இன்றைய தினம் 21.11.2026, சனிக்கிழமை - கட்சியின் உயர்மட்ட செயல்திட்ட குழு கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்திற்கு தலைமையேற்று, எதிர்வரும் 10.12.2026 அன்று தஞ்சாவூர், பட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்திட அனைத்துநிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன்!.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு தினம் இன்று.
தன் சொத்து, சுகம் அனைத்தையும் நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்த அந்த மாபெரும் தியாகியின் தியாகத்தை இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம். அவரின் வீரமும் தேசபக்தியும் என்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும்!
வீரவணக்கம்!
இன்றைய தினம் 14.11.2026, சனிக்கிழமை - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி மாமரத்துப்பட்டி கிராமத்தில் திரைப்படங்களின் மீது உள்ள மோகத்தால் கடந்த ஆண்டு திருவிழா பேனரில் கையில் கத்தி வைத்திருப்பது போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் படங்களை எவ்வித உள்நோக்கமுமின்றி உருவாக்கிய கூலித்தொழிலாளிகளை புத்திமதி கூறி கண்டிப்பதற்கு பதிலாக சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளைப் போல் சித்தரித்து அவர்கள் மேல் வழக்கு பதிந்து தண்டித்துவரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையை முறையாக விசாரனை செய்திட கோரியும், மேலும் 13 இளைஞர்கள் மீதான கைது நடவடிக்கையை கைவிட கோரியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செந்துறை பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று கண்டன பேருரையாற்றினேன்!
நாளைய இந்திய தேசத்தின் சிற்பிகளாகவும், நமது சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் திகழும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான திரு. ரவிசங்கர் அவர்களின் அராஜகப் போக்கிற்கு தமிழர் தேசம் கடும் கண்டனம்!
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகருமான திரு.ரவிசங்கர் அவர்கள், தன் பொறுப்பையும், வகிக்கும் அரசியல் சாசனப் பதவியின் கண்ணியத்தையும் மறந்து, நியாயம் கேட்க வந்த சாமானியரை கடுமையான முறையில் தாக்கியுள்ள செய்தி ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர் தேசம் கட்சியின் சார்பில் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி, குறிப்பாகச் சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் என்ற மிக உயரிய அரசியல் சாசனப் பொறுப்பில் இருப்பவர், தன் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதே முதன்மையான கடமையாகும். ஆனால், தங்களின் உரிமைகளுக்காகவும், குறைகளுக்குத் தீர்வு தேடியும் தன்னிடம் வந்த சாமானியக் குடிமகனை அதிகார மமதையோடு தாக்கியிருப்பது சனநாயகத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியின் மீதும் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாகும்.
அதிகார பலமும், அரசியல் செல்வாக்கும் இருந்தால் எளிய மக்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கலாம் என்ற இத்தகைய அராஜகப் போக்கு கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, சகித்துக் கொள்ள முடியாததுமாகும். மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்களின் சேவகர்களே தவிர, அதிகார வர்க்கத்தின் ஆதிக்கவாதிகள் அல்ல என்பதைத் திரு. ரவிசங்கர் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
பொதுமக்களைத் தாக்கிய இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் எவ்வித அரசியல் தலையீடுமின்றி நடுநிலையோடு உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், சனநாயகத்திற்கும், சட்டமன்றத்தின் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட திரு. ரவிசங்கர் அவர்கள் உடனடியாகத் தனது சட்டமன்ற துணை சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
புகார் அளிக்க வந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபருக்குத் தகுந்த மருத்துவ உதவியும், உரிய பாதுகாப்பும் அரசு உடனடியாக வழங்க வேண்டும். மக்களாட்சி தத்துவத்தையும் சாமானிய மக்களின் உரிமைப் போராட்டத்தையும் என்றும் முன்னெடுக்கும் தமிழர் தேசம் கட்சி, பாதிக்கப்பட்ட எளிய மக்களின் பக்கம் உறுதியுடன் நிற்கும்!
இருள் நீங்கி ஒளி பெருகும் இந்த அற்புத நன்னாளில், உங்கள் வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், நிம்மதியும், சகல ஐஸ்வரியங்களும் மலரட்டும்!
மகிழ்ச்சி என்னும் அகல் விளக்கை ஏற்றி, துன்பங்களை வென்று, புது வசந்தம் காண்போம்.
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்!
இன்றைய தினம் 06.11.2026, வெள்ளிக்கிழமை - திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம், செங்குறிச்சி ஊராட்சி, குரும்பபட்டி அரசு மருத்துவமனை அருகாமையிலும், திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அருகிலும், பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் அரசு மதுபான கடையை அகற்றிட வலியுறுத்தி, கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று மாபெரும் மதுக்கடை அகற்றும் போராட்டம் தமிழர் தேசம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மதுக்கடை அகற்றும் போராட்ட களத்திலேயே, நத்தம் வட்டாட்சியர் அவர்கள், மதுக்கடை எண்: 3371 நிரந்தரமாக மூடுவதற்கான அரசு ஆணையை வழங்கியதை தொடர்ந்து போராட்டத்தை வெற்றியோடு நிறைவு செய்தோம்.
இந்த, தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கும், மதுக்கடை அகற்றும் போராட்டத்திற்கும், களத்தில் களமாடிய, தமிழர் தேசம் கட்சியின் நிர்வாகிகளுக்கும், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே!"
செம்மொழியாம் தமிழ் மொழிக்கும், தியாகங்களாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களாலும் உருவான நமது தமிழ்நாடு என்ற அடையாளத்திற்கும் பெருமை சேர்க்கும் "தமிழ்நாடு நாள்" வாழ்த்துகள்!
மண்ணின் வளமும், மக்களின் உழைப்பும், தமிழின் தொன்மையும் என்றும் நிலைத்து நிற்கட்டும்.
இன்றைய தினம் 24.10.2026, சனிக்கிழமை - வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில், கரூர் மாவட்டம், குளித்தலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ செல்வங்களுக்கான பாராட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த விழாவிற்கு தலைமையேற்று, மாணவ மாணவிகளுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தேன்!..
"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற ஐய்யன் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, நம் சமுதாயத்தின் எதிர்காலத் தூண்களான மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்தி சிறப்பிக்கும் பொருட்டு, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் "மாணவ செல்வங்களுக்கான பாராட்டு விழா" வரும் 24.10.2026 (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, கரூர் மாவட்டம், குளித்தலை, அண்ணா மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்திச் சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
கல்வி, கலை, அறிவு மற்றும் ஞானத்தின் வடிவமாக விளங்கும் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் அருளாலும், நாம் செய்யும் தொழிலையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளையும் போற்றி வணங்கும் ஆயுத பூஜை நன்னாளிலும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும், அமைதியும், செல்வ வளமும் பொங்கி வழியட்டும்.
உழைக்கும் கரங்களுக்குத் தகுந்த உயர்வும், செய்யும் தொழிலில் தடைகள் விலகி பெருவெற்றியும், கல்வியிலும் சிந்தனையிலும் சிறந்த மேன்மையும் கிடைக்கப் பெற்று, வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் பெருக இறைவனை மனதாரப் பிரார்த்திக்கிறேன்!
‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!
தமிழ் இசையுலகின் ஒப்பற்ற அடையாளமாகவும், எளிய மனிதர்களின் நெஞ்சங்களில் எந்நாளும் வாழும் இசைக்கலைஞராகவும் திகழ்ந்த 'தேனிசைத் தென்றல்' திரு. தேவா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்!
தனது அலாதியான இசைஞானத்தாலும், மண் வாசனை மாறாத பாட்டுகளாலும் பல தசாப்தங்களாகத் தமிழ் நெஞ்சங்களைக் கட்டிப்போட்ட ஒரு மாபெரும் இசை ஆளுமையை இன்றைக்கு நாம் இழந்து நிற்கிறோம். திரையுலகில் அறிமுகமான காலம் தொட்டு, கிராமத்து நாடோடிப் பாடல்கள் முதல் துள்ளலான நகரத்துப் பாடல்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் திரு. தேவா அவர்கள். குறிப்பாக, சென்னையின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் 'கானா' பாடல்களைத் திரைத்துறைக்குக் கொண்டுவந்து, அதை ஒரு தனித்துவமான இசைப் பாணியாக உயர்த்திய பெருமை இவரையே சாரும்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், சிறந்த பாடகராகவும் தன்னுடைய தனித்துவமான குரலால் பல நூறு பாடல்களுக்கு உயிர்கொடுத்தவர். கலைத்துறையில் எவ்வளவு உயரங்களைத் தொட்டபோதிலும், எளிய பண்போடும் புன்னகையோடும் அனைவரிடமும் பழகும் இவரது நற்குணம், திரையுலகில் உள்ள அனைவராலும் போற்றப்பட்டது. பல புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வாழவைத்த பெருந்தன்மையாளர்.
திரு. தேவா அவர்களின் மறைவு, தமிழ் இசைத்துறைக்கு மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும். அவர் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும், அவர் விட்டுச் சென்றுள்ள பாடல்களின் வழியே தமிழ் மக்களின் இதயங்களில் தேனிசைத் தென்றலாக அவர் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்தியாவின் ஏவுகணை மனிதர், கோடிக்கணக்கான மாணவர்களின் கனவு நாயகன் மற்றும் எளிமையின் சிகரமாக விளங்கிய நம் பெருமைக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், அவர் விதைத்த லட்சிய விதைகளை நம் இதயங்களில் ஏந்தி அவரைப் போற்றி வணங்குகிறோம்.
"கனவு காணுங்கள், தூக்கத்தில் காண்பதல்ல கனவு, உங்களைத் தூங்க விடாமல் செய்வதுதான் கனவு" என்ற அவரது பொன்மொழியைத் தாரக மந்திரமாகக் கொண்டு, கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் நமது இலக்குகளை அடைந்து, அவர் கனவு கண்ட வல்லரசாகவும் அறிவுசார் சமூகமாகவும் இந்தியாவை மாற்றுவோம் என்று இந்த நன்னாளில் உளமார உறுதியேற்போம்.
மேலும்,அக்னிச் சிறகுகளால் தேசத்தின் வரலாற்றை மாற்றிய அந்த மாமனிதருக்கு மனமார்ந்த பிறந்ததின வாழ்த்துகள்!
இன்றைய தினம் 14.10.2026, புதன்கிழமை - தமிழர் தேசம் கட்சியின், டெல்டா மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பட்டுக்கோட்டையில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்று, கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினேன்!
இன்றைய தினம் 14.10.2026, புதன்கிழமை - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மகிழங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. ஊமையன் என்பவரது மனைவி திருமதி. பாலசுந்தரி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்!..
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறியதோடு, குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தேன்!
"ஆதிக்க அநீதியாளர்களை எதிர்த்து களமாடிய,ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல்!
ஈகப்பெருஞ்சுடர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அவரது சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் பாதையில் தொடர உறுதியேற்போம்!.. வீரவணக்கம்!!.
இன்றைய தினம்,04.10.2026, ஞாயிற்றுக்கிழமை - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், சாத்தாம்பாடி ஊராட்சி, கோமணாம்பட்டி கிராமத்தில், எவ்வித இடையூறுமின்றி வாழ்ந்து வந்த, அப்பாவி முத்தரையர் சமூக இளைஞர்கள் 14 பேர் மீது புனையப்பட்ட வழக்கை திரும்பெற கோரி, தமிழர் தேசம் கட்சி சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நத்தம் பேருந்துநிலைய ரவுண்டானாவில் சிறப்பாக நடந்து முடிந்தது!..
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று, கண்டன பேருரையாற்றினேன்!..






































