Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar) header
Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar) profile picture

Dr. S. D. Prem Kumar / Doctor by Profession State Convenor / Medical Cell / TNBJP 2026 - Rasipuram BJP MLA Candidate

Thyagaraya Nagar, Chennai
Joined August 2022
Photo by Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar)Photo by Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar)Photo by Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar)Photo by Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar)Photo by Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar)Photo by Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar)Photo by Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar)Photo by Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar)Photo by Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar)Photo by Dr. S. D. Prem kumar MBBS., DLO (@DrSDPremkumar)
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தில் மாண்புமிகு அமைச்சர் திருமதி @jagadeshwarioff அவர்கள் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், த.வெ.க. கட்சியின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜா அவர்களுக்கு தகாத செய்திகள் அனுப்பியதாகவும், அவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, மகளிர் உரிமைத்துறை அமைச்சராக குரல் கொடுத்திருக்கிறீர்களா? பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சம உரிமை என்பது அனைவருக்கும் பொருந்தும். கட்சி வேறுபாடின்றி, அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது வரும் குற்றச்சாட்டுகளையும் உடனடியாக, வெளிப்படையாகக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். #பெண்களுக்குஎதிரானவன்முறைஒழிப்புதினம் #InternationalDayForTheEliminationOfViolenceAgainstWomen #StopViolenceAgainstWomen #EndViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #GenderEquality @BJP4TamilNadu @NainarBJP @PMOIndia @NitinNabin @narendramodi
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம்! பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம், சம உரிமை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும். பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழித்து, அச்சமற்ற சமூகத்தையும், சமத்துவமான எதிர்காலத்தையும் உருவாக்க உறுதியேற்போம். பெண்களின் பாதுகாப்பே சமூகத்தின் முன்னேற்றம்! பெண்களைப் போற்றுவோம்… உரிமைகளைப் பாதுகாப்போம்… வன்முறையற்ற உலகைப் படைப்போம்! மாண்புமிகு கு.ஜெகதீஸ்வரி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர். #பெண்களுக்குஎதிரானவன்முறைஒழிப்புதினம் #InternationalDayForTheEliminationOfViolenceAgainstWomen #StopViolenceAgainstWomen #EndViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #GenderEquality
5
119
திருப்பரங்குன்றம் மகாகார்த்திகை தீப நாளில், உச்ச நீதிமன்றம் தெளிவாக அனுமதித்த தீபத்தூணில் தீபம் ஏற்ற மறுத்து, ஆயிரக்கணக்கான முருகப் பக்தர்களின் நம்பிக்கையையும், காத்திருப்பையும் காலில் போட்டு மிதித்த தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றம் நவம்பர் 20-ஆம் தேதி வழங்கிய இடைக்கால உத்தரவில், இன்று (நவம்பர் 24) ஒரு முறை மட்டும், கோவில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய சிறிய குழு மூலம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று தெளிவாகக் கூறியிருந்தது. பொதுமக்கள் கூடுதல் இல்லை, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யலாம் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தது. ஆனால் @TVKPartyHQ அரசு அந்த உத்தரவை மறுபரிசீலனை மனு தாக்கல் செய்து தாமதப்படுத்தியது மட்டுமல்லாமல், இறுதியில் தீபத்தூணை இருட்டில் விட்டு, வழக்கமான உச்சிப்பிள்ளையார் இடத்தில் மட்டும் தீபம் ஏற்றி, நீதிமன்ற உத்தரவை நேரடியாக புறக்கணித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வீடுகளிலிருந்தே தீபத்தூணில் தீபத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மலைப்பாதையில் நூற்றுக்கணக்கானோர் கீழேயே நின்று பார்க்க முயன்றனர். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், 144 தடை உத்தரவு போட்டு, ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்து, பக்தர்களைத் தடுத்து நிறுத்தி, தீபம் ஏற்றும் வாய்ப்பையே மறுத்தது தவெக அரசின் ஓட்டு வங்கி அரசியலின் உச்சம். தர்கா அருகில் இருப்பதைக் காரணம் காட்டி “மத நல்லிணக்கம்” என்ற பெயரில் இந்துப் பக்தர்களின் பாரம்பரிய உரிமையை மறுப்பது, திமுக ஆட்சியில் இருந்த அதே இந்து விரோத போக்கின் தொடர்ச்சியாகும். @TVKVijayHQ அவர்கள் அரசு புதியதாக வந்தது என்று சொல்லிக்கொண்டாலும், இந்துக் கடவுள் முருகனின் முதல் படைவீட்டில் பக்தர்களை ஏமாற்றியதுதான் அதன் உண்மை முகம். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையை காயப்படுத்தி, ஓட்டு வங்கிக்காக மத உணர்வுகளைச் சூதாடுவது எந்த அரசுக்கும் தகுதியான செயல் அல்ல. இது பக்தர்களை ஏமாற்றியது மட்டுமல்ல; உச்ச நீதிமன்றத்தையே மதிக்காத அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. தமிழக இந்துப் பக்தர்கள் இதை மறக்காமல், இந்த ஓட்டு வங்கி அரசியலுக்கு முறையான பதில் சொல்வார்கள். #thiruparankundramdeepam #tvk #supremecourt @BJP4TamilNadu @NainarBJP @narendramodi @PMOIndia @NitinNabin @AmitShah
1
56
தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையான புகார் அளித்துள்ளார். இத்தனை வாரங்களாக @TVKPartyHQ என்ன செய்தது? தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வைக் காப்பாற்ற முயன்று, பெண் ஆட்சியரை அமைதியாக இருக்க வற்புறுத்தியதா? பெண் அதிகாரியின் பாதுகாப்பைவிட கட்சி நலமே முக்கியம் என்று காட்டியுள்ளது தவெக அரசு. காங்கிரஸ் மாநிலத் தலைவர் @manickamtagore அவர்கள், உண்மை என்னவென்று தெரியாமலேயே எம்.எல்.ஏ.வை “பாவம், நிரபராதி” என்று ஆதரித்துப் பேசினார். இப்போது ஆட்சியர் நேரில் புகார் அளித்ததும் திடீர் பல்டி அடித்து நடவடிக்கை கோருகிறார். இது அரசியல் அவமானம். தவெக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரே போக்கில் செயல்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் துணிந்து புகார் அளித்ததை வரவேற்கிறோம். ஆட்சியரின் குற்றச்சாட்டு உண்மையெனில், அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து விசாரிக்க வேண்டும். இனிமேலும் தாமதம் கூடாது. பெண்களின் பாதுகாப்பு என்றால் என்ன என்பதைத் தவெக அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. விளக்கம் வேண்டும். நடவடிக்கை வேண்டும். #KallakurichiMLA @BJP4TamilNadu @NainarBJP @PMOIndia @NitinNabin @narendramodi @AmitShah
1
53
தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களையும், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகளையும் மற்றும் இந்து அமைப்புத் தலைவர்களையும் சட்டவிரோதமாக வீடுகளிலேயே அடைத்து வைத்திருப்பது மக்களாட்சியின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் கொடுஞ்செயலாகும். திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழிபாட்டைத் தடுப்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வழிபாடு நடத்தும் உரிமையைப் பறித்து, அரசியல் எதிரிகளை இவ்வாறு முடக்குவது எந்த நியாயத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத அடக்குமுறையாகும். சுதந்திர நாட்டில் ஒவ்வொருவருக்கும் தங்கள் மத நம்பிக்கைகளின்படி வழிபடும் உரிமை உண்டு. ஆனால் மதவாதிகளின் மிரட்டல்களுக்கும் சிறுபான்மை வாக்கு அரசியலுக்கும் பணிந்து, திரு. @TVKVijayHQ அவர்கள் தலைமையிலான அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. திராவிட மாடல் என்ற பெயரில் இந்து உணர்வுகளை அடக்கிய திமுகவும், வெற்றி மாடல் என்ற பெயரில் ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகமும் இந்து மக்களின் வழிபாட்டு உரிமை விஷயத்தில் ஒரே பாணியில்தான் செயல்படுகின்றன. திராவிட மாடலும் வெற்றி மாடலும் இரண்டும் இந்து மத நம்பிக்கைகளைப் பொறுத்தவரை ஒரே விதமான அடக்குமுறையையே பின்பற்றுகின்றன. பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து, சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வழிபாட்டைத் தடுப்பதிலும் இந்து அமைப்புகளை முடக்குவதிலும் இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரியாகவே நடந்து கொள்கின்றன. இது தமிழக இந்து மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான அரசியல் சூழ்ச்சி என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. @BJP4TamilNadu @NitinNabin @narendramodi @AmitShah #thiruparankundamdeepamcase
1
54
தீப ஒளி இருளை அகற்றுவது போல, நம் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும்! இல்லங்கள் தோறும் தீபங்கள் ஒளிரட்டும்! உள்ளங்கள் தோறும் அன்பும் அமைதியும் மலரட்டும்! திருப்பரங்குன்றத்தில் இன்று மகா தீபம் ஏற்றப்படட்டும்! தடைகள் தகர்ந்து, நீதியும் ஆன்மிக உரிமையும் நிலைநாட்டப்படட்டும். தீய எண்ணங்களும் தவறான முயற்சிகளும் அகன்று, அறமும் உண்மையும் வெல்லட்டும். முருகப்பெருமானின் அருளால் அனைவரது வாழ்விலும் ஒளியும் நலமும் பெருகட்டும்! வெற்றிவேல்! வீரவேல்! 🪔🙏 தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்! #KarthigaiDeepam2026 #Thiruparankundram
28
KOVAI IS MORE THAN A CITY. IT’S A SPIRIT. From industrial excellence to entrepreneurial ambition, Coimbatore stands tall with its heritage, hard work and unstoppable growth. Happy Coimbatore Day! ❤️ #HappyCoimbatoreday
81
திருப்பரங்குன்றம் தீபத்தூண் – தவெக = திமுக அதே பாதை. #ThiruparankundramDeepam @BJP4TamilNadu @NainarBJP @NitinNabin @narendramodi @PMOIndia
3
4
108
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர் நோயாளிகளுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்குவதும், பாதுகாவலர் இதயத்துடிப்பைப் பரிசோதிப்பதும் வெளியான வீடியோ கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தாலுகா அளவிலான அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள அடிப்படைத் தோல்வி. 2021க்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் வழக்கமான செவிலியர் நியமனம் நடக்காததால் காலிப்பணியிடங்கள் குவிந்தன. கறம்பக்குடி போன்ற மருத்துவமனைகளில் இன்னும் தகுதியற்றவர்கள் மருத்துவப் பணிகளைச் செய்கின்றனர். தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வரும் இடத்தில் இது நிகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. புதிய அரசு என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த @TVKPartyHQ மருத்துவமனைகளின் அடிப்படை மனித வளப் பற்றாக்குறையை இன்னும் தீர்க்காதது ஆட்சி நிர்வாகத்தின் மீது நேரடி கேள்வியை எழுப்புகிறது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, 24 மணி நேர அவசர சிகிச்சை வசதியை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் இது முந்தைய அரசுகளின் தொடர்ச்சியான தோல்வியே.⁠ ஏன் ஏழை மக்களை இப்படி நடத்துகிறார்கள்? @arunraajkg அரசு மருத்துவமனைகள் முக்கியமாக ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கானவை. ஆனால் நீண்டகாலமாக மருத்துவர்-செவிலியர் பற்றாக்குறை, உபகரணக் குறைபாடு, இடநெருக்கடி நிலவுகிறது. மருத்துவர்கள் நகர்ப்புறப் பணியை விரும்புவதும், கிராமப் பணிக்கு போதிய ஊக்கமில்லாததும், அரசியல் முன்னுரிமை பெரும்பாலும் இலவசத் திட்டங்களுக்கும் விளம்பரங்களுக்கும் செல்வதும் இதற்குக் காரணம். அடிப்படை மனித வளம் மற்றும் அவசர சிகிச்சை வசதிகளுக்கு போதிய கவனம் செலுத்தப்படாததால், தூய்மைப் பணியாளர் மற்றும் பாதுகாவலர் மருத்துவப் பணிகளைச் செய்யும் அவலநிலை தொடர்கிறது. இது ஏழைகளின் உயிரை இளக்காரமாகக் கருதுவதையே காட்டுகிறது. @BJP4TamilNadu @NainarBJP @PMOIndia @NitinNabin @narendramodi
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் தூய்மை பணியாளர், இதயத்துடிப்பை பரிசோதிக்கும் பாதுகாவலர்... வீடியோ வெளியாகி அதிர்ச்சி #Pudukottai | #GovtHospital | #ViralVideo | #PolimerNews
55
உலக மீனவர்கள் தினத்தில், கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் பெரும் பங்காற்றும் மீனவப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! மீனவர்களின் உரிமைகள், பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் நலன் காக்கப்படுவது நம் அனைவரின் கடமையாகும். அவர்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றுவோம்! #WorldFisheriesDay #உலகமீனவர்கள்தினம் @BJP4TamilNadu @NainarBJP @PMOIndia @narendramodi @NitinNabin @AmitShah
2
50
இந்தியாவின் மகளிர் நலன் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் ஒரு மகத்தான மைல்கல்! பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தேசிய HPV தடுப்பூசி இயக்கத்தின் மூலம், வெறும் 9 மாதங்களுக்குள் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இது ஆண்டுதோறும் தடுப்பூசி பெறத் தகுதியுள்ள சிறுமியர்களில் சுமார் 87% பேரைச் சென்றடைந்துள்ள வரலாற்றுச் சாதனை! 14 வயது சிறுமிகளுக்கு அரசு மருத்துவமனைகள் வாயிலாக இலவசமாக ஒற்றை டோஸ் HPV தடுப்பூசி வழங்கி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில் இந்தியா முன்னேறி வருகிறது. இந்த மகத்தான சாதனைக்காக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் மாநில அரசுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மகள்களின் ஆரோக்கியமே, நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடு!
31
இன்று மாண்புமிகு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. @JPNadda ஜி அவர்களைச் சந்தித்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. நமது மாநிலத் தலைவர் திரு. @NainarBJP ஜி அவர்களின் வழிகாட்டுதலுடன் இச்சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனு அளித்தேன். தற்போது கல்லீரல் செயலிழப்பு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் செலவாகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றனர். ராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதி மூலம் குறிப்பிட்ட சில சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி கிடைத்து வரும் நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையையும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவது ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்குப் பெரும் உதவியாக அமையும். இந்தக் கோரிக்கையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பொருளாதார வசதி இல்லாத காரணத்தால், யாரும் உயிர் காக்கும் மருத்துவச் சிகிச்சையை இழந்துவிடக் கூடாது! பல உயிர்களைக் காக்கும் இந்த முயற்சி வெற்றி பெறும் என நம்புகிறேன். It was a privilege to meet the Hon’ble Union Minister for Health & Family Welfare, Shri @JPNadda Ji, today, with the guidance and support of our State President, Shri @NainarBJP Ji. During the meeting, I submitted a request letter proposing the inclusion of Liver Transplantation under the Ayushman Bharat – PM-JAY scheme. With the rising number of liver failure cases, many patients from economically weaker and middle-income families face enormous financial hardships, as liver transplantation in private hospitals can cost several lakhs of rupees. While financial assistance for certain kidney transplant cases is available through Rashtriya Arogya Nidhi, extending coverage for liver transplantation under Ayushman Bharat would provide much-needed support to thousands of deserving families. I sincerely request the Hon’ble Minister to consider this proposal favourably. This initiative could make life-saving treatment more accessible and help save countless precious lives. Healthcare should not become a financial burden when it is a matter of life and survival.
1
8
171
இன்று பிறந்தநாள் காணும், பாஜக தேசியச் செயலாளரும், கேரள மாநில இணைப் பொறுப்பாளருமான மதிப்பிற்குரிய திரு. @MaVenkatesanbjp அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், எல்லா வளங்களும் பெற்று, மக்கள் பணியிலும் பொதுவாழ்விலும் மேலும் பல உயரங்களைத் தொட்டு, பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!
34
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நவம்பர் 24 அன்று தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டுள்ளது. இது முருக பக்தர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. முதலில் திமுக அரசு இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த தவெக அரசும் அதே பாதையில் நடந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கை எடுத்துச் சென்று தீபம் ஏற்றுவதைத் தடுக்க முயன்றது. இரு அரசுகளும் பக்தர்களின் பாரம்பரிய உணர்வுகளைப் புறக்கணித்து, சட்டம்-ஒழுங்கு என்ற பெயரில் முட்டுக்கட்டை போட்டன. இருந்தும், உச்சநீதிமன்றம் பக்தர்களுக்குச் சாதகமாக தீபம் ஏற்ற அனுமதி அளித்திருப்பது சனாதன தர்மத்திற்கான வெற்றி. திருப்பரங்குன்றம் மலையில் முருகனின் அருள் ஒளி வீசட்டும். பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏 #ThiruparankundramDeepam
🤖 Made with AI
41
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமான செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைகிறேன். அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்துத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. வி.எஸ். பாபு அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். ஓம் சாந்தி! #VSBabu
1
64
❤️ Happy International Men’s Day! Wishing all men happiness, strength, respect and success. Keep inspiring and keep shining! #InternationalMensDay2026 #MensDay2026
1
1
63
தேனி சோத்துப்பாறை அணை மதகை அதிகாரிகளுக்கே தெரியாமல், அரசாணை இல்லாமல் தன்னிச்சையாகத் திறந்து ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகிகள் – இது ஆட்சி அல்ல, அராஜகம்! மக்களின் உயிருடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் கட்சிக்காரர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரா திரு. @TVKVijayHQ? சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சமூக வலைதளத்திற்கு ரீல் எடுப்பது ஆட்சியா? பொதுப்பணித்துறை புகார் கொடுத்துள்ள நிலையில், உடனடியாக சம்பந்தப்பட்டோரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையானது ஒழுங்கான நீர் மேலாண்மை, ஸ்டண்ட் அல்ல. மக்கள் பாதுகாப்பை விட ரீல்ஸ் முக்கியமா?
2
1
3
400
தனக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாமல் தேசத்திற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து மக்கள் நலனுக்காகவும், தேச உணர்ச்சிக்காக அன்றாடம் சிந்தித்து உழைக்கும் நமது பாரத பிரதமத்தில் நரேந்திர மோடி ஜி அவர்கள். @blsanthosh
1
3
90
கடல் நீரை நன்னீர் ஏரியாக மாற்றும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் தொலைநோக்கு திட்டம்... @blsanthosh
30
TVK ஆட்சி நிர்வாக சீர்கேடு நிறைந்த , சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ள ஒரு திறனற்ற ஆட்சியாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறுகிறது. இந்த ஆட்சியின் அவல கோலங்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். @blsanthosh
52