Pinned Tweet
#KalaignarFacts
இந்த thread ல் கலைஞரின் சாதனைகள் மீம்ஸ்களாக.... 🙏🙏🙏
Babu Vmk retweeted
நாடாளுமன்றத்தில் தாக்கலாக உள்ள தொகுதி மறுவரையறை மசோதா குறித்த கழகத்தின் நிலைப்பாட்டையும், மசோதாவில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க நாம் நீண்ட நாட்களாக வலியுறுத்திய கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருப்பதையும், தமிழ்நாட்டின் உரிமைகளும், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் தொடக்கம் முதலே உறுதியாக நின்று, அதற்கான அழுத்தத்தைத் தேசிய அளவில் பதிவு செய்ததையும் விளக்கி அன்பகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தேன்.
Babu Vmk retweeted
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?
அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!
‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?
Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
Babu Vmk retweeted
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
Babu Vmk retweeted
இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளால் திருப்பரங்குன்றத்தில் நடக்க இருந்த
மதக் கலவரத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த வருடம் திறம்பட தடுத்து நிறுத்தினார்.
இந்த ஆண்டும் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து, மு க ஸ்டாலின் ஆட்சியிலேயே தமிழ்நாடு நில அளவைத்துறை மற்றும் தொல்லியல்துறை இணைந்து திருப்பரங்குன்ற மலையில் இருப்பது தீபத்தூண் இல்லை' என்பதை வரலாற்று தரவுகளுடன் ஆதார அரசுஆவணமாக தயார் செய்து வைத்திருந்தது.
பணிகள் முடிந்து அச்சிடப்பட்டு அக்டோபர் மாதத்திலேயே இந்த ஆதாரபூர்வ ஆவணம் தயாராகிவிட்டது.
நவம்பர் 20 ஆம் தேதி வரை தவெக அரசு இதை வெளியிடவே இல்லை. உச்ச நீதிமன்றத்திலும் இதை சமர்ப்பிக்கவில்லை. பொதுத் தளத்திலும் வெளியிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் ஆவணங்கள் ஏதுமில்லாமல் தட்டையான வாதங்களை தவெக அரசு முன்வைத்தது. இதன் காரணமாகவே இடைக்காலமாக ஒருமுறை தீபம் ஏ்றற அனுமதி வழங்கப்பட்டது.
இப்படி ஒரு தீர்ப்பு வந்தபிறகு எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு, நவம்பர் 23 அன்று வேறு வழியின்றி ஆதார ஆவணத்தை தவெக அரசு பொதுவெளியில் வெளியிட்டது.
24 ஆம் தேதி குறுக்கு வழியில் செயல்பட்டு தீபத்தை ஏற்றாமல் ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள்.
பொதுவெளியில் ஆதார ஆவணம் வெளியிட்ட பின்பும் கூட, உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த ஆவணத்தை பற்றி தமிழ்நாடு அரசு விரிவாக எடுத்து சொல்லவே இல்லை.
மு க ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆதாரபூர்வ ஆவணம் என்பதாலேயே அதை வெளியிடவில்லை என்று தோன்றுகிறது அல்லவா. அதுதான் இல்லை.
அதை சமர்ப்பிக்காமல் இருந்தால்தான் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதி பெறமுடியும் என்கிற ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை நிறைவேற்ற இந்த ராமர் அரசு முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது.
1 . வேண்டுமென்றே ஒரு கிறிஸ்தவரை திருப்பரங்குன்ற அறங்காவலர்கள் குழுவில் நியமித்தது.
2. திமுக ஆட்சியில் உருவாகி நிறைவாகியிருந்த ஆதாரபூர்வ ஆணவத்தை நீதிமன்றத்தில் தக்கநேரத்தில் வெளியிடாதது
3. அரசியல் லாபங்களுக்காக அற்ப காரணங்களை சொல்லி குறுக்கு வழியில் தீபம் ஏற்றாதது
4. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தபோது கூட ஆதார ஆவணத்தை தாக்கல் செய்யாதது
தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் போராடி தோற்கவில்லை. தோற்க வேண்டுமென்று போராடி வென்றிருக்கிறது. சட்டத்துறையும் அறநிலையத்துறையும் ஆடிய மங்காத்தா ஆட்டம் இது.
What a Game Plan.
ஆர்எஸ்எஸ் ஆவலுடன் எதிர்பார்த்த ராம ராஜ்ஜியத்தை தொடக்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.






























