isaimozhii (@isaimozhii) profile picture
Joined August 2023
உன்னிடம் எந்த உரிமையுமே இல்லையோ என்றொரு கணம் எனக்குத் தோன்றும் சொல்லவந்த எதையும் சொல்லாமல் பின்வாங்கிவிடுவேன். நீ என்னை அப்படியே விட்டுவிடுவாய். இதுவரைக்கும் எடுத்துக் கொண்ட உரிமைக்கு ஒரு மன்னிப்பின் பூவை உன் காலடியில் வைக்கிறேன்.
3
64
7
215
13,021
நீ என்னை விட்டுப் போவாயா? மாட்டேன், மாட்டவே மாட்டேன். ஆனால் ஒருவேளை அப்படி நடக்கும் எனில், எப்போது நான் உன்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று நீ உளமார நம்புகிறாயோ அப்போதுதான் விட்டுச் செல்வேன். அது ஏன்? தெரியவில்லை, எல்லோரும் என்னை அப்படிதான் விட்டுச் சென்றார்கள்.
4
48
2
187
8,910
"எப்படியாவது என் வாழ்வில் கடைசி வரைக்கும் இருந்து விடு" என இறைஞ்சுகிறாய். என்னவாக!? என்று உனக்கும் தெரியவில்லை எனக்கும் தெரியவில்லை.
3
52
6
211
11,767
எப்படி ஒருவருக்கு திடீரென இவ்வளவு தேவையற்றுப்போகிறோம் என்பது அறியமுடியாத ஒரு புதிர். நான் அதே கனத்த இதயத்துடன் அதே அன்பின் கடல்களுடன் அங்கேதான் இருக்கிறேன். ஆனால், நான் ஒருவர் கண்ணுக்கு ஒரு பனித்துளியைபோல ஆவியாகியிருப்பதன் அதிசயத்தை என்னால் தாள முடியவில்லை. - மனுஷ் ~
76
219
5,870
அறிவிப்பே வரவில்லை என்றாலும் அத்தனை முறை வந்துவந்து திறந்து பார்த்ததற்கு மாறாக "என்ன செய்கிறாய்?" என நானே வினவி இருக்கலாம்தான் ஒரு செய்தியில் எந்த கிரீடமும் இறங்கிவிடப் போவதில்லை ஆனாலும் ஒன்றும் செய்யாமல் உன்பெயரையே வெறித்துப் பார்க்கின்ற அன்பின் சித்திரவதைக்கு ஈடில்லை
2
43
5
216
11,431
உண்மையான வார்த்தைகள் அழகாக இருக்காது அழகான வார்த்தைகளில் உண்மை இருக்காது. -லாவோட்சு
1
40
2
154
8,068
அழமுடியாத கண்ணீர் என ஒன்றிருக்கிறது. தர முடியாத முத்தம் என ஒன்றிருக்கிறது. சொல்ல முடியாத சொல் என ஒன்றிருக்கிறது. காட்ட முடியாத கனிவு என ஒன்றிருக்கிறது. இந்த அத்தனை பாரங்களும் என் நெஞ்சில்தான் இருக்கிறது. ஒரு பொழுது இறக்கிவைக்கமாட்டோமா என....!! ~ மனுஷ்ய புத்திரன் ~
1
51
178
4,300
எவ்வளவோ களைத்துப்போனபிறகும் என்னால் தூங்க முடியவில்லை என்றால் ஒரு நாளில் நான் இன்னும் எவ்வளவு தூரம் ஓடவேண்டும்? பெருங்கூட்டத்தின் நடுவே உட்கார்ந்த நிலையில் தூங்குபவர்களைப் பார்த்தால் அவ்வளவு பொறாமையாக இருக்கிறது. அவ்வளவு கோளாறான மனங்கள் இல்லை போலும். ~ மனுஷ்ய புத்திரன் ~
1
35
142
4,536
~
33
1
127
8,963
இப்போதெல்லாம் நமக்கு ஒருவரையொருவர் பற்றிய உறவுப்பேணல் குறைகளைச் சொல்லி சண்டையிட்டுக் கொள்ளத்தான் நேரமிருக்கிறது அல்லவா!
2
33
121
10,588
"என் பிரச்சினை இங்குதான் தொடங்குகிறது! யார் முகத்தையும் வாடச் செய்துவிடக் கூடாதென்பதற்காக எனக்கு பிடிக்காததையும் செய்வது என் பலவீனம்" ---பிரபஞ்சன்
1
41
134
3,375
உன் மனம் சமநிலையில் இருக்கிறதா? சலனப்பட்டு கிடக்கிறதா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன! தன்னந்தனியாக நீயாகவே சமாளித்துக்கொள்வாய் ஆனாலும் மீண்டும் மீண்டும் உன் கண்ணில்படும்படி உலவுவதெல்லாம் "ஒன்றும்ஆகாது, தைரியமாயிரு. நான் இங்குதான் இருக்கிறேன்" என்பதைச் சொல்லத்தான்.
6
75
8
230
16,372
நானே அழைக்க எண்ணுவதற்கும் நீயாக அழைத்தால் என்ன? எனும் வீம்பிற்கும் இடையில் கனத்துக் கிடக்கிறது மாபெரும் கடல் அதில் விழுந்து மூச்சுத்திணறும் தொட்டி மீன்கள் நாம்.
1
58
4
197
9,946
நல்ல நண்பர்கள் நான்கு பேர் இருந்தால், நரகத்துக்கும் செல்லலாம். அவர்கள் அதை சொர்க்கமாக மாற்றிவிடுவார்கள். ~ இறையன்பு ~
2
63
1
201
5,518
நீங்கள் இவ்வளவு வெறுப்பதற்குக்கு முன்னால் அவ்வளவு நேசித்திருக்க வேண்டும். நீங்கள் இவ்வளவு அழுவதற்கு முன்னால் அவ்வளவு சிரித்திருக்க வேண்டும். ~ மோகனரங்கன் ~
45
149
5,956
எல்லாவற்றையும் புரிந்து கொண்டு நடக்க எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் எல்லாம் இல்லாமலாகிவிட்டது. மனுஷ்
2
63
4
196
10,981
புறக்கணிப்பதையும் நிராகரிப்பையும் உணர முடிந்தாலும்...‌ சிரித்துக் கொண்டே கடந்து விடும் நொடிகள் சற்றே கொடுமையாகத்தான் நகர்கின்றன.....🖤
7
20
54
8,969
நீங்கள் உதவியதால் அதே மனிதன் உங்களுக்கு தேவைப்படும்போது உதவுவான் என்ற அவசியமில்லை...!!! ~ SHIVA SWAMY ~
1
42
143
4,391
நமக்குத் தெரிந்த வாழ்க்கை வேற.. நாம தேடுற வாழ்க்கை வேற.. நாம வாழற வாழ்க்கை வேற!
1
49
158
8,975
அவ்வளவு பேசியிருக்க வேண்டாம் அப்போது. இவ்வளவு மௌனமாயிருக்க வேண்டாம் இப்போது! -படித்தது
86
2
326
13,707