
❤Big fan of Vijay, Ajith & Nayanthara 💞 & Supporter of #TVK ❤
Joined January 2023
- Tweets80.5K
- Following569
- Followers1.9K
- Likes73.5K
Pinned Tweet
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற!
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற!
என்றும் நல்லவங்க
எல்லாரும் ஒங்க பின்னாலே!
நீங்க நெனச்சதெல்லாம்
நடக்குமுங்க கண்ணு முன்னாலே!🙏♥
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
#ConstitutionDay
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
வெண்மைப் புரட்சி மூலம், நாட்டின் பால்வளத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றிய டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய பால் தினத்தில், பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பால் உற்பத்தியின் மூலம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து மேம்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நமது அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காத்திடும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்கியதோடு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
அவ்வகையில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிட நமது அரசு என்றும் துணை நிற்கும்!
#CMJosephVijay
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
Replying to @idumbaikarthi
நாதக கட்சி நிலைமை ரொம்ப மோசமா போயிட்டிருக்கு... பேசாம விஜய்னா பேரை சொல்லி பிச்சை எடுத்து சோறு திங்க வேண்டிதான் - இடும்பா
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (25.11.2026) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 58,214 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 7,925 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். அதனைத் தொடர்ந்து, 1,430 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
In the presence of the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay, 78 Memoranda of Understanding (MoUs) were signed on behalf of the Department of Industries, Investment Promotion and Commerce at the Vettri Tamil Nadu Investment and Conversion Conclave held in Chennai today (25.11.2026), involving investments commitments of Rs. 58,214 crore and providing employment opportunities to 65,786 persons.
Further, the Hon’ble Chief Minister laid the foundation stones for 15 projects involving an investment of Rs. 7,925 crore and providing employment opportunities to 19,965 persons. Subsequently, Hon’ble Chief Minister inaugurated six projects involving an investment of Rs. 1,430 crore and providing employment opportunities to 1,710 persons. He also presented appointment orders to 18 candidates selected for various positions in five companies.
#CMJosephVijay
உன்னை என்ன பண்ணலாம் சொல்லு?
🤖 Made with AI
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும்.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்?
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்?
கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்!
பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?
தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது?
தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா?
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா?
ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
1
5
91
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன், புரவலர் முனைவர் நந்தினி ரங்கசாமி, செயலாளர் திரு. டி.சேதுபதி, பொருளாளர் முனைவர் ஆர். நித்தியானந்தம், செயற்குழு உறுப்பினர் முனைவர் எச். முகமது அலி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called upon by Prof. Dr. Ajith Kumar Lal Mohan, President, Dr. Nandini Rangaswamy, Patron, Thiru. D. Sethupathi, Secretary, Dr. R. Nithyanandam, Treasurer, and Dr. H. Mohamed Ali, Executive Committee Member, of the Tamil Nadu Self-Financing Arts, Science and Management Colleges Association, at the Secretariat today (24.11.2026).
#CMJosephVijay
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், ஆட்டோபொபைல் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Automobile Dealers Associations – FADA) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மாநிலத் தலைவர் திரு. தினேஷ் அகர்வால், FADA India பொருளாளர் திரு. பரத்குமார் சோர்டியா, FADA இருசக்கர வாகனங்கள் பிரிவின் துணைத் தலைவர் திரு. எஸ். ராஜ்வேல், Gen X இயக்குநர் திரு. பரத் மற்றும் உறுப்பினர் திரு. கிஷோர் செல்வராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru. Dinesh Agarwal, State Chairman of the Federation of Automobile Dealers Associations (FADA) for Tamil Nadu and Puducherry, Thiru. Bharat Kumar Chordia, Treasurer, FADA India, Thiru. S. Rajvel, Vice Chairman, Two-Wheeler Vertical, FADA, Thiru. Bharath, Director, Gen X, and Thiru. Kishore Selvaraj, Member, at the Secretariat today (24.11.2026
#CMJosephVijay
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
அய்யிய்யோ அங்கிள் @mkstalin
உங்களை தான் கலாய்க்கிறான்...😂🤣
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
தியாகியை பார்க்க வரிசை கட்டி
போயிட்டு இருக்காங்க...
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சந்திக்க தி.மு.க எம்.பி கனிமொழி வருகை..!
#Tiruvallur | #AnbilMaheshPoyyamozhi | #DMK | #Kanimozhi | #PolimerNews


















































