சேதுபதி retweeted
தமிழ்நாட்டில் நாம்தமிழர் கட்சியை தவிர வேறு எவனுக்கும் அருகதை இல்லை ஈழத்தமிழர்கள் மற்றும் மேதகு பெயரை உச்சரிக்க..
@_ITWingNTK @Seeman4TN @TVKVijayHQ
சேதுபதி retweeted
#BREAKING | முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர் நியமனம்!
#NSRajaSubramani | #LieutenantGeneralNSRajaSubramani | #CDS
🤖 Made with AI
சேதுபதி retweeted
ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம்!
ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது. ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே ஆகும். அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்காக பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க்கும் செயலேயாகும். இந்தப் பெருநிறுவனங்கள் ஆந்திராவில், கர்நாடகாவில் அம்மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்கும் முடிவெடுக்குமா? புறக்கணித்த பிறகு தொடர்ந்து அம்மாநிலங்களில் இயங்கிடத்தான் முடியுமா?
திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழித்து, குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குத் தரப்படும் பாகுபாட்டையும் நெருக்கடியையும் தவிர்த்து அனைவருக்கும் சரியான சமமான வாய்ப்பை வழங்குவதற்கு, தமிழ்த்திரைப்படங்கள் திரையிடலுக்குத் திரையரங்கங்கள் ஒதுக்குவது குறித்த நியாயமான கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தடைகளையும், நெருக்கடிகளையும் சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ‘சல்லியர்கள்’ போன்ற தமிழர் வீரவரலாற்றை விளக்கும் திரைப்படங்களுக்குப் பேராதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்பெறச் செய்வதன், இனி இதுபோன்ற திரைப்படங்களைப் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டியது உலகத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெருங்கடமையாகும்.
ஆகவே, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் கடந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஈக வரலாற்றைச் சொல்லும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ottplus.in/v/17PgoU1b5m
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சேதுபதி retweeted
Rule no 1.. நம்மல ஒருத்தன் அசிங்கமா பேசுனா.. அவன அடிக்க கூடாது.. அவன் தலைவன அடிக்கணும்.
Rule no 2: strictly follow rule no 1
சேதுபதி retweeted
கருணாநிதியால் 'சுமதி நாயுடு'வாக இருந்த நான் தமிழச்சி ஆனேன்... 'தென்னரசு நாயுடு காரு' தங்கம் தென்னரசு ஆனார்...
ஆஹா பேஸ் பேஸ்...😊
சேதுபதி retweeted
Read this !
The hand of a sanitary worker—his skin severely damaged by constant exposure to bleaching powder, which is sprinkled along the corners of roads. Many workers suffer from chronic illnesses caused by the absence of proper protective equipment such as gloves and masks.
DMK’s neglect of sanitation workers’ protests exposes its betrayal of social-justice principles, Sujatha Sivagnanam (@sujajourno) reports: caravanmagazine.in/labour/ch…
சேதுபதி retweeted
ஆறு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து தீயிட்டு எரித்து கொன்றதற்கு ஆதாரம் இல்லையா ?
வெளியே பிணையில் வந்தவன் தன் தாயையும் கொன்றதற்கு ஆதாரம் இல்லையா?
என்னங்க சார் உங்க சட்டம் ?
#JUSTIN || பா*யல் பலா*கார வழக்கு - தஷ்வந்த் மரண தண்டனை ரத்து | #Dhashwanth | #Judgement | #DeathPenalty | #CapitalPunishment | #PolimerNews
சேதுபதி retweeted
ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை வேறு ஒரு வழக்கில் பொய்யாக கைது செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளது காவல்துறை !
பொய் வழக்கு என அறிந்து கைது செய்ய மறுத்துள்ளார் நீதிபதி !
#release_airportmoorthy
சேதுபதி retweeted
உன் இடத்தினை உறுதி செய்!
இனத்தை முன்னிறுத்து!
இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதையற்றவன்!
என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக ஆவணி 29ஆம் நாள் (14.09.2025) மாலை கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’ மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
youtu.be/iREZ9wJN8nY
சேதுபதி retweeted
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ள திமுக அரசின் பழிவாங்கும்போக்கு கொடுங்கோன்மையின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்து தண்டிக்க முனையும் திமுக அரசின் பழிவாங்கும்போக்கு அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். ஆட்சிக்கு வந்த கடந்த நான்கரையாண்டுக் காலத்தில் திமுக அரசிற்கு எதிராகக் கருத்துகளைப் பகிரும் எதிர்க்கட்சியினரைப் பொய் வழக்குகள் மூலம் ஒடுக்க நினைக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்திய ஒன்றியத்தில் மதவாத பாஜக அரசால் அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் பத்திரிகையாளர்கள், மனித உரிமை போராளிகள் ஆகியோர் மீது எத்தகைய கொடூரமான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் ஏவப்படுகின்றனவோ அதற்கு சற்றும் சளைக்காமல், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசால் காவல்துறை, சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்தியும் அடக்குமுறை கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன.
திமுக ஆட்சியில் நிலவும் அதிகார அத்துமீறல்களையும், சட்டம்-ஒழுங்கு சீரழிவினையும் ஊடகம் வாயிலாகத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைத்த புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை விடுத்து, தாக்குதலுக்கு உள்ளான அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீதே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு புனைந்து கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. அக்கொடுமையின் நீட்சியாகத் தற்போது திமுக அரசு குண்டர் சட்டத்தினைத் தொடுத்துள்ளது கொடுங்கைகோன்மையின் உச்சமாகும்.
பேச்சுரிமை, கருத்துரிமை என்று மேடைக்கு மேடை சனநாயக மாண்புகள் பற்றி பாடமெடுக்கும் திராவிடத் திருவாளர்கள், தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்குறைகள், நிர்வாகத் தவறுகள், ஊழல் முறைகேடுகள் குறித்தான விமர்சனங்களைக் கூட ஏற்க மனமில்லாமல், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் மீது பொய்வழக்கு புனைந்து அடக்கி ஒடுக்க முயல்வது திமுகவின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
பொய்ப்புகாரை வழக்காகப் பதிவு செய்து, கைது செய்து சிறையிலடைத்து ஊடகவியலாளர்களையும், எதிர்க்கட்சியினரையும் மிரட்டுவது என்பது, தமது அரசுக்கும், அதன் செல்வாக்குமிக்க அதிகார மையங்களுக்கும் எதிராக எவரும் எதிர்கருத்தோ, விமர்சனமோ செய்துவிடக்கூடாது என்ற திமுகவின் நடவடிக்கைகள் எதேச்சதிகார மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. திமுக அரசு எது செய்தாலும் சரி என்று ஆதரவு தாளம் போடும் ஒரு சில ஊடகங்களையும், ஒத்து ஊதும் கூட்டணி கட்சிகளையும் போலவே அனைத்து எதிர்க்கட்சிகளும் இருக்க வேண்டும் என்ற திமுக அரசின் எதேச்சதிகாரமனப்பான்மையால், தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் முற்று முழுதாக காவு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரம் நிலையானது எனும் மமதையில் திமுக அரசின் இத்தகைய ஆட்சி அதிகார அடக்குமுறைகளுக்கும், ஆணவப்போக்கிற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஆகவே, திமுக அரசு புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுக்கும் கொடும் முடிவை கைவிட்டு, அவர் மீதான பொய்வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சேதுபதி retweeted
திமுக அரசின் கொடுங்கோன்மையின் உச்சம் இந்த குண்டர் சட்டம் !
குண்டர் சட்டங்கள் தமிழ்நாட்டில் மிகத்தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இல்லை !
தன்னை தாக்க வந்த பொறுக்கிகளிடம் இருந்து தற்காக்க போராடியதற்கு குண்டர் சட்டமா ?
தமிழக அரசு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் நீதிமன்றத்தில் நிச்சயம் அசிங்கப்படும்!
#release_airportmoorthy
சேதுபதி retweeted
🔴தற்போது நேரலையில்...
'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர் | 14-09-2025
youtube.com/live/ama5fiVuGk8… xitter.cf/i/broadcasts/1eaKbjDMj…
சேதுபதி retweeted
தமிழரின் வேலைகளை பறித்து வடவருக்கு கொடுக்கும் கொடூர ஆட்சியாம்..
சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்...
@mkstalin இப்போ வாய திறங்க 😏🤬
#NTK_Demands_InnerlinePermit
சேதுபதி retweeted
இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்.. வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய மீனவர்கள்...
#India | #Fisherman | #Srilanka | #Video
சேதுபதி retweeted
நேற்று கூட்டம் முடிந்து வீடு திரும்பும்போது வாகனத்தை வழிமறித்து அடித்து நொறுக்கிய நபர் இவர்தான்.
இதுவரை வழங்கு பதிவு செய்து சிறையில் அடைக்கவில்லை! காரணம் ஆளுங்கட்சியின் அழுத்தமா?!
சாலையில் வாகனங்களை தாக்கினால் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கு போட்டு சிறை படுத்துவார்கள்!
ஆனால் இந்த வழக்கில் கொலை முயற்சி உட்பட பல பிரிவுகள் போடலாம் ஆனாலும் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றால் எப்படி?!
சட்டம் ஒழுங்கை இப்படித்தான் பாதுகாக்குமா காவல்துறை?! இல்லை யாரோ யாரையோ தாக்குறாங்க நமக்கு என்ன என்று இருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?! @mkstalin
சேதுபதி retweeted
*முக்கிய செய்தி*
11.09.2025 வியாழக்கிழமை அன்று திருச்சி திருவரங்கம் சட்டமன்ற தொகுதி பெட்டவாய்த்தலை பகுதியில்
பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை முடித்துவிட்டு சென்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் *அசுரன் திரு.சரவணன்* மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு.பிரபு தனபாலன்*
வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் *திரு.சுரேஷ்* மற்றும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் *திருமதி.கவிதா*
வணிகர் பாசறை பொறுப்பாளர் *திரு.கண்ணன்* ஆகியோர் சென்று வாகனத்தின் கண்ணாடி *திருட்டு தி.மு.க* வின் தூண்டுதலின் பெயரில் குண்டர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
கருத்தியலால் மோத துப்பில்லாத திமுக இதுபோன்ற கேவலமான வேளையில் ஈடுபட்டுள்ளது...










































