Thoothukudi City Municipal Corporation (@Tutycorp) header
Thoothukudi City Municipal Corporation (@Tutycorp) profile picture

Official Page of Thoothukudi City Municipal Corporation.Stay connected for updates at https://xitter.cf/t.co/lVgtPw6rV8; for grievances #Whatsapp +917397731065

Thoothukkudi, India
Joined September 2015
Photo by Thoothukudi City Municipal Corporation (@Tutycorp)Photo by Thoothukudi City Municipal Corporation (@Tutycorp)Photo by Thoothukudi City Municipal Corporation (@Tutycorp)Photo by Thoothukudi City Municipal Corporation (@Tutycorp)Photo by Thoothukudi City Municipal Corporation (@Tutycorp)Photo by Thoothukudi City Municipal Corporation (@Tutycorp)Photo by Thoothukudi City Municipal Corporation (@Tutycorp)Photo by Thoothukudi City Municipal Corporation (@Tutycorp)Photo by Thoothukudi City Municipal Corporation (@Tutycorp)Photo by Thoothukudi City Municipal Corporation (@Tutycorp)
🚨 இன்றுதான் கடைசி நாள்! 🏢 தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்களின் கவனத்திற்கு! 📢 2026–2027 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் அரையாண்டு சொத்துவரி செலுத்துவதற்கான கடைசி நாள் இன்று (அக்டோபர் 31). ✅ இன்றே சொத்துவரியைச் செலுத்தி, அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்! 💻 ஆன்லைனில் வரி செலுத்த: 🌐 tnurbanepay.tn.gov.in/ 📞 உதவி எண்: 1800-2030401 📲 இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்! #Thoothukudi #ThoothukudiCorporation #PropertyTax #சொத்துவரி
🤖 Made with AI
44
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 18, வார்டு எண் 53, முத்தையாபுரம் வடக்குத் தெரு பகுதியில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் அறிவிப்பு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
61
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் பழுதுபட்ட சாலையில் உள்ள பள்ளங்களைச் சீரமைக்கும் தார்ச்சாலை பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற்றது.
1
2
84
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
1
50
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட வார்டு எண் 30, ஜெயராஜ் சாலையில் உள்ள கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் தொடர்பாக மாநகராட்சிப் பணியாளர்கள் சோதனை மேற்கொண்டு, விதிகளை மீறிப் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
1
1
48
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 5, வார்டு எண் 20, நந்தகோபாலபுரம் மேற்கு பகுதியில் பக்கிள் கால்வாய் வடிகால் அருகே உள்ள பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பழைய பொருட்கள், டயர்கள் மற்றும் குப்பைகள் சுகாதாரமற்ற முறையில் குவித்து வைக்கப்பட்டிருந்ததால், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி சம்பந்தப்பட்ட கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
54
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 01, வார்டு எண் 02, மீளவிட்டான் சாலையில் உள்ள கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பாக மாநகராட்சிப் பணியாளர்கள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, விதிமீறலில் ஈடுபட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
54
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 5, புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தேவையற்ற சுவரொட்டிகளை மாநகராட்சிப் பணியாளர்கள் அகற்றினர்.
1
56
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 5, வார்டு எண் 20 பகுதியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சிப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.
47
*தூத்துக்குடி மாநகராட்சியில் அவசரகால துப்புரவுப் பணி பொறுப்பு ஆணையம் (ERSA) விளக்கக் கூட்டம்* தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்கள் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில் அவசரகால துப்புரவுப் பணி பொறுப்பு ஆணையம் (Emergency Response Sanitation Authority - ERSA) குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர நல அலுவலர் (CHO) அனைவரையும் வரவேற்று ERSA அமைப்பின் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவாக விளக்கினார். இதில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் தனியார் செப்டிக் டேங்க் வாகன உரிமையாளர்கள், UGSS பராமரிப்பு ஒப்பந்த பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஆணையர் அவர்கள், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி துப்புரவுப் பணிகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுத்து Zero Fatality என்ற நிலையை உருவாக்க ERSA அமைப்பு செயல்படுவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் எந்தவொரு செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடைக்குள்ளும் மனிதர்கள் நேரடியாக இறங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து பணிகளும் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தனியார் கழிவுநீர் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்கப்பட்டு GPS மூலம் கண்காணிக்கப்படும் என்றும், அவசரகால தேவைகளுக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்றும் கூறினார். தவிர்க்க முடியாத விதிவிலக்கான சூழலில், பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பணியின் போது பாதுகாப்பை உறுதி செய்ய முழு உடல் பாதுகாப்பு உடை, முகக்கவசம், கையுறை உள்ளிட்ட PPE உபகரணங்கள் மற்றும் நச்சு வாயுவை கண்டறியும் Gas Detector கருவி மூலம் சோதனை ஆகியவை கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பாரம்பரியமாக இப்பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு Sewer Entry Professionals (SEPs) என்ற வல்லுநர்களாக மாற்றப்பட்டு, NAMASTE திட்டத்தின் கீழ் அவர்களுக்கு காப்பீடு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. விதிகளுக்கு புறம்பாக செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடைக்குள் மனிதர்களை இறக்கும் நபர்கள் மீது கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எடுத்துரைக்கப்பட்டது. *ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி.*
52
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 2, வார்டு எண் 5, கிருஷ்ணராஜபுரம் பகுதியில் உள்ள இன்பென்ட் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார துறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் இணைந்து புகையில்லா இளைஞர் பிரச்சாரம் 4.0 நிகழ்ச்சியின் மூலம் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் மாணவர்களிடையே புகையிலைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதார ஆய்வாளர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
53
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்புப் பொறியாளர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். மழைநீரை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் மற்றும் நீர் உறிஞ்சும் குழாய்கள் தயார் நிலையில் உள்ளனவா என்பதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
53
தூத்துக்குடி மாநகராட்சி கிருஷ்ணராஜபுரம் வார்டு அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் திருமதி. சி. ப்ரியங்கா, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து, அலுவலகப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தினார்கள்.
61
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட லூர்தம்மாள்புரம் பகுதியில் அமைந்துள்ள பொதுச் சமையல் கூடத்தில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்காகப் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் பணிகள், சமையலறையின் தூய்மை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு,மாணவர்களுக்குத் தாமதமின்றி, தரமான உணவு தயாரித்தல் குறித்து மாநகராட்சி ஆணையர் திருமதி. சி. ப்ரியங்கா, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
53
🏠 தூத்துக்குடி மாநகராட்சி – சொத்துவரி ஆன்லைனில் செலுத்துங்கள்! 📢 சொத்துவரியை ஆன்லைனில் செலுத்துவது இப்போது எளிது! 📅 அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சொத்துவரியைச் செலுத்துங்கள்! 🎁 அரசு அறிவித்துள்ள சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்! 🌐 இணையதளம்: tnurbanepay.tn.gov.in 📲 இந்தத் தகவலைப் பிறருக்கும் பகிருங்கள்! #Thoothukudi #ThoothukudiCorporation #PropertyTax #OnlinePayment #தூத்துக்குடி #சொத்துவரி
77
🏠 தூத்துக்குடி மாநகராட்சி – சொத்துவரி ஆன்லைனில் செலுத்துங்கள்! 📢 சொத்துவரியை ஆன்லைனில் செலுத்துவது இப்போது எளிது! ✅ 5 எளிய படிகளில் சொத்துவரி செலுத்தலாம்: 1️⃣ அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுங்கள். 2️⃣ Quick Payment என்பதைத் தேர்வு செய்யுங்கள். 3️⃣ மாநகராட்சியைத் தேர்ந்தெடுத்து மதிப்பீட்டு எண்ணைப் பதிவிடுங்கள். 4️⃣ சொத்து விவரங்களைச் சரிபார்த்து பணம் செலுத்துங்கள். 5️⃣ கட்டண ரசீதைப் பதிவிறக்கம் செய்து சேமியுங்கள். 📅 அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சொத்துவரியைச் செலுத்துங்கள்! 🎁 அரசு அறிவித்துள்ள சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்! 🌐 இணையதளம்: tnurbanepay.tn.gov.in 📲 இந்தத் தகவலைப் பிறருக்கும் பகிருங்கள்! #Thoothukudi #ThoothukudiCorporation #PropertyTax #OnlinePayment #தூத்துக்குடி #சொத்துவரி
79
2 நாட்கள் மட்டுமே! ⏳ 📅 அக்டோபர் 31 கடைசி நாள்!
1
2
59
2 நாட்கள் மட்டுமே! ⏳ 📅 அக்டோபர் 31 கடைசி நாள்!
1
81
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 3, ஓம் சாந்தி நகர் பகுதியில் உள்ள மகிழுந்து பழுதுபார்க்கும் நிறுவனம் மற்றும் பழைய இரும்பு, நெகிழிப் பொருட்களைச் சேமித்து மறுசுழற்சிக்கு விற்பனை செய்யும் கிட்டங்கிகளில் வைக்கப்பட்டிருந்த டயர்கள் மற்றும் சேமிப்புக் கலன்களில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பொதுச் சுகாதார விதிகளின்படி 6 வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அறிவிப்பு நோட்டீஸை பெறாத நிறுவனங்களின் சுவர்களில் அறிவிப்புகள் ஒட்டப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
74
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 3, வார்டு எண்கள் 7 மற்றும் 8, ஜான் சேவியர் மீனவர் காலனி மற்றும் சங்குளி காலனி 2-வது தெரு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகச் சுற்றித்திரிந்த சமூக நாய்கள் பிடிக்கப்பட்டு, விலங்குகள் கருத்தடை மையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
73