MOVIE REVIEW | MOVIE SUGGESTIONS AND RECOMMENDATIONS

Bengaluru
Joined June 2020
#Drones – எனக்கென்னவோ இந்தப் படம் எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் சைலண்ட்டா ஒரு சம்பவம் பண்ணும் என்று தோன்றுகிறது! @RMirdath அவர்களிடமிருந்து ஒரு நல்ல முயற்சி. வித்தியாசமான கதைக்களமும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனத்தை ஈர்க்கிறது. படம் வெளியான பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புவோம்! அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது!
437
மக்களே, தலைவர் ரஜினிகாந்தின் #Jailer2 படத்துக்காக DISTRICT APP-ல செம மாஸான OFFER கொடுத்திருக்காங்க! 🔥❤️ 🎟️ BUY 2, GET 1 TICKET FREE! 💥 UP TO ₹99 OFF! 🎫 COUPON CODE: JAILERB2G1 இந்த சூப்பரான OFFER-ஐ NEW USERS மட்டும் பயன்படுத்திக்கலாம். அதாவது, District App-ல புதிதாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும். #Jailer2 படத்தை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சேர்ந்து பார்க்கத் திட்டமிடுறீங்களா? அப்படின்னா, இந்த OFFER-ஐ USE பண்ணி டிக்கெட் BOOK செய்து பணத்தையும் SAVE பண்ணிக்கோங்க மக்களே! 2 TICKETS BUY பண்ணுங்க, 1 TICKET FREE-ஆ GET பண்ணுங்க! 🔥 இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! ❤️‍🔥 @District_SS #Jailer2 #SuperstarRajinikanth
1,866
#MeesayaMurukku2 படத்துல #HipHopTamizha இசையில Aura, Kalaivaniye, Vibe Venuma என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு feel! ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஸ்டைல்ல இருந்தாலும் எல்லாமே செம vibe. தியேட்டர்ல இந்தப் பாடல்களைக் கேட்கும்போது வேற லெவல் அனுபவம்!
297
#Netflix OTTயில் No.1 Trending, BMS Ticket Bookingல் No.1 Trending. #Mandaadi யின் இந்த வரவேற்பு படக்குழுவின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். #Soori யின் Performance வேற லெவல்!
152
Mithun Cinemas🕺🏻 retweeted
#DrivingLicence — ஒரு சின்ன ஈகோ பிரச்சனை எப்படி இரண்டு மனிதர்களுக்கு நடுவில் பெரிய போராட்டமா மாறுதுன்னு ரொம்ப சுவாரஸ்யமா சொல்லியிருப்பாங்க. Prithviraj, Suraj இருவருடைய நடிப்பும் படத்துக்கு பெரிய பலம். ஒருத்தருக்கு தன்னோட செல்வாக்கைக் காட்டணும்; இன்னொருத்தருக்கு தன்னோட சுயமரியாதையை விட்டுக்கொடுக்கக் கூடாது. கடைசியில் யாரும் விட்டுக்கொடுக்கத் தயாரா இல்லாதப்போ, அந்தப் பிரச்சனை எவ்வளவு தூரம் போகுதுன்னு படம் காட்டுது. என்னைப் பொறுத்தவரை, ego-வும் self-respect-ம் எங்கே வேறுபடுதுன்னு யோசிக்க வைக்கிற ஒரு நல்ல entertainer. நம்ம ஈகோவைத் திருப்திப்படுத்தப் போய், நமக்கே தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கிக்கிறோமோன்னு யோசிக்க வைக்கும் படம். 👍 🎬Youtube
1
4
21
1,730
Recent ah ஒரு Re-watch போட்டேன்...என்ன மாதிரியான படம் இது 🔥 இந்த படம் பார்க்காதவங்க இன்னும் யாராச்சும் இருக்கீங்களா?
20
7
1
102
12,706
Mithun Cinemas🕺🏻 retweeted
#Pallaburusu - Decent Watch ⭐️ ⭐️ ⭐️ ✨ (3.25/5) OTT: Prime Video Tamil Dub: ✅ Good Feel படங்களை விரும்பிப் பார்க்கிறவங்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு 👌🏻 மகனின் பாசத்துக்காக தந்தை நடத்தும் பாசப் போராட்டம் . பல் வலி, Toothbrush வாங்கித் தரத் தாமதப்படுத்தும் மகன் மீது வழக்குத் தொடரும் தந்தை… அதற்குப் பிறகு நடக்கும் எமோஷனலான சம்பவங்களும், உறவுகளின் ஆழத்தை உணர்த்தும் தருணங்களும்தான் Pallaburusu படத்தின் கதை. தெலங்கானாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் பின்னணியில் இந்தக் கதை உருவாகியிருக்கிறது. தமிழ் டப்பிங்கும் சிறப்பாகவே இருக்கு. கதாபாத்திரத் தேர்வும் கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. 👌🏻 Good Feel + Emotional Drama விரும்புறவங்களுக்கு ஒரு நல்ல டைம்பாஸ்..
15
2
46
5,338
Mithun Cinemas🕺🏻 retweeted
படத்தோட பேருக்கான அர்த்தம் - முதற்கண் பார்வையில் குற்றவாளிகளாகத் தோன்றுபவர்கள்.. இதான் படத்தோட ஒன்லைன். ஒரு சாதாரண போலீஸ் சோதனையில் நடக்குற தப்பு, பெண் போலீஸ் அதிகாரி அலீனாவையும் அவங்க சக அதிகாரிகளையும் பெரிய சிக்கலில் மாட்டிவிடுது. தங்களைக் காப்பாத்திக்க அவங்க என்னவெல்லாம் செஞ்சாங்கன்னு தான் படம் பேசுது. படத்தோட சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில வரும் சில டிவிஸ்ட்ஸ் தான். பார்வதி திருவோத் அலீனா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பு. விஜயராகவனின் நடிப்பும் தூள், ஆசிஃப் அலி கூட நடிச்சுருந்தா அட்டகாசமா இருந்திருக்கும். ராபி வர்க்கீஸ் ராஜின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். ஆனா, சில டிவிஸ்ட்ஸ் முன்கூட்டியே கணிக்க முடியுது. கொஞ்சம் செயற்கையா இருக்கு. மொத்தத்தில், வித்தியாசமான கதைக்கரு… நல்ல நடிப்பு… ஒரு க்ரைம் திரில்லர் படத்துக்கு இது போதும். வீக்கெண்ட்டுக்கு நல்ல டைம் பாஸ்.. #PradhamaDrishtiyaKuttakkar
3
20
108
10,720
பொது இடங்களில் நமக்குக் கொஞ்சம்கூடப் பொறுப்பு வேண்டாமா? இது இப்போது இரண்டாவது முறையாக ஒசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட அனுபவம். மருத்துவமனைக்குச் செல்வது என்றாலே பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாதவர்கள், வலியால் அவதிப்படுபவர்கள், மனதளவில் கவலையில் இருப்பவர்கள் எனப் பலரும் அங்கே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இடத்தில், மற்றவர்களுடைய சூழ்நிலையையும் கொஞ்சமாவது புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டாமா? இன்று மருத்துவமனையில் நான் அமர்ந்திருந்தபோது, பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் மொபைலில் திரைப்படத்தைச் சத்தமாக வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். இன்னொரு பக்கம், ஒரு குழந்தையின் தந்தை தனது மொபைலில் ரீல்ஸ்களைச் சத்தமாக வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். இருவரும் தங்களுடைய உலகத்தில் மூழ்கியிருந்தார்கள். ஆனால், தங்களைச் சுற்றி உடல்நிலை சரியில்லாமல் எத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களுக்கு அந்தச் சத்தம் எவ்வளவு தொந்தரவாக இருக்கும் என்பதைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசித்ததாகத் தெரியவில்லை. மருத்துவமனை என்பது பொழுதுபோக்கிற்காகச் செல்லும் இடமல்ல. தலைவலி, காய்ச்சல், உடல் வலி எனப் பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் சிகிச்சைக்காகவோ, மருத்துவரைப் பார்ப்பதற்காகவோ அங்கே காத்திருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், மொபைலில் எதையாவது பார்க்க வேண்டுமென்றால் ஹெட்போன் பயன்படுத்தலாம் அல்லது சத்தத்தைக் குறைத்துக்கொள்ளலாம். அதுவும் முடியாதா? எனக்கே தலைவலியுடன் அங்கே அமர்ந்திருந்தபோது, அந்தச் சத்தம் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. அப்படியென்றால், இன்னும் தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளுடன் இருப்பவர்களுக்கு அந்தச் சத்தம் எவ்வளவு பெரிய தொந்தரவாக இருக்கும்? வயதானவர்கள், குழந்தைகள், அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்கள் எனப் பலரும் அங்கே இருக்கலாம் அல்லவா? இங்கே ஒரு கேள்வி எழுகிறது. இப்படிப் பொது இடங்களில் நடந்துகொள்ளக் கூடாது என்பது இவர்களுக்குத் தெரியாதா? அல்லது மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கும் பழக்கமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறதா? குறிப்பாக, பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனிடம் பொறுப்புணர்வை எதிர்பார்க்கும்போது, அவனுக்குப் பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய அடிப்படை விஷயங்களில் இதுவும் ஒன்று. அதே நேரத்தில், குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்திருக்கும் ஒரு பெரியவரே இப்படிச் சத்தமாக ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்தால், அந்தக் குழந்தைக்கு அவர் என்ன முன்னுதாரணமாக இருக்க முடியும்? குழந்தைகளை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. அவர்களுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொடுப்பதில் பெற்றோர்களுக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது. பெரியவர்களே பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், குழந்தைகளிடம் மட்டும் அதை எதிர்பார்ப்பது எப்படி? இறுதியாக, அந்தச் சிறுவனை அழைத்து, “தம்பி, கொஞ்சம் சத்தத்தைக் குறைத்துப் பாரு” என்று சொன்னேன். அவனும் சத்தத்தை ஒரு பாயிண்ட்டில் வைத்துக்கொண்டு தொடர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தான். குறைந்தபட்சம் சொன்னதைக் கேட்டுக்கொண்டானே என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், இவ்வளவு அடிப்படையான ஒரு விஷயத்தைக்கூட மற்றவர்களுக்குச் சொல்லித்தான் புரியவைக்க வேண்டியிருக்கிறது என்பது வருத்தமாக இருக்கிறது. நாம் வெளியில் செல்லும்போது நமக்கு மட்டுமே உரிமைகள் இருப்பதில்லை. நம்மைப் போலவே மற்றவர்களுக்கும் அங்கே இருக்க உரிமை இருக்கிறது. குறிப்பாக மருத்துவமனை போன்ற இடங்களில், மற்றவர்களின் உடல்நிலையையும் மனநிலையையும் கருத்தில் கொண்டு நடந்துகொள்வது மிகவும் அவசியம். மொபைலில் படம் பார்ப்பதோ, ரீல்ஸ் பார்ப்பதோ தவறில்லை. ஆனால், அதற்காக மற்றவர்களின் நிம்மதியைக் கெடுப்பது தவறு. பொது இடங்களில் நாகரிகமாக நடந்துகொள்வது என்பது பெரிய விஷயமல்ல. நம்முடைய செயல்களால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறதா என்று ஒரு நிமிடம் யோசிப்பதுதான். அந்த ஒரு நிமிடச் சிந்தனை இருந்தாலே, இதுபோன்ற பல அசௌகரியங்களைத் தவிர்க்க முடியும். நமக்குப் பிடித்ததைச் செய்வதற்கு முன், நம்மால் மற்றவர்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்படுமா என்று யோசிப்போம். அதுதான் உண்மையான பொது இட நாகரிகம்! - #MithunCinemas இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.
1
4
9
362
கிளைமாக்ஸ் காட்சின்னா இப்படித்தான் இருக்கணும்! #Mandaadi படத்தோட இந்த இறுதிக்காட்சி உண்மையிலேயே கண்ணுக்கு விருந்து. தியேட்டரில் மிஸ் பண்ணியிருந்தாலும் பரவாயில்லை, #Netflix-ல் PXL Format-ல் வெளியாகியிருக்கு. வீட்டிலேயே இந்த விஷுவல் பிரம்மாண்டத்தை ரசிச்சு கொண்டாடுங்க!
145
#Rajpriyan வரிகளில், அவரோட குரல்ல இந்தப் பாட்டு கேட்கவே அவ்வளவு நல்லா இருக்கு. வரிகளும் குரலும் அழகா அமைஞ்சிருக்கு. தியேட்டர்ல கேட்கும்போது இன்னும் சிறப்பா இருக்கும்! #Scene #Suriya
1
282
சூரியை இப்படியொரு கதாபாத்திரத்தில் பார்க்கும்போது தனி சந்தோஷம்! எந்தவிதமான ஹீரோ இமேஜும் இல்லாமல் கதைக்காக முழுமையாக நடித்திருக்கிறார். #Mandaadi அவருடைய திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும்! #Netflix
130
Mithun Cinemas🕺🏻 retweeted
🎬 #Baththa (2026) Movie Review 🔥 okay 👍 ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ளும் நம்ம ஹீரோ Vijay sethupathy , எதிர்பாராத விதமாக ஒரு சின்ன பையனின் உதவியால் அங்கிருந்து உயிர் தப்பி வெளியே வருகிறார். ஆனால், அந்தச் சிறுவன் மீண்டும் Vijay sethupathy அழைத்துச் செல்ல,
1
1
5
1,269
Magathaana Vetriya ?
#CinemaUpdate | இந்தியன் 2வின் மகத்தான வெற்றியை தொடர்ந்து, இந்தியன் 3 - War Mode #Excitement அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்! #SunNews | #Indian3 | #KamalHassan | #Shankar
169
Mithun Cinemas🕺🏻 retweeted
#CinemaUpdate | இந்தியன் 2வின் மகத்தான வெற்றியை தொடர்ந்து, இந்தியன் 3 - War Mode #Excitement அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்! #SunNews | #Indian3 | #KamalHassan | #Shankar
92
64
60
643
66,871
#Mandaadi சத்யராஜ் அவர்களோட கெட்டப்பை முழுசா மாற்றி, அவரை வேற மாதிரி காட்டியிருக்காங்க. அவரோட கதாபாத்திரத்துக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. குறிப்பா, #Mandaadi வகையறா பற்றி அவர் பேசுற காட்சிகள் எல்லாமே செமையாக இருக்கு. #Netflix-ல் தற்போது ஸ்ட்ரீமிங்.
166
Finally தாத்தா வரார். #Indian3 Update Coming Up
An exciting update is on its way. 🔥 Watch this space tomorrow at 11:45 AM. ⏳
1
410
#GVPrakash அடுத்ததாக #Joe படப்புகழ் இயக்குநர் #HariharanRam இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தல #Dhoni-யின் தீவிர ரசிகராக GV Prakash நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் தலைப்பிலும் தோனியின் மிகவும் பிரபலமான பெயரான “Mahi”யுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிடத்தக்க Reference இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. தல தோனியின் ரசிகராக #GVPrakash -ன் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது! @gvprakash
1
139
#GVPrakash-ன் அடுத்த ஹிந்தி பாடல் #Phataphataka, #Nayyinavelli படத்திலிருந்து வெளியாகிறது. @gvprakash இசையில் இந்த பாடலோட beat செம்ம துள்ளலாக இருக்கு. கண்டிப்பா ஒரு செம்மையான dance number-ஆ இருக்கும்! குறிப்பா Instagram Reels-ல இந்த பாடல் நல்லா கலக்குவதற்கான வாய்ப்பு இருக்கு.
188