ஆமா கடவுள் உங்களை டாப்புல வெச்சிருக்கான் எங்களை இப்படி வெச்சிருக்கான் 🤣
ஒரு இடத்தில் கடவுளை கும்பிடுவான் மற்ற இடத்தில் காலில் எட்டி மிதிப்பான்
திருவண்ணாமலை தீபம் அக்கினி பகவான் என்பான் அதே வீடு பத்தி எரிந்தால் ஐயோ அம்மா என்று அலறுவான்
நடிகவேள் எம்.ஆர்.ராதா பெரியாரின் பெருந்தொண்டர் 🖤
எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி, அது இந்தக் காலத்திற்குப் பொருந்துகிறதா, வாழ்க்கைக்குத் தேவையானது தானா ?அறிவுக்கு ஏற்றதா ? என்று தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர, அந்தக் காலத்துப் பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக்கொண்டு எதையும் அர்த்தமற்றும் பொருத்தமல்லாமலும் பின்பற்றக்கூடாது. ~ பேரறிஞர் அண்ணா 🖤
தூய சக்தி என்று சொல்லும் ஆட்சியில் இப்படி ஒரு பேரம் நடந்துள்ளது ? அந்த உதவியாளர் கைது செய்யப்படுவாரா ?
வண்டி நல்லா ஓடனும்ண்ணா அதுக்கு பூஜை பண்ணனும்
வண்டிக்குள்ள 1000 பார்ட்ஸ் இருக்கு அதுல எல்லாம் ஓடாத வண்டி பூஜை செய்து பட்டை போட்ட உடனே ஓடுதாம் 🤣
முல்லை தெய்வம் மால்
என்பது முகில் மேகம்
நெய்தல் தெய்வம் வருணன்
கடல் மீன் பிடிக்கும் மக்கள் (வாரணன்) என்று பெயரிட்டனர் (வாரணம்) கடல் தெய்வம்
இதற்கு தான் சொல்கிறோம் வராலற்று ஒப்புமையுடம் கொஞ்சம் தமிழ் சொல்லாய்வும் வேண்டும் என்று. இலக்கியத்தில் இருக்கிறது என்று அரைகுறையாக உளற கூடாது
Replying to @_kabilans
மாயோன், இந்திரன், வருணன் அனைவரும் வேதத்தில் உள்ள கடவுள்கள். திணைக்கு உரிய கடவுள்கள் மட்டுமே வழிபாட்டுக்கு உரியவர்கள் அல்ல என்பதை சங்க இலக்கியங்கள் செவிட்டில் அறைந்தது போலச் சொல்கின்றன. திணை என்பது சங்க காலத்தில் வந்த இலக்கண நூலில் உள்ளது. சங்க கால இலக்கியங்கள் அதற்குச் சமகாலத்தவை. இரண்டும் வேறு வேறு காலம் என்பது அஜெண்டா வைத்துக்கொண்டு அபத்தமாக உருட்டுவது.
அதற்குத்தான் அரைகுறையாகப் படிக்காமல் உருப்படியாக வாசிக்க வேண்டும்.
உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களை பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டு மிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா ?
என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.
~ தந்தை பெரியார்
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
த.வெ.க தலைவர் முதல்வர் விஜய் அவர் கொள்கை தலைவர்கள் என்று கூறிய பெரியார் அம்பேத்கர் கொள்கையை எந்த காலத்திலும் பின்பற்றமாட்டார். மூட நம்பிக்கை மிகுந்த ஜோதிட சாஸ்திர நம்பிக்கை கொண்ட ஒரு பிற்ப்போக்குவாதி தான் விஜய்.. எல்லா தரப்பு மக்களும் தான் எது செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற மமதையில் இருக்கிறார்.
இலக்கிய குறிப்பைக் காட்டுவது இலக்கிய அறிவு. ஆனால் அந்தக் குறிப்பின் காலம், சூழல் சமூகப் பொருள் ஆகியவற்றை ஆராய்வது தான் வரலாற்று அறிவு.
தமிழர்களின் திணை மரபாகக் குறிப்பிடப்படும் தெய்வங்கள்
குறிஞ்சி - சேயோன் (முருகன்)
முல்லை - மாயோன்
மருதம் - வேந்தன்
நெய்தல் - வருணன்
பாலை - கொற்றவை
இங்கே முக்கியமானது இந்தத் திணை வகைப்பாட்டில் (பிரம்மன் திருமால்) என்று (பார்ப்பன வேத கடவுள்) எதையும் படைப்புக் கடவுளாகக் குறிப்பிடப்படவில்லை.
பழந்தமிழர் வழிபாட்டு மரபுக திணை சார்ந்த தெய்வங்கள், இயற்கை வழிபாடு, நடுகல் வழிபாடு உள்ளிட்ட பல மரபுகள் இருந்தன.
படைப்புக் கடவுள் பற்றிய கருத்துகள் சங்க இலக்கியத்தில் பிரம்மன் போன்ற படைப்புக் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கியத்தில் பிரம்மன் பற்றிய குறிப்பு இருப்பதால், தமிழர்களின் ஆதித் தெய்வ வழிபாடே சனாதன மரபு என்று முடிவுக்கு வருவது வரலாற்று ஆய்வு அல்ல அது வாதத் திரிபு.
சங்க இலக்கியத்தில் ஒரு கடவுளின் பெயர் இருக்கிறது என்பதற்காகத் தமிழர்களின் தனித்துவமான வழிபாட்டு மரபுகளைச் சனாதனத்தின் ஒற்றை அடையாளத்துக்குள் அடைத்து விட முடியாது.
அரைகுறை மேற்கோள்களால் வரலாற்றைத் தீர்மானிக்க கூடாது..
இவரும் இந்த மாதிரி உருட்டியே பொழுதைப் போக்குகிறார். அதற்கும் ஒரு கூட்டம் தொடர்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கு. அவர்களின் அறியாமைதான் இது போன்ற ‘படித்தவர்களின்’ பலம். அரைகுறையாகச் சங்க இலக்கியத்தைப் படித்தாலே தமிழர்களுக்கு சனாதனத்தில் உள்ள எல்லாக் கடவுள்களும் உண்டு என்று தெரிந்துவிடும்.
“நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவன்” (பெரும்பாணாற்றுப்படை)
நீலநிறத்தைக் கொண்ட திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன்.
“தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால்,
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்” (கலித்தொகை)
பழைய ஊழிக்காலம் முடிந்து புதிய காலம் பிறந்த பிறகு பல உயிர்களையும் படைத்தவனான பிரம்மன்.
“உருகெழு மாநிலம் இயற்றுவான், விரிதிரை நீக்குவான் வியன்குறிப்பு ஒத்தனர்” (கலித்தொகை)
அச்சம் தரும் இந்த உலகத்தைப் படைக்கும் பிரம்மனைப் போல (ஒரு பிரிவினர்) உறுதியுடன் நின்றனர்
உருப்படியாகத் தமிழ் படித்தவர்கள் முன்னால் இவர்களின் பொய்கள் எடுபடாமல் ஓடிப்போகும்.
நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர் களில் நூற்றுக்கு நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள்.
உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்விமான்களாகவும் செய்யுமா ? என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
தந்தை பெரியார்
குடிஅரசு - சொற்பொழிவு 20-10-1929
சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை!
கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்து விட்டு,
நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
தந்தை பெரியார்
குடிஅரசு சொற்பொழிவு – (20-10-1929)
சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை எதற்கு ?
வெளிநாடுகளில் வாழும் மக்கள் அவர்களது ஆயுதங்களுக்கும் இயந்திரங்களுக்கும் பூஜை போடுவதில்லை, கல்விக்கு என்று தனியாக ஒரு கடவுளை வைத்துக் கொள்ளவில்லை.
அப்படி வாழும் அவன் தான் அறிவியலில் முன்னேறுகிறான், புதிய கண்டுபிடிப்புகளை செய்கிறான், கல்விக்கு என்று தனியொரு கடவுளை வைத்திருக்கும் நம் நாட்டில் தான் தற்குறிகளும் முட்டாள்களும் கல்வியறிவு இல்லாத மக்களும் வாழ்கிறார்கள்,
கல்விக்கு என தனி கடவுள் இருக்கும் இந்த நாட்டில் எல்லோரும் கல்வி அறிவு பெற்றவர்களாக தானே இருக்க வேண்டும் ?
இப்படி பலரையும் கல்வியறிவு இல்லாமல் முட்டாளாக வைத்திருக்கும் கடவுள் ஒரு கடவுளா ? அது தேவையா ?
அம்பேத்கரின் இந்து மதத் தத்துவம் என்ற நூல் மிகவும் ஆணித்தரமாக வர்ண கோட்பாடு எப்படி மக்களை பிரித்து வைக்கிறது என்பதை விளக்குகிறது. மனுதர்மத்தின் கொடூர தன்மை என்ன ? என்பதை அண்ணல் அம்பேத்கர் உரிய சான்றுகளுடன் விளக்குகிறார்.
கடவுள் என்பது எப்போது தோன்றியது என்ற கேள்வி உயிரின பரினாமத்திலே வந்து முடிகிறது அப்படி அந்த பரினாம வளர்ச்சியை புரிந்து கொள்ளும் போது கடவுள் என்ற ஒன்று இல்லை என்பதை மனிதன் புரிந்து கொள்கிறான் என்று விளக்குகிறார் 🖤
மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் கடவுளை பற்றி எந்த ஆதாரங்களும் இல்லை இந்த மதங்களும் இல்லை..
மழை மீட்புப் பணிகளில் அமைச்சர்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
ஆனால், எந்த ஆட்சி வந்தாலும் சென்னையில் மழை வெள்ளம் ஏற்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
இதற்குத் தீர்வு தற்காலிக மீட்புப் பணிகள் மட்டுமல்ல ஆக்கிரமிக்கப்பட்ட நீர்வழிகள், நீர்நிலைகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத மழைநீர் வடிகால்களை சீரமைப்பதில் தான் இருக்கிறது.
மழை வந்த பிறகு மீட்புப் பணிகளைச் செய்வதை விட, மழை வந்தாலும் சென்னை மிதக்காத வகையில் நிரந்தரத் தீர்வு காண்பதே அரசின் கடமை.
காப்பிரைட்ஸ்ல கிடைக்கும் காசு எனக்கு வேண்டாம். என்னோட பாடல்களால் கிடைக்கும் அந்த பெருமை எனக்கு போதும் என்று சொன்ன தலைக்கனம் இல்லாத ஒரு மனிதன் தான் தேவா 🖤
தேனிசை மன்னன்








