Pinned Tweet
The Living Will: A Simple Guide
A Living Will is a legal document that speaks on your behalf when you’re unable to communicate. It clearly states to doctors and loved ones which medical treatments you want—or prefer to decline—during a health crisis.
1. Why It Matters
• Guides Your Care: You decide what "quality of life" means to you.
• Eases Family Burden: It spares your loved ones from the stress of making tough, high-stakes decisions during emotional times.
• Prevents Disagreements: It offers a clear set of instructions, helping avoid conflicts among family members about your care.
2. What It Covers
This document only comes into play if you are terminally ill or permanently unconscious. It usually covers:
• Life-Prolonging Measures: Your choices regarding ventilators, dialysis, and CPR.
• Nutrition: Whether you want artificial feeding tubes or IV fluids if eating becomes impossible.
• Comfort Care: Prioritizing pain relief and palliative measures, even if they don’t extend life.
• Organ Donation: Your final wishes concerning tissue or organ donation.
3. Living Will vs. Power of Attorney
While they’re often grouped together, they serve different purposes:
• Living Will: Specifies what treatments you want (the "what").
• Healthcare Power of Attorney: Names the person you trust to make decisions on your behalf (the "who").
4. How to Make it Official
1. Reflect: Consider your values—whether staying alive at any cost is your primary goal, or if comfort is more important.
2. Document: Fill out your state’s specific form and write down your wishes.
3. Validate: Most states require signatures from witnesses or a notary to make it legally binding.
4. Distribute: Share copies with your primary doctor, hospital, and family members. Avoid just tucking it away in a drawer!
பயணங்கள் முடிந்து,
பாதை தொலைந்த வெளியில்,
தனக்கேயான சொந்தத் தீவில்
அமர்ந்திருக்கிறது
வெறுமை.
#ShadowMaiden
யாரோ ஒருவருக்காக ஏங்கும்
தூரத்துத் தவிப்பை,
மெல்லிய வெளிச்சத்தில்
ரகசியமாய் பேசுகின்றன விண்மீன்கள்.
சொல்ல முடியாத ரகசியங்களை
சொந்தம் கொண்டாட யாருமின்றி,
வானம் முழுதும் உறைந்து கிடக்கிறது
ஒவ்வொரு விண்மீனின் தவிப்பும்!
விடியலைத் தேடி நகரும் இரவில்
விடைபெறத் தெரியாமல்,
சுமக்க முடியாத நினைவுகளுடன்
விண்கல்லாய் வீழ்கிறதா இந்த ஏக்கம்?
காலங்கள் கடந்தும் தொடரும் தேடலில்
இருளுக்குள் கரையும் கண்களோடு,
வானம் முழுக்கத் தூவிக்கிடக்கிறது
தீராத இந்தக் காதல் கவிதை!
#ShadowMaiden
எல்லாவற்றிலும் போதும் என்றொரு
எல்லை உண்டு போலும்!
பந்தங்களின் இறுக்கமான பிடியிலும்,
பகட்டுகளின் செயற்கையான நிழலிலும்,
ஓயாமல் ஓடிய கால்களின்
மெல்லிய சோர்வில் கேட்கிறது
ஒரு மெல்லிய அமைதிக் குரல்...
"போதும்..."
இனி எனக்காக ஒரு கணமேனும்...
புல்லின் நுனியில் தூங்கும்
பனித்துளி போன்ற இலகுவான தருணம்,
சுமைகளற்ற தனித்ததொரு மூச்சுக்காற்று!
எல்லாவற்றையும் துறப்பதல்ல...
எல்லாவற்றிலிருந்தும் சற்று விலகி,
நம்மை நாமே கண்டடையும்
அந்த அழகிய கணமே போதும்!
#ShadowMaiden
நீ சிந்தும் அந்த ஒற்றைப் புன்னகை
என் ஆயுள் ரேகையை மாற்றுகிறது;
அது என் கையில் விழும் அந்த நிமிடம்
விதியின் பழைய ஏடுகளை மறந்துவிட்டு,
காலம் தன் கைகளால் உன் பெயரைச் செதுக்குகிறது.
இனி என் ஆயுட்காலம் என்பது
நாட்காட்டியின் எண்களல்ல...
நீ மலர்ந்து தீரும்
உன் புன்னகையின் நீளம் மட்டுமே!
#ShadowMaiden
இலை உதிர்கிறது;
மரத்தின் கையில்
காலம் எழுதிய கடிதம்.
#ShadowMaiden
நிழல் கூடத் தொடர முடியாத
தனிமையில்—
நட்சத்திரத்தின் கண்ணீர்.
#ShadowMaiden
நீயின்றி என் மோகத்தையும் தாகத்தையும் எப்படி வெல்வேன் மனு?
வெளிச்சம் தூங்கும் நள்ளிரவு நேரத்தில்,
உன் நிழல் கூட என் மீது படரத் துடிக்கிறேன்;
என் விரல்கள் உன் விரல்களைத் தேடி ஏங்க,
காற்றும் கூட நம் இடையேயான தூரத்தைக் கிண்டல் செய்கிறது!
கடிகார முட்கள் நின்றுபோகும் இரவுகளில்,
என் தனிமை உன் மூச்சுக்காகக் காத்திருக்கிறது;
என் மோகத்தின் நெருப்பு மூடிக்கொண்ட சாம்பலில்,
உன் ஒரு பார்வை படும்போதே தீப்பற்றிக் கொள்கிறது!
தாகம் தீர்க்கக் கைகளில் ஏந்திய நீரும்,
மோகம் தணிக்க அருகில் இல்லாத நீயும்,
என்னைச் சுடும் நெருப்பாக மாறும்போது,
நான் யாரிடம் போய் முறையிடுவது?
இந்தத் தவிப்பை வெல்வது எப்படி சாத்தியம்?
இது போரல்ல, உன்னோடு நான் கலக்கும் தவம்;
உன்னைத் தோற்கடிக்க நினைக்கும் வினாடியில் கூட,
உன் பார்வையில் நான் மீண்டும் தோற்றுப் போகிறேன்!
இமைகளும் எதிர்த்து நிற்கத் திணறும் இந்த இரவின் நீண்ட மடியில்,
என் படுக்கை விரிப்புகள் கூட உன் அருகாமையைத் தேடித் தவிக்கின்றன;
பிரிவெனும் தீ என்னை உயிரோடு சுட்டெரித்தாலும்,
உன் நினைவுகள் தரும் அந்த வெம்மையில் தான் என் உயிரே வாழ்கிறது!
காலமெனும் நதியில் நாம் இரு கரைகளில் நின்றாலும்,
நம் காதலின் ஆழம் நம்மை ஒருநாள் நிச்சயம் இணைக்கும்;
அன்று வரை—
என் தாகமும், என் மோகமும், என் உயிரின் தவிப்பும்
உன் ஒற்றை அணைப்புக்காக மட்டுமே காத்திருக்கும் மனு!
#ShadowMaiden
உடல் என்ற எல்லையைத் தாண்டி
உயிரின் வேரைத் தேடிப் போகிறேன்.
அங்கே, எப்போதோ
நீயும் நானும் ஒரே நட்சத்திரத் தூசியாய்
சேர்ந்து மிதந்ததாய் ஒரு நினைவு.
நான் யார் என்று கேட்கும்போதெல்லாம்
பதில் உன் கண்ணுக்குள்ளே இருக்கிறது.
என் தனிமையின் இருட்டுக் கிணற்றில்
நீ இறக்கிய ஒரு துளி வெளிச்சம்,
அதுதான் என் முழு வானம்.
காலம் தன்னையே எரித்துக்கொண்டிருக்கும் வெளியில்
நம் இரண்டு மூச்சும்
ஒரே மூச்சாய் நின்று போகிறது.
பெயர் இல்லை, உருவம் இல்லை.
நான் உன்னில் கரைகிறேன்,
நீ என்னில் கரைகிறாய்.
மீதம் இருப்பது ஒரு பெரிய மௌனம் மட்டும்.
மரணம் கூட எட்டிப் பார்க்க முடியாத இடம் இது.
அங்கே நம் காதல் மட்டும்
சாட்சியாய் விழித்திருக்கிறது.
எத்தனை ஜென்மம் கடந்து வந்தோமோ தெரியாது.
அவை அனைத்தையும்
இந்த ஒரு நொடியின் மௌனம்
முழுமையாய்ச் சொல்லிவிடுகிறது.
#ShadowMaiden
அதிகாலைப் பனிச்சாரல் ஜன்னல் தாண்டி வீச,
நம் ஊடலின் கதையோ இன்னும் தீரவில்லை!
"இன்றைய தண்டனை என்ன, என் உயிரே?"
என்று நீ என் தோளில் சாய்ந்து கேட்கிறாய்.
"என் கண்களைப் பார்த்து ஒரு வார்த்தை பேசக் கூடாது..."
என்று நான் போடும் செல்லக் கட்டளை;
ஆனால், உன் மூச்சுக்காற்று என் முகத்தில் படும் போதே,
என் கோபமெல்லாம் வெட்கமாய் உருகிப் போகிறது!
தண்டனை தந்தவள் நானே என்றாலும்,
உன் இதழ் தீண்டலில் நான் தானே கைதியாகிறேன்!
விரகத்தின் எல்லை வரை அழைத்துச் சென்று,
வெட்கத்தின் திரைக்குள் நம்மை மறைத்துக் கொள்ளும்
இந்தச் செல்லத் தீர்ப்பு...
வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்!
#ShadowMaiden
Person
Replying to @Thiru_1990
17. “Comfort”ன்னு சொன்னதும் முதல்ல வர்றது ஒரு Person-ஆ, Place-ஆ, Thing-ஆ?
When you hear “Comfort,” what comes first a person, a place, or a thing?
தனித்த மரங்கள்
தரைமீது எழுதின,
காற்றில் இழந்த
காகிதக் கவிதைகள்!
#ShadowMaiden
சூரியன் மறையும் மாலையில் தொடங்கி,
விடியும் காலை வரை தொடரும் கனவு நீ.
கை கோர்த்து நடக்கும் இந்த நெடுஞ்சாலையில்,
தூரம் என்பது வெறும் எண்கள்தான்;
நம் இதயங்களின் தொலைவு சுழியாய் குறைகிறதே!
பகலின் இரைச்சல்கள் ஓய்ந்துபோகும் நிசியிலும்,
உன் நினைவுகளின் சலசலப்பு மட்டும்
என் மனதிற்குள் ஓய்வின்றி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
மரணம் கூட பிரித்துச் செல்ல முடியாத
ஒரு கண்ணீர் துளி காதலை உன்னிடம் கண்டேன்;
எந்தப் பிறவியிலும் என் தேடல் நீயாகவே இருக்க வேண்டும்!
கண்களின் ஜாலங்கள் ஓய்ந்த பின்னும்,
என் தோள்களில் மிச்சமிருக்கிறது
நீ சாய்ந்த அந்த கணத்தின் குளிர்காற்று!
ஒரு சிறு ஸ்பரிசம் போதும்,
இத்தனை வருடத் தவிப்பும்
ஒரு நொடியில் கரைந்து போக!
காலம் நம் உருவங்களை மாற்றினாலும்,
என் அன்பு உன்னை நோக்கி மட்டுமே
தினம் தினம் புதிதாய்ப் பிறக்கும்!
#ShadowMaiden
காரணமில்லாமல் கவிழும் நிழலாய்
மனம் மட்டும் ஏனோ
மெளனத்தின் வழியைத் தேடுகிறது.
எந்தச் சுமைக்கும் பெயரிடாமல்
இப்படியே சில கணங்கள்
சலனமின்றி நகர்ந்து போகட்டும்.
கரையைக் கடக்கும் காற்றின் மெல்லிசை போல்,
இலையுதிர்க்கும் மரத்தின் அமைதி போல்,
இந்த நிசப்தம் என் மனதைத் தழுவட்டும்.
பேசாத வார்த்தைகளின் பாரத்தை
நிலவின் ஒளியே மெல்லச் சுமந்து செல்லட்டும்!
#ShadowMaiden
ஜன்னலோரம் நான் வரைந்த கோடுகள்
மழைத் துளிகள் தொட்டதும்
உன் முகமாய் மாறியது.
#ShadowMaiden










