Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl) header
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl) profile picture

#திருவள்ளுர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் | #அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் | முன்னாள் கழக #எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் | https://xitter.cf/t.co/ITvy6b56nd

Chennai, India
Joined March 2020
Photo by Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl)Photo by Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl)Photo by Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl)Photo by Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl)Photo by Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl)Photo by Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl)Photo by Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl)Photo by Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl)Photo by Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl)Photo by Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK (@VAlexanderoffl)
தேசப்பற்றையும், தெய்வீகத்தையும் வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு, தியாகத்தையும் நேர்மையையும் தனது வாழ்வியல் நெறியாகக் கொண்ட போற்றுதலுக்குரிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை பெருநாளில், அவருடைய பெரும் வாழ்வையும் புகழையும் போற்றி வணங்குவோம்
4
9
110
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே! புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்! “இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்! இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே! இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்! புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்! #55YrsOfAIADMK #என்றென்றும்_அஇஅதிமுக @AIADMKOfficial
102
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது. நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி. எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும். ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது. ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள். எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை. இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா? புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம். ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்? எத்தனை சூழ்ச்சிகள்? எத்தனை துரோகங்கள் ? இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்? இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்? அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா? உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா? அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம். அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம். இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும். எனவே, அக்.6 அன்று, #வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱 #வெல்லட்டும்_இரட்டைஇலை @AIADMKOfficial
1
5
89
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு #எடப்பாடியார் அவர்கள் தலைமையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழக உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. #AIADMK @AIADMKOfficial – at Chennai, India
1
2
3
117
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல. தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்! இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா? இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு Powercenter தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே Powercenter என்று சொன்ன @CMOTamilNadu அவர்களே, இந்த ஊழலில் பின்னால் #யார்_அந்த_Powercenter? அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு #யார்_அந்த_Powercenter? இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது. நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
1
2
164
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்! மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது! பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு! இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்! ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும். தொற்று நோய் தடுத்து, விவசாயம் செழிக்கச் செய்து, கல்வியில் புரட்சி செய்து, தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும், @AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும், உங்கள் பொன்னான வாக்குகளை #இரட்டைஇலை சின்னத்திலும், #தாமரை சின்னத்திலும், #மாம்பழம் சின்னத்திலும், #குக்கர் சின்னத்திலும் அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். “அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது! சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும். அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்! #அண்ணாதிமுக_WINNING!✌️ #நல்லாட்சி_COMING!🌱 #Vote4AIADMK
2
2
85
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யினை வெளியிட்டார்கள். #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
2
5
119
அஇஅதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைக்க அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் குளிர்பதன பெட்டி (fridge) வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும். -#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
2
3
80
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். -#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
2
2
74
ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது உளம் கனிந்த இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்! வானில் பிறை நிலவு தோன்றுவது போல இந்த புனித ரமலான் நாளில் அனைவரது வாழ்கையும் பிரகாசமாகட்டும். @EPSTamilNadu @AIADMKOfficial #EidMubarak #EidUlFitr #AIADMK
5
6
132
மக்கள் காதுகள் பாவமில்லையா? 5 ஆண்டுகளாக திமுக காது குத்தியது போதும்! #போதும்_திமுக_காதுகுத்து @EPSTamilNadu @AIADMKOfficial
4
5
97
பிப்ரவரி 24 மக்களால் நான்., மக்களுக்காகவே நான்., என்று தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த, தங்கத்தாரகை மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி #அம்மா அவர்களது 78வது பிறந்த நாளில் போற்றி வணங்குகிறேன் #என்றென்றும்_அம்மா @EPSTamilNadu @AIADMKOfficial
1
7
8
106
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் திரு @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட #ஆவடி #அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026 @AIADMKOfficial
1
8
11
129
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் #ஆவடி #அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகள் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
#Live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் இன்று : ஆவடி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகள் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் xitter.cf/i/broadcasts/1qKVmQQnn…
9
10
130
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் நாள் : 21.2.2026 - சனிக்கிழமை நேரம் : மாலை 05 மணி திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் இடம் : அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகில் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் @AIADMKOfficial
7
7
108
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் நாள் : 21.2.2026 - சனிக்கிழமை நேரம் : மாலை 05 மணி திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் இடம் : அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகில் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் @AIADMKOfficial
5
7
127
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாள்: பிப்ரவரி 17, 2026 இடம்: தமிழக சட்டமன்றம் நேரம்: காலை 10 மணி முதல் இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் முன்னின்று காது குத்துவார். #மாபெரும்_காதுகுத்தும்_விழா
8
7
142
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் எழுச்சி பயணம் வரவேற்பு குறித்து #திருவேற்காடு நகர கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #AIADMK #Thiruverkadu
2
5
7
121
தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு. @mkstalin அவர்களே? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன? செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை #விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்று வீடு வீடாக சென்று @AIADMKOfficial அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு? இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த @AIADMKOfficial தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில் , இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே... யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. "அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி , 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள். தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும் #அஞ்சி_ஆயிரம்
3
8
125