President of the DMK | Belongs to the Dravidian stock

Joined October 2013
நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க #DravidianModel ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்! பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் இரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம். இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க! #RajaRajaChola #Cholas
49
459
8
1,292
33,527
காவல்துறை: சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பு மட்டுமல்ல; நமது சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண்! காவலர்கள் ஆற்றும் கடமையையும் அவர்களது அளப்பரிய தியாகத்தையும் #PoliceCommemorationDay-இல் நன்றியோடு நினைவுகூர்வோம்! மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதியான வாழ்வுக்காகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி இன்னுயிர் ஈந்த காவலர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்!
78
604
17
2,416
97,356
நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைகொண்ட ABP குழுமத்தின் ‘@abpnadu’, 24 மணி நேர ஒளிபரப்பைத் தமிழில் தொடங்கியிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! செய்திகளை முந்தித் தரும் வேகத்தைவிட, உண்மையை உறுதிசெய்து தரும் பொறுப்பே ஊடகத்தின் உயர்ந்த அறம்! அதிகாரத்திற்கு அஞ்சாமல், மக்களின் குரலாகவும் சமூகத்தின் மனச்சாட்சியாகவும் திகழ்ந்து, ஊடக அறத்துடன் ‘ABP நாடு’ மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!
தமிழ் டிஜிட்டல் செய்தித்துறையில் புதிய அத்தியாயம் நூற்றாண்டு பெருமைகொண்ட ABP குழுமம் 24*7 தமிழ் செய்தித் தொலைக்காட்சியாக இன்று கால் பதித்தது. ABP நாடு YouTube தளத்திலும் ABP Live - Official App மற்றும் Smart TV - களிலும் காணலாம்! Live : youtube.com/live/f0cRTVIzvY4 #ABPLIVE #24X7 #Live #NewsChannel #abpnadu
70
327
68
1,208
126,375
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்வியுற்றதும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அடிக்கடி தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதையும், ஓய்வில்லாமல் உழைப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டுமென உரிமையோடு அவரிடம் கேட்டுக்கொண்டேன். "ஆக்ஸ்போர்டில் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து உலக அளவில் பெரியாரியத்தை நிலைநிறுத்தியது போன்றே, #DravidianModel அரசால் உருவாக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் கோவைக்கே புதிய அடையாளமாக நிலைக்கும்" என நிறைவோடு வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். சமூகப் பிணி களையப் பெரியாரியத்தைத் தொடர்ந்து பரப்புவோம்! @AsiriyarKV
77
741
12
2,948
77,604
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது. நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
#JUSTNOW | நாதக மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா தாராபுரம் போலீசாரால் கைது இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் ரோடுஷோ வரும் பாதையில் பரப்புரை செய்தது என பரபரப்பு காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது #SunNews | #Dharapuram | #NTK
680
2,660
322
7,008
821,608
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.. 🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். 🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது. 🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. 🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். 🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. 🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார். 🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? 🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா? 🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும். 🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? 🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா? 🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன. 🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
375
2,311
145
5,303
418,223
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் @jawahirullah_MH அவர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. அப்துல் சமது உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்! உரிமைகள் மறுக்கப்படும் இடங்களிலும் - அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் உறுதியான குரலாகவும், மதநல்லிணக்கத்தைப் பேணுவதில் இணைப்புப் பாலமாகவும் திகழ்ந்துவரும் இரு அமைப்புகளின் மக்கள் பணி, தங்கள் அனைவரின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் மேலும் வலுப்பெற்று, சமூகநீதியும் சமத்துவமும் தழைக்கும் சமுதாயத்தை உருவாக்கத் துணைநிற்கட்டும்!
47
695
8
2,892
220,787
வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்! இன்று நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள்! 🔴 #SIR-ஐ முழுமையாக இரத்து செய்க! 🔴 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக! 🔴 ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு! 🔴 EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக! SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்! மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, #SIR இரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்!
218
1,480
86
3,742
138,831
தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது! ஆழ்ந்த இரங்கல்கள்...
47
1,028
12
8,076
155,826
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர். எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார். எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும். ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா. தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
130
1,826
25
7,773
117,706
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
678
4,303
489
10,157
605,722
Where is @abhijeet_dipke? Where is @neha_aisa? Detaining them without disclosing their whereabouts is blatantly illegal and deeply inhumane. The Union Government must release them immediately and stop suppressing peaceful protests. Every attempt to crush the movement will only make it stronger. #GyaneshKumarMustGo. The Union BJP Government has no other option. @cockroachisback @SFI_CEC @AISA_Official_ @Aishe_Ghosh @SauravDassss @AshutoshRanka @Dhruv_Rathee #CJP #Delhi
Neha has been detained alone and taken to an unknown location! They don't have their phone! Delhi Police must answer: where is Neha? Once again an abduction, not detention!
1,308
8,343
255
29,248
1,059,011
தூக்குமேடைக்கு நடந்து செல்லும்போதும் துணிச்சலோடும் கர்வத்தோடும் சென்ற விடுதலைப் போராளி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள்! மானம்தான் பெரிதென வாழ்ந்து, அந்நியர் ஆட்சிக்கு எதிரான கனலை மக்கள் மனதில் விதைத்த அவரது வீரத்துக்குத் தலைவணங்குகிறேன். வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு நமது #DravidianModel அரசில் சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திருவுருவச் சிலை அமைத்ததுடன், மதுரையில் திருமங்கலம் - கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்துக்கும் அவரது பெயரைச் சூட்டிப் பெருமை கொண்டோம்! தமிழ்நிலத்தின் தன்மானம் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க! #VeerapandiaKattabomman
35
430
9
1,287
40,713
கழக அரசின் அறிவுத் திருக்கோயில்கள்! பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கருதிக்கொண்டு, தமிழினத்தின் மேன்மைக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது! 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம். தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது. பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது அன்புத்தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான, அழகிய நூலகத்தை உருவாக்கினார். கலைஞரின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர், அதனை அங்கிருந்து மாற்றிடவும் சீரழித்திடவும் பல முயற்சிகள் நடைபெற்றன. அனைத்தையும் தடுத்து நிறுத்தி, திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு அமைந்ததும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்துயிரூட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மேம்பாலங்கள், தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என உருவாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தேன். சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களையும் அமைத்துத் திறந்து வைத்தேன். தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் புதுப்பித்து, நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற புதிய வசதிகளையும் ஏற்படுத்தித் திறந்து வைத்தோம். மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்து இருந்த கோஷன் நூலகத்தையும் அதன் நூற்றாண்டையொட்டிப் பழமை மாறாமல் புதுப்பித்தோம். இரண்டையும், அப்போதைய துணை முதலமைச்சர் திரு. உதயநிதி அவர்கள் திறந்து வைத்தார்கள். சென்னை, மதுரையைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் மாபெரும் நூலகங்களை அமைக்க நமது திராவிட மாடல் அரசில் முடிவு செய்தோம். அப்படி, மேற்கு மண்டல மக்களுக்காகக் கோவையில் நாம் அமைத்துள்ளதுதான் இன்று திறப்பு விழா காணுகின்ற பெரியார் அறிவுலகம். கோவை மட்டுமல்ல, திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களைத் திராவிட மாடல் அரசில் அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன. அந்த வகையில், ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று கழக உடன்பிறப்புகள் தம் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்து நிற்கும் இந்த அறிவுச் சின்னங்கள் கழக அரசின் சிந்தனையில் உதித்தவை. கழகத்தால் கட்டியெழுப்பப்பட்டவை. வேறு எந்த அரசும் செய்யாதவை. நூலகங்கள் மட்டுமில்லாமல், சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு வலுவான அடித்தளத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம். அறிவு, அறிவு, அறிவு என அறிவை மையப்படுத்தியே இயங்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனால்தான், கழகத்தின் முதல் தலைமையகத்துக்கு அறிவகம் எனப் பெயர் வைத்தார் நம் ஆருயிர் அண்ணா. அவரை ‘அறிஞர்’ என்றும், கலைஞரை முத்தமிழ் ’அறிஞர்’ என்றும்தான் அடைமொழி தந்து அழைக்கிறோம். தலைவர் கலைஞரால் அமைக்கப்பட்டு இன்றளவும் கழகத்தின் தலைமையகமாகத் திகழும் அலுவலகக் கட்டடத்துக்கும் அண்ணா ‘அறிவாலயம்’ என்றுதான் கலைஞர் பெயரிட்டார். இந்த அறிவுமரபின் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு கழக இளைஞரணியின் சார்பில் அறிவுத்திருவிழா நடத்தப்பட்டது. அறிவுத்தீ எங்கும் பரவ வேண்டும், அறிவு ஜனநாயகமயமாக வேண்டும், வாசிப்புப் பழக்கம் வளர்ந்து பண்பட்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ வேண்டும் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை உருவாக்கினோம்.புத்தகத் திருவிழாக்களை நடத்தினோம். கீழடி, பொருநை என அருங்காட்சியகங்களை உருவாக்கினோம். மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவுகளை நடத்தினோம். இவையாவும் பசுமரத்தாணி போல, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பதிந்திருக்கிறது. ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி! அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்! என் அன்புக்குரிய கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று காணுங்கள். தினம்தினம் செல்லுங்கள். கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வந்தாலும், பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை எனப் பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும்! அறியாமை ஒழியட்டும்! வாழ்க பெரியார்!
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது! #Kovai #Coimbatore #PeriyarArivulagam
178
1,764
58
3,840
117,726
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது! #Kovai #Coimbatore #PeriyarArivulagam
583
3,794
234
8,926
332,340
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார். இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன். ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன். பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
286
2,554
114
7,619
285,043
இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை. இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC (M) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும். கடந்த #DravidianModel அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்.
232
1,154
50
2,441
101,103
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்... அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்! #PriceRise #Inflation
428
2,905
79
7,154
382,855
மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன். வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் ஐயா அப்துல் கலாம் அவர்கள். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார். நமது #DravidianModel அரசில், அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம். அப்துல் கலாம் அவர்கள் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன். #AbdulKalam
43
834
5
3,914
46,418