நெஞ்சம் நெகிழ்கிறது தலைவரே! உங்களுடைய இந்த ஒரு வாழ்த்து போதும் வாழ்நாளிற்கும். தங்களைப் போன்று அயராது உழைக்க, இந்த வாழ்த்து மென்மேலும் ஊக்குவிக்கிறது. தங்கள் சொற்படி ஒரு Guide ஆக என் இளையோருக்கு இருப்பேன் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நவில சொற்கள் இல்லை தலைவரே!🙏 – at Sweden
நேற்று முகநூலில் பார்த்தது! அடையாள அரசியல் அல்ல அடையாளங்களை உருவாக்கும் அரசியலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல்!
Well done thalaivare @arivalayam @mkstalin 🙏 – at Luleå, Sverige
தேவா அவர்களுக்கு 'தேனிசைத் தென்றல்' என்கிற பெயரும் கலைஞர் சூட்டியது போல 🖤♥️
உங்கள் தேனமுதம் என்றும் பருகவே!
பிரியாவிடை தேனிசைத் தென்றலே!
#Ripdeva
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.
பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.
எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.
குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.
நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.
எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.
ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.
தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Perks of living in Luleå!
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே!
#arcticlife – at Luleå, Sverige
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
“எல்லா நலமும் ஈந்திடும் கல்வி” பாவேந்தர் பாரதிதாசன்
அன்பு மாணவர் மரு.பாரதிதாசன் அவர்களுக்கு வாழ்த்துகள் ❤️❤️❤️
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.
ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.
பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
Where is @abhijeet_dipke? Where is @neha_aisa?
Detaining them without disclosing their whereabouts is blatantly illegal and deeply inhumane.
The Union Government must release them immediately and stop suppressing peaceful protests. Every attempt to crush the movement will only make it stronger.
#GyaneshKumarMustGo. The Union BJP Government has no other option.
@cockroachisback @SFI_CEC @AISA_Official_ @Aishe_Ghosh @SauravDassss @AshutoshRanka @Dhruv_Rathee #CJP #Delhi
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
என்ன ஒரு #புத்திசாலித்தனம்.
யாருக்கு வரும் இநத் #அறிவு.,
#மண்ணை எடுத்து #சிகப்பு_கம்பளத்தில் கொட்டுவதை எங்காவுது பார்த்ததுண்டா.
When Idiocrac
rules us.
🖤❤️
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.
ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.
பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
எப்படியாவது பங்க் வைத்துவிட முயன்றும் வருவனா என்கிறது 😂
முடி போவதற்கு முன் ஒருமுறையேனும் நன்றாக வளர்த்து விட வேண்டும் எனும் நப்பாசை! – at Luleå, Sverige
Alexa play Ilamai ennum poongkatru in background 😌
பனி பெய்த இரவுகள் எப்போதும் கூடுதல் வெளிச்சத்துடன் இருப்பது உண்டு! – at Luleå, Sverige
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
தமிழ்நாடு எனும் பெயருக்காக உயிரையே கொடுத்த உணர்வாளர் சங்கரலிங்கனார் நினைவு நாள்!
வரலாற்றில் பல பெயர்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெயருக்காக உயிரையே இழந்த வரலாறுதான் விருதுநகர் தந்த வீரத்தியாகி சங்கரலிங்கனாருடையது.
தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்தார். இறுதியில் உயிரையே துறந்தார்.
ஆயினும் அன்றைய ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. கழக ஆட்சி அமையும்வரை காலம் கனியவில்லை.
வென்றது கழகம்! வந்தார் அண்ணா! நிறைவேற்றினார் தீர்மானத்தை! தமிழ்நாடு தமிழ்நாடானது!
தமிழ்நாடு பெயர்சூட்டலில் பல பேரின் போராட்டங்கள், தியாகங்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சளைக்காத முயற்சிகள் அடங்கியுள்ளன. ஆனால், இப்போராட்டத்தில் தனது இன்னுயிரையே இழக்கத் துணிந்த சங்கரலிங்கனாரின் தமிழுணர்வுக்கு ஈடு இணை ஏதுமில்லை.
தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது! தமிழ்நாடு வாழ்க!
வயது தடையே இல்லை! ஆர்வமும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எந்த விளையாட்டையும், கலையையும் கற்கலாம். Le me trying ice skating at 29y.
#iceskating – at Luleå, Sverige
If credit stealing is an art, Congress is picasso of it.
Have you ever made a protest like @Cockroachisback ?
Just taking credits for the protests and movements. This is today, think about 70-100 years back. Full of pannaiyars in Congress 🤦. All support to you @abhijeet_dipke ! – at Luleå, Sverige
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில், வயதையும் பொருட்படுத்தாமல் நேரடியாகக் களமிறங்கி, ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மதிப்பிற்குரிய தோழர் @Shanmugamcpim அவர்களுக்கு என் மனமார்ந்த மரியாதையும் வணக்கங்களும்!
உங்களின் கொள்கைப்பற்று, போராட்ட உணர்வு, தளராத மன உறுதி ஆகியவற்றிற்கு தலைவணங்குகிறேன், சண்முகம் ஐயா! ❤️
#WATCH | டெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ராஜீவ்காந்தி விளையாட்டு அரங்கில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
#SunNews | #Delhi | #CPM | #CJPProtests
இடைத்தேர்தல் குறித்து நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன்.
கழகத்தின் தோல்வி நல்லதே என்று நான் பேசிக் கொண்டு இருந்த நிலையில் மொத்தப் பேச்சையும் சுருக்கமாக 'திமுகவுக்கு அரசியல் வெற்றி தவெகவுக்கு தேர்தல் வெற்றி' என்று நண்பன் முடித்தான்.
சாலப் பொருத்தம்!
#dmk #tamilnadu
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
81yo CPI(M) veteran and ex Kerala CM Pinarayi Vijayan is at Jantar Mantar and has been detained by the police.
LoP Rahul Gandhi is in Chennai having lunch with his movie-star CM friend.
A stark lesson in how the Opposition should and should not engage with popular protests.
கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்த விழைகிறேன் தலைவரே @mkstalin
அழைப்பு வரும்பட்சத்தில் இங்கே தாங்களோ அல்லது பிரதிநிதிகளோ டிச.10 நோபல் பரிசு வழங்கும் விழாவிற்க்கு வந்தால் மிக்க மகிழ்ச்சி. பாராட்ட வாருங்கள் எங்கள் நாட்டிற்கு! – at Luleå, Sverige
2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள திருமிகு நவநீதம் பிள்ளை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், குரலற்றவர்களின் உரிமைகளுக்காகவும் தமது வாழ்நாளையே அர்ப்பணித்த அவரது நெடிய பயணத்திற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது!
2012-ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர்களின் துயர்மிகுந்த வாழ்வையும், நீதிக்காகவும் கண்ணியமான வாழ்வுக்காகவும் அவர்கள் நடத்திவரும் போராட்டத்தையும் எடுத்துரைத்ததை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தொடங்கி, உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பது வரை, துணிச்சலும் கொள்கை உறுதியும் நிறைந்தது அவரது பயணம்!
மனித உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் அவர் ஆற்றிவரும் பணி, வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்!
My heartfelt congratulations to Ms. Navi Pillay on being named the recipient of the 2026 Nobel Peace Prize!
This recognition is a tribute to a lifetime dedicated to standing up for the oppressed and the voiceless.
I fondly recall meeting her at the United Nations in Geneva in 2012, when I raised the plight of Eelam Tamils and their struggle for justice and dignity.
From fighting apartheid to championing human rights across the world, her journey has been defined by courage and conviction.
May her lifelong commitment to human rights and justice continue to inspire generations to come!




























