இந்திரா அறக்கட்டளையின் பழங்குடி பெண்களின் விழிப்புணர்வு பந்தயத்தில் பெண்களுக்கான நாப்கின் 5/4 அன்று இலவசமாக கொடுக்கப்பட்டது. நமது அறக்கட்டளை உறுப்பினர்களுடன் நானும் மற்றும் திரு.அன்புச்செழியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தோம். பெண்மையை போற்றுங்கள், பெண்களை கனம் பண்ணுவோம்🙏🏽
இந்திரா அறக்கட்டளையின் தொழிற் பயிற்சி மையத்தில் தங்களை இணைத்து கொள்ள 40 பேர் முன் வந்துள்ளனர். 22/03 அன்று திறந்த பிரச்சாரம் செய்யப்பட்டது, இந்நிகழ்வில் மூத்த உறுப்பினர்கள் திரு.அன்புச்செழியன், திரு & திருமதி மனோகர் ,ஆலன்&ஜெகதீஷ் அவர்களோடு நானும் கலந்துகொண்டு சிறப்பித்தோம🙏
இந்திரா அறக்கட்டளையின் இலவச தையல் பள்ளி மார்ச் 8 ஆம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு.குமார் தலைவர் அவர்கள், திரு.ஹென்றி அவர்கள் நாசரேத் கல்வி குழுமம், பேராசிரியர் திருமதி சுரேஷ் அவர்கள், CSR குழுவினர், லயன்ஸ் கிளப் குழுவினர்கள்& இந்திரா அறக்கட்டளை குழுவினர்கள்🙏🏽
இந்திரா அறக்கட்டளை சார்பாக "தையல் பயிற்சி" மையம் திறக்க பட உள்ளதால் 1/3 அன்று சுமார் 100 குடும்ப பெண்களை சந்தித்து பயிற்சி மையம் பற்றிய தகவல்களை பிரச்சாரம் செய்தோம் இந்நிகழ்வில் நமது அறக்கட்டளை மூத்த உறுப்பினர்கள் திரு.திருமதி.மனோகர் & ஆலன் இவர்களோடு நானும் சிறப்பித்தோம். நன்றி🙏🏽
"ஒரு பெண்ணை அதிகாரம் பெறச் செய்வதற்கான சிறந்த வழி கல்விதான்"
பெண்கள் அரசு கல்லுரியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் விருந்தினராக கலந்துகொண்டு, கருத்துக்களை பகிர்ந்துகொண்டேன்.ஆசிரியர்கள் & கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் மாணவி செல்வங்களுக்கு இந்திரா அறக்கட்டளையின் வாழ்த்துக்கள்.
22வயது நிரம்பிய வாலிபரின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் வேண்டும் என்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்ததால் இரத்ததானம் செய்தேன், நீங்களும் உங்கள் அலைபேசி எண்ணை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பதிவு செய்து, வருடத்திற்கு ஒருமுறையாவது இரத்ததானம் செய்யுங்கள்.🙏🏽


















































