Pinned Tweet
गुरुर ब्रह्मा गुरुर विष्णु: गुरु देवो महेश्वरः | गुरु साक्षात परब्रह्म तस्मै श्री गुरवे नमः||
3
8
4,129
Jayaraman Rajah Iyer retweeted
Stunning victory for @jsaideepak. Supreme Court has ordered the lamp to be lit tomorrow; suspended the State appointed temple board, blasted the police, declared wilful disobedience, and decided to continue with the contempt case.
Thank you, Sai. You fought like a true warrior.
Jayaraman Rajah Iyer retweeted
"A devout couple from Peru came to the Ashram. They had heard of the Maharshi and His greatness, of how He was accepted by Arunachala and that He and Arunachala were One. They had longed for years to meet the God Man once in their lives. They were too poor to find the money for their passage to India, but in their burning desire to see him in flesh and blood, they took a few coins out of their small wages and in a few years had enough money to become deck passengers without the luxury of the higher classes on the ship. So they sailed for several months, at last reaching India and Tiruvannamalai.
They narrated their story to Bhagavan of all the privations they had undergone to have a look at Sri Maharshi. Bhagavan was all kindness to them. He heard their story with great concern. Later in the evening He inquired about their day to day life and the talk turned to Peru. The couple began describing the landscape of Peru, the sea coast and beach in their town. Just then Maharshi remarked "is not the beach of your town paved with marble slabs and are not coconut palms planted in between? Are there not marble benches in rows facing the sea there and did you not often sit on the 5th one of those with your wife?" This remark created astonishment in the couple! How could Sri Bhagavan, who had never gone out of Tiruvannamalai, know so intimately such minute details about their own town? Sri Ramana only smiled and remarked "It does not matter how I can tell. Know that in the Self there is no Space-Time. You could well have thought of me from where you were, and so could have had the consolation of a personal visit if you knew that."
~
Chapter 15 ("Thought Travels Too") of T.K. Sundaresa Iyer’s book, At the Feet of Bhagavan
Jayaraman Rajah Iyer retweeted
Connection between #sringeri and Ujjain
Shishya meeting his Guru in Ujjain, rest is history 🙏.
Young boy Sri Sitharama Anjaneyu came to Ujjain to have darshan of his guru Jyeshta Mahasannidhanam.
He started from Narasaropet without informing his parents.
Jayaraman Rajah Iyer retweeted
When thousands of Hindu women were violated and abandoned in the post-poll Bengal holocaust, he was one of the firsts to defend their honour in court. When Hindu temples were seized and looted by the State, he was one of the firsts to legally demand their reclamation. When the Supreme court struck a blow to millions of Ayappa devotees, he was one of the firsts to fight for their rights in the Supreme court.
He has written eye-opening books, delivered thousands of lectures across the length and breadth of this country, inspired millions of Hindus, made them aware of their rights, their dharma - and for all this he hasn't charged a single rupee.
He is @jsaideepak. And today, just because you disagree with his view, you abuse and insult him and ask him what has he done for the Hindu cause. Because you dare not ask the people you (and he) voted for, what have they done for the Hindu cause. Strange is it not - he questions the people you elect, you answer for them.
He wants the temples back, he wants the Waqf act to go, he wants the Places of worship act abrogated, he wants justice for Kashmiri Hindus, he wants the overturning of the Sabarimala judgment, he wants the Deepathoon to be lit. What do you want?
Sai is the kind of man who would fight for Bharat till his last breath. As I type this, he is in the Supreme Court on the matter of the Deepathoon, imploring the judges to act against discrimination being meted out to Hindus.
Stand with Sai, support him. He represents us, all of us, even those who abuse him.
Jayaraman Rajah Iyer retweeted
ஒரு முறை சொன்னால் அது காரணம், ஒவ்வொரு முறையும் சொன்னால் அது சாக்கு போக்கு உன்னால் செய்ய முடியாதென்று கூறியதை இன்னொருவரால் செய்து முடிக்கப்படுகிறது, இது தான் காரிய விதியாகும் நீ தவற விட்டது செயல் மட்டுமல்ல, உன் வாழ்வியலும் கூட நல்லதை தெளி நல்லதே நடக்கும்ஸ்ரீ மஹா பெரியவா அனுக்ரஹம்
Jayaraman Rajah Iyer retweeted
அட! Will he say the same tomorrow Karnataka disobeys SC order!
“ஒரு தீர்ப்பை அமல்படுத்தாவிடில் அரசை கலைப்பீர்களா?” - பெ.சண்முகம் கேள்வி
#PShanmugam | #CPIM
hindutamil.in/news/tamilnadu…
Jayaraman Rajah Iyer retweeted
This was the post by @trramesh at 9.16 pm on Nov 23rd a day before the #ThiruparankundramDeepam was to be lit. Clearly, the decision to not light the Deepam on November 24th despite SC direction was premeditated. Why? The answer is pretty obvious. @RShivshankar @PadmajaJoshi
One inside news - to be confirmed - those who are really in charge of temple administration - will blame it on the Trustees - (maybe the puppet trustees will be forced to pass a resolution - that everything will be as per "tradition" followed by the temple in the previous years)
Thereafter - the authorities would blame the trustees for not carrying out the Supreme Court's Order/directions -
Sri Muruhan is watching from the Hill top !
Jayaraman Rajah Iyer retweeted
Strength does not come from physical capacity. It comes from an indomitable will.
Good Morning have a great Friday, may Mata Mahalakshmi bless you🙏
@UMANUJ
@lakshmianand96
@vbanno
@AngelaBawa
@Kusum_Nautiyal
Jayaraman Rajah Iyer retweeted
Chins claims on Indian territory is based on its occupation of Tibet.
Hans have never put their feet on this part of India.
Three is no ethnic, linguistic or any other affinity with the Chinese.
China’s claims are imperialistic in nature.
China is reaching a level of hubris for which they will pay a price.
India’s folly was to recognise the forcible take-over of Tibet by China believing in Asian solidarity.
The situation in the China-India border areas remains generally stable, Chinese Ministry of National Defense spokesperson Chen Xi said on Thursday, stressing that the Zangnan region is China’s territory and that China does not recognize the so-called “Arunachal Pradesh” illegally set up by India. China and India maintain communication through diplomatic and military channels, including general-level talks, to jointly implement the consensus reached by the two sides and safeguard peace and tranquility in the border areas.
Jayaraman Rajah Iyer retweeted
Sri Gurubhyo Nama: (NamaHa)
ஶ்ரீ குருப்யோ நம: (நமஹா)
இனிய காலை வணக்கம்...!!!
Good Morning…!!!
Jayaraman Rajah Iyer retweeted
#மகாபெரியவா
கார்த்திகை தீப தத்வம்
கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.
கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா |
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா ||
”புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.
ஜலத்திலும் பூமியிலும் இருக்கிற ப்ராணிகள் மட்டும்தானா என்றால் அப்படி இல்லை. முதலிலேயே பக்ஷிகளையும் (பதங்கா:) கொசுக்களையும் (மசகா: – மசகம் என்றால் கொசு. ‘மஸ்கிடோ’ இதிலிருந்து வந்ததுதான்!) சொல்லிவிட்டதால் ஆகாசத்தில் பறக்கிற பிராணிகளையும் சொல்லிவிட்டதாக அர்த்தம்.
ஆகாசத்தில் பறந்தாலும் இந்தக் கொசு ஜலத்தில்தான் முட்டை இடுகிறது. பக்ஷி கிளைகளில்தான் வாழ்ந்து கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. மீன் ஜலத்தில் மட்டும்தான் இருக்கும். தவளை ஜலத்திலும் இருக்கும், பூமியிலும் இருக்கும். அநேக பிராணிகளால் பூமியில் மட்டும்தான் வசிக்க முடியும். இப்படியெல்லாம் பல தினுஸில் பிரித்துப் பிரித்துச் சொல்லி, அத்தனை உயிரினங்களும் பாபம் நிவ்ருத்தியாகி ஸம்ஸாரத்தைத் தாண்ட வேண்டும் என்று இந்த ஸ்லோகம் ப்ரார்த்திக்கிறது.
இந்த கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறது.
‘த்ருஷ்ட்வா’ என்று ஸ்லோகத்தில் வருவதற்கு ‘பார்த்தால்’ என்று அர்த்தம். வ்ருக்ஷம் – மரம் எப்படிப் பார்க்க முடியும்? நம் மாதிரி அதற்குக் கண், பார்வையெல்லாம் உண்டா? தாவரத்துக்கும் பலவிதமான உணர்ச்சிகள் இருப்பதாக இப்போது ஸயன்ஸ்படியே சொன்னாலும் அதற்குப் பார்வை உண்டா என்று தெரியவில்லை.
அதனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. ‘பார்த்தால்’என்று ஸ்லோகத்தில் சொல்லியிருந்தாலும், ”பார்க்காவிட்டாலும் பரவாயில்லை;மரம் மாதிரிப் பார்க்க சக்தியில்லாவிட்டாலும் பரவாயில்லை; அல்லது பார்க்கிற சக்திவாய்ந்த பிராணிகளாக இருந்தும்கூட இந்த தீபத்தைப் பார்க்காவிட்டாலும் பாதகமில்லை; இந்த தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ?
அம்மாதிரி இதன் ப்ரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகளுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க வேண்டும்”- என்றிப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்.
முன்பெல்லாம் சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து பெரிதாக ஏற்றினார்களே, திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகிறார்களே, இதன் உள்ளர்த்தம் என்ன?
சின்ன அகலமாக இருந்தால், அதன் ப்ரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். சொக்கப்பானை என்றால் அதன் ப்ரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும். அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றி வைத்துவிட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவஜந்துக்களின் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.
ஸாதரணமாக இரண்டு கால் ப்ராணி, நாற்கால் ப்ராணிகள்தான் அதிகம். வண்டுக்கு ஆறு கால். சிலந்திக்கு எட்டுக் கால்கள். மரவட்டை, கம்பளிப் பூச்சி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எண்ணி முடியாத கால்கள். வேதத்தில் அடிக்கடி ‘த்விபாத்” சதுஷ்பாத்’ என்று இருகால், நாற்கால் ப்ராணிகள் க்ஷேமத்தைக் கோருகிற மாதிரியே எத்தனை காலுள்ள ப்ராணிகளானாலும் அவற்றுக்கும், இன்னும் பாம்பு மாதிரி, மீன் மாதிரி காலே இல்லாத ப்ராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் என்று மந்திரங்கள் இருக்கின்றன.
பரம ஞானிக்கு பிராம்மணன் பஞ்சமன் (ப்ராம்மணே … ச்வபாகே) என்ற வித்யாஸம் தெரியாது என்று கீதையில் (5.18) சொல்லியிருக்கிறது.
நமக்கும்கூட, காரியத்தில் பேதத்தைப் பார்த்தாலும் மனஸில் சுரக்கும் அன்பில் வித்யாஸமே கூடாது என்கிற மாதிரிதான் ரந்திதேவன் முதலில் பிராம்மணனுக்கும் கடைசியில் பஞ்சமனுக்கும் தானம் பண்ணியிருக்கிறான்.
இந்தக் கார்த்திகை தீப ஸ்லோகத்திலும் ”ஸ்வபசா ஹி விப்ரா: என்று பஞ்சமன், ப்ராம்மணன் இருவரையும் சொல்லியிருக்கிறது. க்ஷேமத்தைக் கோரும்போது ஜாதி வித்யாஸமே இல்லை. நல்லவன் கெட்டவன் என்றும் வித்யாஸம் பார்க்கக் கூடாது.
மஹாபாபத்தைச் செய்துவிட்டு நரகவாஸிகளாயிருப்பவர்களிடமும் அன்பு பாராட்டி, அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்வது நம் சாஸ்த்ரம்.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Jayaraman Rajah Iyer retweeted
#மகாபெரியவா
வேதம் தழைத்தோங்க பெரியவா மேற்கொண்ட பணிகளின் தொகுப்பு.
ஒரு வேத விற்பன்னரின் வாரிசு திசை தவறி போய் விட்டதை அறிந்த அந்த காருண்ய மூர்த்தியாம் பெரியவா எப்படியெல்லாம் மனம் வெதும்பி போனார் என்பதை சொல்லும் ஒரு உருக்கமான சம்பவம் இது.
"சந்நியாசி சுகதுக்கங்களுக்கு மனசிலே இடம் கொடுக்கக் கூடாதுன்னு சாஸ்திரம் இருக்கு தெரியுமோ" என்று தன் திருவாக்கினாலேயே இந்த சம்பவத்தின் நடுவே எடுத்துச் சொன்னாலும் பெரியவாளை இச்சம்பவம் அதையும் மீறி பெரிதும் பாதித்ததன் காரணம் ஒரு வேத பண்டிதரின் வாரிசு வேதத்தை வாழையடி வாழையாக காப்பாற்ற தவறவிட்ட தோடல்லாமல் தடம் மாறி மிகவும் அவலமான ஒரு பாதையில் செல்வதைப் பார்த்ததால் தான்.
1964-65 இல் சென்னை கதீட்ரல் சாலை வழியே பெரியவா விடியற்காலையில் ரிக்க்ஷாவைப் பிடித்தபடி நடந்து செல்ல மஹானுடன் கைங்கர்ய அன்பர்கள் சிலரும், இந்த சம்பவத்தை பார்த்த சுவாமிநாத ஆத்ரேயன் அவர்களும் சென்று கொண்டிருந்தனர்.
கோபாலபுரம் திரும்பும் போது பெரியவா சுவாமிநாத ஆத்ரேயனைப் பார்த்து "அதோ அந்த பெட்டி கடையிலே குடுமி வச்சுண்டு வாயிலே புகைவிட்டுண்டிருக்கான் பார், அவனிடம் போய் பரவாக்கரை ச்ரௌத்திகளை தெரியுமான்னு கேட்டுண்டு வா" என்றார்.
இவரும் அங்கே பெட்டிக்கடையில் தொங்கிய கயிற்றில் பீடியை பற்ற வைத்துக் கொண்டிருந்தவனிடம் நெருங்கி அப்படியே கேட்டதும் அவன் பீடியை உதறிவிட்டு பதறினான்.
யார் நீங்க? எதுக்கு கேக்கறீங்க? என்று சந்தேகப்பட்டு கேட்டான். "பெரியவா கேட்டுண்டு வரச்சொன்னா" என்று இவர் சொன்னதும் படபடப்புடன் "எங்கே பெரியவா எங்கே பெரியவா" என்று கேட்டான். தெருவின் அந்த ஓரத்தில் போய்க் கொண்டிருந்த பெரியவாளை இவர் காட்டியதும் பயந்தபடி எதிர்திசையில் ஓடிவிட்டான்.
இதை அவர் பெரியவாளிடம் வந்து சொன்னார்.
பின் கோபாலபுரத்தில் ஒரு வீட்டில் பெரியவாளை பூர்ணகும்பம் காட்டி அழைக்க அங்கே பக்தர்களுக்கு அருளாசி வழங்கியபின் பெரியவா கிளம்பினார். அப்போது அவன் நெற்றியிலும் மார்பிலும் ஒழுங்கில்லாமல் விபூதியை பூசிக்கொண்டு இடுப்பில் துண்டோடு ஓடிவந்து பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.
"இவன் யார்?" என்று பெரியவா அவனை தெரியாதது போல் சுவாமிநாதனிடம் கேட்டார்.
"பெரியவா இவன் கிட்டேதான் போய் சித்தமுன்னாலே கேட்டுண்டு வரச்சொன்னீங்க... இப்போ மூஞ்சி கைகால் அலம்பிண்டு விபூதி இட்டுண்டு வந்திருக்கான்" என்றார் சுவாமிநாதன்.
உடனே அவனும் "நான் பரவாக்கரை ச்ரௌதிகளின் பேரன் பிரணதார்த்தின்னு பேரு" என்றான்.
உடனே பெரியவா “ப்ரணதார்த்தின்னு மட்டும் சொல்லாதே ப்ரணதார்த்திஹரன்னு சொல்லு, இல்லே ஹரன் னு மட்டுமாவது சொல்லு... நமஸ்காரம் பண்றவாளோட பீடையை எல்லாம் போக்கிடுவார் சுவாமி… அதுதான் அந்த பேரு".
"அப்படித்தான் எல்லாரும் கூப்பிடுவா பழக்கமாயிடுத்து என்றான் அவன்.
"அதனாலேதான் இப்படி இருக்கே... நீ அத்யயனம் பண்ணினாயோ?" என்று பெரியவா கேட்டுவிட்டு வேதத்தில் ஒரு 'சாமாம்' என்பதை சொல்லச் சொன்னார். இரண்டு மூன்று வாக்யத்துக்கு மேல் சொல்லத் தெரியவில்லை. மறந்துவிட்டதென்று சொன்னான்.
"நான் நல்லா சொல்றேன்னு தாத்தா எனக்கு ஸாம வேதம் சொல்லிக் கொடுத்தா, எனக்கு அது பிடிக்கலே. வீட்டை விட்டு ஓடிவந்துட்டேன்" என்றான் அவன்.
"சரி! இப்போ என்ன செய்யறே?" என்று பரிவுடன் கேட்டார்.
"போலீஸ்காராளுக்கு உதவி பண்றேன்".
"அவாளுக்கு அப்படி நீ என்ன உதவி பண்றே" என்று பெரியவா கேட்டார்.
அதற்கு அவன் விளக்கமாக சொன்ன பதிலில் பெரியவாளே கலங்கி போய்ட்டார்.
இவனை போலீஸ்காரர்கள் பொய்சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வதையும், ஒவ்வொரு முறையும் அவர்கள் சொல்லிக் கொடுப்பதை அப்படியே கோர்ட் கூண்டில் நின்று சொல்வதையும், அதற்கு அவ்வப்போது அவர்கள் தரும் பணத்தை வாங்கி கொண்டு ஜீவனம் நடப்பதையும் அவன் கூறியபோது பெரியவா விசனத்தோடு அதைக் கேட்டுக் கொண்டார். போலீஸ் காரர்களுடன் போவதால் அவர்களுடன் சேர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் வந்து விட்டதாகவும், சொன்னான்.
"கோர்ட்டுக்கு போகும்போது சட்டையெல்லாம் போட்டுண்டு போவியா?" பெரியவா ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்து இப்படி கேட்பது போலிருந்தது.
"இல்லே போலீஸ்காரா விடமாட்டா. பட்டை பட்டையா" விபூதி பூசிக்கணும். பூணூலை நல்லா சோப்பு போட்டு வெளுப்பாக்கிக்கணும்" என்றான் அப்பாவியாக.
"இப்படி பொய்யா சாட்சி சொல்றது பாவமில்லையா?"
"பாவம் னு தெரியறது... இனிமே வரமாட்டேன்னு சொன்னா போலீஸ்கார் அடிப்பாளோன்னு பயமா இருக்கு.. ஒரு தரம் அப்படி செமத்தியா அடி வாங்கினேன்.
"நான் ஒரு வழி சொல்றேன் கேளு... மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மேலக் கோபுர வாசல்லே தினமும் சாயங்காலம் நல்லா பெருக்கி ஜலம் தெளிச்சுட்டு வா... தினம் அவாளை பணம் கொடுக்கச் சொல்றேன். மத்தியானம் சாப்பாடும் போடச் சொல்றேன்" என்று கருணையோடு அவனை திருத்த விழைந்தார்.
ஆனால் அவன் கோயில் உண்டகட்டி எல்லாம் வேண்டாம் என்று மறுத்ததும் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் சாப்பாடு போட ஏற்பாடு செய்வதாக கூறினார்.
அதற்கும் அவன் "அது சரிப்படாது” என்று சொல்லி விட்டான்.
"சரி இரண்டு நாளைக்கு மடத்திலே இரு. சந்திரமௌலீஸ்வரர் பூஜையைப் பாரு. பூஜை ஆனதும் சாப்பாடு போடச் சொல்றேன். யோசிச்சு பதில் சொல்லு."
அவனை திருத்த பெரியவா இத்தனை வழிகளை சொல்லியும் அதை அவன் ஏற்கவில்லை.
“இன்னிக்கு அது முடியாது. எழும்பூர் கோர்ட்டிலே ஒரு பெரிய கேஸ்... சாட்சி சொல்ல போகாட்டா முதுகெலும்பை போலீஸ்காரா முறிச்சிடுவா... நான் போறேன்" என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.
பெரியவா அவன் காம்பவுண்டு வெளியே போகும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அதன்பின் எழுந்து உள்ளே சென்றார்.
சுவாமிநாதனும், நீலகண்டய்யர் என்பவரும் பெரியவாளை தொடர்ந்து சென்றனர். நீலகண்டய்யர் "பெரியவா அத்தனை சொல்லியும் அவன் கேட்கலையே" என்றார்.
"அது இருக்கட்டும் போலீஸ்காரா பொய் சாட்சின்னு ஒரு தொழிலையே ஜனங்களுக்கு கத்துக் கொடுத்திருக்காளே... கொலை ஒரு அநியாயம். கொலையை பார்த்தவா சாட்சி சொல்லாதது அடுத்த அநியாயம்... பார்க்காதவா பொய் சாட்சி சொல்றது மூனாவது அநியாயம்... இதிலே இன்னொரு வேதனை... பிராமணன் பொய் சாட்சி சொன்னா கூட கோர்ட் அதை சத்தியம்னு நம்பும்னு போலீஸ்காரா நினைக்கறா... அதனாலே பொய்சாட்சி சொல்ல வரும் போது விபூதியும், பூணலும் தெரியற மாதிரி அழைச்சுண்டு போறாளாம்... கோர்ட்டுக்கு போகாட்டா அடிப்பான்னு இவன் பயந்து ஓடறான்."
மிகமிக வேதனையோடு பெரியவா இதை சொன்னார். அவர் மனது பெரிதும் பாதிக்கப்பட்டாற் போல் தோன்றியது.
"பெரியவா ரொம்ப மனகிலேச பட்டாப்போல இருக்கு.. நாம இதுக்கு என்ன செய்யமுடியும்" என்று நீலகண்டய்யர் பெரியவாளுக்கு ஆறுதலாக சொன்னார்.
"சந்நியாசி சுகதுக்கங்களுக்கு மனசிலே இடம் கொடுக்கக் கூடாதுன்னு சாஸ்திரம் சொல்றது தெரியுமோ" என்று தன்னை தானே சமாதானம் செய்து கொள்ள முயற்சிப்பது போல் பெரியவா பேசினார்.
இருந்தாலும் அந்த சந்நியாச திருஉருவில் கருணாமூர்த்தி சங்கரர் அந்த பிரபல வேதவிற்பன்னரின் சந்ததி இப்படி சீரழிந்து துன்பமுறுவதை எண்ணி மிகவும்
தாபப்பட்டது.
அதனால் அன்று பெரியவா தன் ஸ்ரீமடதர்மமான சந்திரமௌலீஸ்வரர் பூஜையை கூட செய்யவில்லையாம். அன்று முழுவதும் பிரணதார்த்திஹரன் என்ற ஒரு ச்ரௌத்திரிகளின் பேரன் இப்படி கஷ்டப்படுகிறானே என்று எண்ணி அந்த கருணைதெய்வம் உருகியது போலிருந்தது.
வாழையடி வாழையாக தொடரவேண்டிய வேதஞானம் இப்படி அறுபட்டு விட்டதே என்பதில் வேதனையையும் மீறி, ஒரு பிராமணன் எப்படி எல்லாம் சீரழிந்து போகிறான் என்று எண்ணியதில் துக்கமும் ஒன்று சேர்ந்ததில் சுகதுக்கத்துக்கு இடமளிக்கக் கூடாத மஹானின் மனது அன்று பெரும் பாரமாக துயரமுற்றது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏


































