வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT) header
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT) profile picture

Secretary, Environmental Wing, NTK. Thamizh Stock-தமிழச்சி ❤️ A scientist, a feminist & an atheist! Opinions are personal!

Chennai
Joined September 2009
Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)
பெண்ணியம் ❤️
104
287
24
928
135,297
வாழ்வனைத்தையும் வண்ணங்களால் நிறப்பிக் கனவனைத்தையும் காற்றில் பரப்புவோம். மகிழ்ந்து மட்டுமே வாழுவோம்டா தம்பி @PanaiSathish ❤️ நீடூழி வாழ்க! ❤️❤️❤️
வாழ்ந்து தீர்ப்போம் டா தம்பி, வா. வெட்ட வெளியில், கண்ணுக்கெட்டா திக்கெட்டும், கையால் பரவி அளந்திட வாய்ப்பில்லா தொலைவனைத்தும் நமக்கானக் கனவுகளும் வாழ்தலும் நிரம்பியுள்ளது, வாழ்ந்து தீர்ப்போம்டா தம்பி, வா! Be my strength as I will be yours. Much love da. @PanaiSathish ❤️❤️❤️
1
15
87
1,573
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டா @fathimafarhanaS ❤️
3
6
79
1,621
Every time, all the time! Politics is consistency in serving the people and SEEMAN is consistency, Hence NTK ❤️
4
119
295
1,855
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
அண்ணன் சீமான்.. திமுக - தீயசக்தி.. அதிமுக - ஊழல் சக்தி தவெக - ரெண்டும் சேர்ந்த கொடிய தீய சக்தி 💥💥 பொளந்துட்டார் 💥💥
44
239
13
846
8,985
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
திருச்சி முகாமிலிருந்த ஈழத்தமிழர் தம்பி கிருஷ்ணகுமாரை இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்கு தள்ளுவதா? தம்பி சுபாஸ்கரனையும் நாடுகடத்த முயல்வது கொடுங்கோன்மை! 2016ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை, இந்தி ஒன்றிய – தமிழ்நாடு அரசுகள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். மற்றொரு தம்பி சுபாஸ்கரனையும் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய் நிர்கதியற்ற நிலையில் இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களை, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் மனிதநேயம் சிறிதுமின்றி வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது வன்மையான கண்டனத்துக்குரியது. அடிப்படை உரிமைகள், வாழ்விட வசதிகள் என ஏதும் வழங்காமல் அடிமைகள் போலத் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்துவைத்த போதிலும் உயிர்ப்பாதுகாப்பு என்ற ஒன்றாவது இருந்தது. தற்போது அதனையும் பறிக்கும் விதமாக ஈவு இரக்கமற்று இனவாத நாடான இலங்கைக்கு அனுப்புவது கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பாகும். தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ் மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்து வாழ்வளிக்கின்றன. அந்நாட்டின் விளையாட்டு வீரர்களாக, அரசியல் பிரதிநிதிகளாக வாய்ப்பு வழங்கப்பட்டு மிகுந்த மரியாதையுடன் வாழ்விக்கப்படுகின்றனர். அரபு நாடுகளும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குச் சிறப்பு குடியுரிமை வழங்கி பெருமைபடுத்துகின்றன. ஆனால்,. பத்து கோடி தமிழர்கள் தனித்த பெரும் தேசிய இனமாக, நிலைத்து நீடித்து வாழும் இந்நாட்டில், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்கள், கல்வி - விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தைத் தராமல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என விரட்டுவது தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிப்பதாகும். இலங்கையிலிருந்து வந்த ஈழச்சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மைப் போன்ற இரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி இருக்கலாமே? இனவெறி நாடான இலங்கைக்குத் துணைநின்று ஈழத்தாயகத்தை முற்றாகச் சிதைத்தழித்து, தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்கள் ஏதிலியாக காரணமான இந்திய அரசு, இன்றைக்கு தஞ்சம் கேட்டு நிற்கையில், அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி துரத்துவது எவ்வகையில் நியாயமாகும்? குறைந்தபட்சம் அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்காவது செல்ல அனுமதிக்கலாமே? அதைக்கூட மறுப்பது எவ்வகையில் நியாயம்? இந்திய ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு தடுக்கத்தவறி வேடிக்கைப்பார்ப்பது தமிழினத்திற்கு செய்கின்ற துரோகமாகும். இதுதான் தவெக அரசு தமிழர்களை பாதுகாக்கும் முறையா? பெருங்கொடுமை! ஆகவே, ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை இனவாத நாடான இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்குள் தள்ளியதுபோல, தம்பி சுபாஷ்கரனையும் திருப்பி அனுப்பும் முடிவை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
24
453
6
809
21,377
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதமாக கொட்டப்பட்டுள்ள நெகிழி மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அனுமதி பெற்று, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தபோது,
17
424
4
987
14,208
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
#அரசியல்Post | நாதக சார்பில் தூய்மைப் பணி தொடக்கம் #SunNews | #NTK | #Manimutharu | #Seeman
8
167
2
585
16,828
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
ஆவின் எங்கே இருக்கு உங்களுக்கு? ஆவினைத்தான் ஒழிச்சிட்டீங்களே! அதிலிருந்து வந்த வருவாய் நின்று போச்சு. கர்நாடகாவிலிருந்து நந்தினி, ஆந்திராவிலிருந்து திருமலை, குஜராத்திலிருந்து அமுல்... அங்கிருந்து பாலை எடுத்துக்கிட்டு ஆவினை மூடியாச்சு. வருவாய் வர்ற எல்லாத்தையும் மூடிட்டு வெறும் வாயை வச்சுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் வாங்கிட்டு வந்து... 60 ஆண்டுகளா பேரறிஞர் அண்ணா, கலைஞர், அம்மா ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் ஆட்சிக்காலம்... ஊர்பூரா மின்சாரம் போய் சேரல, மின் விளக்கு வரல, மின் கம்பங்கள் ஊன்றப்படல. உற்பத்தியில முதலீடு செஞ்சீங்களா? வாங்கறதுல முதலீடு செய்யறதுல காட்டுற ஆர்வத்தை ஏன் உற்பத்தியில காட்டல? உற்பத்தியில முதலீடு செஞ்சிருந்தா நிலையான தீர்வை எட்டியிருக்கலாம். - செந்தமிழன் சீமான்
3
175
3
331
3,723
Ruthless👌🏾 Dearest TVK voters, As you sow, so shall you reap!
3
92
276
4,466
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
VIDEO | Sivaganga, Tamil Nadu: "Welfare schemes can also amount to bribery," says NTK chief Seeman targetting TVK government on law and order issues. (Full video available on PTI Videos - ptivideos.com) #TamilNaduNews #Sivaganga
1
58
1
140
9,661
இராமநாதபுரம் மாவட்டம் (தொண்டி) மணிமுத்தாறு தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்தார் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள். #NTK_Restoring Rivers
1
50
1
102
1,018
Join us! Interconnecting rivers is against the very nature of existence when cleaning and desilting a river and a water body is all it takes to preserve and protect. NTKs Annan Seeman is to flag off cleaning up of the Manimuthaaru river today. Join us today at Thondi, Ramnad. #NTK_RestoringRivers
35
70
684
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
கால்வாயில் கழிவுநீர் கலக்கும் இடங்களைக் கண்டறிந்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நேரடியாக வெளியேற்றுவதைத் தடுக்க வேண்டும். தேவையான இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்தி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நாள் : 27.10.2026 இடம் : ராமநாதபுரம் ( தொண்டி) தூய்மைப் பணியை தொடங்கிவைக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். #NTK_RestoringRivers @Seeman4TN @NaamTamilarOrg
15
23
420
maps.app.goo.gl/6xForESETpX8… *நாளை மணிமுத்தாறு தூய்மைப் பணியை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடங்கி வைக்க உள்ள இடம்*
27
1
90
845