வாழ்த்துக்கள் கூறிய அனைத்து ஆன்றோர், சான்றோர் பெருமக்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி 🙏🙏🙏.
என்னைப் போன்ற சாமானிய ஆசிரியர்களின் உழைப்பையும் கனவுகளையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் புதிய தலைமுறை குழுமத்திற்கும், கனவு ஆசிரியர் அமைப்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏❤️
புதிய தலைமுறை ஆசிரியர் விருதுகளில் கிராம சேவை பிரிவில் விருது பெற்றார் வே.நரசிம்மன்
#TeachersAwards2026 | #TeachersAwards | #PuthiyaThalaimuraiTeacherAward | #PuthiyaThalaimurai
கடந்த 3 நாட்களாக சென்னை VIT UNIVERSITY இல் முதுநிலை ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
அரசுப் பள்ளியில் படித்த மாணவ-மாணவியர்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுகலை பயில தமிழ்நாடு அரசு நிதியுதவி அளிக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Narasimman retweeted
கடந்த 2021 முதல் 2026 வரையிலான கல்வியாண்டுகளில், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த 1,912 மாணவர்கள் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி உள்ளிட்ட நாட்டின் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். இது தமிழ்நாட்டின் சிறந்த கல்வித் தரத்திற்குச் சான்றாகும்: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
இன்று தேசிய மீன் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் மீன்வளம் & நீர்வாழ் உயிரின வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு (career awareness session on fisheries& aquaculture) நிகழ்வு நடைபெற்றது. அதில் எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்ட நிகழ்வு.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்குகிறது.
ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை adm.tanuvas.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
சார் மக்கள் யாரும் இவருக்கு வாக்களித்து விட்டோம் என்று வருந்தவில்லை. நிச்சயமாக ஒரு மாற்றம் வேண்டும் என்ற மனநிலையில் தான் நிறைய பேர் வாக்களித்து இருக்கின்றனர். இந்த உண்மையை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்தை நோக்கி சரியாக பயணிக்க முடியும்.
#அறிவோம்_அரசியல்
தமிழ்நாடு இதுவரை எந்த ஒரு ஆட்சியையும் தேர்ந்தெடுத்த பிறகு உடனடியாக அதற்காக வருந்தியதில்லை. 2016 ல் அதிமுக வந்தபோது கூட ஒரு mixed மனநிலை தான் இருந்தது.
ஆனால் தற்போது தவறு செய்துவிட்டோம் என்று புலம்பும் மனநிலைக்கு மக்கள் சென்றுவிட்டார்கள்.
கால அவகாசமே கொடுக்காமல், இப்படியான மனநிலை வருவது எதைக்காட்டுகிறது?
இவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையே இல்லாமல், ஏதோ ஒரு ஜாலிக்காக வாக்களித்தது விபரீதமாகிப் போய்விட்டது என்பதை மக்கள் உணர்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
அதற்கு வலு சேர்ப்பது போல் இவர்கள் செய்யும் போலி promotions மக்களை இன்னும் எரிச்சலடைய செய்கிறது. எந்த fake news இவர்களை முன்னுக்கு கொண்டு வந்ததோ அதே fake news தான் இன்று இவர்கள் மீதான வெறுப்பையும் சம்பாதிக்கிறது.
பொய்யும், போலி அடைமொழிகளும் எதிராக கட்டமைக்க எளிதாக இருக்குமே ஒழிய, ஆட்சியில் இருக்கும் போது மக்களிடம் எளிதாக expose ஆகிவிடும். அதனால் தான் 2014 ல், மோடி முதல்முறையாக வரும்போது தமிழ்நாட்டில் 2 சீட்டுகள் கிடைத்தது. அதற்குப் பிறகாக தொடர்ச்சியான பெரும் தோல்விகளே இங்கு கிடைக்கிறது.
ஆட்சியில் இருக்கும் போதே போலியான பிம்பக் கட்டமைப்பு மூலம் மக்களை நம்ப வைக்க வேண்டுமென்றால், தன்னை ஒரு saviour ஆக காட்டிக் கொண்டு, மக்களை முட்டாள்தனமாக திசை திருப்ப வேண்டும் (கொரோனா காலத்தில் மணி அடிக்க வைத்தது போல்).
இதற்கான வேலைகளை அவர்கள் கையிலெடுக்கும் போதே (Tiffin box), இங்கு செருப்படிகள் விழுவதால், என்ன செய்வது என்று திணறிக்கொண்டு இருக்கிறது Route மீடியா.
இங்கு தமிழ்நாட்டிற்கான பாதுகாவலனாக, மக்களின் உண்மையான உயர்வை பற்றி சிந்திக்கும் ஒரே கட்சியாக திமுகவை மட்டுமே மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நம்பிக்கையை சரியான வழியில் கொண்டு சொல்வது ஒவ்வொரு திமுகவினரின் கடமை.
#தமிழ்நாடு_வெல்லட்டும்
























