Varun Elango retweeted
Diwali just got ROYAL! 👑🔥
🎬 The fireworks begin at 6:20 PM TODAY! ⏳
🔥 Stay Tuned! 🔥
Varun Elango retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
Varun Elango retweeted
இது தான் உண்மையான மாற்றம்..❤️🔥💯👌 @TamilanParthib1 @CMOTamilnadu
#tvkvijay #ThalapathyVijay #தமிழகவெற்றிக்கழகம்
Varun Elango retweeted
இதோ வந்துட்டாருயா டம்மி...🤣🤣
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
Varun Elango retweeted
Deii kothus 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
#அகல்விளக்கு
#AgalVilakku
Varun Elango retweeted
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் சிரமமற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று முன்தினம்(05.11.2026) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (06.11.2026) கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு நேரில் சென்று, சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் மற்றும் பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பயணிகளிடம் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தேன்.
இந்த ஆய்வின்போது, போக்குவரத்துத் துறைச் செயலாளர் திரு. இல. நிர்மல்ராஜ், இ.ஆ.ப., சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
Varun Elango retweeted
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எவ்வித சிரமமுமின்றியும் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் வகையில், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று (06.11.2026) CMDAமறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையம் ஆகியவற்றில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புப் பேருந்து இயக்க ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்காகச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன்.
இந்த ஆய்வின்போது, போக்குவரத்துத் துறைச் செயலாளர் திரு. இல. நிர்மல்ராஜ், இ.ஆ.ப., சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
Varun Elango retweeted
பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத திமுகவின் உண்மை முகம்!
கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் 1,500 க்கும் மேற்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருப்பதும், அந்தப் பதிப்பகத்தின் இருப்பே பலருக்குத் தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
இது வெறும் நூல் கொள்முதல் தொடர்பான சர்ச்சை அல்ல; அறிவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பட்டதா என்ற மிகத் தீவிரமான கேள்வி!
தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசிக்கொண்டே, பெரியாரின் பெயரால் உருவாக்கப்பட்ட அறிவுத் தளத்திலேயே வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
ஊழலற்ற ஆட்சி, சமூக நீதி, பகுத்தறிவு என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது!
அறிவாலயம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தமிழகத்தின் வளங்களைச் சுரண்டிய திமுக, இப்போது பெரியார் அறிவுலகத்தின் நூல்களிலும் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்!
பெரியாரின் பெயர் என்பது ஊழலை மறைப்பதற்கான கவசம் அல்ல. பெரியாரின் கொள்கைகள் என்பது அரசியல் ஆதாயத்திற்கான வியாபாரப் பொருளும் அல்ல!
இதனை புரிந்துகொண்டு முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mkstalin அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
Varun Elango retweeted
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக!
பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்த Senior Generational Abuser-ஏ!
புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, Dummy Daddy? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்!
அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால்,
"இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன."
என்று இருக்கிறது.
அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா, Senior Generational Abuser? ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி?
பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது!
அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை?
பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்திக்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா?
பதில் சொல்லத் துப்பிருக்கிறதா, Senior Generational Abuser?
#420Model
Varun Elango retweeted
தரமற்ற விற்பனை - தரமான நடவடிக்கை..!
பெங்களூருவிலுள்ள Forum மாலில் இருந்த PVR INOX-ஸின் ஒரு ஜூஸ் கவுண்டரில், பயன்படுத்தப்பட்ட குவளைகளில் பெப்சி வழங்கப்படுவதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, கவுண்டரை மூட அதிரடி உத்தரவு.
உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வின்போது விதிமீறல்களைக் கண்டறிந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து பாய்ந்தது நடவடிக்கை.
#Bengaluru | #FoodSafetyOfficers | #PolimerNews
Varun Elango retweeted
Thank you, Cristiano 🇵🇹
#FIFAWorldCup
Varun Elango retweeted
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையில், கடந்த 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான “வெற்றிக் கொள்கைத் திருவிழா” மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாநாட்டின் நினைவாக, விக்கிரவாண்டி வி சாலையில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, அதில் மாநாடு குறித்த விவரங்கள் அடங்கிய கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பத்தில் இருந்த கல்வெட்டு சேதமடைந்துள்ள தகவல் கிடைத்ததும், அதனை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு. @BussyAnand , MLA அவர்கள், இன்று (05.11.2026) வியாழக்கிழமை விக்கிரவாண்டி வி சாலைக்கு நேரில் சென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டினை நிறுவினார். மேலும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் திரு.A.வடிவேல் அவர்கள், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பரணி பாலாஜி அவர்கள், விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு.S.சக்திவேல் அவர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


































