O T F C retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் மண்டலம் 1 மற்றும் மண்டலம் 2 ஆகிய பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
@CMOTamilnadu | @TVKVijayHQ
O T F C retweeted
Maduravoyal’s rain preparedness reflects months of relentless efforts by our team, alongside dedicated officials and field staff.
Working round the clock with the right equipment, our teams continue to address every complaint swiftly.
Heartfelt appreciation to everyone working tirelessly on the ground! 🙏
——————
மதுரவாயலில் மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகள், கடந்த பல மாதங்களாக நாங்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்களுடன் இணைந்து மேற்கொண்ட அயராத முயற்சிகளின் பலன்!
உரிய உபகரணங்களுடன் இரவு பகல் பாராமல் பணியாற்றி, ஒவ்வொரு புகாருக்கும் விரைந்து தீர்வு காணும் அனைத்து பணியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! 🙏
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
Rowdytime Runner!
சென்னையில் அதிகனமழை பொழிந்துள்ளது. தனது தொகுதியான திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் மக்களை நேரில் சென்று பார்க்காமல், பண்ணையார் வீட்டு மகன் ரீபோஸ்ட்நிதி துபாய் பயணம் மேற்கொள்கிறார். சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்காகப் பேசத் துப்புக்கெட்டு ஓட்டமெடுக்கிறார் என்றால், இப்போதும் ஓட்டமெடுக்கிறார் ஓட்டநிதி!
ஆபாசநிதியோ உல்லாசப் பயணம் செல்ல, ஆபாசநிதியின் ஆஸ்தான அடிவருடியின் உத்தரவின்படி, Generational Abusers ஓட்டநிதியின் பழைய காணொளியை எடுத்து, அவர் தொகுதிக்குச் சென்றதாகப் பரப்பி வருகின்றனர். இப்படிப் பொய்த் தகவல்களைப் பரப்பி அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு யோசனை சொல்லிவிட்டு, அடுத்தவர்கள் தகவலைச் சரிபார்க்கவில்லை எனக் கோமாளித்தனம் செய்யும் சர்க்கஸ் கூடாரம்தான் திமுக!
இரவு முழுவதும் தவெக அரசு செயல்படவில்லை என ஒப்பாரி வைத்து ஓலமிட்ட ஓட்டநிதியின் துப்புக்கெட்ட Generational Abusers, காலையில் மழைநீர் வடிந்ததற்குத் திமுகதான் காரணம் என வெட்கங்கெட்டுத் தங்களது Dummy Daddy-யின் வழியில் தப்பாமல் Credit Stealing செய்கின்றனர்.
ஒருபுறம் பொறை போட்டு வளர்க்கும் Generational Abusers Credit Stealing செய்ய, மறுபுறம் ஓட்டநிதி துபாய்க்கு ஓட, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் Sweet Uncle.
நன்றாக ஓய்வெடுங்கள், Uncle!
நேத்து நைட் பூரா TVK அரசு சிறப்பா செயல்படல அப்படினு கொத்துஸ் பொலம்பிட்டு இருந்தாங்க, இன்னைக்கு காலைல 4000 கோடிக்கு போட்ட வடிகாலால தான் தண்ணி வத்திருச்சுனு பீதிகிட்டு இருக்கானுங்க…
2025 டிசம்பர்ல பெஞ்ச கனமழைல மட்டும் எப்படி வடிகால் வேலை செய்யல்ல, இல்ல அதுக்கு அப்புறம் நிதி ஒதுக்கீடு செஞ்சு இந்த 8 மாசத்துல போட்டீங்களா..😂😂கொத்தடிமை கோமாளிகளா!
🔥
சென்னை முழுவதும் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதமாகவே 100 HP திறன் கொண்ட மோட்டார்கள் நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாகவே தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.
தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் மாண்புமிகு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.
வெள்ளம் வந்த பிறகு அவசரமாகச் செயல்படுவதைவிட, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த நிர்வாகம். அதற்கேற்ப, தேவையான உபகரணங்களை முன்கூட்டியே நிறுவி, மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தியிருப்பது முக்கியமான நடவடிக்கையாகும்.
O T F C retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழா – முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், விரைவில் நடைபெறவுள்ள திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபப் பெருவிழாவை முன்னிட்டு
நானும், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களும் இணைந்து இன்று திருவண்ணாமலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கிரிவலப் பாதையில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், திருக்கோயிலில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரிவான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
ஆய்வின்போது, பக்தர்களுடன் இணைந்து அன்னதானத்தில் பங்கேற்று உணவு அருந்தியதுடன், அதன் தரத்தையும் ஆய்வு செய்தோம். மேலும், உள்ளூர் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு, கிரிவலப் பாதை மேம்படுத்துதல், தங்குமிட வசதிகள், குடிநீர், கழிவறைகள், உணவுக் கூடங்கள் மற்றும் அன்னதானத் திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வுகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, திருக்கோயில்களுக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. பக்தர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வரும் ஐந்து ஆண்டுகளிலும் தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் தேவையான வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவோம்.
அருள்மிகு அண்ணாமலையார் திருவருளால், கார்த்திகை தீபப் பெருவிழா சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @AadhavArjuna































