Puthiya Tamilagam retweeted
கோவை பள்ளி மாணவன் அகிலன் மரணம்.!
நான்கு நாளாகியும் அரசு மௌனம் சாதிப்பது ஏன்?
உயர் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் உடனடியாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
........................................
கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே. நாயுடு அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் (+1) வகுப்பு பயின்று வந்த அகிலன் என்ற மாணவன், அப்பள்ளியில் தனக்கு நேர்ந்த சாதியப் பாகுபாடு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அம்மாணவனின் மரணத்திற்குத் தூண்டுதலாக அமைந்த ஆசிரியர் விஜயகுமார் மற்றும் பள்ளி முதல்வர் அருண்குமார் ஆகியோரைக் கைது செய்ய வலியுறுத்தி, நான்காவது நாளாக அவரது பெற்றோர் போராடி வருகின்றனர்.
பள்ளி நேரத்தில், வகுப்பறையில் சக வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் நடந்த தீண்டாமை வன்கொடுமையால் அம்மாணவன் உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தகவல் தெரியவந்த உடனேயே, தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட ஆசிரியரையும், அம்மாணவனைக் கேலி செய்த மாணவர்களையும் அழைத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், பாதிக்கப்பட்ட மாணவன் நேரில் சென்று புகார் அளித்த பின்னரும் தலைமையாசிரியர் அந்த ஆசிரியர் மீது ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை? தலைமையாசிரியரின் இந்த உதாசீனப் போக்கு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
மாணவன் உயிரிழந்த பிறகும், பெற்றோரின் போராட்டத்திற்குப் பின்னருமே தலைமையாசிரியரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நியாயப்படி, அவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கைக்குப் பள்ளி நிர்வாகம் பரிந்துரைத்திருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு செய்யாமல் தற்காலிகப் பணிநீக்கம் செய்ததன் மூலம், தவறிழைத்த ஆசிரியர்களைப் பள்ளி நிர்வாகம் மறைமுகமாகப் பாதுகாக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.
மாணவனின் உடலை உடற்கூராய்வு செய்ய அனுமதிக்காமல் பெற்றோரின் போராட்டம் தொடர்கிறது. ஆனால், இதுவரை பள்ளிக் கல்வித்துறையும் காவல்துறையும் இணைந்து விசாரித்தார்களா? அதன் உண்மைத்தன்மை என்ன? தவறிழைத்தவர்களைப் பாதுகாப்பதில் அரசின் தலையீடுகள் உள்ளனவா? என்பது குறித்துப் பலவிதமான சந்தேகங்கள் எழுகின்றன.
மாணவன் இறந்து நான்கு நாட்கள் ஆகியும்கூட, இனியும் அரசுத் தரப்பில் மௌனம் சாதிப்பது நியாயமல்ல. பள்ளி வகுப்பறையில் மாணவன் அகிலன் இழிவுபடுத்தப்பட்டது முதல் மரணம் நிகழ்ந்தது வரையிலும் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் விசாரிக்க, மாவட்ட அளவிலான உயர் காவல்துறை அதிகாரிகள், கல்வித்துறை, வருவாய்த்துறை மற்றும் மாணவன் அகிலனின் பெற்றோர் தரப்பில் ஒருவர் உள்ளடங்கிய சிறப்புக் குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்து, ஓரிரு நாட்களில் விசாரித்து உண்மைத்தன்மையை வெளிக்கொணர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
24.10.2026
தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள் ஏலம்?
வேண்டாம் இந்த விபரீதம்!
...........................................
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நதிகளான தாமிரபரணி, வைகை, அமராவதி, காவிரி, பாலாறு மற்றும் எண்ணற்ற துணை நதிகளின் படுகைப் பகுதிகளில் படிந்து கிடக்கும் மணலைத் தனியாருக்கு ஏலம் விட்டதும், அதைப் பயன்படுத்தி அவர்கள் ஆறுகளின் நீரோட்டங்களை தடுக்கக்கூடிய அளவிற்கும், நிலத்தடி நீரை வெகுவாகப் பாதிக்கக்கூடிய அளவிற்கும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பல ஆயிரம் மடங்கு மணலை அள்ளிக் கொள்ளையடித்ததன் விளைவாக எழுந்த தொடர் எதிர்ப்புகளினால், அது கடந்த ஆட்சியில் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த ஆட்சியில் கடந்த ஐந்து மாத காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மணல் குவாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்), இப்பொழுது மீண்டும் ஒரு சிலருக்குக் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன.
டெண்டர் கோருவது குறித்து எந்தவிதமான வெளிப்படையான அறிவிப்புகளையும் அரசு சார்பாக வெளியிடாமல், பூட்டிய நான்கு சுவர்களுக்குள் நான்கு நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு, அவர்கள்தான் டெண்டரில் கலந்துகொண்டார்கள் என்று அரசு குறுக்கு வழியில் செயல்படுமேயானால், அது கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மணல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில், கடந்த இரண்டு மூன்று ஆட்சிக் காலங்களிலும் ஒரு சில நபர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
தமிழக ஆறுகளில் உள்ள மணலைத் தமிழ்நாட்டு மக்களின் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துவது என்பது வேறு; ஆனால், அதை அண்டை மாநிலங்களான கேரளாவுக்கும் கர்நாடகத்திற்கும், வெளிநாடான மாலத்தீவிற்கும் கடத்துவது என்பது முற்றிலும் வேறு.
’ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடத்தப் போகிறோம்’ என்று தேர்தலுக்கு முன்பு முழங்கிவிட்டு, தற்போது கடந்த காலங்களை விடப் பன்மடங்கு ஊழல் பெருக்கெடுத்து ஓடும் வகையில், தமிழக ஆறுகளில் மணல் கொள்ளையடிக்க நான்கு தனியார்களைத் தேர்ந்தெடுத்திருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே தமிழக மக்கள் ஆற்று மணலுக்கு மாற்றாக எம்-சாண்ட் (M-Sand) பயன்பாட்டிற்குப் பழகிவிட்டார்கள். எனவே, எம்-சாண்ட் விநியோகத்தை முறைப்படுத்தவும் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மீண்டும் தமிழக ஆறுகளைச் சூறையாட எந்தக் கொள்ளைக் கும்பலுக்கும் அனுமதியளித்துவிடக் கூடாது என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும்:
* ஆற்று மணல் அள்ள எப்பொழுது வெளிப்படையாகடெண்டர் கோரினீர்கள்?
* அதற்கான அறிவிப்பு எந்தெந்த நாளிதழ்களில் எப்போது வெளியானது?
* விண்ணப்பிக்க எவ்வளவு கால அவகாசம் வழங்கப்பட்டது?
* டெண்டரில் கலந்துகொள்வோருக்கு என்னென்ன தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன?
எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மணல் குவாரி ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படிருந்தால், மீண்டும் ஒரு மிகப்பெரிய தவறுக்கு இந்த அரசு வித்திடுவது போல் தோன்றுகிறது.
எனவே, தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் ஏலம் விடப்பட்டது குறித்து நீர்வளத் துறையும், பொதுப்பணித் துறையும் இதன் உண்மைத்தன்மையை உடனடியாக தமிழக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள் ஏலம்!
மீண்டும் வேண்டாம் இந்த விபரீதம்!!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
23.10.2026

இன்று கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
....................................
அண்மையில்நடைபெற்ற தாராபுரம் சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட ஒரு நிகழ்வுக்காக பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தேர்தல் நேரங்களில் நடக்கக்கூடிய விதிமுறை மீறல்கள் அல்லது பெரிய அளவுக்கு வன்முறை நிகழ்வுகள் ஏற்பட்டாலொழிய எவரும் கைது செய்யப்படுவதில்லை. அப்படியிருக்க, நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேர்தல் முடிந்து ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்து, இன்று ஆங்காங்கே கைது செய்யப்பட்டு, காவல் நிலையம் அழைத்து செல்லப்படுவதாக வரும் செய்திகள் கண்டனத்திற்குரியது. அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்.
ஒரு பக்கம் பெண்களுக்காகப் பரிந்து பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் அதே பெண்களை காவல் துறையை வைத்து ஒடுக்குவது முறையல்ல. அதுவும் தேர்தல் நேரத்திலே பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு, முதலமைச்சருடைய வருகையைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டபோதுதான் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் குற்றமாகக் கருதினால், இந்தியாவில் யாரும் சுதந்திரமாக நடமாட முடியாது; பேச முடியாது. இது ஒரு போலீஸ் ஸ்டேட் ஆகிவிடும். அதனால் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளக் கூடாது, உடனடியாக அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
20.10.2026

@DrKrishnasamy @NaamTamilarOrg
Puthiya Tamilagam retweeted
இன்றைய தினம் கோவையில் உள்ள தாமரை உலகப் பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் அண்ணன் திரு. @DrKrishnasamy அவர்களுடன் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நல்ல தொடக்கங்களின் அடையாளமாகத் திகழும் விஜயதசமி நன்னாளில், குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கி வைக்கும் வித்யாரம்பம் நிகழ்வில் கலந்துகொண்டது மிகுந்த மனநிறைவை அளித்தது.
கல்வியே ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கான வலிமையான அடித்தளம். ஒவ்வொரு குழந்தையும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கி, தங்களது கனவுகளை நனவாக்கி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடையட்டும். அனைத்து குழந்தைகளின் கல்விப் பயணமும் வெற்றிகரமாக அமைய இந்த இனிய நன்னாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (1/3)
#WATCH | Coimbatore, Tamil Nadu | Founder and President of Puthiya Tamilagam Party Dr K. Krishnasamy says, "In 2021, Mr Edappadi Palaniswami, that is, the AIADMK party, was in power. After the demise of Madam Jayalalithaa, he took over as Chief Minister of Tamil Nadu. Even though it was a short period of four years, he was able to implement so many programmes... He was able to reach out to people at the grassroots level... This is an alliance era. If you calculate independently, they may not be able to secure full votes, but when they combine, one plus one does not become two; it multiplies into four or six or eight... I think in 2021 itself, Mr Edappadi Palaniswami missed forming a grand alliance. That cost him because he could not come to power again..."
Puthiya Tamilagam retweeted
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமென்றால் களம் தமிழகமாகத்தானே இருக்க வேண்டும்? டெல்லி எதற்கு?
Puthiya Tamilagam retweeted
தமிழக மக்கள் அனைவருக்கும்
புதிய தமிழகம் கட்சியின்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.!
Puthiya Tamilagam retweeted
கடமைகளை மறந்துவிட்டு,
காலையிலேயே கால் கடுக்க ’இளைஞர்கள்’ தவம் கிடக்கலாமா?
திரையரங்குகள் பொழுதுபோக்கிற்கான இடங்களாக இருக்கலாமே தவிர, பொழுதையே போக்கும் ’புகலிடங்கள்’ ஆகிவிடக் கூடாது!
................................................
போட்டிகள் நிறைந்த இந்நவீன காலத்தில் ’பொழுதுபோக்கு’ என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் தினசரி வழக்கம் அல்லது கடமையாகக் கருத இயலாது; வாரத்திற்கு ஒருநாள் அல்லது மாதத்திற்கு இருநாள் என்பது இயல்பானது. தொடர் வேலைக்குப்பின் ஓய்வு என்பதை மாற்றி, வேலை நாள் முழுவதையுமே பொழுதுபோக்குகின்ற வகையில் இன்றைய இளைஞர்கள் திரையரங்குகளை நிரப்பும் அபாயம் வளர்ந்து வரும் போக்கு நம் இளைஞர் சமுதாயத்திற்கு அழகல்ல!
காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரையிலும் உழைத்த பிறகு, இரவு உணவை முடித்துவிட்டு, 8 மணி நேர உறக்கத்திற்கு பிறகு, அதிகாலையில் உற்சாகமாக எழுந்து பணியை துவங்கினால், அது கல்வியோ, தொழிலோ, வணிகமோ, வளர்ந்து பெருகும். ஆனால் திரை - கவர்ச்சி மோகத்தில் கல்வி, குடும்பப் பொறுப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு, காலை எட்டு மணிக்கே திரையரங்குகளை நோக்கிப் படையெடுப்பது வளர்ந்து வரும் நம் பாரத தேசத்திற்கு பேராபத்தானது.
தமிழ்நாடு கடந்த 60 ஆண்டுகளாகத் திரைக் கவர்ச்சிக்கு ஆட்பட்ட அரசியலால் சூழப்பட்டுள்ளது. அதன் விளைவாக, அண்மையில் நடந்த தேர்தலில் எவ்வித அரசியல், சமூக, பொருளாதார சித்தாந்தமும் இல்லாமல், வெறும் திரைக் கவர்ச்சியால் மட்டுமே ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இது தொடருமேயானால், தமிழக இளைஞர் சமுதாயம் எண்ணிப் பார்க்காத பேரழிவைச் சந்திக்க நேரிடும்.
நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்வதற்கு பெரும் விலை பேசப்படுகிறது. ஆனால், நிஜங்களைத் தவிர்த்து நிழல்களைப் பிம்பப்படுத்துவதற்கு, பழமைப்பட்டுப் போன பல திரை நடிகர் - நடிகையர் கூட்டம் வீதிக்கு வந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே இளைஞர் சமுதாயம் மது, போதை, புகைப் பழக்கத்திற்கு ஆட்பட்டு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இப்பொழுது திரை என்ற போதையும் வலிந்து திணிக்கப்படுகிறது. புத்தகம் படிப்பது, பூங்காக்களுக்கு செல்வது, குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிப்பது என்று பொழுதைப்போக்க நல்வழிகள் பல உண்டு. அதைவிடுத்து, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் என்னதான் அவர்கள் உற்சாகப்படுத்திவிடப் போகிறார்கள்?
என்னதான் தனக்கு பிடித்த நடிகர், நடிகையாக இருந்தாலும், நூறு ரூபாய்க்கு விற்கும் டிக்கெட்டை ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் பிரீமியம் கொடுத்து வாங்கிச் சென்று, திரையரங்கு வாசல்களிலே திரண்டு நிற்பது இளைஞர் சமுதாயத்திற்கு அடுக்குமா?
வாரத்தில் ஆறு நாட்களும் உழைப்பவராக இருந்தால் வாரத்தின் இறுதி நாளில் மாலையில்கூட திரையரங்குக்குச் செல்லுங்கள்; அது உடலுக்கும் உள்ளத்திற்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கட்டும்; வாரமெல்லாம் பணியால் ஏற்படுகின்ற மன அழுத்தத்தைக் குறைப்பதாக இருக்கட்டும். ஆனால் அதற்கு மாறாக, உங்கள் முன்னால் இருக்கக்கூடிய பணிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, காலையிலேயே கால் கடுக்கத் திரையரங்குகளிலே முடங்கி கிடப்பது நியாயமாகுமா?
திரைப்படங்கள் பொழுதுபோக்காக இருக்க வேண்டுமே தவிர, பொழுதையே போக்கிவிடும் சாதனமாக இருக்கக்கூடாது. உழைப்பை விரயமாக்குவதற்கும், அறிவை மழுங்கடிப்பதற்கும் உண்டான ஆயுதமாக இருந்துவிடக்கூடாது.
கற்க வேண்டிய வயதில் கற்பதற்குப் பதிலாக, உழைக்க வேண்டிய வயதில் உழைப்பதற்குப் பதிலாக, உடல்நலம் பேண வேண்டிய வயதில் உடல்நலம் பேணுவதற்குப் பதிலாக, உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைத் திரையரங்குகளிலும் நடிகர் - நடிகைகளின் கவர்ச்சியிலும் அழித்துக்கொள்ளாதீர்கள்.
நிழல்கள் நிஜங்களாகாது; நிஜங்கள் நிழலாகிப் போய்விடக்கூடாது. இளைஞர்களே, கவர்ச்சியில் இருந்து மீண்டு வாருங்கள்.
ஜீரோக்களெல்லாம் ஹீரோக்களாக்குவதற்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளாதீர்கள்.
நாளை என்ற நாள் ஒன்று உங்களுக்கு இருக்கிறது. நல்ல முன்மாதிரிகளாக வளருங்கள்; தவறான முன்மாதிரிகளை உருவாக்கி விடாதீர்கள்.!
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.10.2026

தமிழக முழுநேர ஆளுநராக திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் நியமனம்!
தமிழக மக்கள் பிரச்சனைகளையும் ஆதங்கங்களையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு நல்வாய்ப்பாக அமையும்!
...............................................................
தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநராக இருந்த திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், அம்மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்; மேலும் பீகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆளுநராகச் சிறப்புறப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
தமிழ்நாடு பல்வேறு வகையான அரசியல், பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்களைக் கொண்ட மாநிலம். இக்கட்டான காலகட்டங்களில் இம்மாநிலம் முதிர்ச்சி பெற்ற ஒருவரால் வழிநடத்தப்பட வேண்டும். அந்த வகையில், நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரரான திரு. அர்லேகர் அவர்கள், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது.
தமிழக மக்கள் தங்கள் பிரச்சனைகளையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்துவதற்கும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும் உண்டான நல்வாய்ப்பாக இவரது நியமனம் அமையும் என கருதுகிறேன். அவர் இப்பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்ற புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.10.2026
மின்பற்றாக்குறையைச் சமாளிக்க யூனிட் ரூ.35-க்குக் கொள்முதல்!
₹1,15,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் செயல்!
இது மிகப்பெரிய முறைகேடாகவே கருதப்படும்; இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்!
..................................................
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற மே மாதம் 10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து, அனைத்துத் துறைகளும் பெரும் பாதிப்படைந்துள்ளன.
தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் ஜெனரேட்டர்களை இயக்கி மின்தட்டுப்பாட்டை ஓரளவு சமாளித்துக் கொண்டாலும், வீடுகளுக்குப் போதிய மின்சாரம் கிடைக்காத சூழலில், மின்விசிறிகளைக் கூட இயக்க முடியாமல், வழக்கத்திற்கு மாறாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வறுத்தெடுக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து மக்கள் மீள முடியாமல் தத்தளிக்கிறார்கள்.
கடந்த ஆட்சியின் மீது வேறு வேறு குற்றச்சாட்டுகள் இருப்பினும், ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு சூழ்நிலையிலும் மின்தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். மே மாதம் 10-ஆம் தேதி வரையிலும் அனைத்தும் சரியாகத்தானே இருந்தது? தமிழகத்தினுடைய தேவைகளை அனல் மின் நிலையங்கள், கூடங்குளம் அணுமின் நிலையம், நீர்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை, சூரிய மின்சக்தி உள்ளிட்ட சுய உற்பத்திகளால் தானே சமாளித்து வர முடிந்தது?
கடந்த நான்கைந்து மாத காலமாக மின்தட்டுப்பாடு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரையிலும் அரசு வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. துவக்கத்தில் மின்வெட்டைப் பற்றிக் கேட்டபோது, "ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போய்விட்டன" என்று ஒரு விநோதமான பதிலை அளித்தார்கள்.
தற்போது தினமும் 4,500 மெகாவாட் மின்தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், அவற்றை வெளிச்சந்தையில் வாங்க முயற்சிப்பதாகவும், அதுவும் ₹5 முதல் அதிகபட்சம் ₹7-க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த மின்சாரத்தை, யூனிட் ஒன்றுக்கு ₹35 என்ற பகாசுர விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே தமிழ்நாடு ₹13 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. இந்நிலையில், ₹5 முதல் ₹7-க்கு வாங்கப்பட வேண்டிய மின்சாரத்தை ஏழு மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்குவது நியாயமாகத் தெரியவில்லை. இதில் ஏதோ ஒரு மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
கடந்த கால ஆட்சியைப் பற்றி மட்டுமே குறை சொல்லிக்கொண்டு இந்த ஆட்சியைத் தொடர்ந்து நடத்த முடியாது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் இவ்வளவு மின்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது? குறைந்த விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கையை எடுக்கத் தவறியது ஏன்? இந்த அரசு உண்மைத் தன்மையை வெளியிட வேண்டும்.
1,500 மெகாவாட் மின்சாரத்தை தினமும் இவர்கள் குறிப்பிடக்கூடிய ₹35 விலையில் கொள்முதல் செய்ய இந்த அரசு முயலுமேயானால், அடுத்த 20 நாட்களிலேயே ₹1,15,000 கோடி ரூபாய் அளவிற்கு நட்டஈடு ஏற்பட்டுவிடும்.
எனவே, இவ்வரசு 1,500 மெகாவாட் மின்சாரத்தை ₹35-க்கு வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, வெளிப்படையாக இந்தியா முழுமைக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரி குறைந்த விலைக்கே மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.10.2026

நோபல் பரிசு பெற்ற நவநீதம்பிள்ளை அவர்களுக்குப் பாராட்டு விழா!
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் - தமிழக மக்கள் சார்பாக நடத்திட,
தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக முன்முயற்சி எடுக்க வேண்டும்.!
..........................................
இந்திய - தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கப் பிரஜையான மதிப்பிற்குரிய. நவநீதம் பிள்ளை அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கடந்த வாரத்தில் வழங்கப்பட்டது.
அவர் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மட்டும் நாம் மகிழ்ச்சி கொள்வதோ, பெருமையடைவதோ இல்லை. மாறாக, எவ்வித ஆரவாரமும் இன்றி ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், உகாண்டா உட்படப் பல்வேறு தேசங்களில் எளிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும் பரிந்து பேசியதோடு, நீதி கிடைப்பதற்காகவும் பாடுபட்டவர்.|
எனவே, அவருக்கு தமிழகத்தில் ஒரு பிரம்மாண்டமான கட்சி சார்பற்ற பாராட்டுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதே கருத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செ.சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு, புரட்சி பாரதம் கட்சி தலைவர் எம். ஜெகன் மூர்த்தி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கே. சி. திருமாறன், தமிழ்நாடு & பாண்டிச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைவர் ஜெகத்குரு சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் உள்ளிட்ட அனைவரும் மனப்பூர்வமாக வரவேற்கின்றனர்.
எனவே, இந்தப் பாராட்டுக் கூட்டத்தை முழுக்க முழுக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற நிலை இல்லாமல் தமிழகமே ஒன்றுதிரண்டு பாராட்டுகின்ற வகையில், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தக்கூடிய விதத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
எனவே, காலந்தாழ்த்தாது தமிழக அரசின் சார்பில் ஆளுங்கட்சித் தரப்பு, எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அடங்கிய ஒரு குழுவை அவரைச் சந்திக்க நேரடியாக அனுப்பி, அவருடைய தேதியைப் பெற்றுத் தமிழகத்திலே பிரம்மாண்டமான ஒரு பாராட்டுக்கூட்டத்தை நடத்துவதன் மூலமாகத்தான் தமிழ் மக்களின் ஒற்றுமையை உலகுக்குப் பறைசாற்ற முடியும். அதேபோன்று ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுவரையிலும் கிடைக்காத நீதியும் கிடைப்பதற்கு உண்டான ஒரு வழிவகை ஏற்படும்.
எனவே, நவநீதம் பிள்ளை அவர்களுக்குப் பாராட்டுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்திட வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.10.2026
Puthiya Tamilagam retweeted
இந்திய - தமிழ் வம்சாவளி திருமிகு. நவநீதம் பிள்ளை!
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு மிகவும் தகுதி பெற்றவர்!
......................................
2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள, இந்திய - தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திருமிகு. நவி பிள்ளை என்ற நவநீதம் பிள்ளை அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குக் குடிபெயர்ந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இவர், அங்கேயே பிறந்து வளர்ந்து சட்டக் கல்வி பயின்றார். தென்னாப்பிரிக்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய முதல் கறுப்பினப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.
வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் விளங்கிய இவர், தனக்காக மட்டுமன்றி அங்கு நிலவிய நிறவெறிக்கு எதிராகவும், உலக அளவில் மனித உரிமைப் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் (The Hague) நகரிலுள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகச் செயல்பட்டதுடன், பெண்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதிலும் முன்னின்று செயல்பட்டுள்ளார். அமைதிக்கான இவரது சிறந்த சேவையைப் பாராட்டி, இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
09.10.2026
Puthiya Tamilagam retweeted
மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்கள்!
தவெக சாதித்துவிடவும் இல்லை; திமுக, அதிமுக சாய்ந்து போய்விடவும் இல்லை!
......................................
தமிழ்நாட்டிற்கான சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுற்று ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், ஆளுங்கட்சிப் பக்கம் சாய்ந்தால் ஆதாயமான பதவிகள் கிடைக்கும் என்ற அடிப்படையில், இதுவரை ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து தவெகவிற்கு தாவி உள்ளனர். இது அப்பட்டமான ’குதிரை பேரம்’ என்று அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.
சட்டரீதியாக இத்தேர்தலை நடத்த வழியில்லாத காரணத்தினாலே, தாராபுரம் மற்றும் மதுராந்தகத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த நான்கு மாத ஆட்சியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சாதனைகள் எதையும் ஆளும்கட்சி செய்யாத நிலையில், நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்ற கருத்தை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். அதற்கு ஏற்ப, அணி மாறிய இரண்டு வேட்பாளர்களும் தொகுதிக்குள் சென்ற இடமெல்லாம் பொதுமக்களின் எதிர்ப்புகளைச் சந்தித்தனர்.
கள நிலவரங்கள் நாளுக்கு நாள் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சென்றுகொண்டிருந்ததை அறிந்துகொண்ட விஜய், மதுராந்தகத்தில் 39 இடங்களில் பேரணி நடத்தினார். தாராபுரத்தில் மிக குறைவாக வாக்குகள் பெறக்கூடும் என்ற மூலனூர் ஒன்றியத்தில் மாட்டு வண்டியை ஓட்டினார்; முருங்கைக்காய் பறித்தார். அங்கிருக்கக்கூடிய பெரும்பான்மை சமுதாயத்தின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று விழுந்து விழுந்து சாமி கும்பிட்டார். பொதுவாக இடைத்தேர்தல்களுக்கு முதலமைச்சராக இருக்கக்கூடியவர்கள் இப்படியெல்லாம் மூலைமுடுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்த வரலாறு இதுவரை இல்லை.
ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றைக் கொண்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
எனினும், தாராபுரத்தில் ஆறு சுற்றுகளில் அதிமுகவே முன்னிலை வகித்தது. அதிமுக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.
இரண்டாவது இடத்திற்கு வந்த திமுகவிற்கும், வெற்றி பெற்ற தவெகவிற்கும் இடையே வாக்கு வித்தியாசம் வெறும் 9,471 மட்டுமே. அதேபோல மதுராந்தகத்திலும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே கடந்த கால வரலாறு ஆகும்.
எதிர்க்கட்சிகள் கடந்த தேர்தலில் சந்தித்த தோல்வி மனப்பான்மையிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராதது; காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கள அளவில் ஒன்றுபடாமல் இருந்தது; உண்மையான நேச சக்திகளை இணைத்துக்கொண்டு செயல்படாதது ஆகியவை ஆளுங்கட்சிக்கு நூலிழையில் சாதகமாக அமைந்துவிட்டது. எனவே, தவெக இடைத்தேர்தலில் சாதித்துவிட்டது என்று சொல்வதற்கு எதுவுமில்லை.
கடந்த இரண்டு தேர்தல்களில் வாய்ச்சவடாலுடன் மாயாஜாலம் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் ’பச்சோந்திகளாக’ மாறி எதிர்த்தரப்பிற்குச் சென்ற பின்னரும் தனது வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்டது திமுக சாய்ந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது. இதன்மூலம் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலேயே திட்டமிட்டு மடைமாற்றப்பட்டு விட்டன என்பது உறுதியாகி உள்ளது; யார் யாரால் பலன்பெற்றிருக்கிறார்கள் என்பதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது.
அதிமுகவைப் பொறுத்தமட்டிலும், பொதுத் தேர்தலில் முதலிடத்திலிருந்த அதிமுக இப்போது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. தேர்தலுக்குப் பின்பு அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட பிளவுகள், பலர் அணி மாறியது, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வாரச்சந்தையில் கூடுவதுபோல பனையூரில் முன் கேட் வழியாகவும் பின் கேட் வழியாகவும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டது, மேல்மட்டத்தில் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகள், கள அளவில் பணியாற்ற போதிய தொண்டர்கள் இல்லாதது ஆகியவை அதனுடைய வாக்கு வங்கியைக் குறைத்ததோடு, மூன்றாவது இடத்திற்கும் தள்ளிவிட்டது.
2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக கூட்டணியில் அல்வாவை போல ஒரு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும், 17 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்ற அன்புமணி வஞ்சகத்தோடு நடுநிலைமை வகித்தது அதிமுகவிற்குப் பெரிய பலம் இழப்பாகும்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தமட்டிலும் தமிழக அரசியல் களத்தில் பச்சோந்திகளையும், சந்தர்ப்பவாதிகளையும் பொதுவெளியில் நன்கே அடையாளம் காட்டியிருக்கிறது. விஜயின் பலவீனத்தை வெளிப்படுத்தி, தமிழகத்தில் உள்ள எதிர் கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியதற்குண்டான எச்சரிக்கையையும், எதிர்காலத்திற்கான சரியான அரசியல் களத்தையும் அமைத்து கொடுத்துள்ளது.
மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்கள்!
தவெக சாதித்துவிடவும் இல்லை; திமுக, அதிமுக சாய்ந்து போய்விடவும் இல்லை!
@DrKrishnasamy தலைவர் அறிக்கை
Puthiya Tamilagam retweeted
அக்டோபர் 06 – சமூக ஜனநாயக உரிமை மீட்புப் போராளிகள் தினம்!
கொடியங்குளம் அரச பயங்கரவாதத்திற்கு நீதிகேட்டு
மெரினாவில் புதிய தமிழகம் பேரணி – பொதுக்கூட்டம்!
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த
திருசூலம் சிவஞானம் சுப்பிரமணியம் நினைவாக,
தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியளவில்
மெழுகுவத்தி ஏந்தி புதிய தமிழகம் கட்சியினர் அஞ்சலி!