Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk) header
Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk) profile picture

Official Public Grievance & Support Desk | Virudhunagar MLA @selvamVNR Virudhunagar MLA Office | Mail your Queries to virudhunagar.helpdesk@gmail.com

virudhunagar
Joined May 2026
Photo by Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk)Photo by Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk)Photo by Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk)Photo by Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk)Photo by Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk)Photo by Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk)Photo by Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk)Photo by Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk)
Have a concern, complaint, or suggestion? Please fill out the Google Form and share your issues with us at anytime🙏🏻✅ Link in Bio!! Your voice matters. @selvamVNR MLA., Virudhunagar. #tvk #Virudhunagar #tvkvijay #virudhaiselvam #NammaOorMLA
3
22
54
2,445
கடந்த ஆண்டு ஒரு சிறப்புப் பேருந்துகூட இல்லை... இந்த ஆண்டு 12 சிறப்புப் பேருந்துகள்! மக்களின் பயணச் சிரமத்தைக் குறைக்க முன்முயற்சி! தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் திரும்பிச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, கடந்த ஆட்சிக் காலத்தில் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு சிறப்புப் பேருந்துகூட இயக்கப்படாத நிலை இருந்தது. ஆனால், இந்த ஆண்டு பொதுமக்களின் பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு, எனது தொடர் முயற்சியால் முதன்முறையாக 12 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாட்டை பொதுமக்கள் எவ்வாறு வரவேற்றுள்ளனர், அவர்களின் பயணத் தேவைகள் நிறைவேறியுள்ளதா என்பதை நேரில் அறிந்துகொள்வதற்காக விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்தேன். பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளையும், பயண அனுபவங்களையும் கேட்டறிந்தேன். பொதுமக்கள் இந்த ஏற்பாட்டில் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்தது பெரும் மகிழ்ச்சியளித்தது. வாக்குறுதிகளை விட மக்களுக்குப் பயனளிக்கும் செயல்களே முக்கியம்! மக்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து செயல்படுவேன்! S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #Diwali
2
57
167
1,815
Virudhunagar Help Desk | MLA Office retweeted
After Diwali, @selvamVNR MLA personally inspected the "12 special buses" operated from Virudhunagar and interacted with passengers to understand their needs, ensuring public convenience, safety and a hassle-free journey.👏🏻❤️ @CMOTamilnadu @BussyAnand @TamilanParthib1 ✅
2
20
65
1,293
தீபாவளிப் பண்டிகை நிறைவடைந்து, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் திரும்பிச் செல்லும் பொதுமக்களின் பயண வசதிக்காக, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து முதன்முறையாக 12 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை நேரில் பார்வையிட்டு, பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தேன். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்த போக்குவரத்துத் துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #Diwali #VirudhunagarMLA #CMJosephVijay
2
47
195
2,441
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கழக நிர்வாகிகளைச் சந்தித்து, புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன். நம் கழகத்திற்காக அயராது உழைக்கும் நிர்வாகிகள் அடுத்த ஆண்டு இதே நாளில் நீங்கள் அனைவரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்” என்று எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். நம் கழகத்தின் வளர்ச்சியில் ஒவ்வொருவரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் உரிய அங்கீகாரமும் உயர்வும் நிச்சயம் கிடைக்கும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!✨ S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #Diwali #CMVijay
3
34
113
1,316
Virudhunagar Help Desk | MLA Office retweeted
Virudhunagar MLA Thiru.@selvamVNR personally visited the respective workplaces of sanitation workers, sanitation supervisors, and panchayat staff across Virudhunagar Municipality and 58 panchayats, and distributed Diwali gift hampers to them.👏🏻❤️🎇 #Diwali #VirudhunagarMLA #CMVijay
21
82
933
விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விருதுநகர் நகராட்சி மற்றும் 58 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள் (OHT Operators) மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் என அனைவருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இனிப்புகள், பட்டாசுகள், சேலைகள் மற்றும் வேட்டி, சட்டைகள் உள்ளிட்ட தீபாவளிப் பரிசுப் பொருட்களை நானே நேரில் சென்று வழங்கி, அவர்களுடன் மகிழ்ச்சியுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடினேன்.🙏🏻 நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றுவதும், அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுப்பதும் நமது கடமையாகும். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!✨ S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #Diwali #CMJosephVijay
1
22
72
961
தீபங்களின் ஒளியும், மகிழ்ச்சியின் கொண்டாட்டமும் இணையும் இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும், அமைதியும், மனநிறைவும் பெருகட்டும். புதிய நம்பிக்கைகளும், நல்ல சிந்தனைகளும், மகிழ்ச்சியான தருணங்களும் மலரட்டும். அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள்!🪔✨ S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
4
15
60
865
நேற்று (06-11-2026) சென்னையில், கழகப் பொதுச்செயலாளரும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சருமான அப்பா திரு. @BussyAnand அவர்களை நேரில் சந்தித்து, தீபாவளித் திருநாளை முன்னிட்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டேன்.❤️ S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
15
61
709
Virudhunagar Help Desk | MLA Office retweeted
கழகப் பொதுச்செயலாளரும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் ஆசான் @BussyAnand அவர்களை, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR அவர்கள் நேற்று சென்னையில் நேரில் சந்தித்து, தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.💛💫 #TVKFamily
9
50
675
Virudhunagar Help Desk | MLA Office retweeted
🔴விளக்க பதிவு: மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. @selvamVNR அவர்கள் நேரில் வந்து அவர்களின் குறைகளை (23-10-26) அன்று கேட்டறிந்தார். அதிகாரிகளிடம் ஆலோசித்து, பிரச்சினையை ஆய்வு செய்து, தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். ஆனால், அதற்கான நடைமுறைகளைக்கூட பண்ண உரிய நேரம் கொடுக்காமல் உடனடியாகப் பணி செய்யவில்லை,MLA அவர்களின் சமூக ஊடகக் கணக்கில் எங்கள் வீடியோ வெளியிடவில்லை என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? குறிப்பாக, அதிமுகவைச் சேர்ந்த அந்த நபர் இவ்வளவு கேள்விகளைக் கேட்கிறீர்களே, உங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது இதே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏன் இத்தனை கேள்விகளைக் கேட்கவில்லை? அப்போது உங்கள் குரல் எங்கே போனது? மாண்புமிகு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. செல்வம் அவர்கள் நிச்சயமாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். மக்களின் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி, அதிமுகவின் அரசியல் நாடகங்களுக்கு வலையாக்க முயற்சிக்காதீர்கள்!!! #VirudhunagarMLA #CMJosephVijay
70 வருஷமா ஆண்டவங்க ஒன்னும் செய்யலைன்னுதான் உங்ககிட்ட கொடுத்துருக்கோம்.. நீங்க எப்போ பண்ணுவீங்க? - விருதுநகர் த.வெ.க எம்.எல்.ஏவிடம் பொதுமக்கள் கேள்வி #Virudhunagar | #TVK | #TVKMLA | #PolimerNews
1
14
1
36
1,122
Virudhunagar Help Desk | MLA Office retweeted
Frame❤️😍 @CMOTamilnadu x @selvamVNR
1
13
91
838
Virudhunagar Help Desk | MLA Office retweeted
Immediate Action, No Compromise! 🔥 @selvamVNR 👏🏻💥 #VirudhunagarMLA
24
421
4
1,588
40,376
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் கழக இளைஞரணி சார்பில், சுமார் 300 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு சேலை, வேட்டி மற்றும் சட்டைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதேபோல், இசலி ஊராட்சிக்குட்பட்ட இனக்கநேரி கிராமத்தில் 50 தூய்மைப் பணியாளர்களுக்கு சேலை மற்றும் வேட்டிகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் சுகாதாரத்தையும், சுற்றுப்புறத் தூய்மையையும் பேணுவதில் அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.🙏🏻 S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #Diwali2026 #CMJosephVijay
22
51
682
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தினமும் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களது கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறேன். தொகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகத் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து, விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தேன். மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து தொடர்ந்து செயல்படுவேன்.🙏🏻 S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay
14
41
627
விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (BDO), ஒன்றிய அலுவலகப் பணியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குகள், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டேன். மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னுரிமையாகக் கொண்டு, அனைத்துப் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay
10
26
548
இன்று (04-11-2026) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷரண்யா அறி IAS அவர்களுடன் இணைந்து மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வங்கிக் கடன் இணைப்பு உதவிகளை வழங்கினேன். பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுயதொழில் மூலம் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து துணை நிற்போம். S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay
9
32
584
விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கட்டனார்பட்டி பகுதியில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கல்குவாரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். சர்வே எண் 136க்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில் சர்வே எண் 134க்கான உரிமம் ஆறு மாதங்களுக்கு முன்பே காலாவதியாகிருந்தும் பகுதியில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்குவாரியின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு (Suspended) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் நலன் மற்றும் கனிமவளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #விருதுநகர் #VirudhunagarMLA
3
58
151
2,326
விருதுநகர்: பாலவநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஜெய் சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் (NSS) அணி சார்பில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இந்நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுற்றுப்புறத் தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாணவர்களின் நலன் கருதி நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று, சமூக நலப்பணியில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay
23
48
581
Virudhunagar Help Desk | MLA Office retweeted
தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கனார் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR ❤️💫
21
97
1,140
தீபாவளி திருநாளை முன்னிட்டு, விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.மேலும் மதிய உணவு வழங்கப்பட்டது. தினந்தோறும் தங்களின் அயராத உழைப்பால் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்து வரும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.🙏🏻 S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
2
26
60
814