trravisankar retweeted
Completed my research for today and I found a share with CMP below ₹100 can reach a target of ₹280–₹350 in the next 1.5 years. I will share the names by tonight . Like and follow to support 🙏
trravisankar retweeted
🪔 The Legend of King Bali & The Cosmic Steps of Vamana 🪔
Today marks Balipratipada (also celebrated as Bali Padyami or Diwali Padva), one of the most spiritually profound days of the Diwali festival.
While many associate Diwali solely with the return of Lord Rama to Ayodhya, today honors a story of ultimate surrender, righteousness, and a king who won the heart of the Divine.
Here is the rich history behind today’s celebrations:
✨ The Golden Reign of King Mahabali -
King Mahabali was an Asura (demon) king, but unlike others, he was incredibly wise, generous, and a devout worshipper of the divine. Under his rule, the earth flourished with unprecedented peace, equality, and prosperity. However, his growing power and influence over the three realms deeply worried the Devas (gods), who feared losing their celestial kingdom.
✨ The Descent of the Vamana Avatar -
To restore cosmic balance, Lord Vishnu manifested as Vamana, a young, dwarf Brahmin. Vamana approached King Bali during a grand sacrificial ritual and made a seemingly humble request: just enough land as could be measured by three of his footsteps. Known for his unyielding generosity, King Bali smiled and granted the request, ignoring warnings that this was no ordinary Brahmin.
✨ The Three Cosmic Steps -
Suddenly, the dwarf Brahmin expanded into the cosmic giant Trivikrama.
•With his first step, he covered the entire Earth.
•With his second step, he claimed the skies and heavens.
•With no room left for the third step, King Bali bowed his head in complete humility and offered it to the Lord.
Placing his foot upon Bali’s head, Vishnu pushed him down to Patala (the netherworld).
✨ The Eternal Boon & The Return -
Impressed by Bali's absolute surrender, devotion, and adherence to his word, Lord Vishnu granted him a timeless boon. Bali was allowed to return to Earth once a year to ensure his people were happy, prosperous, and well-governed. This annual return is what we celebrate today!
🏡 How It Is Celebrated Today:
•Rangoli & Effigies:
Homes are decorated with beautiful clay or rice-powder images of King Bali and his wife, Vindhyavali, welcoming his benevolent spirit back into our households.
•Diwali Padva:
In Western India, it marks a deeply personal celebration of love, where husbands present special gifts to their wives.
•New Beginnings:
Businesses open fresh account books, stepping into the traditional New Year (Vikram Samvat) with prayers for wealth and wisdom.
May the story of King Bali remind us to practice generosity, humility, and unwavering faith.
Wishing you all a blessed, happy, and prosperous Balipratipada! 💫✨
#Balipratipada #DiwaliPadva #BaliPadyami #Diwali #IndianMythology #FestivalOfLights #VamanaAvatar
trravisankar retweeted
பராபவ
இன்றுi ஐப்பசி 24 இன்று செவ்வாய்க்கிழமை இன்று அனுஷம் நட்சத்திரம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா தரிசனம்
நமஸ்காரங்கள
இந்த நாள்
இனிய நாளாக
நல் வாழ்த்துக்கள்🙏👆
trravisankar retweeted
#மகாபெரியவா
அரிய தத்துவத்தை விளக்க மகா பெரியவா சொன்ன கதை.
'கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளின் பெற்றோர், பந்துக்களுக்குள்ளேயே ஒரு முறைப் பையனைப் பார்த்து, அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்தனர். ஆனால், அந்தப் பெண்ணோ, ''புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்'' என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், ''உன் இஷ்டப்படியே செய்!'' என்று விட்டுவிட்டார்கள்.
அந்தப் பெண், 'புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். எனவே, அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க்கொண்டிருந்தாள்.
ஒருநாள், ராஜா பல்லக்கில் போய்க்கொண்டு இருந்தபோது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிப் போனான். இதை அந்தப் பெண் பார்த்தாள். 'அடடா! ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று எண்ணி இத்தனை நாளும் ஏமாந்துவிட்டேனே! ராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் சாமியார் போல் இருக்கிறதே! கல்யாணம் பண்ணினால் இந்தச் சாமியாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்து, அந்தச் சாமியார் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்துவிட்டாள்.
ஒருநாள், சாமியார் தெருக் கோடியில் ஓர் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையார் முன் நின்று நெற்றியில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தாள். 'சரி சரி, சாமியாரைவிடப் பெரியவர், உயர்ந்தவர் இந்தப் பிள்ளையார்தான். அதனால் பிள்ளையாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டாள். சாமியாரோடு போகாமல், அந்தப் பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டாள்.
அவளைத் தவிர, அந்தப் பிள்ளையாரிடம் வேறு யாரும் அடிக்கடி வருகிற இடமாக அது இல்லை. அது கோயில்கூட இல்லை; வெறும் மரத்தடிதான். அதனால், தெருவோடு போகிற நாய் ஒன்று அந்தப் பிள்ளையார் மேலே காலைத் தூக்கிக்கொண்டு 'ஒன்றுக்கு’ப் போயிற்று. அதைப் பார்த்தவுடன், 'அடடா, இந்தப் பிள்ளையாரையும்விட உயர்ந்தது இந்த நாய்தான் போலிருக்கிறதே!’ என்று, அந்த நாயைத் துரத்திக்கொண்டு போக ஆரம்பித்துவிட்டாள்.
வழியில், அந்த நாய் மீது ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான். அது 'வள்... வள்’ என்று குரைத்துக்கொண்டு முன்னிலும் வேகமாக ஓடியது. ''ஏண்டா அந்த நாயை அடித்தாய்?'' என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்துக்கொண்டு அதட்டினான்; முதுகில் ஒன்று வைத்தான். 'நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணினேன்; அவனையே அதட்டி அடிக்கிற இவன்தான் எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தவன்’ என்று தீர்மானம் பண்ணிவிட்டாளாம் அந்தப் பெண்.
இப்படிக் கடைசியில் அவள் கண்டுபிடித்த அந்த ஆசாமி வேறு யாருமல்ல; அவளுடைய அப்பா- அம்மா பார்த்து, முதலில் அவளுக்குத் தீர்மானம் பண்ணியிருந்த பிள்ளைதான்!
'வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான், இருக்கிறான்’ என்று எண்ணிக்கொண்டே சுற்றினாள். கடைசியில், அவன் அவளுக்கு அருகிலேயே இருந்தவனாகப் போய்விட்டான். இப்படி, லௌகிகமாக ஒரு கதை சொல்வர்.
''எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே! தெரியாத வரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். 'தத்தூரே தத்வந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம் என்று ஸ்ருதி சொல்கிறது.
📷
ஹொரைஸன் என்பார்களே, தொடுவானம்; இங்கிருந்து பார்த்தால் ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவதுபோல இருக்கும். அங்கே ஒரு பனை மரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 'அந்தப் பனை மரத்தடிக்குப் போனால் பூமியும் வானமும் சேருகிற இடத்தைப் பிடித்துவிடலாம்’ என்று இங்கே இருந்து பார்க்கிறபோது நமக்குத் தோன்றும். ஆனால், அங்கே போனால், தொடுவானமும் அங்கிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் போய்விட்டது போலத் தெரியும். நாம் போகப்போக அதுவும் போய்க்கொண்டே இருக்கும். 'இந்தப் பனை மரத்தின் கீழ் வந்து நின்றால் தொடுவானம் வெகுதூரத்திற்குப் போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும்’ என்று போய்க்கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா? இந்தப் பனை மரத்துக்கு வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன், அது நம்மைவிட்டு இன்னும் வெகு தூரம் போய்விட்டது. ஆகவே, அது எங்கே இருக்கிறது? நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. நீ இருக்கிற இடம்தான் அது. அப்படி 'அது’, 'அது’ என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில் இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே- உன் உள்ளேயே இருக்கிறார்; நீயே அதுதான் என வேதம் உணர்த்துகிறது.
'நீயே அது’ என்பதை 'தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. 'தத்வம்’ என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. 'த்வம்’ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. 'தன்மை’ என்பது ஒன்று. 'நீ’ என்பது இன்னொரு அர்த்தம். தத்-த்வம் அஸி என்னும்போது 'தத்-அது, த்வம்-நீ(யாக), அஸி-இருக்கிறாய்’ என்று அர்த்தம்.
நான்... நான் என்று எதை நினைத்துக்கொண்டிருக்கிறாயோ, அதுதான்- அந்த அறிவுதான் ஸ்வாமி. அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால் ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. 'நான் என்று அறிகிறேன், நான் என்று நினைக்கிறேன், அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து கொண்டிருக்கிற 'தத்’ என்று நினைக்கிறாயே, அந்த 'தத்’தும் நீயும் ஒன்றுதானப்பா!’ இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.'
என்ன அருமையாகச் சொல்லியிருக்கிறார், மகா பெரியவா! நாம்தான் உண்மையை அறிந்து தெளிய வேண்டும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
trravisankar retweeted
Sometimes life teaches us the most beautiful lessons through the people we cross paths with. After nearly 13 years, one conversation made me pause. Someone who’s carried loss, held on to dreams, still wishing for ordinary happiness. It reminded me that everyone has their own battles and their own hope for joy. Life’s too brief to stay caught in who said what. Let love be bigger than ego. Let’s reach out, make peace, celebrate each other’s happiness. We are here for such a short time, let’s not spend it holding on to things that keep us apart. Let’s make room for love, forgive, move forward and live.
🪔 Wishing everyone in India a very happy Diwali. May India be victorious over the foreign forces trying to destabilize, divide, and destroy the country. And return to its former glory like Sri Ram won a difficult battle over Ravan and returned home glorious.
🇮🇳 Jai Bharath.
trravisankar retweeted
My plan was to buy a Maruti Alto for self this Deepawali
But than a call came from @official_dgar HQ9 Manipur requesting 2nd big bus for BPL kids
Today a 51 seater school bus fully paid delivered to small kids at assam Rifles public school
@narendramodi @anandmahindra
trravisankar retweeted
🌿 யாரிடம் நாம் அதிகம் பேசி பழகினோமோ காலம் அவர்களிடமிருந்து நமக்கு விலக கற்றுத் தருகிறது... 🌿 புரிந்து கொண்ட நாட்களை விட, புரியாமல் கடந்த நாட்கள் தான் இங்கு அதிகம் இருக்கின்றது... 🌿 புரிந்து கொண்ட வாழ்விற்கு போதுமென்பதே சிறந்த அனுகுமுறையாகும்... 🌿 நல்லதை தெளி... 🌿 நல்லதே நடக்கும்... *ஸ்ரீ மஹா பெரியவா அனுக்ரஹம்* 🙏 *இனிய காலை வணக்கம்*🙏
trravisankar retweeted
#மகாபெரியவா
வேதம் தழைத்தோங்க பெரியவா மேற்கொண்ட பணிகளின் தொகுப்பு
திருப்பதியிலிருக்கும் ஸ்ரீசந்திரசேகர கனபாடிகள் சிறுவயதில் தான் வேதம் படிக்கும்போது மஹா பெரியவாளின் மிக அருகாமையில் பாராயணம் செய்த அனுபவத்தையும் அப்போது பெரியவா வேதபாலகர்களிடம் காட்டிய பரிவிற்கு உதாரனமாக சில சம்பவங்களையும் சொல்கிறார்.
இவருடைய தந்தை சுத்த லௌகீகமானவராக மீசை, பேண்ட் ஷர்ட் என்று இருந்தவராம். ஒருமுறை சென்னை மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் பெரியவா உபன்யாசத்திற்கு போனாராம்.
அன்று பெரியவா வேதம் நலிந்துபோய் கொண்டிருப்பதையும் பிராமண குடும்பத்திலிருந்து ஒரு பையனையாவது வேதம் கத்துக்க அனுப்பணும் அப்பத்தான் நம் கலாசாரம் 'கெடாம பாதுகாக்க முடியும் என்று சொன்னதை கேட்டதும் இவருக்கு உறுத்தல் ஏற்பட்டது.
உடனே அடுத்த நாளே தன் மகன்களில் ஒருவனுக்கு சிகை வைத்து பெரியவாளிடம் கொண்டுவிட்டு “இவனை வேதம் படிக்க விட்டுடறேன்" என்று கூறியுள்ளார்.
அதற்கு, பெரியவா இப்படி ஒரு எண்ணம் வர காரணம் என்ன என்று கேட்டதற்கு பெரியவா உபன்யாசத்தை கேட்டுவிட்டு தான், இப்படி முடிவு செய்ததாக கூறினாராம்.
ஓஹோ என் உபன்யாசம் கூட ஒரு வேதபாடசாலை குழந்தை கிடைக்க வழி பண்ணியிருக்கோ” என்று கேட்டு விட்டு அதோடு விடாமல் "சரி பையன் குடுமி அப்பா கிராப்போ" என்றும் குறும்பாக கேட்டுள்ளார்.
உடனே இவருடைய தகப்பனார் தானும் சிகை வைத்து பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு மிக ஆசாலசீலராக மாறிவிட்டாராம்.
சந்திரசேகர கனபாடிகள் சிறுவயதில் வேதம் பயின்று கொண்டிருந்தபோது இவருடன் இன்னும் சில மாணவர்களை அவருடைய ஆசிரியர் கார்வேட் நகருக்கு வேதபாராயணம் செய்ய அழைத்து போனார்.
அப்போது கார்வேட் நகரில் மஹாபெரியவாளும் புதுபெரியவாளும் இருந்தனர். பாராயணம் நடந்து கொண்டிருந்த போது நவராத்திரி வர அதற்கு புது பெரியவா பெங்களூருக்கு சந்திரமௌலீஸ்வரர் பூஜையுடன் செல்வதாக இருந்தது.
அவருடன் வேதம் நன்றாகச் சொல்லும் சந்திரசேகரனையும் புது பெரியவா பெங்களுர் அழைத்துச் செல்ல இருப்பதாக கேள்விப்பட்டதில் சிறுவனாயிருந்தவர் பெங்களூர் நகரத்துக்கு போகப்போகிறோம் என்று ஆசையோடு காத்திருந்தார்.
ஆனால் இவரையும் இன்னொரு பையனையும் மஹாபெரியவா கார்வேட் நகரிலேயே இருக்கச் சொல்லி விட்டார். அதனால் சிறுவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக போய்விட்டதாம்.
இப்படி ஏமாற்றமடைந்த நிலையில் பாராயணம் செய்து கொண்டிருந்த இருவரிடம் பெரியவா வந்து "ஏதாவது சாப்பிட கொடுத்தாளா?” என்று பரிவாக கேட்டாராம் . இவர்கள் இல்லை என்று சொன்னவுடன் "உடனே குழந்தை ரெண்டு பேருக்கும் ஏதாவது பண்ணி கொடுங்கோ" என்று இப்படி பெரியவாளின் வாஞ்சை ஆரம்பமானதாம்.
அப்போது மெலட்டூர் ராமசாமி ஐயர் தன் மனைவியுடன் வந்து பெரியவாளை நமஸ்கரித்து அவர்கள் இருவரும் புது பெரியவாள் பெங்களூரில் நடத்தும் நவராத்திரி பூஜைக்கு கைங்கர்யம் செய்ய போவதாகவும் அதற்கு உத்தரவு கேட்டும் வேண்டிக் கொண்டனர்.
"நீங்க பெங்களூர் ஒன்னும் போகவேண்டாம். இங்கே இந்த ரெண்டு குழந்தேl என்கிட்டே நவராத்ரி பாராயணம் செய்யறுதுகள், அதுகளுக்கு தினமும் சமைச்சு போட்டுண்டு இங்கேயே இருங்கோ. அதுதான் பெரிய புண்ணியம். நீங்க தங்கறத்துக்கு ஒரு வீடை ஏற்பாடு பண்ணிதர்றேன்" என்று பெரியவா இந்த வேதபாலகர்கள் இருவருக்கும் பிரத்யேகமானதோர் கவனத்தை தந்ததில் இவருக்கு ஆறுதலாயிருந்தது.
தினமும் முதல்கால பூஜை முடிந்ததும் இருவரையும் சாப்பிட போகச் சொல்லி விடுவாராம். சாப்பிட்டு வந்த குழந்தைகளிடம் “இன்னிக்கு என்ன சமையல்... என்ன ஸ்வீட் போட்டா என்று ஒரு பாட்டனார் பேரக்குழந்தைகளிடம் கேட்பது போல் கேட்டு தெரிந்து கொள்வாராம்.
"எத்தனை ஸ்வீட் போட்டா?” என்று கேட்டு விட்டு இவர்கள் "ஒண்னுதான்" என்று சொன்னதும் "நாளையிலிருந்து ரெண்டு போட சொல்றேன்” என்பாராம். நாங்கள் பெங்களூர் செல்ல முடியவில்லையே என்று அசட்டுதனமாக நினைத்தது அந்த நவராத்திரி பத்து நாட்களும் மஹாபெரியவாளின் வாஞ்சையை அத்தனை அருகாமையில் அனுபவித்த ஆனந்தத்திற்கு ஈடாகுமா என்று இப்போது நினைத்து மகிழ்கிறார்.
காஞ்சிபுரத்தில் வேதபாடசாலையில் படிக்கும் போதும் பெரியவா வேதபாடசாலை பாலகர்களிடம் கொண்ட பரிவை இவர் பார்த்துள்ளார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
trravisankar retweeted
🌹தனக்கு யார் தயவும் தேவையில்லை என்ற எண்ணத்தை பணம் உருவாக்கும்........ 🌹ஆனால் “நோயும்" “தனிமையும்” அந்த எண்ணத்தைச் சுக்குநூறாக்கும்.....!
🌹பணம் உங்களை உயரத்தில் வைக்கும், ஆனால் கீழே விழும் போது பிடிக்க ஆள் இருக்கிறார்களா என்பதை பணம் சொல்லாது.....!!
🌹பணம் வந்தால் சொந்தங்கள் விலகும் என நினைப்போம், உண்மையில் பணம் போனால் தான் யார் சொந்தம் என தெரியும்.....!!
🌹பணம் இருக்கும் போது பலருக்கு கடவுள் கூட தேவையில்லை எனத் தோன்றும், ஆனால் பணம் இல்லாத போது கடவுளைத் தவிர வேறு யாரும் இல்லை என புரியும்.....!!!💐
trravisankar retweeted
Your circumstances might be shit, your childhood might’ve been tough, your finances might be giving you a hard time, misery might’ve just chosen you. But what happens after that, what you make yourself believe, what you choose to do, that's all on you. Misery might’ve chosen you, but it’s you who chose to stick with it.
trravisankar retweeted
We have all made decisions we wish we could take back. The wrong investment. The wrong business decision. The relationship we mishandled. The opportunity we missed.
But a mistake is not a life sentence.
Take responsibility. Learn the lesson. Make amends where needed. Then move on. Regret has value only when it changes the way you live.

























