தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
பணிகளுக்கு நீங்களும் ஆதரவு தரலாம்
வங்கிக் கணக்கு விவரம் :
Tamil Oodagam
Current Account Number : 1200 36 75 79 25
Canara Bank, Edayar Palayam Branch, Coimbatore.
IFSC : CNRB0005634
SWIFT : CNRBINBBFD
GPay, PayTM, PhonePe - 8012271745
Viswanaath T M
Razorpay link in the comment box
பெண்களுக்கு வாக்குரிமை எப்போது கிடைத்தது? நீதிக்கட்சியும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும்!
பத்திரிகையாளர் ஜோதி நரசிம்மன் எழுதும் அதனால்தான் அரசியல் பேசுகிறேன் தொடர் - 3
விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/women-votin…
+ தவெக மீது அதிகரிக்கும் (சமூக) ஊடக எதிர்ப்பலை !
+ கட்டாய லஞ்சம் வாங்கத் 'தடை' : தவெக மீது கடும் கடுப்பில் திமுக - அதிமுக ஆதரவு அதிகாரிகள்?!
+ சோனியா புத்தக வெளியீடு ; 'கடமைக்கு' மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ராகுல்?!
+ அருண் ஐபிஎஸ் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த செய்தியை வெளியிடமால் தவிர்த்த பிரபலத் 'தொலைக்காட்சி' ?!
+ இறங்கி அடித்து இடுப்பை உடைத்துக்கொண்ட டுபாக்கூர் செய்தி ஆசிரியர் இப்போது ஒவ்வொருவராக
வேட்டையாடப்போகிறாராம் !
+ திமுகவுக்கு Backfire ஆகிய போலி நூல்கள் மோசடி !
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள் வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/tavaka-medi…
கீழடி ஆய்வில் 15 ஆண்டுகால அரசியல் விளம்பரமா? அமர்நாத் ராமகிருஷ்ணாவும் சு.வெங்கடேசனும் தேடுவது என்ன?
மலேசியப் பயணத்திற்கு ASI அனுமதி மறுத்தது ஏன்? அலுவலக விதிகளை ஏற்க மறுத்தாரா அமர்நாத்?
அமர்நாத்தின் முதல் இரண்டு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு கீழடியில் மேலும் 10 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், பழைய ஆய்வுகளே தொடர்ந்து அரசியல் விவாதமாக்கப்படுவது ஏன்?
ஆவணங்களின் பின்னணியில் அலசுகிறது தமிழ் ஊடகத்தின் சிறப்பு ஆய்வு!
விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/amarnath-ra…
நாம் தமிழர் கட்சியின் 'கொள்கை' பொய்யைப் பரப்புவதுதானா ?!
மதுரை தனிஷ்க் நகைக்கடைத்
திருட்டில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட மீனாட்சி நாச்சியார் தவெகவைச் சேர்ந்தவர் என்று பொய்யான தகவலைப் பரப்பி, அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சியின் 'கொள்கை' பரப்புச் செயலாளர்
சாட்டை துரைமுருகன் மீது வழக்குப் பதிவு.
ஏற்கனவே ஒரு அவதூறுக் கானொலிக்கு
முன்பிணை வாங்கி வைத்திருக்கிறார்
துரைமுருகன்.
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
18/11/26
#அவதூறு #சாட்டைதுரைமுருகன்
சாலியர்கள் தமிழர்களா? தெலுங்கர்களா? 400 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரத்திற்குப் 'போத்தீஸ் சாலியர்' திரும்பியதன் பின்னணி என்ன?
திரிஷா தோன்றும் போத்தீஸ் விளம்பரம் சொல்லும் வரலாற்றுக் கதைக்குப் பின்னால் பல கேள்விகள்!
சங்ககாலத் தமிழர்களின் நெசவுத் தொழில் தொடங்கி, சோழர் காலக் கல்வெட்டுகள், தெலுங்கு நெசவாளர் சமூகங்களின் குடிபெயர்வு வரை வெளிச்சம் பாய்ச்சும் ஓர் வரலாற்று ஆய்வு!
சாலியர்களின் உண்மையான பூர்வீகம் என்ன? தெரிந்துகொள்ள முழுக் கட்டுரையையும் படியுங்கள் தமிழ் ஊடகம் டாட் காம் இணையத் தள இதழை !
கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் :tamiloodagam.com/pothys-sali…
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
#சாலியர் #தமிழர்வரலாறு #தெலுங்கர்வரலாறு #போத்தீஸ் #திரிஷா #காஞ்சிபுரம் #நெசவுத்தொழில் #சங்ககாலம் #கல்வெட்டுவரலாறு #TamilOodagam
ஆம் தந்தைப் பெரியாரைப் போற்றுவோம்.
தனது பெயரில் நூலகம் அமைத்து அங்கேயே போலிப் புத்தகம் அச்சடித்து வைத்து மக்களை ஏமாற்றிய திமுகவினரை பெரியார் இராமசாமி ஐயா விட்டுவிடுவாரா என்ன?!
👌👏👍
- தமிழன் கரிகாலன்
70
#BREAKING #JUST_IN
அரசு அதிகாரிகளை மிரட்டியும், அவர்களை அடிபணியச் செய்தும் செயல்பட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் கிடையாது!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் கருத்து.
2019ஆம் ஆண்டு காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் நடைபெற்ற அத்திவரதர் திருவிழாவின்போது, தரிசனத்திற்கான அனுமதிச் சீட்டுகள் (டோக்கன்கள்) விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து அதிருப்தி அடைந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை (பொது) அவதூறாகப் பேசி, மிரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தபோது நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
#தமிழ்ஊடகம் #தனித்துவமானதமிழ்ஊடகம் #TNTVTamilOodagam
🪔 கார்த்திகை மாதம் 2026 – 12 இராசி பலன்கள்!
அச்சுறுத்தும் சோதிடத்திலிருந்து அறிவார்ந்த நேர்மறைச் சோதிடத்திற்கு!
📅 நவம்பர் 17 – டிசம்பர் 15, 2026
இந்தக் கார்த்திகை மாதம் உங்கள் இராசிக்கு என்னென்ன வாய்ப்புகளைக் கொண்டுவருகிறது?
🔹 தொழில் மற்றும் வேலைவாய்ப்பு
🔹 பணவரவு மற்றும் பொருளாதாரம்
🔹 குடும்பம் மற்றும் திருமணம்
🔹 கல்வி மற்றும் மாணவர் முன்னேற்றம்
🔹 உடல்நலம் மற்றும் நல்வாழ்வு
மேஷம் முதல் மீனம் வரை 12 இராசிகளுக்குமான விரிவான மாதப் பலன்கள்!
பயமுறுத்தும் கணிப்புகள் அல்ல; சிந்தித்துச் செயல்பட உதவும் நேர்மறையான வழிகாட்டுதல்!
முழுமையான பலன்களை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/karthigai-m…
தமிழ் ஊடகம் | நாளும் கோளும்
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
88
இறவாப் பிறவா இறைவரைக் குறிக்கும் சொற்களை இறந்து பிறக்கும் மனிதருக்குப் பயன்படுத்தல் கூடாது !
"அரகர" எனும் அருட்சொல்லின் பொருள் தெரியா மூடர்களாக இருக்காதீர் வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி!
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
அருள்மிகு திருசெந்தூர் முருகன் திருக்கோயில் சூரசம்மார நிகழ்வில், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அரகர என்று பாடகர் வேல்முருகனும், விஜயை முருகனோடு ஒப்பிட்டு பாடகர் புஷ்பவனம் குப்புசாமியும் புகழ்ந்து பாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மண்ணின் பக்தி, ஞான மரபில் மிக ஆழமாக வேரூன்றியுள்ள ஓர் அருட்சொல்லின் பெருமையை அறியாமல் அதனை ஒரு மனிதருக்கு ஒப்பிட்டுப் பாடுவதும், புகழ்வதும் எத்தகைய அறியாமை?!
தமிழ் ஆன்மிக மரபில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஓர் ஆழமான பொருளும், வரலாற்றுப் பின்னணியும், தத்துவச் சிறப்பும் உண்டு. அத்தகைய சிறப்புமிக்க சொற்களில் ஒன்று “அரகர”.
இன்று இந்தச் சொல்லைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக, தமிழ் ஞான மரபின் முதன்மைச் சான்றோர்களில் ஒருவரான திருமூலர் அருளிய திருமந்திரத்தைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
திருமூலர் கூறும் அரகர எனும் அருட்சொல்!
திருமூலர் அருளிய திருமந்திரத்தின் 916-ஆம் பாடல்:
அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.
இந்தப் பாடல் எத்தகைய உயர்ந்த கருத்தை முன்வைக்கிறது!
'அரகர' என்று இறைவனை நினைந்து உச்சரிப்பதன் ஆன்மிகச் சிறப்பைத் திருமூலர் எடுத்துரைக்கிறார். அந்தச் சொல்லின் பெருமையை மனிதர்கள் அறியாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
இறைநினைவு, பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெறுதல், உயர்ந்த ஆன்மிக நிலையை அடைதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இப்பாடல் விளங்குகிறது.
இது சாதாரணச் சொல் அல்ல. இறைநினைவின் வெளிப்பாடு என்பதைத் திருமூலர் தெளிவுபடுத்துகிறார்.
அருணகிரிநாதர் பாடல்களிலும் அரகர!
முருகப்பெருமானின் திருவருளைப் போற்றிப் பல்லாயிரக்கணக்கான திருப்புகழ்ப் பாடல்களைத் தந்த அருணகிரிநாதர், தமது பாடல்களிலும் 'அரகர' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
திருப்புகழ் 240-இல்:
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண பவனேயென்...
இங்கு சிவன், திருமால், பிரம்மன் ஆகியோரும் முருகப்பெருமானைப் போற்றும் உயர்ந்த பக்திச் சிந்தனை வெளிப்படுகிறது.
மேலும், பழனி தொடர்பான திருப்புகழ் பாடல் ஒன்றில்:
அரகர சிவாயவென்று தினமும் நினையாமல் நின்று...
என்று அருணகிரிநாதர் பாடுகிறார்.
இங்கே 'அரகர சிவாய' என்ற இறைநினைவு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
முருகப்பெருமானைப் போற்றிய அருணகிரிநாதரே இந்தச் சொல்லின் ஆன்மிகப் பொருளைப் போற்றிப் பாடுகிறார் என்றால், தமிழ் பக்தி, ஞான மரபில் அதன் இடத்தை நாம் எவ்வளவு சிரத்தையோடு புரிந்துகொள்ள வேண்டும்?!
அரகர என்பது வெறும் முழக்கமா?
ஒரு சொல்லை அதன் இலக்கியப் பின்னணியையும், ஆன்மிகப் பொருளையும் அறியாமல் வெறும் ஒலியாக மட்டும் அணுகுவது அறிவார்ந்த செயலாகாது.
திருமூலர் அதனைப் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான இறைநினைவுடன் தொடர்புபடுத்துகிறார்.
அருணகிரிநாதர் அதனைத் தமது முருக பக்திப் பாடல்களில் பயன்படுத்துகிறார்.
ஆகவே, 'அரகர' என்பது தமிழ் ஆன்மிக மரபில் ஆழமான இடத்தைப் பெற்ற இறைநினைவுச் சொல்லாகும்.
வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி அவர்களே!
தமிழ் மண்ணின் பக்திப் பாடல்களைப் பாடுவதும், தமிழ் மக்களின் ஆன்மிக உணர்வுகளைத் தாங்கள் வெளிப்படுத்துவதும் பாராட்டத்தக்கவை.
ஆனால் அத்தகைய பணியில் ஈடுபடுபவர்கள், தாங்கள் பயன்படுத்தும் சொற்களின் இலக்கியப் பொருளையும், அவற்றின் பின்னணியில் உள்ள தமிழ் ஞான மரபையும்
அறிந்திருப்பது அவசியம்.
திருமூலர் போன்ற ஞானிகள் பாடிய பாடல்களையும், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள் வழங்கிய இலக்கியச் செல்வங்களையும் அறியாமல் 'அரகர' என்ற சொல்லை இறந்து பிறகும் மனிதருக்குப் பயன்படுத்துவது முறையன்று.
முதலில் மூல நூல்களைப் படித்தறிந்து பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழின் அருட்சொற்களைப் புரிந்துகொள்ளாமல் அவற்றைத் தவறாக மதிப்பிடாதீர்கள்!
'அரகர' என்ற சொல்லின் பெருமையைத் திருமூலரிடம் கற்றுக்கொள்ளுங்கள்; அதன் பக்திப் பரிமாணத்தை அருணகிரிநாதரிடம் உணர்ந்துகொள்ளுங்கள்.
அரகர! அரகர!
நன்றி
தயவுடன்,
வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்,
ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்
நிறுவனர் : தமிழியல் நடுவம்
மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com
செய்தி இணையதளம் : tamiloodagam.com
16/11/26
#அரகர #சூரசம்மாரம் #தமிழ்ஊடகம்
தினகரன் செய்தியாளர்கள் சுரேஷ் வேதநாயகம், சரத் மற்றும் நக்கீரன்
செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் ஆகியோர் நீதிபதி முன் சரண் !
வேப்பேரி காவல்நிலைய விசாரணை அதிகாரி முன் அன்றாடம் கையெழுத்து !!
விரிவான தகவலுக்கு இந்த இணைப்பை அழுத்துங்கள் :tamiloodagam.com/dinakaran-n…
📰 நவம்பர் 16 – தேசியப் பத்திரிகை நாள்!
இந்தியப் பத்திரிகைக் கவுன்சில் - Press Council of India தொடங்கபப்ட்ட நாள் (1966) நவம்பர் 16ம் தேதி தேசியப் பத்திரிகையாளர் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஊடகங்களின் உரிமை மட்டுமல்ல; உண்மையை அறிந்து கொள்வதற்கான மக்களின் சனநாயக உரிமை!
உண்மையை உரக்கச் சொல்வோம்!
ஊடக அறத்தைக் காப்போம்!
பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்!
அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் கடந்து மக்கள் நலனுக்காகப் பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தேசியப் பத்திரிகை நாள் வாழ்த்துகள்!
-பத்திரிகை ஊடகச் சிந்தனைப் பேரவை
(Journalism and Media Think Tank)
#தேசியபத்திரிகைநாள் #பத்திரிகைசுதந்திரம் #ஊடகசுதந்திரம் #பத்திரிகையாளர் #ஊடகஅறம் #Journalism #NationalPressDay #PressFreedom #MediaFreedom #JournalismAndMediaThinkTank
1
111
தமிழர்களின் அரசியல் குரலாய் ஒலித்த சிவாஜிலிங்கம்!
தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த ஈழத்தமிழர் அரசியல் ஆளுமை சிவாஜிலிங்கம் காலமானார்!
நாடாளுமன்ற உறுப்பினராகவும், வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், தமிழ்த் தேசிய அரசியல் களத்திலும் தனித்துவமான பங்களிப்பைச் செய்த அவரது அரசியல் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு.
விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/former-sri-…
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் திங்கட்கிழமை முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்திப்பா?!
@CMOTamilnadu
@TVKVijayHQ
@rajakumaari
இப்படி ஒரு தகவல் பரவி வரும் நிலையில் உண்மை என்ன என்று அறிந்து கொள்ள பருந்தாருக்குத் தகவல் அனுப்பினோம்.
அவர் அனுப்பிய பதில்,
"முதலமைச்சர் ஜோசப் விஜய் 16/11/26 திங்கட்கிழமை நண்பகல் டெல்லி செல்கிறார். தமிழ்நாடு இல்லம் சென்று Refresh செய்துவிட்டு மாலையில் நேராக மவுரியா ஹோட்டல் செல்கிறார்.
அங்கு நடைபெறும் சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு உடனே சென்னை புறப்படுகிறார் வேறு எந்த சந்திப்பும் இல்லையாம்"
என்று தகவல் அனுப்பியுள்ளார் பருந்தார்.
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
tamiloodagam dot com
15/11/26
#ஜோசப்விஜய் #சோனியாகாந்தி #அமித்ஷா #தமிழ்ஊடகம்
3
238
சீமான் பரிதாபங்கள்
அது போன வருசம்...
இது இந்த வருசம்
😂🤣😂
#ntkspeech
உலகத்தமிழர்கள் அறியும்படி செய்யுங்கள் !
-ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் வேண்டுகோள் @sscharles
மதுரை - திருப்பரங்குன்றம் மலையில் ‘ஈழக்குடும்பிகன்’ எனும் வார்த்தை தமிழி எழுத்தில் உள்ளது வியப்பைத் தருகிறது. இதன்காலம் கி.மு 100 முதல் 300 வரை என்கின்றனர், கல்வெட்டறிஞர்கள்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்வெட்டுகளையும்; ஓலைச் சுவடிகளையும் உலகத்தமிழர்கள் அறியும்படி, அரசின் இணைய தளங்களில் பதிவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
--ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின்,
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்,
தலைவர் : இலட்சிய ஜனநாயகக் கட்சி
#ljk #jcm #tamilnadu #tamilheritage #tamilhistory #தமிழ்ஊடகம் #tamiloodagamdotcom
ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டின் பின்புறத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி தீவிர ஆய்வு...
விரிவான செய்திக்கு இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/gem-veerama…
திமுக ஆட்சியில் மறைக்கப்பட்ட பா*லியல் கு*ற்றங்கள்
பயிரை மேய்ந்த வேலிகள்
காவல்துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளி
#தமிழ்ஊடகம் #TNTVTamilOodagam
காணொலி இணைப்பு :
youtu.be/FK495H_m6qA

















