை பதிக்கும் உடன்பிறப்புகள்…!
விஞ்ஞான ஊழலுக்கு பாராட்டு விழாவா…?
——————
“திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை!” என்று அன்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கான காரணம் இதுதானோ…?
எந்தத் திட்டம் தீட்டினாலும் இலாபம் இல்லாமல் தொழில் செய்யமாட்டான் திமுக காரன். அந்த கொள்கை தத்துவத்தை அடிபிறழாமல் பின்பற்றி கோடிகளில் கொள்ளையடித்த கோபலபுரத்து கோமானே…
பெரியார், அண்ணா என பெயர்களை காட்டி ஊரை ஏமாற்றி உலையில் போடும் கலைஞர் திமுகவின் பாணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காகத் தான் கோவையில் பாராட்டு விழாவா? மு.க.ஸ். அவர்களே…
அரசகுமாரை கைகாட்டும் அன்பில் போல, நீங்கள் யாரை கை காட்டப்போகிறீர்கள்…?அறிவாலய உடன்பிறப்புகளின் உள்ளடி ஆட்டங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
@mkstalin
பெரியார் அறிவுலகம் அமைத்ததற்குத் தாய்க் கழகம் வழங்கிய பாராட்டை ஊக்கமாகத் தலைவணங்கி ஏற்கிறேன்!
தந்தை பெரியாரும் - பெரியாரின் பெருந்தொண்டர்களும் பாடுபட்டு உருவாக்கிய அறிவுலகமான தமிழ்நாட்டில், அவதூறுகள் - பொய்கள் - போலி வீடியோக்கள் என ஆளும்கட்சி செய்து கொண்டிருப்பது Healthy Politics அல்ல; Filthy Politics!
நமது Phone-களுக்குப் பரப்படும் Message-களும் Influencer Video-க்களும் தகவல்கள் மட்டும்தான். தகவலைத் தெரிந்து கொள்வதற்கும், உண்மையைப் புரிந்துகொள்வதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது!
அதற்கான அறிவியல் பார்வை தழைத்து, பெரியார் கண்ட அறிவுலகம் நிலைக்கட்டும்!
#PeriyarArivulagam #Kovai #Library @Asiriyar_KV
அறிவாலயத்தின் ஊழல் மாடல்…!
காட்டிக் கொடுப்பதுதானே கருணா வழி…!
—————
ஆட்சி முடிந்து 6 மாதங்களாகிய பின்னுன் பங்கு பிரிப்பதில், பிரித்ததில் திருட்டு முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளிடையே உடன்பாடு எட்டப்படவில்லையா…?
காவிரி, கச்சத்தீவு, ஈழத் தமிழர்கள் என தமிழனை காட்டிக்கொடுக்கும் இலங்கை கருணா, தமிழ்நாட்டுக் கருணாவின் வழியில்…மாற்றி மாற்றி போட்டுக் கொடுக்கும் கழகக் கண்மணிகள். மக்களே விழித்தெழுவீர்…!
ஒரே குட்டையில் ஊறிய இன்னும் பல ஊழல் மட்டைகளின் விவரங்கள் ஆதாரங்களுடன் மக்கள் முன்னிலையில் - விரைவில்…
#JustNow || அரசகுமார் தான் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்தார் - ஜாமீன் மனு விசாரணையின் போது அரசகுமார் மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
#DMK | #AnbilMahesh | #Bail | #Court | #PolimerNews
கட்டைப் பை: கட்சித் தொண்டனும்-பண்ணையார்களும்…!
————
படம் 1: சந்தர்ப்பவாதமே கொள்கை, கோடிகளில் கொடி நாட்டுவதே இலட்சியம் என வாழ்வாங்கு வாழும் கோபாலபுரம் வம்சத்திற்காக மட்டுமே உழைப்பதை அறியாத - கட்டுக்கட்டாக பழைய ஆவணங்களுடனான கட்டைப்பையில் கட்சித் தொண்டன்…
படம் 2: கட்டைப் பையில் கட்டுக்கட்டாக நோட்டுகளுடன் கட்சியின் பண்ணையார்கள்…
“நீயும் கட்டைப் பை, நானும் கட்டைப் பை” என வசனம் பேசும் போலிகளைக் கண்டு இன்னும் எத்தனை காலம் ஏமாறுவர்…?
#DMK #AnbilMahesh
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்!
கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்!
உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது!
அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது…
#DMKForever #Udanpirappu @krithika_writes
237

































