Pinned Tweet
ஓட்டுக்காக சேரியைத்தேடி ஆயிரம் தலைவர்கள் வருகிறார்கள்.ஆனால் சேரிக்கு ஓர் பிரச்சினை என்றால் இன்று வரை #எழுச்சிதமிழர் @thirumaofficial மட்டுமே வருகிறார்!
#சாதி_ஒழிப்பே_மக்கள்_விடுதலை
பாஜக- ஆர்எஸ்எஸ் சங்கபரிவார கும்பலின் சதி.
-சமூகநீதித் துறை அமைச்சர் வன்னிஅரசு.விசிக.
#thiruma_army
16
சாதிவெறி குற்றவாளிகளை கைது செய்ய திராணி இல்லாத காவல்துறை நீதி கேட்டு போராடுபவர்களை ஒடுக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
#thiruma_army
1
56
அரியலூர் தத்தனூர் கீழவெளி அரசு பள்ளியில் தலித் ஆசிரியருக்கு நேர்ந்த சாதியக் வன்கொடுமையை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் .
#thiruma_army
3
129
Thiruma Army retweeted
20.11.2026 | ஹைதராபாத்
ஹைதராபாத்தில் நடைபெற்ற ABP News நிகழ்வில், தெலுங்கானா முதல்வர் திரு. ரேவந்த் ரெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர் ஆகியோர் முன்னிலையில் பங்கேற்று, தீபம் ஏற்றி நிகழ்வைச் சிறப்பித்தார் சமூகநீதித்துறை அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள். 💙❤️
Thiruma Army retweeted
VCK is the only party in TN voicing out for dalits, minorities and downtrodden. Strong roots of VCK derail all the plans of Sangis evil agenda of disturbing social harmony of TN. No party can oppose sangis as VCK. Proud to be a supporter of VCK
அரியலூர் அரசு பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த சாதிய வன்கொடுமையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.
#thiruma_army
அரியலூர் தத்தனூர் கீழவெளி அரசு பள்ளியில் தலித் ஆசிரியருக்கு நேர்ந்த சாதியக் வன்கொடுமையை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் .
அங்கனூர் சிவா
#thiruma_army
திமுக தலைவர் ஸ்டாலின், தவெக ஆட்சி ஒரு மாதம் கூட நீடிக்காது, மூன்று மாதம் நீடிக்காது, பிறகு ஆறு மாதம் கூட நீடிக்காது என்றார். தற்போது ஆறு மாதம் கழித்தும் தவெக ஆட்சி நீடிக்கிறது. திமுக தோல்வியடைந்த நிலையில் தங்களுடைய ஆசையை வெளிப்படுத்துகின்றனர்.
-பெ.சண்முகம். சிபிஐ(எம்)
Breaking News | Thiruma army
மதுரை திருப்பரங்குன்றத்தில் விசிக சார்பில் இன்று நடைபெறும் மத நல்லிணக்க பேரணிக்கு காவல் துறை தடைவிதிப்பு.
#thiruma_army
🤖 Made with AI
அரசியலுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறேன்.
-தலைவர் தொல். திருமாவளவன்.விசிக.
#thiruma_army
பால பிரஜாபதி அடிகளார் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம்.
-தலைவர் எழுச்சித் தமிழர்.
#thiruma_army
தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார் தவெக அமைச்சர் முகம்மது பர்வேஷ்.
#thiruma_army
Thiruma Army retweeted
#வன்னி_மண்ணுக்கு
சென்று போரில் பாதிக்கப்பட்ட
பிள்ளைச்செல்வங்களுக்கு
துவிச்சக்கர வண்டி வழங்கி
கார்த்திகை விழாவிலும்
பங்கேற்று
தமிழ்நாடு திரும்பிய
தமிழ்த்தேசியப்போராளி
அண்ணன் @thirumaofficial அவர்களை வரவேற்றோம்.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
21.11.2026
இன்னமும்
என் இனமக்கள்
வேதனைத் தீயில்
வேகுவாரா?
எங்கும் செருப்பணியாமல்
ஏங்குவாரா?
இரட்டைக்குவளையில்
இழிவுற்று நோகுவாரா?
என இரைந்து கேட்ட
எங்கள் திருமா
இன்னொரு சேகுவாரா...!
-காவிய கவிஞர் வாலி.
#thiruma_army
Thiruma Army retweeted
திருப்பரங்குன்றம் வழக்கு:
_____________________
உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது!
மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு
இது வழிவகுக்கும்!
தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்!
_______________________________
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
______________________________
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது.
எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது.
அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
“ நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும்
(1/2)
Thiruma Army retweeted
#எச்சரிக்கை திருப்பரங்குன்றத்தில்
இதுவரை நடைமுறையில் இல்லாத நில அளவைக்கல்லில்
தீபம் ஏற்றக்கூடாது என்பது தான் விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தின் நிலைப்பாடு.
தர்கா அருகில் உள்ள நில அளவைக்கல்லில் ஏற்றுவதன் மூலம் சங்பரிவாரக்கும்பலின் வன்முறைக்கே வழிவகுக்கும்.
ஏனென்றால்,
சங்பரிவாரக்கும்பலின்
கடந்த கால வரலாறு அப்படிப்பட்டது.
சனாதனத்தை நிலை நிறுத்த எந்த வன்முறையையும் நடத்த தயாராகும் கும்பல்.
அப்படிப்பட்ட சனாதனிகளின் முயற்சி தமிழ்நாட்டில் முறியடிக்கப்படுவதற்கு சிறுத்தைகள் களத்தில் நின்றதும் வரலாற்று சாட்சியம்.
ஆகவே,திருப்பரங்குன்றத்தில்
மட்டுமல்ல; தமிழ்நாடு முழுக்க அமைதி பாதுகாக்கப்பட வேண்டுமானால்,
கோவில் மரபையே நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதாவது,நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றக்கூடாது.
இது தான் விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
21.11.2026
நீ உரையாற்றினால்
ஈர்க்குச்சி தீக்குச்சி ஆகும்...!
தென்காசி சிவகாசியாகும்...!
வைக்கோல் வாளாகும்...!
வன்கொடுமை தூளாகும்...!
தீண்டாமைக்குத்
தீண்டாமையை வைத்தவன்!!
சாதியத்தின் வாயை
சமத்துவ ஊசியால் தைத்தவன்!
அந்த இரண்டுகால்
சிறுத்தையின்
இனிய பெயர்தான் திருமா!
-காவிய கவிஞர் வாலி.
அய்யா .தமிழ்க்கதிர் அவர்களின் மறைவையொட்டி நமது கட்சியின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
#thiruma_army
நவ-20 |சென்னை
விசிக தலைமையகம் அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தலைமையகப் பொறுப்பாளர்
அய்யா. பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அவர்களின் திருவுருவப் படத்துக்கு தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
#thiruma_army
1
8
164
























