ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மோட்டார்ஸ் ஆலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்... ஆலை முழுவதும் வண்ணமயமான அலங்காரங்கள் செய்யப்பட்டு அதேபோல், ஆலையில் பராம்பர நடன நிகழ்ச்சிகளும் அரங்கேறின
#Chennai | #Hyndai | #Dance | #AyuthaPooja | #PolimerNews
திருவண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழா – முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், விரைவில் நடைபெறவுள்ள திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபப் பெருவிழாவை முன்னிட்டு
நானும், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களும் இணைந்து இன்று திருவண்ணாமலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கிரிவலப் பாதையில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், திருக்கோயிலில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரிவான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
ஆய்வின்போது, பக்தர்களுடன் இணைந்து அன்னதானத்தில் பங்கேற்று உணவு அருந்தியதுடன், அதன் தரத்தையும் ஆய்வு செய்தோம். மேலும், உள்ளூர் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு, கிரிவலப் பாதை மேம்படுத்துதல், தங்குமிட வசதிகள், குடிநீர், கழிவறைகள், உணவுக் கூடங்கள் மற்றும் அன்னதானத் திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வுகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, திருக்கோயில்களுக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. பக்தர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வரும் ஐந்து ஆண்டுகளிலும் தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் தேவையான வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவோம்.
அருள்மிகு அண்ணாமலையார் திருவருளால், கார்த்திகை தீபப் பெருவிழா சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @AadhavArjuna
dhenda harmandhram .. curse of tamil cinema and tamilians .. not bothered to visit #DevaSir death #AjithKumar
epavume en thalaivan..
#AyudhaPooja #saraswathi
அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகள்!
தங்களது தொழில் வளர்ச்சி பெற்று, கல்வி இனிதே தொடங்கப்பெற்று, செல்வம் உழைப்பினால் உயரப்பெற்று மென்மேலும் வளம்பெருகி வாழ்வாங்கு வாழ்ந்திட மகிழ்வான வாழ்த்துக்கள்!
Aprom Ponnaadai ethukku bro.. 😂😂😂
#BigJokePonga
திரைக்கதை அரசியலும் வெற்று விளம்பரங்களும் தோற்றுப்போனது! முதல் மழைக்கே சென்னையை தத்தளிக்க விட்டிருப்பது திரு. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் திறனின்மையை காட்டுகிறது!
வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், நேற்று இரவு பெய்த ஒருநாள் மழைக்கே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருப்பது @TVKVijayHQ தலைமையிலான தவெக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாகும். பன்னாட்டு விமான நிலையம், ஜி.எஸ்.டி சாலை, கணேசபுரம் சுரங்கப்பாதை என பிரதான வழிகள் முடங்கி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கார்கள் தண்ணீரில் மூழ்கி மக்கள் தத்தளிப்பது, அரசு இயந்திரம் செயலிழந்துவிட்டதையே காட்டுகிறது.
"மாற்றத்திற்கான அரசு" என வாய்ஜாலம் பேசிய திரு. ஜோசப் விஜய்யின் அரசு, மழைநீர் வடிகால் பணிகளிலும் தூர்வாரலிலும் காட்டிய அலட்சியமே இந்தப் பேரழிவுக்கு முழுமுதற் காரணமாகும். வடிகால்கள் தூர்வாரப்பட்டுவிட்டன, ராட்சத மோட்டார்கள் தயார் எனக் காகிதத்தில் கணக்கு காட்டி மக்களின் பல கோடி ரூபாய் வரிப்பணத்தை வீணடித்ததே தவிர, மழைநீரை வடியவைக்கக் களத்தில் எந்தவொரு உருப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆட்சி நிர்வாகம் என்பது திரையில் பேசும் பஞ்ச் வசனங்களோ, விளம்பர உத்திகளோ அல்ல; களத்தில் நின்று மக்களின் துயர் துடைக்கும் கடமை என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் உணர வேண்டும். மக்கள் வெள்ளத்தில் கண்ணீர் வடிக்கும்போது மௌனம் காக்காமல், தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கப்படும் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவும், துரித நிவாரணங்களை வழங்கவும் தவெக அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல் மக்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாக நேரிடும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Will you Also protest for TN's #cauvery water @prakashraaj ? #justasking
Shame on you bro..
@arivalayam @TVKVijayHQ @ThanthiTV
















