J Kamatchi (@Kamatchitvk) header
J Kamatchi (@Kamatchitvk) profile picture

Kamatchi Jayakrishnan | MLA - Pallavaram Constituency | Chengalpattu North District Secretary, Tamilaga Vettri Kazhagam | @TVKVijayHQ

Chennai, India
Joined April 2026
Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)
ஆழ்ந்த இரங்கல் 🙏🖤 கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அன்பிற்கினிய அண்ணனுமான திரு. வி.எஸ். பாபு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மக்கள் பணிக்காக அர்ப்பணித்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினருக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏 – ஜெ. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்.
2
11
317
ஆழ்ந்த இரங்கல் 🙏 🖤 கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அன்பிற்கினிய அண்ணனுமான திரு. வி.எஸ். பாபு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மக்கள் பணிக்காக அர்ப்பணித்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினருக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏 – ஜெ. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
3
8
210
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கெனத் தனி இடம்பிடித்த கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில், தாய்நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய தியாகத்தையும் துணிச்சலையும் போற்றுவோம். 🙏 சுதேசி உணர்வும் தன்னம்பிக்கையும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்! – திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் #VOCChidambaranar #வஉசிதம்பரனார் #கப்பலோட்டியதமிழன் #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth
1
1
22
482
கத்திப்பாரா முதல் சென்னை விமான நிலையம் வரை பசுமை வழித்தடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா! நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை விமான நிலையம் பகுதியில் கத்திப்பாரா முதல் விமான நிலையம் வரை பசுமை வழித்தடம் அமைக்கும் பணிக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சென்னை விமான நிலையம் பகுதியை அடிப்படையாகக் கொண்டு, பசுமையான சூழலை உருவாக்கும் இத்திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. P. வெங்கட்ராமன், MLA அவர்களும், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. M. ஹரீஷ், MLA அவர்களும் உடன் கலந்துகொள்ள, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்களும் நேரில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramMLA #GreenCorridor #ChennaiAirport #Kathipara #GreaterChennaiCorporation #PublicService #PallavaramConstituency #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth
3
40
232
7,596
குழந்தைகள் தின விழா – பொழிச்சலூர்! மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள், மாணவர்களின் உடல் மற்றும் மனநல வளர்ச்சிக்காக பள்ளிகளில் தினமும் ஒரு விளையாட்டுப் பாடவேளை வழங்கியுள்ள சிறப்பான திட்டத்தை நினைவுகூர்ந்து, நமது பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் பள்ளியில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவச் செல்வங்களுடன் கேக் வெட்டி, எழுதுபொருட்கள் அடங்கிய கல்வி உபகரணத் தொகுப்புகளை வழங்கி மகிழ்ந்தேன். மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் (Classrooms) கட்டித் தருவதாக உறுதியளித்தேன். கல்வியோடு விளையாட்டும் வளரட்டும்! குழந்தைகளின் புன்னகையும் கனவுகளும் மலரட்டும்! ஜெ. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்.
3
27
406
உண்மையின் குரலாய் ஒலித்து, மக்களாட்சியின் மாண்பைக் காக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகள்! 📰🙏 சமூகத்தின் குரலாகவும், விழிப்புணர்வின் வழிகாட்டியாகவும் திகழும் ஊடகத்துறையினரின் பணி என்றும் போற்றத்தக்கது. – திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் #NationalPressDay #PressDay #Journalism #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth
5
21
349
‘யூனிக் பில்டர்ஸ்’ (Unic Builders) புதிய அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்பு! தாம்பரம் அடுத்த படப்பையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘யூனிக் பில்டர்ஸ்’ (Unic Builders) நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார். மேலும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களின் தொழில் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்தினார். திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். #PallavaramMLA #UniqueBuilders #Padappai #Tambaram #GrandOpening
5
34
530
🙏🔥 சூரசம்ஹார விழா – குமரன்குன்றம், அஸ்தினாபுரம்! 🌺🦚 பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி, அஸ்தினாபுரம் குமரன்குன்றம் முருகன் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்புமிக்க சூரசம்ஹார விழாவில் பொதுமக்களுடன் இணைந்து முழுமையாகப் பங்கேற்று, முருகப்பெருமானை வழிபட்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். “எப்போதும் மக்களுடன்! எதிலும் மக்களுக்காக!” என்ற நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்களோடு மக்களாக இணைந்திருந்தது மனநிறைவான தருணம்! 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🦚🔥 #Soorasamharam #KumaranKundram #Hasthinapuram #PallavaramKamatchi #PallavaramTVK #Pallavaram #ChengalpattuNorth #TVK #TVKITWing #Murugan #VelMurugan #வெற்றிவேல்முருகனுக்கு_அரோகரா #சூரசம்ஹாரம் #குமரன்குன்றம்
7
45
499
‘யூனிக் பில்டர்ஸ்’ (Unic Builders) புதிய அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்பு! தாம்பரம் அடுத்த படப்பையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘யூனிக் பில்டர்ஸ்’ (Unic Builders) நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார். மேலும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களின் தொழில் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்தினார். திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். #PallavaramMLA #UniqueBuilders #Padappai #Tambaram #GrandOpening
7
31
546
அஸ்தினாபுரம் குமரகுன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் பங்கேற்பு! கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம், குமரகுன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். #PallavaramMLA #Hasthinapuram #Kumarakundram #KanthaSasti #MuruganTemple #Pallavaram
10
44
561
💡 உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நடைப்பயண (Walkathon) நிகழ்வு! உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, பல்லாவரத்தில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை (Kauvery Hospital) சார்பில் நீரிழிவு நோய் (Diabetes) குறித்த விழிப்புணர்வு நடைப்பயண (Walkathon) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நிகழ்வைச் சிறப்பித்தார். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியின் அவசியம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்வில் மருத்துவர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து பயணிப்போம்! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர்
3
26
411
💡 சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் நிழல் குடைகள் வழங்கும் நிகழ்வு! பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திரிசூலம் (திருசூலநாதர் கோவில்) பகுதியில், சாலையோரத்தில் கடை அமைத்துச் சிறு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாகத் தங்களது வாழ்வாதாரத்தைத் தொடர ஏதுவாக, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் நேரில் சென்று வியாபாரிகளுக்கு நிழல் குடைகளை வழங்கினார். சிறு வியாபாரிகளின் சிரமங்களைக் கேட்டறிந்து, அவர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னெடுப்பால் அப்பகுதி வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து சட்டமன்ற உறுப்பினருக்குத் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். மக்களின் தேவைகளை அறிந்து, என்றும் துணை நிற்போம்! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம். #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth #ChildrensDay #Childrens
1
14
96
1,116
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! ❤️ குழந்தைகளின் புன்னகையில் நம் எதிர்காலத்தின் நம்பிக்கை மலர்கிறது! ஒவ்வொரு குழந்தையின் கனவுகளும் சிறகடிக்கவும், திறமைகள் வளரவும், சாதனைகள் தொடரவும் மனமார்ந்த வாழ்த்துகள். குழந்தைகளின் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் நிறைந்த அழகான எதிர்காலத்தை உருவாக்குவோம்! ❤️ இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! 🌸 – திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர், செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் #ChildrensDay #HappyChildrensDay #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth #குழந்தைகள்தினம்
1
3
9
196
உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் – நவம்பர் 14! சரியான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, முறையான மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம். நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்றுவோம். விழிப்புணர்வே பாதுகாப்பு! ஆரோக்கியமே உண்மையான செல்வம்! – திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர், செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் #WorldDiabetesDay #DiabetesAwareness #HealthyLiving #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth #நீரிழிவுநோய்விழிப்புணர்வு
5
9
194
🎈🌱 குழந்தைகள் தினக் கொண்டாட்டம் – மகிழ்ச்சியும் மரம் வளர்ப்பும்! ❤️ நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள மறைமலை அடிகளார் பள்ளியில், மாண்புமிகு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டு, பள்ளி மாணவச் செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கி, குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட மகிழ்ச்சியான தருணங்கள்! மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பசுமையான சுற்றுச்சூழலின் அவசியத்தையும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் மாணவர்களுக்கு உணர்த்தினோம். குழந்தைகளின் மகிழ்ச்சியும், கல்வி வளர்ச்சியும், இயற்கையின் மீதான அக்கறையும் இணைந்தால்தான் வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள ஜெ.காமாட்சி ஜெயக்கிருஷ்ணன் MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர். #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth #ChildrensDay #Childrens
6
26
428
குழந்தைகள் தின வாழ்த்துகள்! நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழைய பல்லாவரத்தில் அமைந்துள்ள அரசு பள்ளிக்கு நேரில் சென்று அங்கு பயிலும் மாணவச் செல்வங்களைச் சந்தித்து, அவர்களுக்குக் குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்த இனிய தருணங்கள்! இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர், அன்புச் சகோதரர் திரு. லயோலா மணி அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டு, குழந்தைகளின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்துகொண்டோம். குழந்தைகளே நாட்டின் எதிர்காலம்! அவர்களின் கல்வி, வளர்ச்சி, கனவுகள் மற்றும் முன்னேற்றத்திற்கு என்றும் துணை நிற்போம். ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பும், கல்வியும், சமமான வாய்ப்புகளும் கிடைக்கட்டும்! அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! ஜெ.காமாட்சி ஜெயக்கிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர். #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth #ChildrensDay #Childrens
12
38
922
🌹📚 குழந்தைகள் தின விழா – பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி! 🎂🌱 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (13.11.2026) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் வழங்கி, எனது அன்பான குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தேன். 🌱 பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தேன். கல்வி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, திறமை ஆகிய நான்கும் மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு அடித்தளம்! அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி, தரமான கல்வி, மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வதில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுவோம். இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள்! அவர்களின் கனவுகளே நம் தமிழ்நாட்டின் எதிர்காலம்! இப்படிக்கு ஜெ. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர். #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth #ChildrensDay #Childrens
5
36
471