ஆளும்கட்சியாக யார் இருந்தாலும் அவர்களை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளின் கடமை.
அதற்கு பதவியில் உள்ளவர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும்.
மாறாக வழக்கு போட்டு மிரட்டக்கூடாது.
கடந்த ஆட்சியில் இவ்வாறு வழக்கு போட்டு மிரட்டிய திமுக வின் இன்றைய நிலையை முதல்வர் விஜய் உணர வேண்டும்.
"சிறையில்இருந்து கைதிகள் தப்பியுள்ளனரே?"
"சீமான் பெட்டி வாங்கிவிட்டார்"
"கலெக்டருக்கு தொல்லை கொடுத்த எம்எல்.ஏ மீது எப்ப நடவடிக்கை ?"
"சீமான் பெட்டி வாங்கிவிட்டார்."
"சரி.சீமானை கைது செய்து அந்த பெட்டிகளை கண்டு பிடிக்கலாமே?"
"அதெல்லாம் தெரியாது. சீமான் பெட்டி வாங்கிவிட்டார்"
தோழர் சண் தலைமையிலான இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த தோழர் இக்பால் அவர்களின் நூல் வெளியீடு எதிர்வரும் 22.11.2026யன்று நடைபெறுகிறது.
விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
போராளிகளை மறக்க வேண்டும் என்போர்
போராளிகளை பயங்கரவாதிகள் என்போர்
மக்கள்தான் போராளிகள்
போராளிகள்தான் மக்கள்
என்பதை எப்போது உணர்வார்கள்?
பெண் சயிக்கிள் ஓடினாலே ஆச்சரிமாய் பார்த்த சமூகத்தில், கனரக வாகனங்களை மட்டுமல்ல போர் இயந்திரங்களையே லாவகமாக ஓட்டிக் காட்டியவர்கள்
இவர்களை மறக்க வேண்டும் என இப்ப சிலர் மக்களுக்கு சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
அவர்களுக்கான பதிலை நவ- 27 இல் மக்கள் வழங்குவார்கள்.
“மக்கள் மத்தியில் தத்துவத்தை விளக்குவதை புரட்சியாளராகிய நாங்கள் ஒருபோதும் நிறுத்த மாட்டோம். ஏனெனில் அதனை மக்கள் புரிந்துகொள்ளும்போது அவர்களால் எம்மை பின்தொடராமல் இருக்க முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம்” - தாமஸ் சங்காரா
எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனமே எமது ஆயுதம்.
எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதமே எமது விமர்சனம்
-தோழர் மாவோ
குரங்குகளால் ஏன் காரை ஓட்ட முடியவில்லை என்று நொந்துகொள்வதா? அல்லது குரங்குகளின் கையில் காரை ஒப்படைத்தவர்களை நொந்துகொள்வதா?
நீதி – சர்க்கஸ் குரங்கை அரண்மனையில் உட்கார வைத்தால் அது அங்கேயும் வித்தைதான் காட்டும்.
இந்த பதிவு இன்றைய தமிழக ஆட்சியை நினைவூட்டினால் நான் பொறுப்பல்ல.
இதுவரை வெல்லவில்லை என்பதற்காக இனியும் வெல்ல முடியாது என்று நினைத்து இவர்கள் ஒருபோதும் ஒதுங்கிவிட மாட்டார்கள்
இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மக்கள் தமது கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் விதைத்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்களுடைய அரசியல் அடுத்த சந்ததிக்கானது
திமுக ஆட்சியில் இருந்தபோது தவறுகளை சுட்டிக்காட்டினால் இவரை பாஜகவின் Bடீம் என பதில் அளித்தார்கள்.
இப்போது தவெக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும்போது இவர் திமுக விடம் பெட்டி வாங்கிவிட்டதாக பதில் அளிக்கின்றனர்.
ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு அவதூறு ஆகும்.
ஒருபுறம் திரள்நிதி வாங்கிறார் என கிண்டல் செய்கின்றனர். மறுபுறம் திமுகவிடம் பெட்டி வாங்கிவிட்டார் என்கின்றனர்
ஆயிரம் கோடி ரூபாவில் நடந்த மாறன் மகள் திருமணத்தை அல்லது துரைமுருகன் பேத்தி திருமணத்தை கேட்காதவர்கள்
இவர் வீட்டுக்கு வாடகைகட்ட பணம் எங்கிருந்து வருகின்றது எனக் கேட்கின்றனர்
புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என ஒரு அமைச்சர் கூறினார்.
தலைமைச் செயலருக்கு மட்டுமன்றி மத்திய அரசுக்கும் கலெக்டர் புகார் அளித்துள்ளார்.
இனியாவது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
யாழ்ப்பாணத்தில் திலீபன் சிலையை அகற்றிய சிங்கள அரசு,
கொழும்பில் ரோகண விஜயவீராவுக்கு உருவப்படம் வைத்து நினைவு கூருகிறது.
தமக்காக மரணித்த மாவீரர்களை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா?
திலீபனுக்கு ஒரு நியாயம். விஜயவீராவுக்கு இன்னொரு நியாயம்? இதுதான் சிங்கள அரசின் நியாயமா?
வீட்டில் கரப்பான் பூச்சியை அடிப்பதற்கு அண்ணாவைக் கூப்பிட்டவர்கள் ,
களத்தில் சக தோழியை காப்பாற்ற சுமந்து செல்லும் வலிமை மிக்கவர்களாக அவர்களை மாற்றியது போராட்டம்.
ஆம். போராட்டம் மகத்தானது
பன்றிகள் பல குட்டிகள் போடலாம். ஆனால் யானை ஒரு குட்டி போடும்போதுதான் பூமி அதிர்கிறது.
எமக்காக பல அதிர்வுகளை நிகழ்த்தியவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்
ஒரு பூனையை தப்பி ஓட முடியாதபடி நாலு பக்கமும் அடைத்துவிட்டு போய் எதிரில் நின்று பார், அங்கு ஒரு புலியை காண்பாய்.
முதலில் அரசை மிரட்டினார்கள்.
இப்போது மகாநாயக்க தேரர்களை மிரட்டுகின்றனர்.
அடுத்து என்ன புத்தரை மிரட்டுவார்களா?
தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை இவர்கள் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறார்கள்?





















