பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்க முதல்வர் விஜய் துணைபோகிறாரா..?
@CMOTamilnadu
@TVKVijayHQ
#Pallikaranai #PMK #AnbumaniRamadoss
4
149
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 50,000 கோடி ரூபாய் ஊழல்..!
@CMOTamilnadu
#Pallikaranai
#SavePallikaranaiWetland
#PMK #ChennaiRains
1
147
Balaguru Ganesan retweeted
சென்னையில் ஆங்கில செய்தி நிறுவனங்களுக்கு நேர்காணல் அளித்த போது.!
#SavePallikaranaiWetland | #Pallikaranai | #PasumaiThaayagam | #PMK | @CMOTamilnadu
Balaguru Ganesan retweeted
17 Prisoners Escape from Theni Jail: Prisons Department’s Failure, Action Against Those Responsible Needed!
The escape of 17 prisoners from the district jail in the Thekkampatti area of Theni district last night, after allegedly assaulting prison guards, is shocking. It is condemnable that security arrangements at the district jail were so inadequate that prisoners arrested in cases under the Protection of Children from Sexual Offences (POCSO) Act and under the Goondas Act could escape.
Scenes of prisoners escaping from jail, which were previously seen only in films, are now becoming a reality. This is deeply concerning. It reflects the weakening of the administration of departments such as the police and the prisons department, which are responsible for maintaining law and order and ensuring security. The fact that 17 prisoners escaped simultaneously after assaulting the prison staff cannot be treated as an ordinary incident. It exposes a serious failure on the part of the prisons department.
The considerable gap between the reported time of the prisoners' escape and the time the police were informed about the incident has raised several questions. More than 12 hours after the prisoners escaped, only four of them have reportedly been arrested so far.
I urge the government to immediately apprehend all the prisoners who escaped from Theni jail and investigate whether there was any conspiracy or deliberate plan behind their escape. Action must also be taken against prison officials whose negligence contributed to this incident. @CMOTamilnadu
தமிழகத்தில் அரிசி விலையை கட்டுப்படுத்த தவறிய விஜய் அரசு!
தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை உரிய நேரத்தில் விஜய் அரசு பெற்றுத்தராத காரணத்தால் குறுவை விளைச்சல் மிகப்பெரிய பாதிப்பு.
#Rice #RicePriceHike #TVKVijay #TamilNadu #Cauvery #CauveryWater
1
1
84
Balaguru Ganesan retweeted
சகி ஒருங்கிணைந்த சேவை மைய ஊழியர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் இல்லை: வறுமையில் வாடும் பணியாளர்களை மேலும், மேலும் வதைப்பதா?
தமிழ்நாட்டில் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒரே இடத்தில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சகி எனப்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (SAKHI – One Stop Centre) பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கான வெகுமதியை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு முழுவதும் 59 இடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒவ்வொரு மையத்திலும் ய நிர்வாகி, தகவல் தொழில்நுட்ப நிர்வாகி, மூத்த ஆலோசகர், களப் பணியாளர்கள், பாதுகாப்புக்காவலர்கள், பன்முக உதவியாளர்கள் என 13 பேர் வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 767 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவர்களின் பணிகளையும் மற்றவர்களே செய்ய வேண்டியுள்ளது.
பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவி, சட்ட ஆலோசனைகள், உளவியல் வழிகாட்டுதல், தற்காலிகப் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு போன்ற அனைத்து ஒருங்கிணைந்த சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் அமைப்பாக இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல எனும் நிலையில் இந்த ஊதியம் கூட 3 மாதங்களாக வழங்கப்படாததால் அதன் ஊழியர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.
ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் வறுமையில் வாடும் நிலையில், மையத்தை இயக்குவதற்கு தேவையான அடிப்படை செலவுகளை செய்வதற்கு கூட நிதி ஒதுக்கப்படாததால், அவற்றையும் பணியாளர்களே கடன் வாங்கி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது குறித்து மாவட்ட அளவிலான உயரதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் எந்த பயனும் இல்லை.
ஒருங்கிணைந்த சேவை மையங்களை நடத்துவதற்கான நிதியை மத்திய அரசே வழங்குகிறது. அதைக் கொண்டு அண்மையில் தாக்கல் செயப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இந்த மையங்களுக்கு ரூ.18.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததன் காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இந்த ஊதியம் மட்டும் தான் வாழ்வாதாரம் ஆகும். எனவே, ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் கடந்த 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கி அனைத்து வகையான சமூகப் பாதுகாப்புகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
Balaguru Ganesan retweeted
சட்டம் - ஒழுங்கு குறித்த தகவல்களை தகவல் பெறும்
உரிமைச் சட்டத்தின் கீழ் பெற தடை விதிப்பதா? அரசின்
தோல்விகளை ஆர்.டி.ஐ தடை மூலம் மறைக்க முடியாது!
தமிழ்நாட்டில் பொதுத் ( சட்டம் -ஒழுங்கு) துறையை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக வகைப்படுத்தி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 24 (4) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக ஆளுனர் ஆணை பிறப்புத்திருப்பதாகவும், அதன்படி இனி சட்டம் - ஒழுங்கு குறித்த தரவுகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு மாநிலத்தின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் சட்டம் - ஒழுங்கு மிகவும் முக்கியமானது என்ற வகையில், அது குறித்த தகவல்களை பெறும் அடிப்படை உரிமையை மக்களிடமிருந்து தமிழக அரசு பறித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, சட்டம் - ஒழுங்கின் கூறுகளாகக் கருதப்படும் சாதி, மத மோதல்கள், தடுப்புக்காவல் சட்டத்தின்படியான கைது நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு குறித்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், கைதிகளின் மரணம், காவல்துறை விசாரணை அறிக்கைகள் ஆகியவை இனி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வழங்கப்படாது. மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள், மாணவர், விவசாயி மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போராட்டம் குறித்த தரவுகளைப் பெறவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் அபத்தமானது ஆகும்.
தமிழ்நாடு அரசுக்கு இப்படி ஓர் அறிவுரையை யார் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. இந்த அரசாணை நடைமுறைக்கு வந்தால் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினர் அரங்கேற்றும் அத்துமீறல்கள் குறித்த உண்மைகள் மறைக்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணையம், சாத்தான்குளம் காவல் நிலைய மரணம் குறித்த தகவல்கள் மற்றும் இதே போன்று இனிவரும் காலங்களில் நிகழும் அத்துமீறல்கள் குறித்த தகவல்கள் எதுவுமே இனி வெளிவராமல் மூடி மறைக்கப்படும். இதிலிருந்தே யாரைப் பாதுகாப்பதற்காக இப்படி ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் நிகழும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், வழிப்பறிகள் உள்ளிட்ட அனைத்தையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காகத் தான் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழக அளவிலும் இது போன்ற தகவல்களை மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு வந்தது. கடந்த 2013-14 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட இந்த நடைமுறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கூட பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதை செய்வதற்கு பதிலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூட தரவுகளைப் பெற அரசு தடை விதித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சட்டம் - ஒழுங்கு தொடர்பான அரசின் தோல்விகளை மூடி மறைப்பது தான் இந்த அரசாணையின் நோக்கம் ஆகும். இது தவறு. இந்த தகவல்கள் தான் ஒரு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை அளவிடுவதற்கான கருவி ஆகும். தரவுகளை வெளியிட தடை விதிப்பதற்கு பதிலாக சட்டம் - ஒழுங்கை மேம்படுத்துவதற்காக இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu
Balaguru Ganesan retweeted
இரு மாதங்களில் அரிசி விலை ரூ.40 வரை உயர்வு: ஆந்திரா வழியில் கிலோ ரூ.50க்கு நியாயவிலைக் கடைகளில் விற்க வேண்டும்! @CMOTamilnadu
Balaguru Ganesan retweeted
ஆசிய விளையாட்டுப் போட்டி: ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக இணையர் ஜோஸ்னா - செந்தில் குமாருக்கு வாழ்த்துகள்!
ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணையர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கி்றது. அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த இணையர், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஹாங்காங் இணையரிடம் போராடித் தோல்விடைந்தனர். விதிகளின்படி அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது. இதே போட்டியின் பிற ஆட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வெல்ல வாழ்த்துகள்.!
#AsianGames2026
கோலூன்றித் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள சகோதரி பரணிகா இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்.
#AsianGames2026
3
58
Balaguru Ganesan retweeted
சிறுமிகள் பாலியல் கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்- விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்! @CMOTamilnadu
சிறுமிகள் பாலியல் கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்- விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.
@Sowmiyanbumani
@draramadoss
#GemGranites #Veeramani #POCSO #PMK #AnbumaniRamadoss
#GemVeeramani
Balaguru Ganesan retweeted
#JustNow || ஜெம் வீரமணி வழக்கு - விசாரணையை விரிவுபடுத்த அன்புமணி வலியுறுத்தல்
#GemVeeramani | #Anbumani | #Case | #PolimerNews
Balaguru Ganesan retweeted
Recruitment of Apprentices in Southern Railway: The conspiracy to hand over opportunities of Tamils to people from other states must be defeated!
Southern Railway has issued a notification to select 6,171 apprentices for training at workshops located within the Tamil Nadu jurisdiction of the Southern Railway. It is condemnable that, by setting aside the usual rules, Southern Railway is now attempting to hand over apprenticeship training opportunities in Tamil Nadu to people from other states through this notification.
There are 6,171 apprenticeship vacancies at the Chennai, Madurai, Tiruchirappalli–Ponmalai Central Workshop, Salem, Perambur Carriage and Wagon Works, Perambur Loco Works, Coimbatore, Arakkonam Engineering Workshop, and Coimbatore–Podanur Signal and Telecommunication Workshop of the Southern Railway. Applications can be submitted until the 27th of this month to fill these vacancies. It is in this very notification that violations of the rules have been committed.
According to the Railway Board circular dated 22 July 2002 and the apprenticeship selection guidelines dated 5 May 1984, only those who are registered with an Employment Exchange located within a 100-km radius of the workplace are eligible to apply. However, following protests against the large-scale appointment of people from North India in the Southern Railway in violation of this rule, the rules were amended in 2019 to stipulate that only those registered with Employment Exchanges in Tamil Nadu could apply.
But even this rule has now been violated. The requirement that applicants must be registered with Employment Exchanges in Tamil Nadu has been removed from the apprenticeship recruitment notification. Moreover, it states that people from Dakshina Kannada, Nellore and Chittoor in Andhra Pradesh, Kerala, and other regions such as the Andaman and Nicobar Islands and Lakshadweep can also apply. This has created a situation in which apprenticeship opportunities that should go to the youth of Tamil Nadu could be handed over to people from other states. This cannot be allowed.
For more than a quarter of a century, people from other states have been taking away jobs in the Southern Railway. Apprenticeship opportunities were also being taken away in the same manner. It was only after a prolonged struggle that the employment rights of Tamil Nadu's youth were restored in 2019. It is that very right which is now under threat once again.
Southern Railway must immediately cancel the notification that seeks to deprive the youth of Tamil Nadu of their apprenticeship opportunities. A fresh recruitment notification must be issued, incorporating the rule that only those registered with Employment Exchanges in Tamil Nadu can apply for these positions. The Tamil Nadu Government must exert pressure on the Railway Board to ensure this. @CMOTamilnadu
Balaguru Ganesan retweeted
தெற்கு இரயில்வேயில் தொழில் பழகுனர் நியமனம்: தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்!
தெற்கு ரயில்வேயின் தமிழக எல்லைக்குபட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுனர்கள் (Apprenticeship) பயிற்சிக்காக 6,171 தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கையின் முலம் தமிழகத்தில் உள்ள தொழில் பழகுனர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க தெற்கு ரயில்வே முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.
தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரஜ் மற்றும் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை, கோவை போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை ஆகிய இடங்களில் 6,171 தொழில் பழகுனர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு இம்மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிக்கையில் தான் விதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
22.07.2002 தேதியிட்ட ரயில்வே வாரிய சுற்றறிக்கை மற்றும் 05.05.1984- தேதியிட்ட தொழில் பழகுனர் தேர்வு வழிகாட்டி விதிமுறைகளின்படி பணி இடங்களில் இருந்து100 கி.மீ சுற்றளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால், இந்த விதியை மீறி வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு இரயில்வேயில் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என 2019-ஆம் ஆண்டில் விதிகள் மாற்றப்பட்டன.
ஆனால், இந்த விதியும் இப்போது மீறப்பட்டுள்ளது. தொழில் பழகுனர் நியமன அறிவிக்கையில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தட்சிண கன்னடா பகுதி, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் பகுதி மற்றும் கேரளாவில் இருப்பவர்களும், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் பழகுனர் பணி பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.
கால் நூற்றாண்டுக்கும் கூடுதலாகவே தெற்கு தொடர்வண்டித்துறையில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர் பறித்துக் கொள்கின்றனர். தொழில் பழகுனர் வாய்ப்புகளும் அதே போல் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தான், நீண்ட போராட்டத்தின் மூலம் 2019-ஆம் ஆண்டில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. அந்த உரிமைக்கு தான் இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
தமிழக இளைஞர்களின் தொழில் பழகுனர் வாய்ப்புகளை பறிக்கும் நோக்கம் கொண்ட அறிவிக்கையை தெற்கு ரயில்வே உடனடியாக இரத்து செய்ய வேண்டும். தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை தெற்கு ரயில்வே புதிதாக வெளியிட வேண்டும். இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். @CMOTamilnadu
Balaguru Ganesan retweeted
கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஸ்டாண்ட் இல்லாததால் நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி சிகிச்சை பெரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
#Kallakurichi | #Ulundurpet | #GovernmentHospital
Balaguru Ganesan retweeted
மத்திய அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது: சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!
Balaguru Ganesan retweeted
சென்னை வெள்ளத் தடுப்புக்கான திருப்புகழ் குழு அறிக்கையை திமுக அரசு ஒளித்து வைத்தது! இப்போது தவெக அரசும் அதனை மறைத்து வைப்பது ஏன்?
#ChennaiFloods #PMK #TVKGovt
Balaguru Ganesan retweeted
கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொ*ல செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலம் வரும் கர்நாடக பேருந்துகளை சிறைபிடித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்...
Salem News | Protest | News Report
#Newstamil24x7 #Karnataka


















